Tamil

Brands Annual 2021 இல் மிகவும் விரும்பப்படும் குழந்தை பராமரிப்பு வர்த்தகநாமமாக ஏற்றுக்கொள்ளப்பட்ட பேபி செரமி

ஹேமாஸ் கொன்ஷியுமரின் இலங்கையின் முதற்தர குழந்தை பராமரிப்பு வர்த்தகநாமமான பேபி செரமி,  LMD இன் Brands Annual 2021 பதிப்பினால் அங்கீகரிக்கப்பட்டுள்ளதுடன், இதன் மூலம் தனது விசுவாசமான வாடிக்கையாளர்கள் அதன் மீது வைத்துள்ள நம்பிக்கையையும், பற்றுறுதியையும் மேலும் உறுதிசெய்துள்ளது. வர்த்தகநாமங்களை மதிப்பீடு செய்தல் மற்றும் மூலோபாயங்களுக்கான முன்னணி நிறுவனமான Brand Finance Lanka இனால் வெளியிடப்பட்ட தரப்படுத்தலில் குழந்தை பராமரிப்பு பிரிவில் மிகவும் விரும்பப்படும் வர்த்தகநாமமாக பேபி செரமி பெயரிடப்பட்டுள்ளது.

தனது பெறுமானங்களை பேணவும், வாக்குறுதிகளை நிறைவேற்றவும் தொடர்ந்து கடுமையாக உழைக்கும் வர்த்தகநாமம் என்ற வகையில் இந்த தரப்படுத்தலானது பேபி செரமி மீது நுகர்வோர் வைத்துள்ள நம்பிக்கைக்கான எடுத்துக்காட்டாகும். சுமார் ஆறு தசாப்தங்களாக தலைமுறைகளால் விரும்பப்படும் இந்த பாரம்பரிய வர்த்தகநாமம், குழந்தை பராமரிப்பு தயாரிப்புகளை உள்நாட்டு மற்றும் உலகளாவிய சந்தைகளுக்கு வழங்கும் தனது பணியில் தொடர்ந்து கடுமையான பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு தரங்களை பின்பற்றி வருகிறது.

இச் சாதனை தொடர்பில் கருத்து தெரிவித்த, ஹேமாஸ் கொன்ஷியுமரின், குழந்தை பராமரிப்பு பிரிவின் சந்தைப்படுத்தல் முகாமையாளர் தனுஷ்க சில்வா கருத்து தெரிவிக்கையில், “எங்கள் விசுவாசமான வாடிக்கையாளர்கள் எங்கள் மீது வைத்திருக்கும் நம்பிக்கைக்காகவும், மில்லியன் கணக்கான இலங்கையர்களின் இதயங்களைத் தொட எங்களுக்கு உதவிய பயணத்தின் ஒரு பகுதியாக இருக்கின்றமைக்காகவும்,  நாங்கள் எமது பணிவான நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம். வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளுக்கு அப்பால் சென்று அவற்றை பூர்த்தி செய்யும் சிறந்த வழிகளைத் தேடும் அதேவேளையில், இந்த சாதனைகள் சிறந்த நோக்கத்துடன் பணியாற்ற நமக்கு மேலும் தூண்டுதலாக அமைகின்றன. குழந்தையின் தனிப்பட்ட பராமரிப்பு எப்போதுமே ஒரு நுட்பமான விடயமாக இருப்பதால், சிறந்த குழந்தை பராமரிப்பு தீர்வுகளை வழங்கவும், பெற்றோரின் மன அமைதியை உறுதிப்படுத்தவும் நாங்கள் எப்போதும் முயற்சி செய்கிறோம்,” என்றார்.

சவர்க்காரம், ஷாம்பு, பேபி கொலோன், பேபி கிறீம், லோஷன், பேபி அணையாடைகள், துடைப்பான்கள், சலவைக்கான கழுவும் திரவம் / தூள், பாட்டில் வாஷ், கொட்டன் பட்ஸ், குழந்தைகளுக்கான பரிசு பெட்டிகள் மற்றும் மேலும் பல குழந்தைகளுக்கான துணைப்பொருட்கள் போன்றவற்றை உள்ளடக்கிய விரிவான குழந்தை பராமரிப்பு தயாரிப்புகள் மூலம் குழந்தைகளை போஷிப்பதை பேபி செரமி இலக்காகக் கொண்டுள்ளது. அதன் உயர் தரமான தயாரிப்புகள் மற்றும் அதி நவீன உற்பத்திச் செயன்முறைக்கான அங்கீகாரமாக இலங்கையில் குழந்தைகளுக்கான சவர்க்காரங்களுக்கான SLS சான்றிதழைப் பெற்ற முதல் குழந்தை பராமரிப்பு வர்த்தகநாமம் பேபி செரமி ஆகும். அனைத்து பேபி செரமி தயாரிப்புகளும் குழந்தையின் தோலில் மிருதுவாகவும் மென்மையாகவும் இருக்கும் பொருட்டு தோலியல் சார்ந்த பரிசோதனைக்குட்படுத்தப்படுவதுடன், IFRA (International Fragrance Association) இனால் சான்றளிக்கப்பட்ட வாசனை திரவியங்களைப் பயன்படுத்தி தயாரிக்கப்படுகின்றன.

சிறந்த குழந்தை பராமரிப்பு தயாரிப்புகளை வழங்கும் அதேவேளை, ஆரம்பகால குழந்தை வளர்ச்சிக்கு அவசியமான நிறைவான குழந்தை வளர்ப்பினை பெற்றோர் தழுவிக்கொள்ள ஊக்குவிப்பதன் மூலம் பேபி செரமி பெற்றோரின் வாழ்க்கையை வளமாக்கும் பணியைத் தொடர்கிறது. ஒரு குழந்தையின் முதல் மூன்று ஆண்டுகள் துரிதமான உடல் மற்றும் உள வளர்ச்சிக்கான காலப்பகுதியாகும். இந்த காலகட்டத்திலேயே ஒரு குழந்தைக்கு பெற்றோரிடமிருந்து மிகுந்த கவனிப்பு தேவைப்படுகிறது. நிறைவான குழந்தை வளர்ப்பு எண்ணக்கருவை ஊக்குவித்து அங்கீகரிப்பதன் மூலம், பெற்றோர் தமக்குரிய வகிபாகத்தை நன்கு புரிந்துகொண்டு அதன் ஊடாக குழந்தைகளை நல்ல முறையில் வளர்க்க உதவுவதற்கு பங்களிப்பு செய்ய பேபி செரமி திட்டமிட்டுள்ளது. மேலும், குழந்தை வளர்ப்பு, ஆரம்ப குழந்தைப் பருவ வளர்ச்சி அம்சங்கள் மற்றும் கர்ப்பகால பராமரிப்பு தொடர்பான தொழிற்துறை நிபுணர்களின் நுண்ணறிவு மற்றும் ஆலோசனையின் மூலம் பெற்றோரின் அறிவை பேபி செரமி போஷிக்கின்றது. இந்த பெறுமதியான விபரங்கள் https://www.babycheramy.lk/ இல் கிடைக்கின்றன.

பயணக் கட்டுப்பாடுகள் நடைமுறையில் உள்ள இந்த சவாலான காலகட்டத்தில் பேபி செரமி தனது வாடிக்கையாளர்களைப் பாதுகாப்பதற்கும், மன அமைதியை உறுதி செய்வதற்கும் உறுதிபூண்டுள்ளது. வாடிக்கையாளர்கள் தங்களுக்குப் பிடித்த பேபி செரமி தயாரிப்புகளை ஹேமாஸ் கொன்ஷியுமரின் e-store –  https://hemasestore.com/brand/baby-cheramy/ வழியாக தங்கள் வீட்டு வாசலுக்கே பெற்றுக்கொள்ளலாம்.

Share

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *