Tamil

IDC தரவுகளின் பிரகாரம் 2020 ஆண்டின் முதல் 5 உலகளாவிய ஸ்மார்ட்போன் வர்த்தகநாமங்களில் ஒன்றாக இடம்பிடித்த vivo

IDC இன் வருடாந்த தரவுக்கமைய, உலகின் முன்னணி ஸ்மார்ட்போன் வர்த்தகநாமமான vivo, 8.6 சதவீத சந்தைப் பங்கு மற்றும் 110 மில்லியனுக்கு அதிகமான சாதனங்களை ஏற்றுமதி செய்து, 2020 ஆம் ஆண்டில் உலகளாவிய ஸ்மார்ட்போன் சந்தையில் 5ஆம் இடத்தைப் பிடித்துள்ளது.

கடந்தாண்டினை விட 1% வளர்ச்சியை பதிவு செய்துள்ளதுடன், ஒட்டுமொத்த பொருளாதார சரிவையும் மீறி ஏற்றுமதியை அதிகரித்துள்ள முதல் ஐந்து ஸ்மார்ட்போன் வர்த்தகநாமங்களில் vivoஉம் ஒன்றென்பது குறிப்பிடத்தக்கது.

vivo தற்போது சீன ஸ்மார்ட்போன் சந்தையில் இரண்டாவது இடத்தையும், இந்தியாவில் மூன்றாவது இடத்தையும் கொண்டுள்ள அதே நேரத்தில் இந்தோனேசியாவின் சந்தையில் முன்னணியில் உள்ளது.

சீனாவை தலமையகமாகக் கொண்டுள்ள vivo , Shenzhen, Dongguan, Nanjing, Beijing, Hangzhou, Shanghai, Taipei, Tokyo மற்றும் San Diego ஆகிய இடங்களில் 9 ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நிலையங்களின் வலையமைப்பையும் கொண்டுள்ளது. 5G, செயற்கை நுண்ணறிவு, தொழில்துறை வடிவமைப்பு, புகைப்படவியல் மற்றும் வரவிருக்கும் தொழில்நுட்பங்கள் உள்ளிட்ட அதிநவீன நுகர்வோர் தொழில்நுட்பங்களின் அபிவிருத்தியில் கவனம் செலுத்துகின்றது.

2020 ஆம் ஆண்டில் உலகளாவிய மொபைல் போன் சந்தை முன்னைய ஆண்டை விட 5.9% வீழ்ச்சியடைந்துள்ளது என்பதை IDC இன் தரவு காட்டுகிறது. எனினும் சந்தை மீட்சியை நோக்கிய முன்னேற்றம் சிறப்பாக உள்ளதுடன், 2021 ஆம் ஆண்டுக்கான பிரவேசம் வலுவாக இருக்கும் என்று IDC  நம்புகிறது.

Share

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *