Tamil

Sony யின் புதுமையான பொழுதுபோக்கு சாதனங்கள் சிங்கரினால் இணையத்தில் நேரடியாக அறிமுகம்

நாட்டின் முன்னணியிலுள்ள நீடித்த நுகர்வோர் சில்லறை விற்பனையாளரான சிங்கர் ஶ்ரீ லங்கா பி.எல்.சி நிறுவனம், அண்மையில், Sony நிறுவனத்தின் புத்தம் புதிய தயாரிப்புகளான, 4K UHD அன்ட்ரொய்ட் தொலைக்காட்சிகளின் வரிசை, புதிய ஓடியோ சிஸ்டம்கள், Active Noise Cancellation (தேவையற்ற இரைச்சலை இல்லாதொழிக்கும்) வசதி கொண்ட ஹெட்ஃபோன்கள்,  Sony Sound Bars உள்ளிட்ட பல்வேறு பொழுதுபோக்கு தயாரிப்புகளை வெளியிட்டிருந்தது.

இவ்வாறான வெளியீட்டு நிகழ்வொன்றை, சிங்கர் நிறுவனம் ஏற்பாடு செய்த முதல் தடவை இதுவாகும். இந்நிகழ்வு, Singer, Sony, Chanux Bro உள்ளிட்ட பிரபலங்களின் சமூக வலைத்தள பக்கங்கள் உள்ளிட்ட பல்வேறு நபர்கள் மற்றும் சமூக வலைத்தள பக்கங்கள் வழியாக நேரடியாக ஒளிபரப்பப்பட்டது. இதன் மூலம் பெருமளவானோர் இதனை பார்வையிடும் வகையில் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததோடு, புதிய தயாரிப்புகளைப் பற்றி அறிந்து கொள்ளும் அதே நேரத்தில் பொழுதுபோக்கு அம்சங்களையும் அனுபவிக்கவும் வாய்ப்பாக இந்நிகழ்வு அமைந்தது.

இந்நிகழ்வு, பார்வையாளர்களுக்கு ஒரு புது வகையான அனுபவத்தை வழங்குவதை நோக்கமாகக் கொண்டு, இலங்கையின் மிகவும் பிரபலமான தொழில்நுட்ப தகவல் யூடியூபரான, Chanux Bro (சனுக்ஸ் ப்ரோ) அவர்களால் தொகுத்து வழங்கப்பட்டது. ஒரு மில்லியனுக்கும் அதிகமான இரசிகர்களை subscriber களாக தனது YouTube சனலில் கொண்டுள்ள அவர், தொழில்நுட்ப விடயங்கள் தொடர்பில் மதிப்பீடு செய்யும் அனுபவத்தைக் கொண்டுள்ளார். அந்த வகையில், புதிய Sony தயாரிப்புகள், அவற்றின் நன்மைகள் மற்றும் நவீன வாழ்க்கைக்கு அவை ஏன் மிகவும் பொருத்தமானவை என்பவை தொடர்பிலான பெருமளவான தகவல்களை சனுக்ஸ் ப்ரோ பார்வையாளர்களுக்கு வழங்கினார்.

Sony வர்த்தக நாமத்தின் தூதுவர்களான பாத்திய ஜயகொடி மற்றும் சந்தூஷ் வீரமன் (BnS) ஆகியோரின் பங்கேற்பு, இவ்வெளியீட்டு நிகழ்வை மேலும் அலங்கரித்தது. பாத்திய – சந்தோஷ், பார்வையாளர்களுக்கு துள்ளிசை நிறைந்த இரவாக அந்நிகழ்வை மாற்றினர். இலங்கையின் பிரபலமான மற்றுமொரு YouTube ஜோடிகளான Blok and Dino (ப்ளொக் மற்றும் டினோ) ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டு பார்வையாளர்களை நகைச்சுவை மூலம் மகிழ்வித்தனர். இது பார்வையாளர்களிடையே மிகவும் வரவேற்பைப் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இணைய வழியிலான இந்நேரடி நிகழ்வில் கலந்து கொண்ட, சிங்கர் ஶ்ரீ லங்காவின் சந்தைப்படுத்தல் பணிப்பாளர் ஷனில் பெரேரா இதன்போது கருத்து வெளியிடுகையில், “இந்த இணைய வழி நேரடி நிகழ்வானது, தயாரிப்புகளின் வெளியீடு மட்டுமல்லாது, கொவிட் சூழ்நிலை காரணமாக, எந்தவொரு பொழுதுபோக்கு நிகழ்வுகளிலும் கலந்து கொள்ள முடியாதுள்ள எமது பார்வையாளர்களுக்கு, இன்றைய இரவில், பொழுதுபோக்கு அம்சத்தையும், மகிழ்ச்சியையும் வழங்க  நாங்கள் விரும்பினோம். நாங்கள் ஒரு ‘புதிய இயல்பு நிலை’ இல் வாழ்கிறோம். இணைய வழி நேரடி நிகழ்வுகளே இன்றைய விதிமுறையாக காணப்படுகின்றன. கடுமையான சுகாதார வழிகாட்டல்களைக் கடைப்பிடித்துள்ளதன் மூலம், இந்நிகழ்வை மிகப்பெரும் வெற்றிகரமானதாக மாற்ற முடிந்துள்ளது. Singer நிறுவனமானது, உலகின் முன்னணி பொழுதுபோக்கு தீர்வுகளின் வழங்குநரான Sony உடன் வாழ்நாள் முழுவதும் கூட்டிணைவு பந்தத்தை கொண்டுள்ளது. புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட இந்த தயாரிப்புகள் எமது மதிப்புமிக்க நுகர்வோரின் பொழுதுபோக்கு தேவைகளை பூர்த்தி செய்யும் என்பதில் ஐயமில்லை என்பதோடு, Sony யின் புதுமையான தொழில்நுட்பத்தால் இயங்கும் இத்தயாரிப்புகள் மூலம் அதிலுள்ள வித்தியாசத்தை அனுபவிக்க அவர்களுக்கு அழைப்பு விடுக்கிறோம்.” என்றார்.

Sony ஶ்ரீ லங்கா நிறுவனத்தின் பிரதிநிதியான அலுவலக கிளைத் தலைவர் ஜஸ்டின் வோங் தெரிவிக்கையில், “Sony வர்த்தக நாமமானது, பெருமளவான இலங்கையர்களின் இதயங்களில் குடி கொண்டுள்ளது. இலங்கையிலுள்ள பரந்துபட்ட வாடிக்கையாளர்களுக்கு சோனியின் பொழுதுபோக்கு தீர்வுகளை கொண்டு சேர்ப்பதில், சிங்கர் நிறுவனம் எமக்கு மகத்தான ஆதரவை தொடர்ந்தும் வழங்கி வருகின்றது. இந்நேரடி நிகழ்வு உண்மையிலேயே நம் அனைவருக்கும் மிகவும் மறக்க முடியாத அனுபவமாக இருந்ததோடு, இம்முழு நிகழ்வையும் நமது வாடிக்கையாளர்கள் மகிழ்வுபூர்வமாக கொண்டாடினார்கள் என்பதை நான் உறுதியாக நம்புகிறேன். புதிய தயாரிப்புகளை வெளியிடுவது தொடர்பான இவ்வாறானதொரு அற்புதமான நிகழ்வை ஏற்பாடு செய்தமைக்காக சிங்கர் நிறுவனத்திற்கு எமது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.” என்றார்.

புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட 4K UHD X75H Android TV வரிசைகளில், சோனியின் தனித்துவமான tri-luminous திரையானது, தெளிவான வண்ணங்களையும் சிறந்த விபரங்களையும் வெளிக்கொண்டு வருகிறது. அத்துடன், Bass Reflex ஸ்பீக்கர் ஆனது, திரைப்படங்களைப் பார்ப்பதற்கு ஏற்ற வகையிலான, ஈர்க்கக்கூடிய low-end ஒலியை வழங்குவதோடு, குறுகிய சட்டகத்தை கொண்டு மீள்வடிவமைப்பு செய்யப்பட்ட, நவீன வடிவமைப்பு மற்றும் பயனருக்கு ஒரு அற்புதமான பார்வையிடும் அனுபவத்தையும் கொண்டு வருகின்றது. வெளியிடப்பட்ட இத்தொலைக்காட்சி வகைகளில் மிகவும் பிரபலமான தொலைக்காட்சிகளில் ஒன்றான KD-55X75OOH ஆனது, தற்போது நாடு முழுவதும் உள்ள சிங்கர் காட்சியறைகளில் ரூ. 179,999 எனும் அறிமுக விலையில் கிடைக்கின்றது.

கவர்ச்சிகரமான வடிவமைப்புடன், சோனி நிறுவனத்தின் MHC-V13D, MHC-V43D, MHC-V83D ஆகியன புதிய all-in-one ஓடியோ சிஸ்டம்களாகும். Bluetooth தொழில்நுட்பத்தின் மூலம் இயங்கும் மிகவும் சக்திவாய்ந்த ஓடியோ அமைப்புகளை கொண்ட இவை, பல திசைகளிலும் ஒலியை பரவச் செய்யும் (omnidirectional) விருந்துபசார நிகழ்வுகளுக்கு ஏற்ற ஒலியை (party sound) வழங்குவதோடு, பல திசைகளிலும் ஒளிரக் கூடிய party light மற்றும் speaker light, அதன் மூலைகளைப் பாதுகாக்கும் அம்சம், எளிதாக எடுத்துச் செல்லக் கூடிய தன்மை ஆகிய கவர்ச்சிகரமான அம்சங்களைக் கொண்டுள்ளன.

புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட இரைச்சலை இல்லாது செய்யும் வசதி கொண்ட, Sony 1000XM4 Active Noise Cancellation ஹெட்ஃபோன்கள் ஆனது, உலகின் மிகச் சிறப்பான விற்பனையைக் கொண்ட ஹெட்ஃபோன்களாகவும், Active Noise Cancellation பிரிவில் சிறந்தவை எனவும் கருதப்படுகின்றன. இன்றைய வேகமான வாழ்க்கைக்கு ஏற்ற வகையிலான கம்பியற்ற (wireless) சுதந்திரத்தை இந்த ஹெட்ஃபோன்கள் வழங்குகின்றன. இடத்திற்கு ஏற்ற வகையிலான ஒலியை கட்டுப்படுத்தும் பொறிமுறையானது, சுற்றுப்புற ஒலி அமைப்புகளை தானாகவே இனங்கண்டு, அதற்கு ஏற்றவாறான  இசை அனுபவத்தை வழங்குகிறது. அத்துடன், இவ்வகை ஹெட்ஃபோன்கள், DSEE Extreme மற்றும் LDAC தொழில்நுட்பங்களுடன் மிக உயர் தரமான ஓடியோவை வழங்குகின்றன. தற்போது, Sony 1000XM4 Active Noise Cancellation ஹெட்ஃபோன்கள், அற்புதமான அறிமுக விலையான ரூ. 69,999 இற்கு கிடைக்கின்றன.

பாரம்பரிய ஹோம் தியேட்டர் சிஸ்டம்களுக்கு மாற்றீடான வகையில், சோனியின் மேம்படுத்தப்பட்ட Sound bar வகைகள் தற்போது இலங்கைக்கு வந்துள்ளன.  HT-S100F, HT-S350, HT-G700 ஆகிய Sound bar மாதிரிகள், Bass Reflex ஸ்பீக்கர்களைக் கொண்டதாக அமைந்துள்ளன. virtual surround ஒலித் தொழில்நுட்பம், அடக்கமான மற்றும் இடைவெளியை சேமிக்கும் வடிவமைப்பு ஆகிய அம்சங்களைக் கொண்ட இவை, விரைவில் நாடளாவிய சிங்கர் காட்சியறைகளில் கிடைக்கவுள்ளன.

Singer Sri Lanka PLC பற்றி

சிங்கர் ஶ்ரீ லங்கா பி.எல்.சி ஆனது, இலங்கையின் நீடித்த நுகர்வோர் சந்தையில் முன்னணியில் காணப்படுவதுடன், நாடளாவிய ரீதியில் நாளாந்தம் வளர்ந்து வரும் அதன் வாடிக்கையாளர்களுக்காக, பரந்த அளவிலான உயர்தர உள்ளூர் மற்றும் பிரபல்யமான சர்வதேச வர்த்தக நாமங்களைக் கொண்ட பொருட்களை வழங்குவதில் புகழ் பெற்று விளங்குகின்றது. சிங்கர் மெகா, சிங்கர் பிளஸ் காட்சியறைகள் உள்ளிட்ட 442 சில்லறை விற்பனை நிலையங்கள், 2,800 இற்கும் அதிக அங்கீகரிக்கப்பட்ட வலுவான முகவர் வலையமைப்பு மற்றும் இணைய வர்த்தகத் தளம் (www.singer.lk) ஆகியவற்றைக் கொண்ட சிங்கர் நிறுவனம், 600 இற்கும் மேற்பட்ட இலத்திரனியல் பொருட்கள், 1,200 வீட்டு உபகரணங்கள் மற்றும் 50 இற்கும் மேற்பட்ட சர்வதேச புகழ் வாய்ந்த வர்த்தக நாமங்களுடனான பொருட்களையும் தன்னகத்தே கொண்டுள்ளது. கொள்வனவின்போது நுகர்வோருக்கு அதிக நெகிழ்வுத் தன்மையை வழங்கும்  பொருட்டு, சிங்கர் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு வட்டி இல்லாத கொள்வனவுத் திட்டங்கள், விசேட தள்ளுபடிகள், மாற்றீடு தள்ளுபடிகள், இலவச வழங்கல்கள், கடனட்டை சலுகைகளையும் வழங்குகின்றது.

Sony Corporation பற்றி

Sony கோபரேஷன் ஆனது, தொழில்நுட்பத்தின் உறுதியான அடித்தளத்தைக் கொண்ட புத்தாக்கம் கொண்ட பொழுதுபோக்கு நிறுவனமாகும். விளையாட்டு மற்றும் வலையமைப்பு சேவைகள் முதற் கொண்டு இசை, படங்கள், இலத்த்திரனியல், குறை கடத்திகள் மற்றும் நிதிச் சேவைகள் வரையான அம்சங்களில், சோனி நிறுவனத்தின் நோக்கமானது, படைப்பாற்றல் மற்றும் தொழில்நுட்பத்தின் மூலம் உலகை உணர்ச்சியால் முழுமைப்படுத்துவதாகும். மேலதிக தகவல்களுக்கு : http://www.sony.net/

Share

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *