Tamil

Huawei இன் மாபெரும் இணையவழி வெளியீட்டு நிகழ்வு பெரும் எண்ணிக்கையான பார்வையாளர்களின் அபிமானத்தைப் பெற்றுள்ளது

உலகளாவிய ஸ்மார்ட்போன் வர்த்தகநாமமான Huawei, மாபெரும் இணையவழி வெளியீட்டு நிகழ்வில் சமீபத்திய தொழில்நுட்ப சாதனங்களை வெளியிட்டுள்ளதுடன் அதில் அணியக்கூடிய Huawei Watch FIT, Huawei Freebuds 3i மற்றும் Huawei Watch GT2e ஆகிய மூன்று உயர் உற்பத்தி வரிசைகள் அடங்கியுள்ளன. இணையவழி வெளியீட்டு நிகழ்வுகள் தொடரின் இரண்டாவது மாபெரும் நிகழ்வு ஒரு பாரிய வெற்றியளித்துள்ளதுடன் மேலும் பல நேரடி அலைகளில் (live stream) இணைந்த பெரும் எண்ணிக்கையான பார்வையாளர்களை ஒரு புதிய அனுபவத்தைப் பெற்றுக்கொள்ள வழிகோலியுள்ளது.

இலங்கையின் மிகப் பெரிய மற்றும் தொழில்நுட்ப ரீதியாக மிகவும் மேம்பட்ட உடற்பயிற்சி மையமான Body Doc மற்றும் உடற்பயிற்சி மையங்களின் விபரங்களைக் கொண்டு வரும் ஒரு உடற்பயிற்சி செயலியான (app) Fitzky ஆகியவற்றுடன் Huawei கூட்டு சேர்ந்துள்ளது. இது உடற்பயிற்சி மையங்களின் விபரங்களின் இணையவழி முன்பதிவு தெரிவுகளை விரல் நுனிகளில் கொண்டு வந்து உடற்பயிற்சி மற்றும் ஆரோக்கியத்தில் தீவிர கவனம் செலுத்தும் பயனர்களின் அன்றாட வாழ்க்கையை எளிதாக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட சமீபத்திய தொழில்நுட்ப உற்பத்தி வரிசையை அறிமுகப்படுத்துகிறது.

இந்த வெளியீடு பல முகநூல் மற்றும் யூடியூப் சேனல்கள் வழியாக நேரடியாக ஒளிபரப்பப்பட்ட ஒரு இணையவழி நிகழ்வாக இடம்பெற்றதுடன் மேலும் பல முன்னணி உடற்பயிற்சி மற்றும் ஆரோக்கிய ஆலோசகர்கள் மற்றும் முக்கிய செல்வாக்குமிக்கவர்களால் இது அலங்கரிக்கப்பட்டது. உடல் Body Doc Fitness and Wellness Pavilion ஸ்தாபகரும் முகாமைத்துவப் பணிப்பாளரும் ACE சான்றளிக்கப்பட்ட மருத்துவ உடற்பயிற்சி உடற்தகுதி ஊட்டச்சத்து மற்றும் புற்றுநோய் உடற்பயிற்சி நிபுணரான வைத்தியர் தானுகி இடங்கொடகே ஆசிய துடுப்பு வலிப்பு விளையாட்டின் வெற்றியாளரும் ஆசிய ஓசியானியா ஒலிம்பிக் தகுதியாளரும் மற்றும் அவுஸ்திரேலிய உடல் வலிமை மற்றும் கண்டிஷனிங் சங்கத்தின் உறுப்பினரும் மற்றும் நிலை 1 பயிற்சியாளருமான சமாக்கியா கஜநாயக்க Myrus Yoga and Fitness இணை ஸ்தாபகரும் சர்வதேச அளவில் சான்று அங்கீகாரம் பெற்ற மற்றும் பதிவு செய்யப்பட்ட யோகா பயிற்றுவிப்பாளரான வைத்தியர் மியுரு ஜெயவீர இலங்கையின் முதல் சான்று அங்கீகாரம் பெற்ற Zumba பயிற்றுவிப்பாளரும் Dfit360 இன் உரிமையாளருமான ஜென் தர்ஷன் மற்றும் இலங்கையின் சிறந்த தொழில்நுட்ப செல்வாக்காளரும் ஆண்டின் மிகச் சிறந்த சமூக ஊடக ஆளுமையாளருமான சானக்ஸ் ப்ரோ ஆகியோர் இதில் அடங்கியுள்ளனர்.

ஆரம்ப நேரலை (livestream) ஒரே நேரத்தில் Huawei முகநூல் மற்றும் யூடியூப் சேனல்கள் வழியாக வழங்கப்பட்டதுடன் பிரபலமான சமூக ஊடக ஆளுமையாளரான சானக்ஸ் ப்ரோவின் முகநூல் மற்றும் யூடியூப் சிங்கர் (இலங்கை) இன் முகநூல் மற்றும் யூடியூப் Daraz முகநூல் நேரலை மற்றும் BodyDoc முகநூல் நேரலை ஆகியவற்றினூடாகவும் வழங்கப்பட்டது. வெளியீட்டு நிகழ்வோடு ஒன்றியதாக Huawei அதன் புதிய சாதனங்களான Huawei MateBook D 15 மற்றும் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட அணியக்கூடிய மூன்று சாதனங்களான Huawei Watch Fit, 3 Huawei Watch GT 2e ஆகியவற்றில் ஒவ்வொன்றையும் வழங்கியது.

அணியக்கூடிய தொழில்நுட்ப சாதனங்களின் சிறப்பு நேரலை வெளியீடு குறித்து Huawei Devices Sri Lanka இலங்கைக்கான தலைமை அதிகாரியான பீட்டர் லியு அவர்கள் கருத்து வெளியிடுகையில் ´இணையவழி அறிமுகங்கள் இன்றைய உலகில் தவிர்க்க முடியாத அங்கமாக மாறிவிட்டனரூபவ் இந்த போக்கு வளர்ந்து வருவதாக மாத்திரமே தென்படுகிறது. இந்த மாபெரும் இணையவழி வெளியீட்டு நிகழ்வு முந்தைய நிகழ்வை விட அதிகமான எண்ணிக்கையிலான பார்வையாளர்களை ஒன்றுதிரட்டியமையைக் கேட்டு நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். இது எதிர்காலத்தில் அதிக Huawei இணையவழி அறிமுகங்களுக்கு செல்வதற்கு எங்களுக்கு நம்பிக்கையை அளிக்கிறது´ என்று குறிப்பிட்டார்.

புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட Huawei Watch Fit ஆனது 1.64 அங்குல அளவிலான தெளிவான AMOLED முகத்திரையைக் கொண்டுள்ளது. ஓட்டம்ரூபவ் நீச்சல் சைக்கிளோட்டம் மற்றும் கூடுதல் 85 தனிப்பயன் உடற்பயிற்சி முறைகள் உள்ளிட்ட 11 தொழில்முறை விளையாட்டு முறைகளுக்கான துல்லியமான மற்றும் நிகழ்நேர உடற்பயிற்சி அளவீடுகளை இது வழங்குகிறது. கடிகாரம் தினசரி காலடிகள் உடற்பயிற்சி நேரம் மற்றும் தூக்க வீதத்தையும் இதய துடிப்பு வீதத்தையும் 24 மணி நேரமும் கண்காணிக்கிறது.

இது அழைப்புகள் செய்திகள் நாட்காட்டி நிகழ்வுகள் குறித்து சரியான நேரத்தில் நினைவூட்டல்களையும் வழங்குகிறது அதே நேரத்தில் இசை மற்றும் பிற ஸ்மார்ட்போன் தொழில்நுட்ப அம்சங்களை தொலைவியக்க முறையில் கட்டுப்படுத்த இது பயன்படுகிறது.

இந்த வியத்தகு மெல்லிய மற்றும் இலகுரக சாதனம் மேம்படுத்தப்பட்ட மின்கலத்தைக் கொண்டுள்ளதுடன் இது 10 நாட்கள் வரை நீடிக்கும் ஆற்றல் கொண்டது. இதன் விரைவான மின்னேற்ற தொழில்நுட்பமானது ஒரு நாளின் பயன்பாட்டை 5 நிமிட மின்னேற்றத்தில் வழங்குகிறது. Huawei Free Buds 3i என்பது இரைச்சலை இரத்துசெய்யும் தொழில்நுட்ப அம்சத்துடன் வரும் கம்பியில்லா காது மொட்டு ஆகும். இது நவீன பாணி மற்றும் பொருத்தத்திற்காக வடிவமைக்கப்பட்டுள்ளதுடன் அதன் உள்ளமைக்கப்பட்ட சென்சார்கள் காது மொட்டுக்களைத் தட்டுவதன் மூலம் இசையை ஒலிக்க / நிறுத்த பதில் அளிக்க / அழைப்புகளை துண்டிக்க போன்ற கட்டுப்பாடுகளை மேற்கொள்ள அனுமதிக்கின்றன.

Huawei FreeBuds 3i ஒரு ஒற்றை தடவை மின்னேற்றத்துடன் 3.5 மணிநேர செவி வழி கேட்பதற்கான அனுபவத்தை வழங்குகிறது அதே நேரத்தில் அதன் மின்னேற்ற மேற்பாகமானது 14.5 மணிநேர மின்கல பாவனைக்காலம் வரை வழங்குகிறது. இது நாள் முழுவதும் போதுமானதாகும். நேர்த்தியான மற்றும் நவீனபாணியிலான Huawei Watch GT 2e ஆனது 1.39 அங்குல AMOLED HD முகத்திரையை கொண்டுள்ளதுடன் மற்றும் வசதியான பற்றிப்பிடித்தலுக்காக வண்ணமயமான உடற்பயிற்சி பட்டிகளையும் கொண்டுள்ளது. இந்த சாதனம் 15 தொழில்முறை விளையாட்டுகளுக்கு நிகழ்நேர கண்காணிப்பை வழங்குகிறது மேலும் அது பயன்படுத்தும் அதிநவீன தொழில்நுட்பத்தின் காரணமாக மன அழுத்தத்தையும் தூக்கத்தையும் கண்காணிக்கும் திறன் கொண்டது.

உள்வரும் அழைப்புகள் எஸ்எம்எஸ் செய்திகள் மின்னஞ்சல்கள் நாட்காட்டி நிகழ்வுகள் மற்றும் பலவற்றிற்கான நிகழ்நேர அறிவிப்புகளையும் Huawei Watch GT 2e வழங்குகிறது. இது வானிலை முன்னறிவிப்பிலிருந்து அலாரங்கள்ரூபவ் டைமர் மற்றும் ஒளிரும் விளக்கு வரை உள்ளுணர்வு அம்சங்களை தொகுத்துள்ளதுடன் இவை அனைத்தும் வாழ்க்கையை எளிதாகவும் சிறப்பாகவும் ஆக்குகின்றன. தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப உள்கட்டமைப்பு மற்றும் ஸ்மார்ட் சாதனங்களின் முன்னணி உலகளாவிய வழங்குநரான Huawei, டிஜிட்டல் தொழில்நுட்பங்களை ஒவ்வொரு நபருக்கும் ஒவ்வொரு வீட்டுக்கும் மற்றும் ஒவ்வொரு நிறுவனத்துக்கும் முழுமையாக இணைக்கப்பட்ட நுண்ணறிவு உலகிற்கு கொண்டு வருவதில் அர்ப்பணிப்புடன் உள்ளது.

உலகளாவிய தொழில்நுட்ப நிறுவனமாக புகழ்பெற்ற விருது நிகழ்வுகளில் Huawei முறையாக அங்கீகரிக்கப்பட்டு உலகளாவிய வர்த்தகநாம தரவரிசையில் தொடர்ந்து இடம்பிடித்துள்ளது. மிகவும் மதிப்புமிக்க உலகளாவிய வர்த்தகநாமங்கள் தொடர்பில் பிராண்ட் BrandZ Top 100 பட்டியலில் Huawei 45 வது இடத்தையும் Forbes உலகின் மிக மதிப்புமிக்க வர்த்தகநாமங்களில் 79 வது இடத்தையும் பிடித்துள்ளதுடன் அதே நேரத்தில் நிறுவனம் சமீபத்திய Brand Finance உலகளாவில் 500 மிகவும் மதிப்புமிக்க வர்த்தகநாமங்கள் பட்டியலில் முதல் 10 மதிப்புமிக்க வர்த்தகநாமங்களினுள் இடம்பெற்றுள்ளது. Interbrand இன் சிறந்த உலகளாவிய வர்த்தகநாமங்களில் Huawei 68 வது இடத்தைப் பெற்றுள்ளதுடன் மேலும் Fortune உலகளாவிய 500 பட்டியலிலும் இடம்பெற்றுள்ளது.

Share

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *