Tamil

Ideal Motors ஒவ்வொரு “Mahindra Powerol” ஜெனரேட்டர் கொள்வனவுடனும் இணையற்ற விற்பனைக்கு பின்னரான சேவையை உறுதியளிக்கிறது

Ideal குழுமத்துக்கு முழுவதும் சொந்தமான துணை நிறுவனமும் , இலங்கையில் Mahindra மோட்டார் வாகனங்கள், மோட்டார் சைக்கிள்கள் மற்றும் பயன்பாட்டு தயாரிப்புக்களுக்கான அங்கீகரிக்கப்பட்ட விநியோகஸ்தருமான Ideal Motors நிறுவனமானது தனது தனித்துவமான விற்பனையின் பின்னரான சேவைகளின் உதவியுடன் குறுகிய காலத்தில் சந்தையில் தனது ஆதிக்கத்தை நிலைநாட்டியுள்ளது. 2017 ஆம் ஆண்டில் Mahindra Powerol டீசல் ஜெனரேட்டர்களின் ஏக விநியோகஸ்தர் அந்தஸ்து Ideal Motors ற்கு வழங்கப்பட்டதுடன்  அன்று முதல் பாரிய மற்றும் சிறிய அளவிலான நிறுவனங்களின் மின் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் Mahindra Powerol இலங்கையில் ஒரு முக்கிய அங்கமாக இருந்து வருகின்றது. Mahindra Powerol ஆனது Mahindra என்ஜினுடன் இயங்கும் ஒரு வல்லமை மிக்க ஜெனரேட்டராகும் . இது குறைந்த எரிபொருள் பாவனை, நீடித்த ஆயுள் மற்றும் குறைந்த ஒலி வெளியேற்றத்துடன் வினைத்திறனும் ஆக்கத்திறனும் மிக்கது.

Mahindra Powerol ஜெனரேட்டர்கள் 5KVA முதல் 320 KVA அளவுகளில் கிடைப்பதுடன், 22 மாதிரிகளில் நாடு முழுவதிலும் உள்ள  Ideal Motors கிளை வலையமைப்புக்களிலும் கவர்ச்சிகரமான விலையில் இவற்றைப் பெற்றுக்கொள்ள முடியும். இந்த ஜெனரேட்டர்கள் இரண்டு பிரிவுகளில் காணப்படுகின்றன. எடுத்துச்செல்லக்கூடிய ஜெனரேட்டர் வகை – 5KVA single phase ஜெனரேட்டர்கள் மற்றும் தொழில்துறை ஜெனரேட்டர் வகை – 110KVA 1P/3P முதல்  320KVA வரையான three phase ஜெனரேட்டர்கள் என்பவையாகும் .

முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்கள், தொழிற்சாலைகள், ஹோட்டல்கள், வங்கிகள், மற்றும் சேவை நிலையங்களின் முதல் தெரிவாக Mahindra Powerol ஜெனரேட்டர்கள் உள்ளன.  மேலும் Ideal Motors இல் நாம் பல்வேறு சந்தைகளுக்கு ஏற்ற ஜெனரேட்டர்  வரிசைகளைக் காட்சிப்படுத்துகிறோம் என Powerol தயாரிப்பு செயற்பாடுகளுக்கான முகாமையாளர் ஜனக குலதுங்க கருத்து தெரிவிக்கிறார்.

Ideal குழுமமானது அண்மையில் 75KVA ஜெனரேட்டர்களை திஸ்ஸமஹராமவில் உள்ள பல்நோக்கு கூட்டுறவு சங்கத்திற்கு சிறப்பு விலைக்கழிவுடன் நிறுவியுள்ளது.  Powerol விநியோக உரிமையை பெற்ற பின்னர் Ideal Motors இந்த ஜெனரேட்டர்ளை தொழிற்சாலைகள், ஹோட்டல்கள், வங்கிகள்,  ரெலிகொம், சிறிய மற்றும் நடுத்தர வணிகங்கள், Auto Mirage போன்ற தொடர்சியாக மின்சாரம் தேவைப்படும் நிறுவனங்களுக்கு தொடர்ந்து விநியோகித்துள்ளது.

குறைந்த எரிபொருள் பாவனை மற்றும்  குறைந்த  ஒலி மட்டம் போன்ற Powerol ஜெனரேட்டர்களின் தனித்துவமான அம்சங்கள் இலங்கை போன்ற நாட்டிற்கு மிகவும் பயனுள்ளவை. இன்றுவரையில் வாடிக்கையாளர்கள்  Powerol ஜெனரேட்டர்களின் மீது தங்கள் நம்பிக்கையை வைத்துள்ளனர். மேலும் Ideal Motors வழங்கும் மிகச்சிறந்த விற்பனைக்கு பின்னரான சேவைகளில் மிகுந்த திருப்தி அடைந்துள்ளனர்.

Ideal Motors நிறுவனமானது அதன் விற்பனைக்கு பின்னரான சேவைகளுக்கு புகழ் பெற்றது என்பதுடன் நாடு முழுவதும் உள்ள அதன் கிளை வலையமைப்பு மதிப்புமிக்க தம்முடைய வாடிக்கையாளர்களுக்கு விற்பனைக்கு பின்பு எல்லையற்ற மற்றும் சௌகரியமான சேவையை வழங்கும் திறன் கொண்டது. வாடிக்கையாளர்களின் சௌகரியமானது எமது விற்பனையின் பிரதான அங்கமென்பதுடன் எந்தவொரு அவசியமான சேவைகளுக்கும் அண்மையில் உள்ள Ideal முகவரை தொடர்புகொள்ள முடியும்,” என குலதுங்க அவர்கள் மேலும் தெரிவிக்கிறார்.

நாடு முழுவதும் அமைந்துள்ள 15 Ideal First Choice பயிற்சிப்பட்டறைகள் நாட்டின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள வாடிக்கையாளர்களுக்கு விற்பனைக்கு பின்னரான சேவைகளைத்  திறம்பட வழங்குகிறது.  வாடிக்கையாளர் ஒரு தடவை  Mahindra ஜெனரேட்டரை வாங்கியவுடன் பழுதுபார்ப்பு சேவைகளைப் பற்றி கவலைப்படவோ அல்லது உதிரிப்பகங்களைத் தேடி அலைந்து திரிந்து அவர்களின் மதிப்பு மிக்க நேரத்தையும் பணத்தையும் வீணடிக்க வேண்டிய தேவை இல்லை என்பதனை எமது நிறுவனம் உறுதி செய்கிறது.

Ideal Motors நாடு முழுவதும் 400 க்கும் மேற்பட்ட உதிரிப்பாக விற்பனையாளர்கள் வலையமைப்பைக் கொண்டுள்ளதுடன், சேவை மற்றும் உதிரிப்பாகங்கள் கிடைப்பதுவரையான அனைத்து செயன்முறைகளையும் கவனித்துக்கொள்கிறது.  Ideal Motors இன் மிகவும் தகுதிவாய்ந்த பொறியியலாளர்கள் வாடிக்கையாளரின் தேவை குறித்து ஆய்வு செய்ய தயாரிக்கவுள்ளனர். மேலும் வாடிக்கையாளர்களுக்கு அவர்களின் தேவைகளுக்கு ஏற்ப ஒரு ஜெனரேட்டரை வாங்கவும் உதவுகின்றனர்.

Union of Japanese Scientists and Engineers (JUSE) மற்றும் Total Quality Management (TQM) இனால் வழங்கப்பட்ட மதிப்பு மிக்க Deming பரிசை 2014 இல் Mahindra Powerol வென்றது. மேலும் டெல்லியில் 2017 இல் ஆண்டில் இடம்பெற்ற Glittering Awards Ceremony இல் “Super Brand in the World” விருதையும் வென்றது.

Share

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *