Tamil

உலகத் தரம் வாய்ந்த ZEISS KINEVO 900 Neuro Microscope கொண்டுள்ள இலங்கையின் முதலாவது தனியார் மருத்துவமனையாக Durdans

இல. 03, அல்பிரட் பிளேஸ், கொழும்பு 03 இல் அமைந்துள்ள Durdans மருத்துவமனை, அதன் சத்திர சிகிச்சை செயற்பாடுகளை மேலும் மேம்படுத்தும் நோக்கில், உலகத்தரம் வாய்ந்த ZEISS KINEVO 900 Neuro Microscope யினை நிறுவியுள்ளது. அந்த வகையில் இவ்வகையான நுணுக்குக்காட்டியை பொருத்தியுள்ள இலங்கையின் முதலாவது தனியார் மருத்துவமனையாக Durdans திகழ்கின்றது. சமீபத்திய தொழில்நுட்பங்களுடன் உள்ளூர் சுகாதாரத் துறையை மேம்படுத்த வேண்டும் எனும் முயற்சிகளுக்கு அமைய, இலங்கையின் முன்னணியில் உள்ள பல்வகைப்பட்ட கூட்டு நிறுவனங்களில் ஒன்றான DIMO, இதற்கான பணிகளை அண்மையில் நிறைவு செய்திருந்தது.

1945ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட Durdans மருத்துவமனையானது, மக்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்த வேண்டும் எனும் எளிய தத்துவத்தை நோக்காகக் கொண்டு, மருத்துவத் துறையில் சிறப்பானவற்றையும், புத்தாக்க கண்டுபிடிப்புகளையும் இப்பிராந்தியத்தில் அறிமுகப்படுத்தி அதில் அதன் நற்பெயரைக் கட்டியெழுப்பியுள்ளது. இந்த நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டு, Durdans மருத்துவமனையானது, DIMO உடன் இணைந்து, அதிநவீன நுணுக்குக்காட்டியான ZEISS KINEVO 900 இனை நிறுவுவதற்கான முயற்சியை எடுத்துள்ளது. இது அறுவை சிகிச்சை நிபுணரால் இயக்கப்படும் ஒரு புதிய ரோபோவியல் காட்சிப்படுத்தல் தொகுதியாகும். இது அறுவைசிகிச்சை நுணுக்குக்காட்டியின் செயற்பாட்டை, விசேட ரோபோ செயற்பாட்டு கட்டுப்பாட்டு அமைப்புகளுடன், 4K தரத்தில் அமைந்த, முப்பரிமாண (3D) காட்சிப்படுத்தலாக வெளிப்படுத்துகிறது.

Durdans மருத்துவமனையானது, தொழில்நுட்பத்தின் அடிப்படையில் உலகின் சிறந்த நடைமுறைகளை இலங்கைக்கு கொண்டு வருவதற்கும், நோயாளிக்கான மேம்பட்ட வசதியை உறுதி செய்வதற்கும், அறுவை சிகிச்சையின் போது ஏற்படும், அறுவை சிகிச்சை நிபுணரின் வழு வீதத்தை குறைப்பதனை உறுதி செய்வதற்கும் தொடர்ந்தும் முயற்சித்து வருகிறது. அந்த வகையில், DIMO வின் ZEISS KINEVO 900 Neuro Microscope இன் அறிமுகமானது, Durdans மருத்துவமனை தேடுகின்ற ஒரு சிறந்த தீர்வாகும். இந்த வில்லை மூலமான, வழிச் செலுத்தல் மற்றும் காட்சிப்படுத்தல் தகவல்கள் நுணுக்குக்காட்டியின் கண் வில்லைப் பகுதியில் காட்சிப்படுத்தப்பட்டு, சத்திர சிகிச்சை அறையில் உள்ள பெரிய திரைகளில் வெளிப்படுத்தப்படும். அந்த வகையில் சத்திரசிகிச்சை அறையில் உள்ள ஊழியர்களுக்கு விரிவான விபரங்கள் அடங்கிய காட்சியை அது வழங்குகிறது. அதற்கமைய, துணை அறுவை சிகிச்சை நிபுணர்கள், அறுவை சிகிச்சை உதவியாளர்கள் மற்றும் மருத்துவ நிபுணர்கள் உள்ளிட்ட அனைவராலும் தற்போது உயர் தெளிவுத்திறன் கொண்ட அதன் படங்களை நிகழ்நேரத்தில் பார்க்க முடிகின்ற அதே வேளையில், 3D கண்ணாடிகள் மூலம் நரம்பியல் கட்டமைப்புகளின் மேம்படுத்தப்பட்ட காட்சியை பார்க்க முடிகின்றது.

ZEISS KINEVO 900 Neuro Microscope ஆனது PointLock எனப்படும் விசேட ரோபோவியல் கட்டுப்பாட்டு தொகுதி உள்ளிட்ட பல்வேறு அம்சங்களைக் கொண்டுள்ளது. இது அறுவைசிகிச்சையின் போது, ஒரு குறிப்பிட்ட புள்ளியொன்றில் கவனம் செலுத்த உதவுவதோடு, ஒரு கோள வடிவிலான வளைவில் அதன் பார்வைக் குவிவுப்புள்ளி இழக்கப்படாமல், நுணுக்குக்காட்டியை நகர்த்தவும் உதவுகிறது. PositionMemory அமைப்பானது, மூளையின் முக்கிய பகுதிகளுக்கான உருப்பெருக்கம் மற்றும் பார்வைக் குவிவுப்புள்ளி அமைப்புகளை சேமிக்கிறது. அத்துடன் QEVO® எனப்படும், நுண் ஆய்வு அறுவை சிகிச்சைக் கருவியானது, கோணத்தில் நிறுவப்பட்ட வடிவமைப்புடன் அமைக்கப்பட்டுள்ளது. இது நுணுக்குக்காட்டியின் வரம்பிற்கு வெளியே உள்ள சிக்கலான கட்டமைப்புகளைச் சுற்றிப் பார்க்க அறுவை சிகிச்சை நிபுணர்களுக்கு உதவுகிறது. உள்ளார்ந்த 4K கெமரா தொழில்நுட்பத்துடன் கூடிய டிஜிட்டல் ஹைப்ரிட் காட்சிப்படுத்தல் மூலம், முன்கூட்டிய அபாய எச்சரிக்கை வழங்கப்படுவதன் காரணமாக, கண்களை சுதந்திரமாக வைத்திருக்கவும், நுணுக்குக்காட்டியை இலகுவாக இயக்கவும் அறுவைசிகிச்சை நிபுணர்களுக்கு வழியேற்படுத்துகிறது.

Durdans மருத்துவமனையின் மருத்துவ சேவைகள் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் ஜிதேந்திரி பெரேரா இது தொடர்பில் தெரிவிக்கையில், “எமது நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர்களுக்கான அதிநவீன மருத்துவ உபகரணங்களுடன், நாம் நரம்பியல் மற்றும் நரம்பியல்-அறுவை சிகிச்சையில் முன்னணியில் இருக்க வேண்டும் எனும் நோக்கத்தை கொண்டுள்ளோம். ZEISS KINEVO 900 Neuro Microscope ஆனது, அறுவை சிகிச்சை அறையில் துல்லியமான முடிவுகளை எடுப்பதற்காக, எமது அறுவை சிகிச்சை நிபுணர்களுக்கு பெறுமதியான கருவியாக அமையும். அத்துடன், எம்மிடம் வரும் அனைத்து நோயாளிகளின் தேவைகளையும் நாம் பூர்த்தி செய்ய முயற்சிப்பதால், சிறந்த நோயாளர் பராமரிப்பு என்பது எமக்கு மிக முக்கியமான ஒன்றாகும். நிபுணத்துவம் கொண்ட திறமையான மருத்துவர்கள், தொழில்நுட்பம் மற்றும் உட்கட்டமைப்பு முன்னேற்றங்களுடன், Durdans மருத்துவமனையானது 2022 ஆம் ஆண்டில் நரம்பியல் மற்றும் நரம்பியல்-அறுவை சிகிச்சையில் முன்னணி சுகாதார சேவை வழங்குநராக மாற்றமடையவுள்ளது.” என்றார்.

“Neurology, Neurosurgery, Neuro-diagnostics, Interventional Radiology ஆகிய மேலும் நான்கு முக்கிய துறைகளாகப் பிரிக்கப்பட்ட, புதிதாக நிர்மாணிக்கப்பட்ட நரம்பியல் விசேட மையம் மூலம் நாம் எமது சேவைகளை மேலும் விரிவுபடுத்துகின்றோம். நரம்பியல் தொடர்பான நோய் நிலைமைகள் கொண்ட நோயாளிகளுக்கு, நீண்டகால சிகிச்சை அளிக்கும் வகையிலான, பல்வேறு வசதிகளுடன் கூடிய மறுவாழ்வு பிரிவொன்றும் இங்கு நிறுவப்படும் என்பதுடன், இப்பிரிவு மேலே குறிப்பிடப்பட்ட நான்கு துறைகளுக்கும் ஆதரவளிக்கும்.” என வைத்தியர் ஜிதேந்திரி பெரேரா மேலும் தெரிவித்தார்.

Durdans மருத்துவமனையில் இவ்வாறு நிறுவப்பட்டுள்ள நுணுக்குக்காட்டி தொடர்பில், DIMO குழுமத்தின் மருத்துவ பொறியியல் செயல்பாடுகளை மேற்பார்வையிடும் அதன் நிறைவேற்றுப் பணிப்பாளர் விஜித் புஷ்பவெல கருத்து வெளியிடுகையில், “உள்ளூர் சுகாதாரத் துறையில் சமீபத்திய தொழில்நுட்ப முன்னேற்றங்களை அறிமுகப்படுத்துவதில் DIMO எப்போதும் முன்னணியில் உள்ளது. optics, optoelectronics துறைகளில் உலகப் புகழ்பெற்ற வர்த்தகநாமமான ZEISS இன் 100 இற்கும் மேற்பட்ட புதிய அம்சங்களைக் கொண்ட, இந்த அடுத்த தலைமுறை காட்சிப்படுத்தல் தொகுதியை, Durdans மருத்துவமனையில் நிறுவுவதை நாம் பாக்கியமாக கருதுகின்றோம். கடந்த காலங்களிலும் இவ்வாறான பல்வேறு திட்டங்களுக்காக நாம் Durdans மருத்துவமனையுடன் கைகோர்த்திருந்தோம். அதேபோன்று ஆரோக்கியமான தேசத்தைக் கட்டியெழுப்பும் நோக்கில், மருத்துவப் பொறியியல் துறையில் எமது நிபுணத்துவ அறிவைப் பகிர்ந்துகொள்ளும் அதே வேளையில், வைத்தியசாலையின் எதிர்கால முயற்சிகளுக்கான வசதிகளை மேற்கொள்வதற்கும் நாம் எதிர்பார்த்துள்ளோம். இலங்கையில் ZEISS இற்கான அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதியான DIMO ஆனது, அவசியமான அனைத்து விற்பனைக்குப் பிந்தைய சேவைகளையும் வழங்குவதற்கு முழுமையாகத் தயாராக உள்ளது.

Durdans மருத்துவமனையில் தற்போது நிறுவப்பட்டுள்ள நவீன ZEISS KINEVO Neuro Microscope ஆனது, அறுவை சிகிச்சையில் வசதியையும் துல்லியத் தன்மையையும் வழங்கும் அதே வேளையில், மருத்துவத் துறையில் உள்ளவர்களுக்கு சிறந்த தகவலுடனான முடிவுகளை எடுக்கவும் உதவுகிறது.

END

Share

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *