உலகளாவிய ஸ்மார்ட்போன் வர்த்தகக் குறியீடான Huawei, மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் தொழில்நுட்ப தீர்வுகளைத் தொடர்ந்து கண்டுபிடித்து வருகிறது. ஸ்மார்ட்போன்கள் முதல் மடிகணனிகள், டெப்லெட்கள், அணிகலன்கள் மற்றும் wireless ear bud போன்ற புதுமையான தொழில்நுட்ப சாதனங்கள் முதல் முதன்னிலை வன்பொருள் மற்றும் மென்பொருள் உள்ளிட்டவற்றின் மூலம், தொழில்நுட்பத்துடனான எதிர்காலத்திற்கு Huawei வழிவகுக்கிறது. அணியக்கூடிய சாதனங்களுக்கான சந்தையில், பல்வேறு அம்சங்களைக் கொண்ட, தொழிற்துறை ஸ்மார்ட் கைக்கடிகாரங்களை Huawei ஏற்கனவே அறிமுகப்படுத்தியுள்ளது. நுகர்வோரின் உணர்வைப் புரிந்து, நிலைபேறான நவீன வாழ்க்கையை பேணும் வகையில், உண்மையான வயர்லெஸ் ear buds களை Huawei அறிமுகப்படுத்தியுள்ளது.
ஸ்மார்ட் Watch என்பது உடற்பயிற்சிகளையும் அன்றாட நடவடிக்கைகளையும் கண்காணிப்பதற்காக நவீன தொழில்நுட்பங்களுடன் வடிவமைக்கப்பட்ட பல்நோக்கம் கொண்ட கைக்கடிகாரமாகும். இது பயனரின் வெளிப்பாட்டுத் திறனை மேம்படுத்த உதவுவதோடு, ஆரோக்கியமான வாழ்க்கைக்கான முன்னோடியாகவும் திகழ்கிறது. இந்நோக்கத்தை உறுதிப்படுத்தும் வகையில், Huawei Watch GT2 Pro ஆனது, தொழிற்துறை வடிவமைப்புடன் அதற்கு ஒரு புதிய பரிமாணத்தையும் சேர்க்கிறது. அதன் நேர்த்தியான வடிவமைப்பு, அதன் பிரபலத்திற்கு மேலும் வலுச் சேர்ப்பதோடு, இளைஞர்களின் விருப்பத் தெரிவாக அமைவதற்கும் காரணமாக அமைந்துள்ளது. அதன் உடலானது, தைத்தேனியம் மற்றும் நீல மாணிக்கத்துடனான முகப்பு ஆகியவற்றால் அமைந்துள்ளதன் மூலம் Huawei Watch GT2 Pro ஆனது எல்லையற்ற அழகை கொண்டு சேர்க்கிறது. அத்துடன் கீறல் ஏற்படா தன்மையையும் அது உறுதிப்படுத்துகிறது.
பயனர்கள், 200 இற்கும் அதிக கைக்கடிகார முகப்புகளை தெரிவு செய்யும் வசதி காணப்படுவதோடு, தமக்குப் பிடித்த புகைப்படங்கள் மூலம், அதனை மாற்றியமைக்கவும் முடியும். பாரமற்ற இலகுரக ஸ்மார்ட் இக்கைக்கடிகாரத்தின் மற்றொரு சிறப்பம்சம், நீர் எதிர்ப்புத்திறனாகும். இது வெளிச் சூழல் உடற்பயிற்சிகளின்போது மிக உதவியாக அமைகிறது.
அதன் தொழிற்துறை ரீதியிலான வடிவமைப்பிற்கு மேலதிகமாக, Watch GT 2 Pro கைக்கடிகாரமானது, 100 உடற்பயிற்சி அம்சங்களையும், 10 இற்கும் மேற்பட்ட ஓடுவது தொடர்பான கற்கைகளையும் கொண்டுள்ளதோடு, இதயத் துடிப்பு, சராசரி வேகம், உச்சபட்ச சாய்வு போன்ற அளவீடுகளையும் கொண்டுள்ளது. அதன் Golf driving mode பயன்முறை மூலம், பயனர்கள், விளையாட்டின் போது பந்தின் swing (ஸ்விங்) தோரணையை ஆய்வு செய்யலாம் என்பதோடு, ஸ்விங் வேகம் மற்றும் அதன் வீச்சத்தை மேம்படுத்துவற்கான பரிந்துரைகளையும் இதிலிருந்து பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதன் மூலம், குருதியில் ஒட்சிசனின் செறிவு (SpO 2) மற்றும் இதயத் துடிப்பு ஆகியவற்றை 24 மணிநேரமும் கண்காணிக்க முடியும் என்பதுடன், Watch GT 2 Pro ஆனது, சிறந்த தூக்கத்தை மேற்கொள்வதற்கான குறிப்புகளை வழங்குவதுடன், பொதுவான தூக்க சிக்கல்களைக் கண்டறியும் புதிய தொழில்நுட்பத்தையும் கொண்டுள்ளது. மன அழுத்த கண்காணிப்பு அம்சத்துடன் இது வருவதுடன், மன அழுத்தத்தை குறைப்பதற்கான சுவாசப் பயிற்சி போன்ற பரிந்துரைகளை வழங்குவதன் மூலம் மன அழுத்தத்தை நிர்வகிக்கவும் உதவுகிறது. GT 2 Route Back அம்சமானது, பயண வழியை பதிவு செய்வதுடன், துல்லியமான பாதை குறிப்பு பதிவிற்காக GPS இனையும் கொண்டுள்ளது. அத்துடன், சமிக்ஞை தொடர்பு வீழ்ச்சியின் போது கூட, பயனர்கள் தாம் ஏற்னவே பதிவு செய்த வழித்தடத்தை பயன்படுத்தி, தாம் செல்ல வேண்டிய வழியை கண்டறிவதற்கும் உதவுகிறது.
Watch GT 2 Pro தொலைதூர இணைப்பு (remote connectivity) வசதியை கொண்டுள்ளது. இதன் மூலம், Bluetooth வழியாக கைக்கடிகாரத்துடன் இணைக்கப்பட்ட ஸ்மார்ட்போனை, கட்டுப்படுத்த முடிகிறது. Watch GT2 Pro ஆனது 14 நாட்கள் வரை நீடிக்கும் வகையிலான, ஒரு பெரிய மின்கலத்தையும் கொண்டுள்ளது.
Watch GT2 Pro ஆனது, ஆரோக்கியமான வாழ்க்கைக்கு வழிகாட்டுவதோடு, Huawei FreeBuds Pro ஆனது, ஆழ்ந்த இசை அனுபவத்தை வழங்க வழிவகுக்கிறது. பயனரை நாள் முழுவதும் தொடர்சியான இணைப்பை வழங்க உதவுகிறது. Free Buds Pro என்பது உண்மையில், சோடியாக இணைந்த உண்மையான கம்பியற்ற இணைப்புடனான ஒலியை வழங்கும் காதணியாகும் (earbuds). இது பொழுதுபோக்கு மற்றும் நிகழ் இரைச்சலை இல்லாமல் செய்யும் (Active Noise Cancellation (ANC)) அம்சத்தையும் கொண்டுள்ளதுடன், மிகத் துல்லியமான தொலைபேசி அழைப்புகளுக்கும் வழிவகுக்கிறது.
அது இயங்கிக் கொண்டிருக்கும்போது ANC அம்சமானது, அது காணப்படும் இடத்திலுள்ள பின்னணி இரைச்சலை கட்டுப்படுத்துவதன் மூலம், பயனர்கள் உண்மையான ஒலியை கேட்க அனுமதிக்கிறது. FreeBuds Pro ஆனது, நெரிசலான நகரங்கள், வேலை செய்யும் இடங்கள், புகையிரத பயணங்கள் போன்ற சூழ்நிலைகள் மற்றும் வெவ்வேறு இடங்களுக்கு ஏற்ற வகையில் தனிப்பயனாக்கப்பட்ட தனித்துவமான கேட்கும் பயன்முறைகளை கொண்டுள்ளது. இப்பயன்முறைகள் (modes) ANC அம்சத்தை புத்திசாலித்தனமாக தானாகவே சரிசெய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. அதன் பிரத்தியேக குரல் பயன்முறையானது (Voice mode), தெலைபேசி அழைப்புகளின் போது மனித குரல்கள் தனியாக தெளிவாக கேட்கும் வகையில், சுற்றுப்புற ஒலிகளை குறைப்பதோடு, பயனர்கள் மீண்டும் சூழல் ஒலிகளை கேட்கும் வகையில் மாறுவதற்கான (awareness) பயன்முறைக்கு எளிதாக மாற்றிக் கொள்ளவும் முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
FreeBuds Pro ஆனது, 3 ஒலி வாங்கி (3-mic) தொகுதி மற்றும் எலும்பு குரல் சென்சர் (Bone voice sensor) ஆகியவற்றின் மூலம் Hybrid Call Noise Cancellation எனும் மேலும் உயர் தர இரைச்சலை இரத்துசெய்யும் தொழில்நுட்பத்தையும் கொண்டுள்ளது. இப்புதிய தொழில்நுட்பம் ஆனது, பின்புல இரைச்சல்களை குறைப்பதோடு, மேம்பட்ட தொலைபேசி அழைப்பு அனுபவத்தை வழங்கு வகையில், மனித குரலை மேம்படுத்துகிறது.
FreeBuds Pro ஆனது, காற்று உட்புகாத வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதன் மூலம், அதன் இயக்கத்தின் போதான காற்று உராய்வு காரணமாக ஏற்படும் விசில் ஒலிகளை நீக்குகிறது. இத்தனித்துவமான வடிவமைப்பானது, பயனர்கள் நடைப்பயிற்சி, ஓடுதல், சைக்கிள் ஓடுதல் உள்ளிட்ட ஏனைய உடற்பயிற்சிகளில் ஈடுபடும்போது, உயர் தரமான இசையைக் கேட்பதனை உறுதி செய்கிறது.
FreeBuds Pro ஆனது, நாள் முழுவதும் தொலைபேசி அழைப்புகளை ஏற்படுத்துவதற்கும், இசையைக் கேட்கும் நோக்கங்களுக்காகவுமான, நின்று நிலைக்கும் மின்கலத்தை கொண்டுள்ளது. இது, வெள்ளி, வெள்ளை, கறுப்பு (Silver Frost, Ceramic White, Carbon Black) ஆகிய மூன்று வண்ணங்களில் கிடைக்கிறது. சார்ஜிங் வசதி மற்று ear buds இனை பாதுகாப்பாக கொண்டு செல்லல் ஆகிய இரட்டை நோக்கத்தை கொண்ட சார்ஜிங் கவசத்தையும் (charging case) இது கொண்டுள்ளது.
Huawei Watch GT2 Pro ஆனது, ரூ. 54,999 எனும் விலையிலும், Huawei FreeBuds Pro ரூ. 34,999 எனும் விலையிலும், அனைத்து Huawei அனுபவ மையங்கள், நாடு முழுவதும் உள்ள சிங்கர் காட்சியறைகள், அங்கீகரிக்கப்பட்ட விநியோகஸ்தர்களிடமிருந்தும், ஒன்லைனில் Daraz.lk மற்றும் Singer.lk வழியாகவும் ஓடர் செய்து பெற்றுக்கொள்ள முடியும்.