Tamil

AFC அதன் இரண்டாம் அடுக்கு மூலதனத்தை வலுப்படுத்த துணை நிதியை ரூ. 1 பில்லியனாக திரட்டியுள்ளது

Alliance Finance Co PLC (AFC) இலங்கையின் நுண், சிறிய, நடுத்தர தொழில் முயற்சி துறையின் அபிவிருத்தியை நிதி ரீதியாக வலுவூட்டுவதற்கும் அதற்கு உரிய வசதியை செய்வதற்கும் கம்பனியின் ஒழுங்குமுறை மூலதனத்தை வலுப்படுத்தும் நோக்குடன், அடுக்கு II மூலதனத்தில் 1 பில்லியன் ரூபாவை வெற்றிகரமாக திரட்டியுள்ளது. அடுக்கு II துணைக் கடனானது 5 வருட காலத்தைக் கொண்டுள்ளதுடன், நாட்டின் முன்னணி முதலீட்டு வங்கியான Capital Alliance Ltd (CAL) மூலம் கட்டமைக்கப்பட்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த முக்கியமான மைல்கல் குறித்து கருத்து தெரிவித்த AFC இன் பிரதித் தலைவரும் முகாமைத்துவப் பணிப்பாளருமான ரோமானி டி சில்வா, “எமது முதலீட்டாளர்கள் எமது நிலையான வர்த்தகத் தத்துவத்தில் வைத்திருக்கும் நம்பிக்கையின் பிரதிபலிப்பே இதுவாகும். கொவிட்-19 தொற்றுநோய் காரணமாக, இலங்கையின் நுண், சிறு, நடுத்தர தொழில் முயற்சியாளர்களுக்கு முன்னெப்போதையும் விட அதிக உதவி தேவைப்படுகிறது. எனவே ரூ. 1 பில்லியனாக அதனை உயர்த்துவதன் மூலம் துணைக் கடனானது எமது அடுக்கு II மூலதனத்தை வலுப்படுத்தியுள்ளது. இது எமது நிரூபிக்கப்பட்ட வணிக மாதிரிகளைப் பயன்படுத்தி இலங்கையிலுள்ள நுண், சிறிய, நடுத்தர அளவிலான தொழில்முனைவோரை உருவாக்க எமக்கு பாரிய திறனை வழங்குகிறது. அத்துடன், முதலீட்டாளர், CAL ஆகியோர் எம் மீது வைத்திருக்கும் நம்பிக்கைக்கு நாங்கள் எமது மனமார்ந்த பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். 2019ஆம் ஆண்டில் IFC இன் (உலக வங்கிக் குழுமத்தின் தனியார் துறைப் பிரிவு) தொழில்நுட்ப உதவியுடன் ஒரு உள்ளார்ந்த மறுசீரமைப்பிற்குப் பின்னர், நிறுவனத்தின் அனைத்து செயல்திறன் அளவீடுகளும் 1.6% கடன் குறிப்பு வளர்ச்சியுடன் தொழில்துறையில் அதன் போட்டியாளர்களை விஞ்சும் வகையில் பெரிதும் மேம்பட்டுள்ளன. 169 % இலாப வளர்ச்சி மற்றும் NPL இல் மிகவும் பாராட்டத்தக்க 23 % குறைப்பானது, அதன் மறுசீரமைப்பின் தாக்கத்தை உறுதிப்படுத்தியுள்ளது. இலங்கையின் மிகப் பழமையான நிதி நிறுவனமும் கிராமியப் பொருளாதாரத்திற்கு நிகர கடன் வழங்குபவராகவுமான AFC, அனைத்து சமூகங்களின் நிதி உள்ளடக்கம் மற்றும் நிலையான வளர்ச்சியில் கவனம் செலுத்துகிறது.

AFC இன் நிலைபேறுதன்மைக்கான அணுகுமுறை முழுமையானது மற்றும் சமூக மற்றும் சூழல் நிலைபேறுதன்மைக்கு சமமான முக்கியத்துவத்துடன் பொருளாதார வலுவூட்டலுக்கு அப்பாற்பட்டதாக அமைந்துள்ளது. 2012ஆம் ஆண்டில் Triple Bottom Line அணுகுமுறையை பேணியதை தொடர்ந்து AFC அதன் நிறுவுனர்களின் ஆலோசனைகளை நிறுவனமயமாக்கியுள்ளது, அதைத் தொடர்ந்து நிலைபேறான நிதி நிறுவனமாக இன்று மாறுவதற்கு பல நடவடிக்கைகள் அதில் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 2020ஆம் ஆண்டில், முன்னோடியான நிலைபேறுதன்மை தரநிலைகள் மற்றும் சான்றளிப்பு முன்முயற்சியின் (SSCI) கீழ் முழுமையான நிலைபேறுதன்மைக்கான சான்றிதழ் பெற்ற தெற்காசியாவின் முதல் நிதி நிறுவனமாக AFC மாறியுள்ளது. SSCI ஆனது ஜேர்மனியின் பெறுமதி சார்ந்த நிதி நிறுவனங்களுக்கான நிலைபேறுதன்மை தரநிலைகளின் சர்வதேச சபையின் கீழ் நிர்வகிக்கப்படுகிறது. இது நிறுவனத்தின் அசைக்க முடியாத அர்ப்பணிப்பை காட்டுவதுடன், அதனால் உருவாக்கப்பட்ட தாக்கத்தின் சிறந்த அளவீடுகள் மீது இன்னும் அதிக கவனம் செலுத்துவதை அது காட்டுகிறது.

நிலைபேறான முயற்சிகளுக்காக நிகர இலாபத்தில் தொழில்துறையில் அதிக பங்களிப்புகளை மேற்கொள்ளும் பங்களிப்பாளர்களில் AFCயும் உள்ளது. நிறுவனம் நிலைபேறான மற்றும் CSR முன்முயற்சிகளுக்காக இலாபத்தில் 4% வருடாந்த ஒதுக்கீட்டை அர்ப்பணித்துள்ளது. சமூக மற்றும் சூழல் நோக்கங்களை பூர்த்தி செய்யும் அதே வேளையில் 2024 இற்குள் ஒரு மில்லியன் மரங்களை நடுவதை இலக்காகக் கொண்ட “ஒற்றுமைக்கான 1 மில்லியன் மரங்கள்” முதன்மைத் திட்டம் உட்பட பல முன்முயற்சிகளை நிறுவனம் மேற்கொண்டுள்ளது. இன்று வரை இந்நிறுவனம் 350,000 மரங்களை நாட்டிற்காக வழங்கியுள்ளது. இது தவிர, உயிர்ப் பல்வகைமையை பாதுகாத்தல், தொழில்முனைவோரை ஊக்குவித்தல், நிலைபேறான தயாரிப்புகளை ஊக்குவித்தல், சமூக மற்றும் சூழல் நிலைப்பை உறுதிசெய்யும் CSR நடைமுறைகளை மேற்கொள்ளல் ஆகியன AFC இன் முக்கிய முன்னுரிமைகளாக, அதன் நிலைபேறுதன்மை தொடர்பான கொள்கைகளின் கீழ் உள்ளன.

தொலைநோக்கு பார்வை கொண்ட 1,300 பேரைக் கொண்ட ஆற்றல்மிக்க மற்றும் செயலாற்றல் கொண்ட இளம் குழுவினால் இயங்கி வரும் AFC வணிகமானது, UN SDG மற்றும் தேசிய வளர்ச்சி நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப கவனம் செலுத்தும் வகையிலான மதிப்பின் உருவாக்கத்தை உறுதிசெய்யும் வகையில், அதன் உயர் தாக்கத்தை ஏற்படுத்தும் இலக்குகளுடன், உலகளாவிய மற்றும் உள்ளூர் ரீதியான நிலைபேறான வளர்ச்சிக்கான நிகழ்ச்சி நிரலை தொடர்ந்து ஆதரிக்கும். IFC, FMO, DWM, Tridos Bank உள்ளிட்ட ஏனைய சிறந்த தாக்கத்தை ஏற்படுத்தும் முதலீட்டாளர்கள் மற்றும் அதன் வெளிநாட்டு நிதியளிப்பு கூட்டாளர்களுடனான சிறந்த சக்திமிக்க கூட்டாண்மை அதன் அணுகுமுறைக்கு மேலும் பெருமதிப்பைச் சேர்க்குமென நம்புவதுடன், நாட்டில் உள்ள பரந்த அளவிலான பங்குதாரர்களுக்கு உரிய மதிப்பிற்கான வழங்கலை அடைவதனை உறுதிப்படுத்துவதற்கும் AFC எதிர்பார்க்கிறது. இலங்கையில் நிலைபேறான அபிவிருத்தியை எளிதாக்கும் இந்த கூட்டாண்மைகள் மற்றும் ஒத்துழைப்புகளை நிலைநிறுத்த AFC ஆர்வமாக உள்ளதுடன்  “நிலைபேறான நிதியின் மூலம் உலகை ஒரு சிறந்த இடமாக மாற்றுதல்” எனும் நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டு சந்தேகத்திற்கிடமின்றி அது தனது பயணத்தை மேற்கொள்ளும்.

Alliance Finance PLC பற்றி

Alliance Finance PLC ஆனது நிதி சார்ந்த வணிகத்தில் 60 ஆண்டுகளுக்கும் மேலான பாரம்பரியத்துடனான பழமையான நிறுவனமாக விளங்குவதுடன், அதன் விசுவாசம் மிகுந்த நான்கு தலைமுறை வாடிக்கையாளர்களுக்கு நிதிசார்ந்த மற்றும் நிலைபேறான சேவைகளை வழங்கி வருகின்றது. ஐரோப்பிய ஒன்றிய முன்முயற்சியான நிலைபேறான வளர்ச்சிக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் முன்னோடியான Sustainability Standards and Certification Initiative (SSCI) கீழ், முழுமையான நிலைபேறுதன்மையில் சான்றளிக்கப்பட்ட நிதி நிறுவனமாக மாறிய தெற்காசியாவின் முதல் நிறுவனம் இதுவாகும். SSCI என்பது உலகின் அளவிடக்கூடிய முதலவாதும் சான்றளிக்கக்கூடிய முழுமையான நிலைபேறுதன்மை தரநிலையாகும். இது ஜேர்மனியில் பெறுமதி சார்ந்த நிதி நிறுவனங்களுக்கான நிலைபேறுதன்மை தரநிலைகளின் சர்வதேச கவுன்சிலால் உருவாக்கப்பட்டது. சூழல் மற்றும் நிலைபேறுதன்மை முன்முயற்சிகள் ஆகியன AFC இன் பெறுநிறுவன சமூக பொறுப்பு (CSR) நிகழ்ச்சி நிரலின் மையத்தில் உள்ளன. இது “நிலைபேறான நிதி மூலம், உலகை ஒரு சிறந்த இடமாக மாற்றுதல்” என்ற அதன் நோக்கத்தை உணர்ந்து கொள்வதற்கு நிறுவனத்தின் எதிர்கால மையத்தை அதில் அமைத்துள்ளது.

Share

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *