
இலங்கையிலுள்ள பாதிக்கப்படத்தக்க சமூகங்களுடன் பணிபுரியும் இலாப
நோக்கற்ற அமைப்புக்களான, LEADS, Save
the Children International மற்றும் World
Vision Lanka என்பன, இலங்கையிலுள்ள சிறுவர்களுக்கு எதிரான நிகழ்நிலை வன்முறைகள்
மற்றும் சுரண்டல்களை முடிவுக்குக் கொண்டுவருவதில் தமது வீச்சு மற்றும் விளைவுகளை
வியாபிப்பதற்காக ஒரு கூட்டமைப்பாக முன்வந்துள்ளன.
அண்மையில், பாடசாலை
செல்லும் மாணவர்களுக்கிடையே இணையப்பாதுகாப்பின் முக்கியத்துவத்தை
தெரியப்படுத்துவதற்கான நிகழ்நிலை கற்றல் திட்டத்தை ஆரம்பிப்பதற்காக கல்வி அமைச்சு
மற்றும் மகளிர் மற்றும் சிறுவர் விவகாரங்கள் அமைச்சுடன் இக்கூட்டமைப்பு
கைகோர்த்துள்ளது. இந்நிகழ்நிலை கற்றல் திட்டமானது 2020, ஜூலை 22 ஆம் திகதியிலிருந்து அனைத்து
மாணவர்களுக்கும், மும்மொழிகளிலும் இலவசமாகக் கிடைக்கச்
செய்யப்படும்.
இணையமானது சிறுவர்களுக்கான முழுநிறைவான
கற்றல் மையமாக இருந்து வருகின்றது அது பாடசாலைக்காக இருக்கலாம், கணினி விளையாட்டுக்களுக்காக இருக்கலாம், அல்லது எளிமையாக நண்பர்களோடு தொடர்பில் இருப்பதற்காகவும்
இருக்கலாம். துரதிஷ்டவசமாக, சிறுவர்கள் மீது பாலியல்
நாட்டமுடையவர்களுக்கும், ஒன்லைன் சூறையாடிகளுக்கும், அடையாளத் திருடர்களுக்கும் மற்றும் ஏனைய அசிங்கமான
உள்ளடக்கத்தினது மூலாதாரமாகவும் இணையம் காணப்படுகிறது.
இதனால்,
இளம் பாவனையாளர்கள் இணையத்தை எவ்வாறு
வினைத்திறனாக உபயோகிப்பது என்பது பற்றியும் நிகழ்நிலையில் எவ்வாறு பாதுகாப்பாக
இருப்பது என்பது பற்றியும் விழிப்பூட்டப்பட வேண்டியது அவசியமாகும். பெரும்பாலான
பெரியவர்கள் மற்றும் சிறுவர்களது வாழ்க்கைமுறைகள் இப்போது இணையத்துடன்
பின்னிப்பிணைந்திருப்பதால், இது இன்றியமையாத தேவையொன்றாக விரைவாக
மாறிவருகின்றது. இன்டர்போல் மற்றும் உலகெங்கிலுமுள்ள சிறுவர் பாதுகாப்பு முகவரகங்கள்
என்பன, பூகோள பெரும்பரவல் தொற்றுநோயின் போது, சிறுவர்களை நிகழ்நிலை பாலியல் சுரண்டல் செய்வது சடுதியாக
அதிகரிப்பதைக் கண்டுள்ளதுடன், WeProtect
உலக முன்னணி, முடக்கநிலையானது, நிகழ்நிலை சிறுவர் பாலியல் சுரண்டல்களினதும் சிறுவர்களுக்கு
எதிரான ஏனைய நிகழ்நிலை வன்முறைகளினதும் ஏற்கனவே காணப்பட்ட இயக்கிகளை
அதிகரித்திருப்பதாக எச்சரித்துள்ளது.
தாம் எவ்வாறு நிகழ்நிலையில் பாதுகாப்பாக
இருப்பது என்பது பற்றி அறிந்து வைத்துள்ளதாக பெரும்பாலான சிறுவர்கள் தன்னம்பிக்கை
கொண்டுள்ளனர். இருப்பினும், இறுதியில் பல ஆபத்துக்களை எதிர்நோக்க
வைக்கும், தமது செயற்பாடுகளின் பின்விளைவுகள் பற்றி அவர்களது எப்போதும்
அறிந்து வைத்திருப்பதில்லை. சிறுவர்களை சுரண்டுவதை அல்லது நிதி அல்லது ஏனைய
ஆதாயங்களைப் பெறுவதை நோக்கமாகக் கொண்டுள்ள இளம் பாவனையாளர்களை இரையாக்கும், இணைய அடாவடியர்கள்,
சிறுவர்கள் மீதான பாலியல் நாட்டமுடையோர்
மற்றும் பின்தொடர்வாளர்கள் என இவ்ஆபத்துக்கள் உருப்படுத்தப்படலாம்.
(தனிமைப்படுத்தலின் பின்னர்) நாடுபூராகவுமுள்ள சிறுவர்களது இணையப் பாவனையில்
துரிதமான வளர்ச்சி ஏற்பட்டிருப்பதன் காரணமாக,
இக்கூட்டமைப்பானது சிறுவர்கள் எவ்வாறு
நிகழ்நிலையில் பாதுகாப்பாக இருப்பது தொடர்பாக அறிவுறுத்த வேண்டிய கட்டாயத் தேவை
இருப்பதை உணர்ந்தது. இதை நோக்கி, ஒரு செயலெதிர்ச் செயல்முறையிலான நிகழ்நிலை
பாடநெறியொன்று கூட்டமைப்பினால் உருவாக்கப்பட்டுள்ளதுடன், இது அனைத்து சிறுவர்களுக்கும் இலவசமாகக் கிடைக்கின்றது.
இச்செயலெதிர்ச் செயல்முறையிலான
பாடநெறியானது, இணையம் மற்றும் அதனது பல்வேறு பாவனைகள், தனிப்பட்ட தகவல்களைப் பகிரும் போது எவ்வாறு வேறுபடுத்திக்
கொள்ளுதல், புகைப்படங்களைப் பகிரும்போது
எச்சரிக்கையுடன் நடந்துகொள்ளுதல், இணைய அடாவடித்தனத்திற்கெதிராக நிற்றல், ஃபிஷிங் மோசடிகள் மற்றும் இணையத் திருட்டுகளின் ஏனைய வடிவங்களை
அடையாளங் காணுதல் மற்றும் எவ்வாறு பொறுப்புணர்வுள்ள இணையவாசிகளாக இருப்பது
ஆகியவற்றினது அடிப்படை புரிதலை சிறுவர்களுக்கு வழங்கும் பல முக்கியமான பகுதிகளை
சூழ்ந்திருக்கிறது.
இப்பாடநெறி அசைவூட்ட சுருக்கங்கள் (animated briefs) மற்றும் நிஜ வாழ்க்கை காட்சிகளையும் கொண்டு
தொகுக்கப்பட்டுள்ளதால் இக்கற்றல் அனுபவம் மாணவர்களுக்கு எவ்வாறு இணையத்தில்
பாதுகாப்பாக இருப்பது தொடர்பான முழுமையான புரிதலை வழங்கும். இச்செயலெதிர்ச்செயல்
முறையிலான நிகழ்நிலை பாடநெறியானது,
கல்வியமைச்சினால் நடாத்தப்படும் e-தக்ஷலாவ கல்விசார் வலைத்தளத்தில் ஆங்கிலம், சிங்களம் மற்றும் தமிழ் மொழிகளில் அனைத்து மாணவர்களுக்கும்
கட்டணமின்றி வழங்கப்படும். இளம் மாணவர்களுக்கு இலகுவாகக் கிடைப்பதை
உறுதிப்படுத்துவதற்காக இப்பாடநெறியானது கைத்தொலைபேசிகள், டெப்லட் கணினிகள் மற்றும் தனிப்பட்ட கணினிகள்
என்பவற்றிற்கேற்றவாறு இசைவுடையது.மேலும்,
இப்பாடநெறியை பூர்த்தி செய்யும்
மாணவர்களுக்கு பெறுமதி வாய்ந்ததோர் சான்றிதழும் வழங்கப்படும்.
நீங்கள் ஒரு பெற்றோராகவோ அல்லது
ஆசிரியராகவோ இருந்தால், இந்நிகழ்நிலை பாடநெறிக்கு உங்களது
பிள்ளைகள் மற்றும் மாணவர்களை பதிவுசெய்து,
இணைய உலகைப் பற்றி அவற்றினது நிகழ்நிலை
ஆபத்துக்களுடன் சேர்த்து அறிய வேண்டியவை காணப்படுகின்றன என அவர்கள்
தெரிந்திருப்பதை உறுதிப்படுத்துவதன் மூலம் அவர்களது பாதுகாப்பில் நீங்களும் கூட
பங்களிக்கலாம். இதனால் அவர்கள் தமக்கான சிறந்த மற்றும் மேலதிக அறிவுடனான
தீர்மானங்களை எடுப்பதற்குரிய ஆதாரத்தினைப் பெறுவார்கள்.
இச்செயற்றிட்டம், கல்வி அமைச்சு மற்றும் மகளிர் மற்றும் சிறுவர் விவகார மற்றும்
சமூக சேவைகள் அமைச்சு என்பவற்றின் ஆதரவுடன்,
LEADS, Save the Children International மற்றும் World
Vision Lanka ஆகியவற்றினால்
புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டு தொடங்கிவைக்கப்பட்டது.