வீட்டிலிருந்து தடையற்ற முறையில் வேலை செய்யும் கல்வி கற்கவும் வாய்ப்பை வழங்கும் Huawei சாதனங்கள்

Author
By Author
5 Min Read

உலகளாவிய ஸ்மார்ட்போன் வர்த்தகநாமமான Huawei, அதன் சாதனங்கள் தடைகளின்றி வீட்டிலிருந்து வேலை செய்யும் (WFH) மற்றும் வீட்டிலிருந்து கற்கும் (LFH) அனுபவத்தை வழங்குவதற்கு தேவையான வரையறைகளை பூர்த்தி செய்வதை உறுதி செய்துள்ளது. வீட்டிலிருந்து வேலை செய்தல் மற்றும் வீட்டிலிருந்து கற்றல் நடவடிக்கைகள் இந்தக் காலத்தில் பலராலும் முன்னெடுக்கப்படுபவையாகவும், தற்போது வழக்கமானதாகவும் மாறியுள்ளன. பல நிறுவனங்கள் வீட்டிலிருந்து வேலை செய்யும் மாதிரியை நோக்கி நகர்ந்து வருவதுடன், மாணவர்கள் வீட்டிலிருந்து கற்கும் முறைக்கு தம்மை பழக்கப்படுத்திக் கொள்ளவும் ஊக்குவிக்கப்படுகின்றனர்.

வீட்டிலிருந்தவாறு வேலை  செய்வதற்கான  தீர்வுகளை எதிர்பார்த்திருப்போருக்கு Multi-screen collaboration போன்ற சிறப்பம்சங்களுடன் கூடிய Huawei இன் பல தரப்பட்ட மடிக்கணினிகள், டெப்லட்கள் மிகவும் பயன்மிக்கதாக அமைந்துள்ளதாக நிரூபித்துள்ளன. மாணவர்களும் கட்டுப்படியாகும் சாதனங்களின் மூலம் தமது கல்வி நடவடிக்கைகளை வீட்டிலிருந்தவாறே தொடர்வதை இந்த முழுமையான சாதனங்களின் வரிசையானது உறுதி செய்கின்றது. மிகவும் ஆற்றல் மிக்க மடிக்கணினி வரிசை முதல் அனைத்தையும் உள்ளடக்கிய டெப்லட் தொடர் வரை, இந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட மிகச் சிறந்த அம்சங்களைக் கொண்ட சாதனங்களை Huawei சொந்தமாகக் கொண்டுள்ளது, குறிப்பாக மடிக்கணினி பிரிவில் அதன் வலிமையை வெளிப்படுத்துகின்றது,” என Huawei Devices Sri Lanka – உள்நாட்டு தலைமை அதிகாரியான பீட்டர் லியு தெரிவித்தார்.

Huawei Matebook 13 ஆனது Intel மற்றும் AMD ஆகிய இரண்டு சிப் வகைகளில் கிடைப்பதுடன், பாவனையாளர்கள் தமது தேவைக்கேற்ற மடிக்கணினியொன்றை சொந்தமாக்கிக் கொள்ள முடியும். இது 13 அங்குல 2K Huawei Full view  திரையுடன் வருவதுடன், இதன் நிறை கிட்டத்தட்ட 1.3 கிலோ கிராம்களாகும். இதன் Intel  மொடலானது 10th generation Intel® Core™ i5 -10210U புரசசர், 16GB LPDDR3 RAM, NVIDIA ®GeForce® MX250 graphics மற்றும் 512GB PCIe SSD ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இந்த மடிக்கணினியானது 41.7 Wh மின்கலத்தினால் வலுவூட்டப்படுவதுடன், இது 11.6 மணித்தியால       local 1080p video playback இனை வழங்குவதன் மூலம், பாவனையாளர்கள் தங்கள் சாதனங்களை அடிக்கடி மின்னேற்றம் செய்ய வேண்டிய அவசியமில்லை என்பதும் மின்கலத்தின் சக்தி நிறைவடைவது தொடர்பில் கவலைப்படாமல் அவர்கள் எங்கிருந்தும் எந்த நேரத்திலும் தமது வேலைகளை செய்துகொள்ள முடியும் என்பதும் தெளிவாகின்றது.

Huawei MateBook 13 இன் AMD மொடலானது AMD Ryzen™5 3500U processor, 16GB DDR4 RAM, Radeon™ Vega 8 Graphics, 512GB PCIe SSD-all போன்ற அலுவலக மற்றும் கல்வி நடவடிக்கைகளுக்கு ஏற்ற சிறப்பம்சங்களைக் கொண்டுள்ளது. வீட்டிலிருந்து வேலை செய்ய சரியான சமநிலையைத் தேடும் ஒரு நபராக அல்லது வீட்டிலிருந்து கற்றலைத் தொடர மடிக்கணினியைத் தேடும் மாணவராக இருந்தாலும் MateBook 13 அனைத்து தேவைக்கும் பொருந்துகிறது. உண்மையில், Huawei இன் தயாரிப்பு வரிசையானது இதேபோன்ற செயல்திறனை வழங்கும் பல மடிக்கணினிகளைக் கொண்டது.

Huawei MateBook D 15, இந்த வரிசையில் மிகவும் கட்டுப்படியாகும் விலையில் கிடைக்கும் மாதிரி என்ற போதிலும், இதன் செயற்திறனானது ஏனைய மாதிரிகளுக்கு இணையதாகவுள்ளது. இந்த 15.6 அங்குல MateBook D 15, AMD Ryzen 53500U புரசசர், 8GB DDR4 RAM, Radeon™ Vega 8 Graphics, 256GB PCIe SSD + 1TB HDD ஐக் கொண்டது. கட்டுப்படியாகும் விலை மற்றும் தொழில்நுட்ப அம்சங்கள் விலையை விட அதிகமாக மதிப்பிடப்படும் பட்சத்தில், தடையற்ற கற்றலுக்கான அணுகல் தேவைப்படும் மாணவர்களுக்கு Matebook ஒரு சிறந்த தீர்வாகும்.

Huawei இன் மடிக்கணினி வரிசைக்கான புதிய இணைப்பே Huawei MateBook X Pro – இது முதற்தர  MateBook தொடரைச் சேர்ந்ததாகும். இது 1.3 கிலோ இலகு எடை கொண்டதுடன், 13.9 அங்குல,  multi touch உடன் கூடிய 3K Huawei Full View திரையுடன் வருகின்றது. Huawei MateBook X Pro வீடியோ பணிகளுக்கு ஏற்றதென்பதுடன், 16GB LPDDR3 RAM, NVIDIA® GeForce® MX250 graphics, 1 TB NVMe PCIe SSD storage ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இது 55Wh மின்கலம் மூலம் வலுவூட்டப்படுவதுடன், இது 13 மணிநேர வீடியோ playback ஐ வழங்குகின்றது. இது video conferencing உள்ளிட்ட இன்றைய வேலைப்பளு நிறைந்த காலப்பகுதிக்கு மிகவும் அவசியமானதாகும்.

சிறிய சாதனங்கள் மீது விருப்பம் உள்ள பாவனையாளர்களுக்கு, MatePad Pro டெப்லெட் சிறந்ததாகும். இந்த 10.8 அங்குல டெப்லட்டானது 2K Huawei Full view  திரையைக் கொண்டதுடன், நவீன Kirin 990 முதற்தர  சிப்செட்டானது எவ்வித தடையுமற்ற செயற்பாட்டை வழங்குகின்றது. அதனுடன் வரும் Huawei M பென்சில் சீரான கையால் எழுதும் ஓட்டத்துக்கானதென்பதுடன், இது உள் படைப்பாற்றலை வெளிக்கொண்டு வருகின்றது. அதன் ஸ்மார்ட் காந்த விசைப்பலகை பாவனையாளர்களுக்கு டைப் செய்யும் போது மடிக்கணினி போன்ற அனுபவத்தை வழங்குகிறது.

Huawei MatePad Pro என்பது மடிக்கணினியாகவும்,  13mp பின்புற கெமரா மற்றும் 8mp முன் கெமரா போன்றவற்றுடன் ஸ்மார்ட்போனாகவும் செயற்படக்கூடிய மத்திய ரக தீர்வாகும். Huawei MatePad Pro, 15W wireless மற்றும் 7.5W வரை reverse wireless மின்னேற்றல் மூலமும் இயக்கப்படுகிறது. அதன் 7250mAh  பெரிய மின்கலம் 12 மணிநேர தொடர்ச்சியான பாவனையை எளிதாக வழங்குகிறது.

இந்த Multi-screen Collaboration சிறப்பம்சமானது Huawei Share  என்று பொதுவாக அனைத்து Huawei சாதனங்களிலும் அறியப்படுகின்றது. வீட்டிலிருந்து வேலை செய்தலோ அல்லது வீட்டிலிருந்து கற்றலோ எந்த நடவடிக்கையாயினும் இந்த வசதியானது  தடையற்ற ஒருங்கிணைப்பின் காரணமாக பாவனையாளர்களின் உற்பத்தித்திறனை மேலும் அதிகரிக்கிறது. Huawei Share வழியாக இந்த சாதனங்களில் ஏதேனும் ஒன்றுடன் Huawei ஸ்மார்ட்போன் இணைக்கப்பட்டவுடன், இது இரு சாதனங்களையும் ஒரு வலு நிலையமாக ஒன்றிணைக்கிறது. ஸ்மார்ட்போனின் தேவைகள் அனைத்தும் இணைக்கப்பட்ட மடிக்கணினி அல்லது டெப்லெட்டால் பூர்த்தி செய்யப்படும், இதனால் பாவனையாளர்கள் இரண்டாவது சாதனத்தினால் ஏற்படக் கூடிய கவனச்சிதறலில் இருந்து விடுபடுவார்கள். வீட்டிலிருந்து பணிபுரியும் பாவனையாளர்கள் மற்றும் மாணவர்கள் இரு சாராரும் Huawei Share உடன் இணைந்த எண்ணற்ற திறன்களால் பயனடைகின்றனர். அவற்றால்  மடிக்கணினியில் ஸ்மார்ட்போன் திரையை பிரதிபலிக்க முடியும், மடிக்கணினி திரை வழியாக அழைப்புகள், செய்திகள் மற்றும் அறிவிப்புகளை பெற்றுக்கொள்ள முடியுமென்பதுடன்  இரண்டு சாதனங்களுக்கிடையில் கோப்புகளை தடையின்றி பரிமாற்றிக்கொள்ள முடியும். மேலும், பாவனையாளர்கள் மடிக்கணினி வழியாக ஸ்மார்ட்போனை கட்டுப்படுத்தலாம்.

தகவல் மற்றும் தகவல் தொடர்பு தொழில்நுட்பத்தின் (ICT) உட்கட்டமைப்பு மற்றும் ஸ்மார்ட் சாதனங்களின் முன்னணி உலகளாவிய வழங்குநரான Huawei ஒவ்வொரு நபருக்கும், வீடு மற்றும் நிறுவனத்திற்கும் ஒரு முழுமையான இணைக்கப்பட்ட, அறிவுபூர்வமான உலகத்திற்காக நவீன தொழில்நுட்பங்களை கொண்டு வருவதில் உறுதியாக உள்ளது. ஸ்மார்ட்போன் ஜாம்பவானான Huawei நன்கறியப்பட்ட விருது வழங்கும் நிகழ்வுகளில் நன்கு அங்கீகரிக்கப்பட்டுள்ளதுடன், உலகளாவிய வர்த்தகநாம சுட்டிகளில் தொடர்ச்சியாக இடம்பெற்றுள்ளது. BrandZ இன் உலகின் பெறுமதி வாய்ந்த உலகளாவிய வர்த்தகநாமங்கள் 100 இன் பட்டியலில் Huawei 47 ஆவது இடத்தில் தரப்படுத்தப்பட்டுள்ளதுடன், Forbes சஞ்சிகையின் உலகின் பெறுமதி வாய்ந்த வர்த்தகநாமங்களின் பட்டியலில் 79 ஆவது இடத்தைப் பெற்றுக்கொண்டது. Interbrandஇன் சிறந்த உலகளாவிய வர்த்தக நாமங்கள் கொண்ட பட்டியலில் 68 ஆவது இடத்தை Huawei பெற்றுக்கொண்டது.

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *