BRAND FINANCE மற்றும் LMD இனால் இலங்கையின் மிகவும் விரும்பப்படும் ஒட்டோமொபைல் வர்த்தகநாமமாக பெயரிடப்பட்டுள்ள ஹொண்டா

Author
By Author
4 Min Read

பிற தொழிற்துறைகளைப் போலவே, கோவிட்-19 தொற்றுநோய் உலகளவில் ஒருங்கிணைந்த வாகனத் தொழிற்துறையிலும் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. வாகனங்கள், மோட்டார் சைக்கிள்கள் மற்றும் ஸ்கூட்டர் இறக்குமதிகள் மீதான கட்டுப்பாடுகள் காரணமாக இலங்கை ஒட்டோமொபைல் சந்தையில் இது மேலும் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இலங்கையில் வாகன இறக்குமதி மீதான தடை 2020 மார்ச்சில் நடைமுறைக்கு வந்தது. அந்நிய செலாவணிக்கான தேவையை குறைப்பதற்கான ஒரு நடவடிக்கையாக முன்னெடுக்கப்பட்ட இந் நிலமை மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் விளைவாக, உள்நாட்டு ஒட்டோமொபைல் துறையில் பெரும்பாலான நிறுவனங்கள் தங்கள் வருமானத்தில் 60 சதவீதம் வரை இழந்துள்ளனர் மற்றும் செலவுகளை ஈடுகட்ட சிரமப்படுகின்றனர். இந்தப் பின்னணியில், Stafford Motor Company போன்ற ஒட்டோமொபைல் நிறுவனங்கள் நிலையாக நின்று, சந்தையில் வாகனங்களின் பராமரிப்பிற்காக புதிய தயாரிப்புகள் மற்றும் சேவைகளை வெளியிடும் விற்பனைக்குப் பின்னரான அம்சங்களில் கவனம் செலுத்தத் தொடங்கின.

இலங்கையில் ஹொண்டாவிற்கான ஒரேயொரு அங்கீகரிக்கப்பட்ட விநியோகஸ்தரான Stafford Motor Company, தனது விற்பனைக்குப் பின்னரான சேவைகளுக்கான வர்த்தகநாமமான ‘ஹொண்டா கெயார்’ இன் கீழ் பல வகையான சேவைகளை அண்மையில் அறிமுகப்படுத்தியது. ஹொண்டா வாகனங்களின் நிலமையை பரிசோதித்தல், தற்போதைய ஹொண்டாவை மேம்படுத்த சிறப்பு பெக்கேஜ்கள், சிறப்பு கட்டணத்தில் முழுமையான வண்ணப்பூச்சு வேலைகள், ஹொண்டா மீட்பு சேவை போன்றவை இதில் அடங்கும். இது நிறுவனத்திற்கு புதிய வருமான மார்க்கத்தை உருவாக்கும் அதேவேளை அதன் வாடிக்கையாளர்களின் தற்போதைய தேவைகளை பூர்த்தி செய்கிறது. மேலும், ஹொண்டா சான்றளிக்கப்பட்ட இரு சக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் பயன்படுத்தப்பட்ட வாகனங்களை அசல் உதிரிபாகங்களின் மூலம் புதுப்பிப்பதன் மூலம் தொடங்கப்பட்டன. இதனால் வருங்கால மற்றும் விசுவாசமான ஹொண்டா வாடிக்கையாளர்களுக்கு சான்றளிக்கப்பட்ட உயர்தர ஹொண்டா வாகனங்களை வாங்குவதற்கான வாய்ப்பை வழங்குகிறது.

“வாடிக்கையாளர் திருப்தி எங்களுக்கு மிக முக்கியமானது மற்றும் இந்த விடயத்தில் விற்பனைக்குப் பின்னரான சேவை குறிப்பிடத்தக்க பங்கை வகிக்கிறது. ஒரு நிறுவனமாக, தொற்றுநோய்களுக்கு மத்தியிலும், பல கட்டுப்பாடுகள் இருந்தபோதிலும், கடினமான நேரத்திலும் எங்கள் வாடிக்கையாளர்களுக்கு சேவை செய்தோம். தற்போதைய சூழ்நிலைகளைப் பொறுத்தவரை, தங்கள் வாகனங்களுக்கு சேவை செய்ய விரும்பும் எவருக்கும் அதிகபட்ச பாதுகாப்பை உறுதி செய்வதில் நாங்கள் மிகவும் உறுதியாக இருக்கிறோம்.

எங்கள் வாடிக்கையாளர்களின் பாதுகாப்பு மிகவும் முக்கியமானதென்பதுடன், அவர்களின் பாதுகாப்புக்கு உண்மையிலேயே மதிப்பளிக்கும் ஒரு வர்த்தகநாமமாக நாங்கள் எடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எங்கள் வாடிக்கையாளர்களுக்கு உறுதியளிப்பதுடன், அவர்கள் மீது எங்களுக்கு உள்ள நம்பிக்கையை மேலும் அதிகரிக்கின்றன,” என, Dr. காலிங்க களுபெரும தெரிவிக்கின்றார். அவர் மேலும் குறிப்பிடுகையில், ” ‘ஹொண்டா கெயார்’ இன் கீழ் சிறப்பு சேவைகளை வழங்குவதன் மூலம் வாடிக்கையாளர்களுக்கு எங்கள் பொருத்தப்பாட்டை நாங்கள் தொடர்ந்து பராமரிக்கிறோம். மேலும், வருங்கால கொள்வனவாளர்கள் தங்கள் மோட்டார் சைக்கிள்களையோ அல்லது கார்களையோ வாங்குவதற்கு முன் மதிப்பீடு செய்ய எங்கள் பட்டறைக்கு கொண்டு வரமுடியுமென்பதுடன் சான்றளிக்கப்பட்ட அசல் ஹொண்டா உதிரிப்பாகங்களுடன் பழுதுபார்ப்புகளையும் நாங்கள் வழங்குகிறோம்,” என்றார்.

மற்றொரு அண்மைய முயற்சியாக, Stafford Motors நிறுவனம் ProRide உடன் இணைந்து ‘ProRide Safety Riding Academy’  – ஹொண்டா பாதுகாப்பாக வாகனம் செலுத்தல் கையேடுகளின் படி பாதுகாப்பாக வாகனம் செலுத்த பயிற்சியளிக்கும் ஒரு புதுமையான கல்வி முயற்சியாகும். இதன் மூலம் வீதிகள் அனைவருக்கும் பாதுகாப்பானதாக இருக்கவும்,  அனைத்து வாகனம் செலுத்துபவர்களின் மனதிலும் பொறுப்பாக வாகனம் செலுத்துவதன் முக்கியத்துவத்துவத்தையும் மனதில் பதிக்கின்றது.

கடந்த மாதங்களில் சிக்கல்களுக்கு மத்தியில் Stafford Motors மற்றும் ஹொண்டாவின் மீளெழுச்சி மற்றும் பன்முகத்தன்மை உண்மையிலேயே குறிப்பிடத்தக்கதாக இருந்தது. மேலும் இந்த குறிப்பிடத்தக்க செயல்திறனுக்கு அதன்  அர்ப்பணிப்பான பணியாளர்களே காரணம் என நிறுவனம் தெரிவிக்கின்றது. அதிகப்படியான டிஜிட்டல் மற்றும் ATL தகவல்தொடர்பு அடிப்படையிலான அணுகுமுறைக்கு மாறியமையானது தொற்றுநோய் பரவியதிலிருந்து ஹொண்டா அதன் வர்த்தகநாமத்தின் புலப்பாடினை தக்கவைக்க உதவியது.

இந்தச் சூழலில், வாடிக்கையாளர் பயணம் முழுவதும் தடையற்ற, பாதுகாப்பான, வசதியான, ஆடம்பர அனுபவத்தை வழங்குவதற்காக அதன் விற்பனை மற்றும் விற்பனைக்கு பின்னரான சேவைகளை டிஜிட்டல் முறைக்கு மாற்றுவதன் முக்கியத்துவத்தை நிறுவனம் அடையாளம் கண்டு, அதில் கவனம் செலுத்தத் தொடங்கியது. ஒரு முன்னணி நிறுவனமாக, ஹொண்டா தொடர்ந்து வாகனத் துறையில் புரட்சி ஏற்படுத்தி வருவதுடன், அதன் நுகர்வோரின் இதயங்களில் மிகவும் விரும்பப்படும் வர்த்தகநாமமாக தனது நிலையை வலுப்படுத்தியுள்ளது. Brand Finance மற்றும் LMD அண்மையில் ‘இலங்கையில் மிகவும் விரும்பப்படும் ஒட்டோமொபைல் வர்த்தகநாமமாக’ இதனை அங்கீகரித்தமை இதற்கு சான்றாகும்!

தொற்றுநோயையும் மீறி இன்று இலங்கையில் வாகனங்களுக்கான கேள்வி வலுவாக உள்ளதுடன், குறிப்பாக மக்கள் பொதுப்போக்குவரத்தைப் பயன்படுத்தும் அச்சுறுத்தலை விட பொதுமக்கள் தனிப்பட்ட போக்குவரத்தை பயன்படுத்த விரும்புகிறார்கள். இதனைக் கருத்தில் கொண்டும், ‘பெயர்ச்சியின் முன்னேற்றத்திற்கு இட்டுச் செல்வதற்கும், உலகெங்கிலும் உள்ள மக்கள் தங்கள் அன்றாட வாழ்க்கையை மேம்படுத்துவதற்கும் உதவுதல்’ என்ற அதன் 2030 தொலைநோக்குப் பார்வையை நிலைநிறுத்தும் மனப்பான்மையிலும்.  ஹொண்டா தொடர்ந்து வர்த்தநாமத்தின் மீதான நம்பிக்கையை ஊக்குவிக்கிறது. ஏனெனில், அதன் ஒவ்வொரு அடியிலும் வாடிக்கையாளர்களுக்கு சேவை செய்வதற்கான அழியாத அர்ப்பணிப்பு மற்றும் உறுதிப்பாட்டை இது உறுதிப்படுத்துகிறது.

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *