Tamil

நீடித்துழைக்கும் BATTERY மற்றும் AI MACRO TRIPLE கெமராவுடன் கூடிய Y20 ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ள vivo

உலகளாவிய முன்னணி ஸ்மார்ட்போன் வர்த்தகநாமமான vivo, தனது புதிய மத்திய தர ஸ்மார்ட்போனான Y20 அறிமுகம் தொடர்பில் இன்று அறிவித்தது. 5000mAh battery இனால் வலுவூட்டப்படும் Y20,  AI Triple rear camera அமைப்பு (13MP + 2MP + 2MP), macro மற்றும் bokeh  camera மற்றும் செல்பி அம்சங்கள் உள்ளிட்ட பல அம்சங்களுடன் உங்கள் வாழ்க்கையின் தருணங்களை போதுமான விவரங்கள் மற்றும் நேர்த்தியுடன் தடையின்றி படம்பிடிக்கும் திறன் கொண்டது. vivo Y20 இன் குறிப்பிடத்தக்க சிறப்பம்சம் AI தொழில்நுட்பத்துடன் கூடிய அதன் நீடித்துழைக்கும் மின்கலம் (battery)    என்பதுடன், இது reverse charging ஐயும் ஆதரிக்கின்றது. Y20 பக்கவாட்டில் பொருத்தப்பட்ட Fingerprint Scanner ஐ கொண்டுள்ளதுடன், இந்த புத்திசாலித்தனமான புதிய வடிவமைப்பு உங்கள் போனை ஒரு விநாடியில் unlock  செய்யக்கூடியது.

Y20 வெளியீடு தொடர்பில் கருத்து வெளியிட்ட Vivo Sri Lanka வின் பிரதான நிறைவேற்று அதிகாரி கெவின் ஜியாங், “கெமரா, big battery, கண்கவரும் வண்ணங்கள் மற்றும் அல்ட்ரா கேமிங் மோட் (ultra-game mode) என ஏராளமான அம்சங்களின் மூலம் இந்த விலை பிரிவில் பாவனையாளர்களுக்கு முழுமையான ஸ்மார்ட்போன் அனுபவத்தை வழங்கும், சிறப்பம்சங்களால் நிரம்பிய Y20 இன் மூலம்  எங்கள் Y தொடர் குடும்பத்தை பலப்படுத்துகின்றோம். இளைஞர்களை மையமாகக் கொண்ட வளர்ந்து வரும்  வர்த்தகநாமமாக, Trend setting தொழில்நுட்பங்களுடன் கூடிய ஸ்டைலான ஸ்மார்ட்போன்களை மிகவும் போட்டித்தன்மை மிக்க விலைகளில் வழங்க நாங்கள் தொடர்ந்து புத்தாக்கத்தில் ஈடுபட்டு வருகின்றோம். பாவனையாளரின் அன்றாட வாழ்க்கையை மனதில் வைத்து, அதற்கு ஏற்ற வகையில் Y20 வடிவமைக்கப்பட்டுள்ளது. கண் பாதுகாப்புத் திரை மற்றும் பெரிய அளவிலான மின்கலம் (battery)  மற்றும் சக்தி வாய்ந்த புரசசர் மூலமான கேமிங் செயல்பாடுகளுடன் பல்வேறு Multimedia செயல்பாடுகளை ஆதரிக்கிறது,’’என்றார்.

இளைஞர்களுக்கான Y தொடரானது அதன் புத்தாக்க தொழில்நுட்பங்கள் மற்றும் நேர்த்தியான வடிவமைப்புக்கு நன்கறியப்பட்டதுடன், தொழில்நுட்பங்களில் கைதேர்ந்த இளம் வாடிக்கையாளர்களின் நாளாந்த வாழ்வுக்கு பயன்மிக்கதாகும்.  நுகர்வோரை அடிப்படையாகக் கொண்ட வடிவமைப்பு மற்றும் புத்தாக்கம் மீதான அதன் அர்ப்பணிப்பை தொடரும் முகமாக புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள  Y20 பாரம் குறைந்ததாக, நேர்த்தியான மற்றும் சிறப்பாக பொலிஷ் செய்யப்பட்ட பணிச்சூழலியல் 2.5D தோற்றத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இளம் வாடிக்கையாளர்களின் நாளாந்த வாழ்க்கை முறைக்கு ஏற்ற வகையில் கண்ணைக் கவரும் எரிமலைப் பளிங்குப் பாறை கறுப்பு (Obsidian Black)  மற்றும் விண்மீன் படல நீலம் (Nebula Blue) ஆகிய நிறங்களில் கிடைக்கின்றது. மேலதிக பாதுகாப்புக்காக பாவனையாளர்களுக்கு physical fingerprint sensor அல்லது நவீன face unlock ஆகிய அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.

இந்த ஸ்மார்ட்போனானது பாவனையாளர்களின் கண்களுக்கு பாதுகாப்பளிக்க மேம்பட்ட திரையுடன்   உடன் கூடிய 6.51-inch Halo Display ஐக் கொண்டதுடன், இது திரைப்படங்களைப் பார்வையிடும் போதும், அதி தெளிவான  கேம்ஸ்களை (Games) விளையாடவும் மிகவும் ஏற்றதாகவுள்ளது. மேலும் Y20, அதிகரித்த வேகம் மற்றும் செயல்திறனுக்காக microSD card ஊடாக 3 RAM + 64 GB  சேமிப்பகத்துடன் (256 ஜிபி வரை அதிகரிக்க முடியும்) சக்திவாய்ந்த குவால்கொம் ஸ்னாப்டிராகன் புரசசரையும் (Qualcomm Snapdragon Processor) கொண்டுள்ளது. இவற்றோடு பல சிறப்பம்சங்களுடன் Ultra Game mode ஐயும் இந்த போன் கொண்டுள்ளமையானது தடையற்ற, சுவாரஸ்யமான கேமிங் அனுபவத்தையும் உறுதி செய்கின்றது.

இந்த புதிய  vivo Y20 ஸ்மார்ட்போனை 2020 ஒக்டோபர் மாத தொடக்கத்தில் இருந்து பெற்றுக்கொள்ள முடியும்.

Share

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *