Huawei Watch GT2 Pro, அனைத்து சந்தர்ப்பத்திற்கும் ஏற்ற சிறந்த ஸ்மார்ட் கடிகாரம்

Author
By Author
4 Min Read

உலகளாவிய ஸ்மார்ட்போன் வர்த்தகநாமமான Huawei,  புத்தாக்க மற்றும் தொழில்நுட்ப ரீதியில் மேம்பட்ட ஸ்மார்ட்கடிகாரங்கள் மற்றும் அணியக்கூடிய தொழில்நுட்ப சாதனங்களை அறிமுகப்படுத்தியதன் மூலம் சந்தையில் புதிய புரட்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த அணியக்கூடிய சாதனங்களின் வரிசையில் Huawei Watch GT2 புதிதாக  இணைந்து கொண்டுள்ளதுடன், இது அதன் மிக நேர்த்தியான தொழில்சார் தோற்றத்துடன் கூடிய வடிவமைப்புக்கு நன்கு பெயர் பெற்றது. மிகுந்த ஆற்றல் மற்றும் வினைத்திறன் மிக்கதுமான அம்சங்களுடன் அறிமுகப்படுத்தப்பட்ட Huawei Watch GT2 Pro புத்தாண்டின் ஆரம்பத்தில் முயற்சி செய்து பார்க்க வேண்டிய ஒரு முதன்மை ஸ்மார்ட்கடிகாரமாக உள்ளது.

Huawei Watch GT2 Pro, 1.39 அங்குல AMOLED தொடு திரையுடன் டைட்டானியத்தால் வடிவமைக்கப்பட்ட கட்டமைப்புச் சட்டத்துடனும் வருகின்றது. இதன் முகப்பானது சபையர் பளிங்கினால் ஆனது. இதில் பயன்படுத்தப்பட்டுள்ள உயர் தர மூலப்பொருட்கள் இந்த கடிகாரத்தின் முகப்பானது கீறல்கள் மற்றும் நீர் சிதறல்களிலிருந்து பாதுகாப்பு பெறுவதனை உறுதி செய்யும் அதேவேளை, எல்லையற்ற அழகினையும் தருகின்றது. Watch GT2 Pro கலை மற்றும் தொழில்நுட்பத்தின் சரியான கலவையுடன் பண்பட்டதாக உள்ளது. மேலும், பாவனையாளர்கள் தமது 200 க்கும் மேற்பட்ட கடிகார முகப்புகளில் இருந்து தமது மனநிலைக்கு பொருத்தமானதையும், தமது தேவைக்கேற்றதாகவும் தெரிவு செய்துகொள்ள முடியும். இதன் நிறை சுமார் 52 கிராம்கள் (பட்டி இன்றி) என்பதுடன், அணிவதற்கும் மிகவும் இலகுவானதாகும்.

தொழில்சார் தோற்றத்துடன் கூடிய அழகிய கடிகாரம் என்பதற்கு மேலதிகமாக,  100க்கும் மேற்பட்ட தனிப்பயனாக்கப்பட்ட “உடற்பயிற்சி முறைகள்” , இதய துடிப்பு, சராசரி வேகம், அதிகபட்ச சாய்வு போன்ற அளவீடுகள் மற்றும் 10 க்கும் மேற்பட்ட ஓட்ட பயிற்சி நெறிகளும் இதில் உள்ளன. அதன் புதிய Golf Mode தனிப்பட்ட கோல்ப் பயிற்சியாளராக செயற்படுகின்றது. Golf driving mode இயக்க வேகம் மற்றும் மீள்நிலையை மேம்படுத்துவதற்கான பரிந்துரைகளைப் பெறும் அதேவேளை பாவனையாளர்கள் தமது உடல் வளைவு நிலையைக் கூட பகுப்பாய்வு செய்யலாம்.

புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட Huawei Watch GT2 Pro தொடர்பில் Huawei Devices, Sri Lankaவின் நாட்டுக்கான தலைமை அதிகாரி பீட்டர் லியூ கருத்து தெரிவிக்கையில், “இது அணியும் தொழில்நுட்ப சாதன ஆர்வலர்களின் விருப்பத் தெரிவாக ஏற்கனவே மாறியுள்ளது.  நீங்கள் என்ன செய்தாலும், அது விளையாட்டு, உடற்பயிற்சிகளாக இருந்தாலும் அல்லது அலுவலக வேலையாக இருந்தாலும் சரி உங்களை தொழில்சார்  நிபுணராக மாற்றுகின்றது. Huawei Watch GT2 Pro ஸ்மார்ட் கடிகார எண்ணக்கருவை மீள்வரையறை செய்துள்ளதுடன், இதனாலேயே வெளியாகி சில நாட்களிலேயே விற்பனையிலும் சாதனை படைத்துள்ளது. Huawei Watch GT2 Pro மூலம் வித்தியாசத்தை தாமே அனுபவித்து உணர அனைவரையும் நான் அழைக்கிறேன்,” என்றார்.

இதன் செயற்கை நுண்ணறிவு வழிமுறைகளானது 24 மணித்தியாலங்களும் குருதியில் உள்ள ஒக்ஸிஜன் செறிவு (SpO2)  அல்லது இதயத் துடிப்பினை துல்லியமாக அளவிட உதவுகின்றது.Huawei ஸ்மார்ட் கடிகாரத்தை மாத்திரம் வடிவமைக்கவில்லை, சாதனத்திலிருந்து சிறந்ததைப் பெற தேவையான தொழில்நுட்பத்தைyum உருவாக்கியுள்ளது. Huawei TruSleep தொழில்நுட்பத்துடன் கூடிய GT2 Pro ஸ்மார்ட் கடிகாரமானது முழுமையான தூக்கத்திற்கான பரிந்துரைகளை வழங்குவதுடன், பொதுவான வகையான தூக்க சிக்கல்களை விஞ்ஞான பூர்வமாக கண்காணித்து கண்டறிய உதவுகின்றது. Huawei TruRelax தொழில்நுட்பத்தால் ஆதரிக்கப்படும் அதன் அழுத்த கண்காணிப்பு அம்சம், அதிக பணிச்சுமை உள்ள பாவனையாளர்களுக்கு மன அழுத்தத்தை நிர்வகிக்க ஏற்றது, ஏனெனில் இது மன அழுத்த நிலைகளை குறைப்பதற்கு மூச்சு பயிற்சி போன்ற பரிந்துரைகளை வழங்குகிறது. GT2 Route Back அம்சம் பயண வழியைப் பதிவு செய்வது மட்டுமன்றி துல்லியமான நிலை குறிப்பிற்கு GPS இனை பயன்படுத்துகிறது. மேலும், ஒரு சமிக்ஞை குறையும் போது கூட, பாவனையாளர்கள் பதிவுசெய்த வழியைப் பயன்படுத்தி திரும்பி வர முடியும்.

Huawei WatchGT2 Pro இனை கையில் அணிந்திருக்கும் போது பாவனையாளர்கள் உடற்பயிற்சி மற்றும் விளையாட்டுக்களில் ஈடுபடும் போது போனை அருகில் வைத்திருக்க வேண்டிய தேவையில்லை. இதன் 4GB நினைவகத் திறனில் 500 பாடல்களை சேமித்து வைத்து போன் அருகில் இல்லாமலேயே கேட்டு ரசிக்க முடியும். இத்தோடு அழைப்பை பெறவும், நிராகரிக்கவும், mute செய்யவும் முடிவதுடன் போனின் bluetooth மூலமாக அழைப்புகளை பரிசோதிக்கவும் முடியும். இதனுள் கட்டமைக்கப்பட்டுள்ள remote shutter பட்டனானது  ஸ்மார்ட்போன் பாவனையாளர்கள் போனை படமெடுக்க வேண்டிய பொருளின் முன் வைத்து ஸ்மார்ட் கடிகாரம் மூலமாகவே படம் பிடிக்க வழி செய்கின்றது.

Huawei Watch GT2 Pro பெரிய மின்கலத்தைக் கொண்டுள்ளமையினால் மேலே உள்ள அனைத்து வினைத்திறன் மிக்க அம்சங்களையும் திறம்பட மேற்கொள்ள முடியுமென்பதுடன், முழுமையாக சார்ஜ் செய்தால் 14 நாட்கள் வரையும் பயன்படுத்த முடியும். 2021 ஆம் ஆண்டில் நீங்கள் ஒரு ஸ்மார்ட் கடிகாரத்தை வாங்க விரும்பினால், அதன் மிகவும் மேம்பட்ட மற்றும் பாவனையாளர்  நட்பு அம்சங்களைக் கருத்தில் கொண்டு, Huawei Watch GT2 Pro  தவிர வேறு எதையும் கருத்தில் கொள்ள வேண்டாம்.

இது உங்கள் விளையாட்டு மற்றும் உடற்பயிற்சிகளிலும் உங்களுக்கு உதவுவது மட்டுமல்லாமல், உங்கள் அன்றாட பணிகளை ஸ்மார்டாக மேற்கொள்ளவும் உதவுகிறது.

Huawei Watch GT2 Proவினை நாடு முழுவதும் உள்ள Huawei மீள் விற்பனையாளர்கள், Daraz.lk மற்றும் Wow.lk இணையத்தளங்கள் மூலமும் ரூ. 54,999.00 என்ற விலைக்கு பெற்றுக்கொள்ள முடியும்.

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *