Tamil

இலங்கையில் ZenBook 14 (UX435EG) இனை அறிமுகப்படுத்தியுள்ள ASUS

சிறப்பான செயல்திறன் மட்டுமன்றி இலகுவாக கொண்டு செல்ல வசதியாக மிக நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ள  ZenBook 14 UX435EG மடிக்கணினியை ASUS Sri Lanka அறிமுகப்படுத்தியுள்ளது.

இதன் நிறை வெறும் 1.19 கிலோ கிராம் என்பதுடன்,  கச்சிதமான ZenBook 14 பயணத்திற்கு மிகவும் ஏற்றது. இது சிறந்த மின்கல ஆயுளை வழங்குவதானது பாவனையாளரை பணிகளில் முழுமையாக கவனம் செலுத்த உதவுகின்றது. இந்த மொடலானது புரட்சிகர ASUS ScreenPad இனைக் கொண்டுள்ளது. இதுவொரு இரண்டாவது 5.65 அங்குல வண்ண தொடுதிரையென்பதுடன், படைப்புத்திறனையும், நாளாந்த வினைத்திறனையும் மேம்படுத்துகின்றது. இதன் மேம்படுத்தப்பட்ட ScreenXpert 2.0 இடைமுகமானது, திரைகள் மற்றும் தனிப்பயனாக்கப்பட்ட பல்பணிகளுக்கு இடையில் சீரான செயலாக்கத்தை அனுமதிக்கும் மிகவும் இயலறிவார்ந்த இடைமுக வடிவமைப்பை வழங்குகிறது.

ScreenXpert 2.0 எளிதான ASUS பயன்பாட்டு செயலிகளின் தொடரால் ஆதரிக்கப்படுவதுடன், உடனடி அணுகலுக்கு மேலதிக செயலிகளையும் இலகுவாக இணைத்துக்கொள்ள முடியும். புத்திசாலித்தனமான palm rejection மற்றும் நான்கு விரல் smart-gesture ஆதரவுடன் நிலையான கண்ணாடியால் மூடப்பட்ட துல்லியமான டச்பேடாகவும் செயல்படும் அதேவேளையில் ஸ்கிரீன்பேட் வழியாக தொலைபேசி அழைப்புகளை மேற்கொள்ளவும் இது அனுமதிக்கிறது.

ZenBook 14, 11th Generation Intel Core i7 processor இனால் வலுவூட்டப்படுவதுடன், Intel® Iris® Xe integrated graphics (UX435EA) அல்லது NVIDIA® GeForce® MX450 discrete GPU (UX435EG)  தெரிவுடன் வருகின்றமையால் மேம்படுத்தப்பட்ட செயற்திறனுடன் வருவதுடன், பல்துறை செயற்பாட்டுக்கும், பொழுதுபோக்குக்கும் ஏற்றது. 1 TB PCIe® 3.0 x4 SSD அல்லது  PCIe SSD, 32 GB of Intel Optane™ Memory H10 போன்றவையும் முழுமையான அனுபவத்தை வழங்குகின்றன.

இணைப்பு தொடர்பான தேவைகளுக்கு, ​​ZenBook 14 இல் முக்கிய கவனம் செலுத்தப்பட்டுள்ளது. அதிவேக வயர்லெஸ் இணைப்புகளுக்கான gigabit-class WiFi 6 உடன், விரிவான I/O போர்ட்களையும் கொண்டுள்ளது. இது பிரமிக்க வைக்கும் காட்சிகள் மற்றும் வடிவமைப்பையும் கொண்டுள்ளது. இதன் பிரேம்லெஸ் நான்கு பக்க NanoEdge அகலக் காட்சி திரையானது, குறிப்பிடத்தக்க 92% திரைக்கு உடல் விகிதத்தைக் கொண்டுள்ளது. துல்லியமாக வடிவமைக்கப்பட்ட ErgoLift hinge உகந்த தட்டச்சு கோணத்தை வழங்குவதுடன், சிறந்த குளிரூட்டல் மற்றும் மேம்பட்ட ஓடியோ தரத்தையும் வழங்குகின்றது.

ZenBook 14, Pine Grey மற்றும் Lilac Mist ஆகிய இரண்டு அழகான மற்றும் நேர்த்தியான வண்ண தெரிவுகளில் கிடைக்கிறது. நேர்த்தியான மற்றும் நவீன, அழகான மற்றும் அதிநவீன,  ZenBook 14 மொடல்கள் இப்போது நாடு முழுவதும் வாங்குவதற்கு கிடைக்கின்றன.

மேலதிக விபரங்களுக்கு விஜயம் செய்யுங்கள், www.asus.com/lk.

Share

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *