Tamil

Huawei Nova தொடர் ஸ்மார்ட்போன்களுக்கு 5GB இலவச Huawei Mobile Cloud Storage வசதி

உலகளாவிய ஸ்மார்ட்போன் தரக்குறியீடான Huawei, தனது மிகவும் பிரபலமான Nova தொடரின் எந்தவொரு ஸ்மார்ட்போன்களின் கொள்வனவுக்கும் 5GB இலவச Huawei மொபைல் கிளவுட் சேமிப்பு (Huawei Mobile Cloud Storage) வசதியை வழங்குகின்றது. Huawei Nova தொடரானது, கொடுக்கும் பணத்திற்கு பெறுமதியான வசதிகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளதோடு, Nova வரிசையில் உள்ள அனைத்து ஸ்மார்ட்போன்களும் கையடக்கத் தொலைபேசி விரும்பிகளுக்கு புத்துணர்ச்சியூட்டும் அனுபவத்தை வழங்கும் வகையில் மிக உயர்ந்த தரம் மற்றும் அம்சங்களுடன் தயாரிக்கப்படுகின்றன. Huawei Nova 7i மற்றும் Huawei Nova 7 SE ஆகியன, Nova குடும்பத்தின் புதிய உறுப்பினர்களாகும். ஒரு பயனர் இந்த சாதனங்களில் ஒன்றை கொள்வனவு செய்யும்போது, ​​அவர் 5GB இலவச Huawei மொபைல் கிளவுட் சேமிப்பகத்திற்கு தகுதியுடையவராகின்றார்.

இந்த இலவச சலுகையைப் பெற, முதலில் Huawei ID (பயனர் பெயர்) மூலம் பதிவு செய்ய வேண்டும். முதன்முறையாக உங்கள் புதிய சாதனத்தை பயன்படுத்த ஆரம்பிக்கும் போதே நீங்கள் Huawei ID மூலம் பதிவு செய்யலாம் அல்லது பின்னர் “Settings” -> “Huawei ID” இற்கு சென்று பின்னர் பதிவு செய்யலாம். புகைப்படங்கள், வீடியோக்கள் மற்றும் கோப்புகளை பாதுகாப்பாக சேமிக்க இந்த இலவச கிளவுட் சேமிப்பு இடத்தைப் பயன்படுத்தலாம் என்பதுடன் எப்போது வேண்டுமானாலும் அதனை அணுகலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவ்வாறு வழங்கப்படும் இலவச 5GB போதுமானதாக இல்லாவிட்டால், பயனர்கள் 50GB, 200GB மற்றும் 2,048GB முதல் மாதாந்த, வருடாந்த சந்தா திட்டங்களுக்கு அதனை மேம்படுத்தவும் முடியும். வருடாந்த சந்தா திட்டங்களுக்கு மேம்படுத்தும் பயனர்களுக்கு, Huawei கிளவுட் ஸ்டோரேஜ் அதிர்ஷ்ட குலுக்கல் மூலம் அற்புதமான பரிசுகளையும் வெல்ல முடியும். இச்சலுகை ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மாத்திரம் செல்லுபடியாகும் என்பது குறிப்பிடத்தக்கது. வெற்றியாளர்களுக்கு Huawei Nova 7 SE ஸ்மார்ட்போன், ஐந்து Huawei Watch Fit சாதனங்கள் மற்றும் நான்கு Huawei Band 6 சாதனங்கள் வழங்கப்படும்.

Huawei Nova 7i மற்றும் Nova 7 SE ஆகியன உலகெங்கிலும் மிகவும் ஏற்றுக்கொள்ளப்பட்ட இரண்டு ஸ்மார்ட்போன்களாகும். Nova 7i ஆனது, ஸ்டைலாக வடிவமைக்கப்பட்ட ஸ்மார்ட்போன் என்பதுடன், பல்வேறு முதன்மையான அம்சங்களையும் கொண்டுள்ளது. Nova 7i இன் முக்கியமாக ஈர்க்கப்படும் அம்சமாக AI குவாட் கெமரா காணப்படுகின்றது, இது பகலாக இருந்தாலும் இரவாக இருந்தாலும் பயனருக்கு ஆச்சரியமளிக்கும் புகைப்படங்களையும் வீடியோக்களையும் எடுக்க உதவுகிறது. இதன் 48MP பிரதான கெமரா, 8MP அல்ட்ரா-வைட் கெமரா, 2MP மெக்ரோ மற்றும் 2MP ஆழத்திற்கான கெமராக்கள் தொழில்துறையின் தரத்திலான புகைப்படங்களையும் வீடியோக்களையும் எடுக்க உதவுகின்றன. புகைப்படம் மற்றும் வீடியோ பதிவு விடயங்களைத் தவிர புதுமையான பயன்முறைகளையும் (modes) இதன் கெமராக்கள் கொண்டுள்ளன. அதன் Pro mode, Night mode, Portrait, Panorama, HDR, Slow motion, Moving picture, Super macro, Time lapse ஆகிய பயன்முறைகள் பயனர்களை ஒரு தொழில்முறை புகைப்படக் கலைஞராக்க உதவுகின்றன. அதன் பிரதான கெமராவைத் தவிர, மெக்ரோ லென்ஸ் ஆனது, பயனர்களை 4cm அளவு இடைவெளியில் நெருக்கமான பொருட்களை புகைப்படமாக்க உதவுகின்றது. அதன் பொக்கே மற்றும் AI போர்ட்ரைட் புகைப்பட அம்சங்கள், புகைப்படங்களில் சினிமா தோற்றத்தை ஏற்படுத்துகின்றன. Nova 7i இன் 16MP செல்பி கெமரா இயற்கையான நிறங்களையும் காட்சிகளையும் கைப்பற்ற உதவுகிறது. இதன் காரணமாக பயனர்கள் நிஜ வாழ்க்கை காட்சிகளை படமாக்க முடிகின்றது.

8GB RAM,  8GB RAM, Kirin 710 chipset மற்றும் 128GB சேமிப்பகம் ஆகியவற்றுடன் இயங்கும் Nova 7 i, தடையின்றி ஒரே நேரத்தில் பல்வேறு விடயங்களை மேற்கொள்ளும் (multi-tasking) சந்தர்ப்பங்களில், திறமையாகவும் பின்னடைவின்றியுமான செயல்திறனை வழங்குகிறது. Nova 7i ஆனது, பக்கவாட்டிலான கைரேகை உணரியைக் கொண்டுள்ளது. இது பயனருக்கு, ஒரு நொடியின் பல பகுதிகளாக பிரிக்கப்பட்ட கணப்பொழுதில் சாதனத்தைத் திறக்க உதவுகிறது. அத்துடன் அது அமைக்கப்பட்டுள்ள விதமானது, ஸ்மார்ட்போனை வசதியாக திறக்க பயனரை அனுமதிக்கிறது. Nova 7i இன் 4,200 mAh மின்கலம், தங்கு தடையற்ற பயன்பாட்டிற்கு போதுமான சக்தியை வழங்குகிறது. 40W Huawei Super Charge தொழில்நுட்பத்தை கொண்டுள்ள இது, 30 நிமிடங்களில் சாதனத்தை 70% வரை சார்ஜ் செய்ய அனுமதிக்கிறது. Huawei Nova 7i ஆனது, ஸ்டைல் மற்றும் செயல்திறன் ஆகியவற்றின் உரிய கலவையாகும். Nova 7i உயர்நிலை அம்சங்களால் நிறைந்திருந்த போதிலும் மலிவு விலையில் கிடைக்கிறது. , இது இளஞ்சிவப்பு, பச்சை, கறுப்பு (Sakura Pink, Crush Green, Midnight Black) ஆகிய வண்ணங்களில் கிடைக்கின்றது.

Huawei Nova 7 SE ஆனது, Nova தொடரில் முதல் 5G ஸ்மார்ட்போன் ஆகும். 64MP குவாட் கெமரா தொகுதி, 8GB RAM + 128GB சேமிப்பகம், Kirin 820 5G chipset போன்ற அதன் முக்கிய அம்சங்கள், அதே வகையிலுள்ள கையடக்க தொலைபேசிகளில் அதனை வலுவான ஸ்மார்ட்போனாக காட்டுகின்றன. அதன் புதுமையான வடிவமைப்பு மற்றும் வெள்ளி, பச்சை, ஊதா (Space Silver, Crush Green, Midsummer Purple) ஆகிய மூன்று தனித்துவமான வண்ணங்களில், முப்பரிமாண கண்ணாடி மேற்பரப்புடன் வருவதால் Nova இரசிகர்களுக்கு மேலும் மகிழ்ச்சியை அதிகரிக்கிறது.

Nova 7 SE ஆனது, 6.5 அங்குல LTPS Full HD திரையுடன் வருகிறது. இது 90% திரைக்கு உடல் விகிதத்தையும், 2400×1080 எனும் திரை தெளிவுத்திறனையும் வழங்கி மேம்பட்ட பார்வையிடும் அனுபவத்தை வழங்குகிறது. கையடக்க தொலைபேசி விளையாட்டாளர்களுக்கும், திரைப்படங்கள், வீடியோக்களையும் தவறாமல் பார்ப்பவர்களுக்கும் இது சரியாக பொருந்தும் ஒரு தொலைபேசியாகும்.

அதன் AI மூலம் இயங்கும் குவாட் கெமரா, தற்போதுள்ள மொபைல் புகைப்படக் கலைஞர்கள் எதிர்கொள்ளும் பெரும்பாலான சிக்கல்களுக்கு தீர்வளிக்கிறது. இது f/1.8 குவியத் தூரத்தைக் கொண்ட 64MP உயர் தெளிவுத்திறன் கொண்ட பிரதான கெமராவையும், f/2.4 குவியத்தைக் கொண்ட 8MP அல்ட்ரா வைட் ஆங்கிள் லென்ஸ், f/2.4 குவியத்தைக் கொண்ட 2MP பொக்கே லென்ஸ் மற்றும் f/2.4 குவியத்தைக் கொண்ட 2MP மெக்ரோ லென்ஸ் ஆகியவற்றைக் கொண்டுள்ளன. இதன் மூலம் குறைந்த அல்லது மங்கலான ஒளி நிலைமைகளின் கீழ் கூட தெளிவான புகைப்படங்களையும் வீடியோக்களையும் எடுக்க முடியும். Nova 7 SE ஆனது, தன்னியக்க குவியம் (Autofocus), பட உறுதிப்படுத்தல் (image stabilization) மற்றும் 960fps வரை மெதுவான இயக்க (slow motion) 4K வீடியோ பதிவுகளையும் எடுக்க உதவுகின்றது. அதே போன்ற சக்தி வாய்ந்த இதன் 16MP செல்பி கெமரா நிஜ வாழ்க்கை காட்சிகளை படமாக்க உங்களை அனுமதிப்பதுடன் BM3D denoising algorithm மூலம் வெளிக் காரணிகள் காரணமாக இரவு நேரங்களில் புகைபடங்களை எடுக்கும்போது ஏற்படும் குறைபாடுகளை (noise) வெகுவாகக் குறைக்கிறது.

Nova 7 SE ஆனது, 8 GB RAM மற்றும் 128GB சேமிப்பகத்துடன், சிறந்த செயல்திறன் மற்றும் அதிக சேமிப்பு திறனை வழங்குகிறது. சமீபத்திய Kirin 820 7nm 5G Chipset மூலம் இயங்கும் Nova 7 SE ஆனது, ஒரே நேரத்தில் பல பணிகளில் ஈடுபடும் போது கூட வேகமாகவும் பின்னடைவின்றியதுமான செயல்திறனை வழங்குகிறது. அதன் 40W Huawei Super Charge தொழில்நுட்பம், 4,000 mAh மின்கலத்தை குறைந்தபட்ச நேரத்திற்குள் சார்ஜ் செய்ய உதவுகிறது. அத்துடன் முழுமையாக சார்ஜ் செய்யப்பட்ட சாதனம், நாள் முழுவதும் வசதியாக பணியாற்ற போதுமான சக்தியை வழங்குகிறது.

Huawei Nova 7i ரூ. 52,999 எனும் விலையிலும், Huawei Nova 7 SE ரூ. 68,999 எனும் விலையிலும் நாடு முழுவதிலுமுள்ள Huawei அனுபவ மையங்கள், சிங்கர் காட்சியறைகள், Daraz.lk மற்றும் Singer.lk இல் கிடைக்கின்றன.

Share

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *