Hutch ஒன்லைனில் ரீசார்ஜினை மேற்கொண்டு 50% போனஸை அனுபவித்து மகிழுங்கள்!

Author
By Author
1 Min Read

இலங்கையின் மிகவும் விரும்பப்படும் புரேட்பேண்ட் சேவை வழங்குனரான HUTCH, @ Hutch இல் தமது முதல் ஒன்லைன் ரீசார்ஜினை செயற்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு 50% போனஸையும், அதன் பின்னரான ஒவ்வொரு ரீசார்ஜுக்கும் 25% போனஸையும், 2021 ஜூலை மாதம் வரை வழங்கவுள்ளது. 072/078 ஆகிய இரண்டு சந்தாதாரர்களும் HUTCH Self Care app அல்லது HUTCH  இணையத்தளத்தை ஒன்லைன் ரீலோட்டுக்கு பயன்படுத்துவதன் மூலம் இந்தச் சலுகையைப் பெற்றுக்கொள்ள முடியும்.

இந்த புதிய பிரசாரமானது Hutch சந்தாதாரர்களை நடைமுறையில் உள்ள COVID பயணக் கட்டுப்பாடுகள் காரணமாக ரீலோட் செய்வதற்கு ஒன்லைனிற்கு செல்ல ஊக்கப்படுத்துவதுடன், வாடிக்கையாளர்களுக்கு நிவாரணமும் வழங்குகின்றது. ஒன்லைன் ரீலோட் ரீசார்ஜ்களுக்கான வசதியான அணுகலுடன், வாடிக்கையாளர்கள் வீட்டில் பாதுகாப்பாக இருக்கவும், அதே நேரத்தில் மேலதிக நிவாரண போனஸுடன் கணக்குகளை டொப் அப் செய்யவும் HUTCH உதவுகின்றது. கிரடிட் கார்ட் மற்றும் டெபிட் கார்ட்கள் இரண்டையும் ஒன்லைனில் ரீசார்ஜ் செய்ய பயன்படுத்தப்படலாம்.

HUTCH இன் கையகப்படுத்தல் மற்றும் விநியோகத்துக்கான பிரதி பொது முகாமையாளர், மெல்ரோய் தோமஸ், கருத்து தெரிவிக்கையில், “நாங்கள் அனைவரும் ஒரு சவாலான காலகட்டத்தில் இருக்கிறோம், எங்கள் வாடிக்கையாளர்களுக்கு அதிக நிவாரணம் வழங்குவது Hutch இற்கு மிக முக்கியமாகும். அதே நேரத்தில், Covid 19 இன் அச்சுறுத்தலில் நாங்கள் சிக்கிக் கொண்டிருப்பதால் எங்கள் வாடிக்கையாளர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொள்வது மிக அவசியமானதாகும். விரைவான மற்றும் பாதுகாப்பான ஒன்லைன் ரீசார்ஜிங்கை வழங்குவதுடன், எதிர்கால ஒன்லைன் ரீலோட்களுக்கு உங்கள் கடனட்டை விபரங்களை சேமித்து வைக்கும் மேலதிக நன்மையையும் HUTCH வழங்குகிறது,”என்றார்.

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *