Tamil

DIMO Wishwasaya Wasiya’ வெற்றியாளர்களுக்கு ரூ. 10 மில்லியனுக்கும் அதிக பெறுமதியான பரிசுகள்

இலங்கையின் முன்னணியில் உள்ள பல்வகைப்பட்ட கூட்டு நிறுவனங்களில் ஒன்றான DIMO நிறுவனம், DIMO வின் புரட்சி மிக்க, 10 மில்லியன் ரூபாவிற்கு அதிக பெறுமதியான மாபெரும் பரிசுகளை வழங்கும் முன்னெடுப்பான ‘DIMO Wishwasaya Vasiya’ அதிர்ஷ்ட குலுக்கலில், பரிசு வென்ற நுவரகலவைச் சேர்ந்த P.G.D.F. பியரத்ன மற்றும் கலென்பிந்துனுவெவயைச் சேர்ந்த D.A. சேனாரத்ன ஆகியோருக்கு இரண்டு LOVOL அறுவடை இயந்திரங்களை DIMO வழங்கி வைத்துள்ளது.

உள்நாட்டு விவசாயத் தொழிலில் ‘DIMO மீதான நம்பிக்கைக்கான நன்மை’ எனும் அர்த்தத்தை கொண்ட ‘DIMO Wishwasaya Wasiya’ எனும் திட்டம், கடந்த பெரும் போகத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டதோடு, இது விவசாய சமூகத்தின் பெரும் வரவேற்பையும் பெற்றிருந்தது. இலங்கையின் விவசாயத் துறையில் இயந்திரமயமாக்கல் மூலம் உதவுவதில் முன்னணியில் இருக்கும் ஒரு நிறுவனம் எனும் வகையில், DIMO ஆனது விவசாய சமூகத்தை வலுவூட்டுவதற்கான அதன் அர்ப்பணிப்பை மேலும் அதிகரிக்கும் வகையில், இந்த குலுக்கல் பரிசுத் திட்டத்தை அறிமுகப்படுத்தியிருந்தது. கடந்த 2021ஆம் ஆண்டு ஓகஸ்ட் 01ஆம் திகதி முதல் டிசம்பர் 31ஆம் திகதி வரை, Mahindra அல்லது Swaraj உழவு இயந்திரங்களை கொள்வனவு செய்யும் விவசாயிகள் இந்த குலுக்கல் திட்டத்திற்கு தகுதி பெற்றனர். இக்குலுக்கல் நிகழ்வானது, உரிய அரசாங்க அதிகாரிகளின் மேற்பார்வையின் கீழ் இடம்பெற்றதுடன், Facebook மூலம் நேரடியாக ஒளிபரப்பை மேற்கொண்டு, பார்வையாளர்களுக்கும் அதனன் பார்வையிட வாய்ப்பை ஏற்படுத்தியது.

அதிர்ஷ்டசாலிகளாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில் ஒருவரான டி.ஏ. சேனாரத்ன தெரிவிக்கையில், “மிக நீண்ட காலமாக நான் வயல் வேலை செய்ய இயந்திரங்களை வாடகைக்கு எடுக்க வேண்டியிருந்தது. விவசாய சமூகத்தினரிடையே Mahindra உழவு இயந்திரத்திற்கு அதிக நற்பெயர் இருப்பதால் அதை கொள்வனவு செய்ய வேண்டுமென நினைத்தேன். அதன் மூலம் இந்த குலுக்கலில் வெற்றியாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளேன். அத்துடன் நான் ஒரு சொந்த அறுவடை இயந்திரத்தை வென்றமை தொடர்பில் நான் எவ்வளவு மகிழ்ச்சியடைகிறேன் என்பதை என்னால் விபரிக்க முடியவில்லை. ஏனென்றால் இது எனக்கு மட்டுமல்ல, எனது சொந்த ஊருக்கும் பயனளிக்கக் கூடியது. DIMO விலிருந்து Mahindra உழவு இயந்திரத்தை கொள்வனவு செய்து, அது தரும் எல்லையற்ற வசதிகளைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு நான் அனைவரிடமும் கேட்டுக் கொள்கிறேன்.” என்றார்.

மற்றைய அதிர்ஷ்டசாலியான P.G.D.F. பியரத்ன தெரிவிக்கையில், “நான் சுமார் 8 மாதங்களாக Swaraj உழவு இயந்திரத்தைப் பயன்படுத்தி வருகிறேன். தற்போது அறுவடை இயந்திரத்தை வென்றுள்ளேன். இது எனக்கு பெரு மகிழ்ச்சியை தருகிறது. Swaraj உழவு இயந்திரம், எனது அன்றாட வேலைகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருப்பதுடன், இந்த உழவு இயந்திரங்கள் எங்கள் மாகாணத்தில் பரவலாக பயன்படுத்தப்படுகின்றன. இது போன்ற விடயங்கள் மூலம் விவசாய சமூகத்திற்கு ஆதரவு வழங்கும் DIMO நிறுவனத்திற்கு நான் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்.” என்றார்.

DIMO Agribusinesses பிரதம செயற்பாட்டு அதிகாரி ரஜீவ் பண்டிதகே இது தொடர்பில் கருத்து வெளியிடுகையில், “விவசாயத் துறையானது நாட்டின் பொருளாதாரத்தில் ஒரு முக்கிய பங்கை வகிக்கிறது. DIMO ஆகிய நாம், அடுத்த தலைமுறை விவசாயத் தொழில்நுட்பத்தை விவசாயிகளிடம் கொண்டு சேர்க்கும் அதே வேளையில், உள்ளூர் விவசாயத் துறையின் வளர்ச்சிக்கு பங்களிப்பதற்கான வழிகளை தொடர்ந்தும் ஆராய்ந்து வருகிறோம். ‘DIMO Wishwasaya Wasiya’ போன்ற முயற்சிகளின் முக்கிய நோக்கம் யாதெனில், இலங்கை விவசாயிகளை விவசாய சுய தொழிலாளர்களாக மாற்றுவதனை ஊக்குவிப்பதாகும் என்பதுடன், நாட்டில் அதிகளவான விவசாய சுய தொழிலாளர்களை உருவாக்குவதனை நோக்காகக் கொண்டு DIMO ஆனத, உள்ளூர் விவசாய சங்கிலியை மேலும் வலுப்படுத்தும். எதிர்வரும் காலங்களில் இலங்கை விவசாய சமூகத்தின் கனவுகள் மற்றும் அபிலாஷைகளை அடைய நாம் தொடர்ந்தும் அவர்களை ஊக்குவிப்போம்.” என்றார்.

“நாம் Mahindra மற்றும் Swaraj போன்ற முன்னணி உழவு இயந்திர வர்த்தக நாமங்களையும், LOVOL மற்றும் CLAAS போன்ற அறுவடை இயந்திர வர்த்தக நாமங்களையும் வழங்கி வருகிறோம். உற்பத்தித்திறனை அதிகரிக்கவும் அறுவடைக்குப் பிந்தைய பாதிப்புகளைக் குறைக்கவும் விவசாயிகளுக்கு நெகிழ்வான குத்தகை வசதிகளை வழங்குவதற்கும் முன்னணி நிதிப் பங்காளிகளுடன் நாம் உறுதியான கூட்டுறவை ஏற்படுத்திக் கொண்டுள்ளோம்” என அவர் சுட்டிக்காட்டினார்.

அனைத்து DIMO விவசாய இயந்திரங்கள் மற்றும் உபகரணங்களும் விரிவான உத்தரவாதக் காலங்களை கொண்டுள்ளன. மேலும் Mahindra உழவு இயந்திரமானது, முதன் முறையாக நாட்டில் 4 வருட உத்தரவாத காலத்தை கொண்டதாக விளங்குகின்றது. ஒவ்வொரு கொள்வனவும், 80 ஆண்டுகளுக்கும் மேலான DIMO நம்பிக்கை மற்றும் அதன் ஒப்பற்ற விற்பனைக்குப் பின்னரான சேவைகளை கொண்டுள்ளது என விவசாய சமூகத்திற்கு DIMO உறுதியளிக்கிறது.

END

Share

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *