Huawei: 5.5G என்பது அறிவார்ந்த உலகத்திற்கான பாதையில் ஒரு முக்கிய மைல்கல்

Author
By Author
2 Min Read

அறிவார்ந்த World White Paper வெளியீட்டை நோக்கி முன்னேறுகிறது

நுண்ணறிவு உலக உச்சிமாநாட்டை (Intelligent World Summit) நோக்கிய HUAWEI CONNECT 2022 பயணமானது வெற்றிகரமாக நிறைவடைந்தது. இந்த உச்சிமாநாட்டில் ‘5.5G சகாப்தத்தை தழுவுதல்: அறிவார்ந்த உலகத்தை நோக்கி முன்னேறுதல்’ என்ற தலைப்பில், Huawei நிறுவனத்தின் நிறைவேற்று பணிப்பாளரும் ICT உட்கட்டமைப்பு முகாமைத்துவ சபையின் தலைவருமான David Wang ஒரு முக்கிய உரையை நிகழ்த்தினார்.

இந்த உரையில், அறிவார்ந்த உலகத்திற்கான நமது பாதையில் 5.5G ஒரு முக்கிய மைல்கல் என்று அவர் வலியுறுத்தியதோடு, அறிவார்ந்த உலகம் தொடர்பான தகவல்கள் அடங்கிய, Huawei நிறுவனத்தின் சமீபத்திய White Paper தொடரையும் வெளியிட்டார். இந்த நோக்கத்தின் 8 அம்சங்களை மையப்படுத்திய முயற்சிகளை ஒருங்கிணைக்க ICT துறைக்கு அவர் அழைப்பு விடுத்தார். 5.5G சகாப்தத்திற்கான தொழில் நோக்கு மற்றும் தரநிலைகளை மேலும் வரையறுக்கவும், செம்மைப்படுத்தவும் ஒன்றிணைந்து செயல்படுவதன் மூலம், தொழில்துறையானது 5.5G சகாப்தம் மற்றும் அறிவார்ந்த உலகத்தை நோக்கி தொடர்ச்சியாக வேகமாக நகரும்.

எதிர்காலத்தில், தனிநபர்கள், குடும்பங்கள், தொழில்துறைகளுக்கு டிஜிட்டல் உட்கட்டமைப்புக்கான அதிக தேவைகள் ஏற்படும்.

தனிநபர்களுக்காக, XR மற்றும் holographic தகவல்தொடர்பு போன்ற அதிவேக சேவைகள் முதிர்ச்சியடைந்து வருவதோடு, இணைப்பு அனுபவம் 1 Gbit/s இலிருந்து 10 Gbit/s ஆக அதிகரிக்கும். இன்று காணப்படும் 15GB யில் இருந்து 100GB ஆக மொபைல் DOU உயர்வடையும். தரவு சென்றடைதல் தாமதமற்ற தன்மை மற்றும் எங்கும் நிறைவான இணைப்புக்கான தேவைகளும் அதிகரிக்கும்.

வீடுகளுக்கு, 24K 3D VR கேம்கள் மற்றும் holographic கற்றல் நடவடிக்கைகள், கலந்துரையாடல்கள் போன்ற மேம்பட்ட சேவைகளால் உருவாக்கப்பட்ட தேவைகள் முழுமையான பைபர், 10 Gbit/s சகாப்தத்தை உருவாக்கும்.

தொழில்துறையைப் பொறுத்தவரை, டிஜிட்டல் மாற்றமானது தற்போது வேகமான பாதையில் பயணித்துக் கொண்டிருக்கின்றது. ஸ்மார்ட் உற்பத்தி மற்றும் பவர் கிரிட் செலுத்துகை போன்ற தொழில்துறை தர பயன்பாடுகள் ஆகியன இணைப்புகள், தரம், உணர்திறன் ஆகியவற்றிற்கான பல்வேறு தேவைகளை உயர்வடையச் செய்யும் அதே நேரத்தில், கணனிச் செயற்பாட்டு வலு மற்றும் சேமிப்பகத்திற்கான தேவையில் பாரிய வளர்ச்சியை ஏற்படுத்துகிறது.

END

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *