SLS சான்றிதழைப் பெற்ற இலங்கையின் முதலாவது கூந்தல் பராமரிப்பு எண்ணெய் வர்த்தக நாமமாக வரலாற்றில் இணைகிறது குமாரிகா

Author
By Author
3 Min Read

ஒரு குறிப்பிடத்தக்க சாதனைக்கான வழியை உருவாக்கி, ஹேமாஸ் உற்பத்தி நிறுவனத்திற்கு சொந்தமான முன்னணி தலை முடி பராமரிப்பு தீர்வுகளை வழங்கும் குமாரிகா, இன்று SLS சான்றிதழைப் பெற்ற முதல் கூந்தல் பாராமரிப்பு எண்ணெய்யாக தன்னை நிலைநிறுத்திக்கொண்டுள்ளது.

இலங்கை தரநிலை நிறுவனத்தில் நடைபெற்ற விழாவில், இலங்கை தரநிலை நிறுவனம் ‘Sri Lanka Standard Institution (SLSI)‘ குமாரிகாவுக்கு இந்த சான்றிதழை வழங்கியது, SLSI தலைவர்  Dr. நுஷாட் பெரேரா, ஹேமாஸ் உற்பத்தி நிறுவன சந்தைப்படுத்தல் இயக்குநர் பியோனா ஜூரியன்ஸ் முனசிங்க, ஹேமாஸ் உற்பத்தி நிறுவன R&D இயக்குனர் திமுத்து ஜயசிங்க மற்றும் ஹேமாஸ் உற்பத்தி நிறுவன குழுவினரும் கலந்துகொண்டனர்.

இலங்கை தரநிலை விவரக்குறிப்புகளுக்கு இணங்க தயாரிக்கப்பட்ட தயாரிப்புகளுக்கு வழங்கப்படும் மிக உயர்ந்த சான்றிதழான SLS குமாரிகாவின் உயர்தர மற்றும் நுகர்வோருக்கான விரும்பத்தக்க தயாரிப்புகளுக்கு ஒரு சான்றாகும், அவை மூலப்பொருட்களை முதல் உற்பத்தி, பொதிப்படுத்தல் வரை முழு செயல்முறையிலும் மிக உயர்ந்த தரத்திற்கு உற்பத்தி செய்யப்படுகின்றன.

R&D ஹேமாஸ் உற்பத்தி இயக்குனர் திமுத்து ஜயசிங்க கூறுகையில், ‘SLS சான்றிதழ் வழங்கப்பட்ட முதல் கூந்தல் பராமரிப்பு எண்ணெய் விற்பனையாளராக நாங்கள் உண்மையிலேயே பெருமைப்படுகிறோம், இது எங்கள் நீண்ட பயணத்தின் குறிப்பிடத்தக்க மைல்கல்லாகும். இந்த சாதனை நம்மீது மிகுந்த நம்பிக்கையை வைத்திருக்கும் எங்கள் நுகர்வோரின் உடல்நலம் மற்றும் நல்வாழ்வில் வலுவான கவனம் செலுத்துவதன் மூலம் ஊட்டமளிக்கும் கூந்தல் பராமரிப்பு தீர்வுகளை வழங்குவதில் எங்களது அர்ப்பணிப்புக்கான அளவைக் கூறுகிறது. நாங்கள் தொடர்ந்து சாத்தியமான தீர்வுகளை வழங்குவோம்.மேலும் எங்கள் வாடிக்கையாளர்களுக்கு இயற்கையான பொருட்களின் நன்மையுடன் அவர்களின் அழகு அபிலாஷைகளை அடைய உதவுவோம்’ என்று தெரிவித்தார்.

SLSI தலைவர் Dr. நுஷாத் பெரேரா கூறுகையில், ‘இந்த சாதனையை அடைந்த முதல் hair oil வர்த்தக நாமமான குமரிக்காவுக்கு எமது வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம். தயாரிப்புகளின் தரம், உற்பத்தி செயல்முறையின் தரநிலைகள் மற்றும் குமாரிகா அனைத்து அம்சங்களிலும் உரிய தேவைகளை பூர்த்தி செய்த பின்னர் SLS சான்றிதழ் வழங்கப்பட்டது. குமாரிகா போன்ற இலங்கை தயாரிப்புகள் தொடர்ந்து உயர்தரங்களை அமைத்து முன்மாதிரியாக வழிநடப்பதில் நாங்கள் பெருமிதம் கொள்கிறோம்’ என்று தெரிவித்தார்.

தலைமுடி பராமரிப்புஎண்ணெயில் சந்தையில் முதன்மையானதாக திகழும் குமாரிகா 100 சதவீதம் உள்நாட்டில் தயாரிக்கப்படும் ஒரு உற்பத்தியாகும். இது நான்கு வகைகளைக் கொண்டுள்ளது. முடி உதிர்தலை கட்டுப்படுத்துவது, பொடுகை கட்டுப்படுத்துவது, தலைமுடி வெடிப்பை கட்டுப்படுத்துவது , அத்தோடு புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள Hair Thinning Control  எண்ணெய்- இயற்கை பொருட்களின் கலவையுடன் வருகின்றது. hair oil, hair serum, shampoo and conditioner போன்ற அனைத்து குமாரிகா தயாரிப்புகளும் இயற்கையான பொருட்களால் செறிவூட்டப்பட்டு, பெண்களின் தலைமுடி பராமரிப்பு சிகிச்சை தேவைகளையும் அது பூர்த்தி செய்கின்றது.

அதே நேரத்தில் ஆரோக்கியமான, நீண்ட மற்றும் கருமையான கூந்தலுக்கு தேவையான ஊட்டச்சத்தையும் அளிக்கின்றன. 1995 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து ஒரு வர்த்தக நாமமாக குமாரிகா தலைமுடி பராமரிப்பு தயாரிப்புகளில் காலத்திற்கான அமைப்பாளராக (trend setter) இருக்க முன்வந்துள்ளது. இது தொழில்துறை தரத்திற்கு இணையான புதுமையான தலைமுடி பராமரிப்பு தீர்வுகளை அறிமுகப்படுத்துகிறது.

இலங்கையின் தனிநபர் பராமரிப்புத் துறையில் முன்னணி உற்பத்தியாளரான ஹேமாஸ் உற்பத்திகள், ஹேமாஸ் ஹோல்டிங்ஸ் பி.எல்.சியின் ISO 9001 சான்றளிக்கப்பட்ட துணை நிறுவனமாகும். 1948 இல் நிறுவப்பட்ட ஹேமாஸ் ஒரு எளிய நோக்கத்துடன் தொடங்கியது. குடும்பங்கள் ஆரோக்கியமாக வாழ உதவுவதற்கான இந்த அடிப்படை நம்பிக்கை 72 ஆண்டுகளுக்கும் மேலாக நமது வளர்ச்சியை பறைசாற்றியுள்ளது.

இன்று, 4,500 இற்கும் அதிகமான ஊழியர்களைக் கொண்ட ஒரு முன்னணி நிறுவனமாக, நுகர்வோர் மற்றும் சுகாதார துறைகளில் உலகத் தரம் வாய்ந்த தயாரிப்புகள், சேவைகளின் ஒரு போர்ட்ஃபோலியோ மூலம் ஆரோக்கியமான வாழ்க்கையை நாங்கள் கொண்டு வருகிறோம்.

எங்களது முன்னோக்கியப் பயணத்தில், நாங்கள் தொடர்ந்து மாறுபட்ட மற்றும் ஆர்வம் மிக்கவற்றில் முதலீடு செய்வோம். நம்பகமான கூட்டாண்மைகளை வளர்த்துக் கொள்வோம். மேலும் அனைத்தையும் உள்ளடக்கிய உலகத்தை வென்றெடுப்போம். இதன் மூலம் எங்கள் பங்குதாரர்கள் அனைவருக்கும் சாதகமான தாக்கத்தை உருவாக்குவோம்.

பட விளக்கம்:

(இடமிருந்து வலமாக) SLSI சந்தைப்படுத்தல் மற்றும் பிரச்சார இயக்குனர் திருமதி. T.S சேனாரத்ன, SLSI பிரதி பொதுப் பணிப்பாளர் திருமதி S.U. நாரங்கொட, SLSI தலைவர் Dr. நுஷாட் பெரேரா, ஹேமாஸ் நிறுவனத்தின் சந்தைப்படுத்தல் இயக்குனர் பியோனா ஜூரியன்ஸ் முனசிங்க, R&D at Hemas Manufacturing இயக்குனர் திமுத் ஜயசிங்க மற்றும் இமாலி ரணசிங்க, மூத்த வேதியியலாளர். SLS சான்றிதழுடன்.

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *