Tamil

‘சொந்துரு திரியவந்தி’ சிகை நன்கொடை திட்டம் மத்திய மாகாணத்திலும் ஆரம்பம்

கீமோதெரபி சிகிச்கைக்கு உட்படும் பெண்கள், தங்களது கடினமான பயணத்தின் போது எதிர்கொள்ளும் எதிர்பாராத அனுபவங்களில் ஒன்றாக முடி உதிர்தலை கருதுகின்றனர். கீமோதெரபி சிகிச்சை ஆரம்பித்து முதல், இரண்டு தொடக்கம் நான்கு வாரங்களில் முடி உதிர்தல் ஏற்படுகிறது. அவ்வாறான பெண்களுக்கு சாத்தியமான அனைத்து வழிகளிலும் ஆதரவளிப்பது அவசியமாகும். அந்த வகையில் இவ்வாறான பெண்களை ஊக்குவிப்பதன் அவசியத்தை உணர்ந்துள்ள குமாரிகா, அதன் குறிப்பிட்ட நோக்கத்துடன் செயற்படுத்தப்படும் ‘சொந்துரு திரியவந்தி’ பிரசார உதவித் திட்டத்தை தொடர்ச்சியாக மத்திய மாகாணத்திற்கும் விரிவுபடுத்தியுள்ளது. இத்திட்டம் 6,000 கூந்தல் பராமரிப்புப் பொதிகளை நன்கொடையாக வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. அளவுக்கேற்ப சரிசெய்யக்கூடிய பட்டி கொண்ட தோள்பட்டை வரை நீளத்துடனான இயற்கையான கூந்தலைக் கொண்ட சிகை, குமாரிகா ஷம்பூ மற்றும் கண்டிஷனர், குமாரிகா ஹெயார் சேரம், குமாரிகா ஹெயார் ஒயில் மற்றும் புற்றுநோயாளிகளுக்கான முக்கியமான வழிகாட்டல்கள் அடங்கிய ஒரு கையேடு ஆகியன இப்பொதியில் அடங்குகின்றன.

இந்த தேசிய பிரச்சாரத்தின் இரண்டாம் கட்டம், கண்டி தேசிய வைத்தியசாலையில் இடம்பெற்றதுடன், அதன் முதல் கட்டமாக 50 கூந்தல் பராமரிப்பு பொதிகள் நன்கொடையாக வழங்கப்பட்டதுடன், இது மாதாந்தம் இடம்பெறவுள்ளது. இம்முயற்சித் திட்டமானது இலங்கையில் முதன்முறையாக மேற்கொள்ளப்படுவதுடன், இந்திரா புற்றுநோய் அறக்கட்டளை மற்றும் அலுத்கம, பெந்தோட்டை, கல்கிஸ்ஸை லயன்ஸ் கிளப் ஆகியவற்றுடன் இணைந்து சுகாதார அமைச்சு மற்றும் இலங்கை புற்றுநோயியல் நிபுணர்கள் கல்லூரியின் ஆதரவுடன் இது மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்நிகழ்வில் கலந்து கொண்டவர்கள் (இடமிருந்து): நோய்த்தடுப்பு சிகிச்சை பிரிவு வைத்தியர் துலானி, இந்திரா புற்றுநோய் அறக்கட்டளை உறுப்பினர்கள், புற்றுநோயியல் ஆலோசனை நிபுணர் – பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் இரேஷா பெனாண்டோ, புற்றுநோயியல் ஆலோசனை நிபுணர் – வைத்தியர் ஏ.ஜே. ஹில்மி, புற்றுநோயியல் ஆலோசனை நிபுணர் வைத்தியர் எம். செந்தூரன், புற்றுநோயியல் ஆலோசனை நிபுணர் வைத்தியர் எஸ்.எல். கந்தேகெதர, Consultant Heamato Oncologist நிலுபுலி குணவர்தன, தாதியர் பொறுப்பாளர் சுசிலா ஹேரத், Hemato Oncology  கிளினிக் 49ஆவது வார்ட் தாதி பொறுப்பாளர் அனோமா, Hemas Consumer Brands, குமாரிகா குழுவினர், Oncology  கிளினிக் தாதி பொறுப்பாளர் சாந்தனி தர்மரத்ன.

இலங்கைப் பெண்கள் தங்களை அழகாக உணரவும், தைரியமான மற்றும் வலிமையான பெண்களின் தலைமுறையைக் கட்டியெழுப்பவும் குமாரிகா உறுதிபூண்டுள்ளது.

Share

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *