Tamil

இலங்கையின் தொழில்நுட்ப தொடக்கநிலை நிகழ்ச்சித்திட்டமான Spiralation 2021 இற்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன

தொடக்கநிலை நிறுவனங்களை உள்ளடக்கிய கட்டமைப்பினை வழிநடாத்தும் இலங்கையின் உச்சபட்ச அரச அமைப்பான இலங்கை தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் அமைப்பு (ICTA), 9 ஆவது ஆண்டாகவும் இடம்பெறும் தனது தேசிய தொடக்கநிலை  வணிகளுக்கான நிகழ்ச்சித்திட்டமான ‘Spiralation’ இற்கு விண்ணப்பங்களை கோரியுள்ளது.

Spiralation நிகழ்ச்சித்திட்டமானது இதுவரை சுகாதாரம், நிதி, விவசயம், கல்வி மற்றும் லொஜிஸ்டிக் என பல்வேறு துறைகளைச் சேர்ந்த 90 இற்கும் மேம்பட்ட வெற்றிகரமான தொடக்கநிலை வணிகங்களுக்கு ஆதரவளித்துள்ளதுடன், 500 இற்கும் மேம்பட்ட தொழில்வாய்ப்புகளை உருவாக்கியுள்ளது.

‘ Spiralation 2021 Tech Startup Support Program’ என அழைக்கப்படும் அண்மைய சுற்றானது, தொழில்துறை நிபுணர்களால் வழங்கப்படும் விரிவான தொழில்நுட்ப மற்றும் வணிகப் பயிற்சியை வழங்குவதன் மூலம் தொழில்நுட்ப தொடக்கநிலை வணிகங்களை மேம்படுத்துவதற்கான களத்தை அமைத்துக் கொடுக்கின்றது.

2010 ஆம் ஆண்டில் ஸ்தாபிக்கப்பட்ட Spiralation, ஒரு ஆரம்ப நிலை உதவி மற்றும் வளர்ச்சிக்கான உதவித்திட்டமாக செயல்படுவதுடன், ஒரு தொகுதியில் உள்ள ஒவ்வொரு தொடக்கநிலை வணிகத்துக்குமான 1.5 மில்லியன் உதவித்தொகையையுடன், தொழில்நுட்ப தொடக்கநிலை வணிகங்கள், புத்தாக்கங்களை ஊக்குவிப்பது மற்றும் ஆதரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. 

ஒரு தொடக்கநிலை வணிகமானது Spiralation நிகழ்ச்சித்திட்டத்தில் இணையும் போது, ​​முன்னதாக வரையறுக்கப்பட்ட மைல்கற்களின் அடிப்படையில், ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்ட இலக்குகளை அடைந்தமைக்கு ஏற்ப மானியம் பிரித்து வழங்கப்படும். தொடக்கநிலை வணிகங்கள் ஆரம்ப /  வளர்ச்சிக்கான காலம் மற்றும் அதற்கு அப்பாலும் வள ஆதாரங்களில் இருந்து  தொடர்ச்சியான ஆதரவைப் பெற்றுக்கொள்ளும்.

தொழில்நுட்ப தொடக்கநிலை வணிகள்  உள்நாட்டு மற்றும் சர்வதேச சந்தைகளை அணுக Spiralation உதவுவதுடன், சர்வதேச மாநாடுகளில் கலந்துகொள்ள வாய்ப்புகளை வழங்குகிறது. மேலும், தொடக்கநிலை வணிகங்கள் வேகமாக வளரவும்,  விஸ்தரிக்கவும் உதவுகின்றது.

Spiralation இனால் ஆதரிக்கப்பட்ட பல தொழில்நுட்ப தொடக்கநிலை வணிகங்கள் இப்போது தரமான கல்வி, விவசாயம், சுகாதாரம் மற்றும் நல்வாழ்வு, வங்கி மற்றும் நிதி சேவைகள், நவநாகரிகம் மற்றும் ஆடை மற்றும் உட்கட்டமைப்பு போன்ற துறைகளில் வெற்றிகரமாக செயல்பட்டு வருகின்றன.

இதற்கான விண்ணப்பங்கள் மே 10 வரை ஏற்றுக்கொள்ளப்படும் என்பதுடன், ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் https://spiralation.com  வழியாக பதிவு செய்ய அழைக்கப்படுகிறார்கள்.

இலங்கையின் தொழில்நுட்ப  தொடக்கநிலை வணிகங்களின் கட்டமைப்பை வடிவமைப்பதில் வினையூக்கியாக திகழும் ICTA, Spiralation ஊடாக தொடக்கநிலை வணிகங்களுக்கும், ICTAவின் டிஜிட்டல் பொருளாதார தூணின் கீழ் அதன் ‘Startup Ecosystem Development’  மூலோபாய வணிக பிரிவில் ஏனைய அனைத்து தொடக்கநிலை வணிகங்கள் தொடர்பான நடவடிக்கைகளுக்கும் ஆதரவளிக்கின்றது. நாட்டில் புதிய தொழில்நுட்ப அடிப்படையிலான வணிக முயற்சிகளை உருவாக்குதல், தொடக்கநிலை வணிகங்களின் தரத்தை அதிகரித்தல், ஆரம்ப கட்ட நிதியளிப்பு, அறிவு மற்றும் ஒரு தொடக்கநிலை வணிகத்தை வெற்றிகரமாக நடத்தத் தேவையான அனைத்தையும் வழங்குதல் என்ற நோக்கத்துடன் இது தொடங்கப்பட்டது.

Share

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *