Tamil

ஃபாலன் அண்ட்ரியா Singer Hi-Fi Audio மற்றும் Sound Bar வகைகளின் வர்த்தகநாம தூதராக நியமனம்

இலங்கையின் முன்னணி நீடித்த நுகர்வோர் பாவனைப் பொருட்களின் சில்லறை விற்பனையாளரான சிங்கர் (ஶ்ரீ லங்கா) பி.எல்.சி நிறுவனம், இசை பிரபலங்களில் ஒருவரான ஃபாலன் அண்ட்ரியாவை, சிங்கர் HiFI வகைகளின் வர்த்தகநாமத்திற்கான புதிய தூதராக நியமித்துள்ளது.

கொழும்பிலுள்ள சிங்கர் தலைமை அலுவலகத்தில் இது தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. அந்த வகையில், ஃபாலன் அண்ட்ரியா இரண்டு வருட காலத்திற்கு குறித்த தயாரிப்புகளின் வெளியீடுகள், நிகழ்வுகள் மற்றும் விளம்பர பிரசாரங்களில்  நிறுவனத்திற்கு ஒத்துழைப்பு வழங்கவுள்ளார். ஃபாலன் அண்ட்ரியா ஒரு பிரபலமான கலைஞர் என்பதுடன், அவர் ‘தெரண ட்ரீம் ஸ்டார் சீசன் 9’ தொடரின் வெற்றியாளராக முடிசூட்டப்பட்டவர். இளைஞர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையிலான பல்வேறு திறமைகளைக் கொண்டுள்ள அவர், பல்துறை பாடகி என்பதுடன், அவர் தனது பாடல்களால் இலங்கையர்களை வசீகரிக்கும் ஆற்றல் கொண்டவர்.

Singer Sri Lanka பி.எல்.சி.யின் சந்தைப்படுத்தல் பணிப்பாளர் ஷனில் பெரேரா இது தொடர்பில் கருத்து வெளியிடுகையில், “புதுமையான ஓடியோ தயாரிப்புகளுடன் எமது Hi-Fi வகைகளை விரிவுபடுத்த நாம் தயாராகி வரும் நிலையில், எதிர்வரும் இரண்டு வருடங்களுக்கு சிங்கர் Hi-Fi இற்கான வர்த்தகநாம தூதராக ஃபாலன் அண்ட்ரியா எம்முடன் இணைவதில் நாம் பெரும் மகிழ்ச்சியடைகிறோம்.” என்றார் “ஒரு கலைஞராக அவரது சிறந்த நற்பெயர் மற்றும் இளைஞர்களிடையே அவரது புகழ் ஆகியன, Hi-Fi வகைகளை விரிவுபடுத்துவதற்கான எமது முயற்சிகளில் பெருமளவான இரசிகர்களை சென்றடைய உதவும். எமது நுகர்வோரின் பொழுதுபோக்கு தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில், உண்மையான இலங்கை தயாரிப்பு வகைகளை விரிவுபடுத்தி வழங்குவதற்காக நாம் அனைவரும் கடமைப்பட்டுள்ளதால், ஃபாலனுடனான எமது ஒத்துழைப்பு ஒரு எளிய தரக்குறியீட்டு ஊக்குவிப்பிற்கு அப்பாற்பட்டதாக காணப்படுகின்றது.” என அவர் மேலும் தெரிவித்தார்.

Singer Hi-Fi இற்கான வர்த்தகநாம தூதராக நியமிக்கப்பட்டுள்ளமை குறித்து ஃபாலன் அண்ட்ரியா தெரிவிக்கையில், “சிங்கர் குடும்பத்தில் இணைவதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். இந்த ஒத்துழைப்பு தொடரும் எனவும் நான் எதிர்பார்க்கிறேன். பல ஆண்டுகளாக புதுமையான தயாரிப்புகளின் விநியோகத்தின் மூலம் இல்லங்களுக்கு சிங்கர் மகிழ்ச்சியைக் கொண்டு வந்துள்ளது. குறிப்பாக சிங்கர் Hi-Fi வகைகள், இலங்கையர்களிடையே மிகவும் விரும்பப்படுகிறது. ஓடியோ கருவிகள் என வரும்போது இது ஒரு அவசியமான தயாரிப்பாகும் . நான் தனிப்பட்ட முறையில் போற்றுகின்ற அத்தகைய பிரியமான மற்றும் புகழ்பெற்ற தரக்குறியீட்டின் தூதுவராக இருப்பதில் நான் பெருமையடைகிறேன்.” என்றார்.

வானொலிகள், Hi-Fi systems, Active speakers போன்ற பல தரப்பட்ட ஓடியோ கருவிகள் மூலம் பல தலைமுறைகளுக்கு சேவை செய்த, இலங்கையர்களிடையே பிரபலமான Singer Hi-Fi ஆனது, ஒரு வீட்டுப் பெயராக மாறியுள்ளது. தற்போது, சிங்கர் Hi-Fi பரந்த அளவிலான Hi-Fi அமைப்புகளைக் கொண்டுள்ளன. 2.1 முதல் 5.1ch speakers, single tower முதல் twin tower வகைகள், Active Speakers போன்ற ஓடியோ பிரிவில் நீண்ட காலம் ஆதிக்கம் செலுத்தி வரும் பல்வேறு ஸ்பீக்கர்கள் இதில் அடங்குகின்றன.

புதுமையான தயாரிப்புகள் மூலம் இளைஞர் போன்ற முக்கிய பாவனையாளர்களின் தேவையைப் பூர்த்தி செய்ய சிங்கர் தொடர்ந்தும் அர்ப்பணித்து வருவதுடன், அதன் Hi-Fi வகைகளை தொடர்ந்தும் விரிவுபடுத்தி வருகின்றது. அது மாத்திரமன்றி ஒரு முன்னோடி நடவடிக்கையாக, சிங்கர் அதன் பிரத்தியேக Sounds Bars மற்றும் Portable Bluetooth ஸ்பீக்கர்களை இவ்வாண்டில் சந்தைக்கு அறிமுகப்படுத்த எதிர்பார்த்துள்ளது. நேர்த்தியான மற்றும் நவீன வடிவமைப்பைக் கொண்ட சிங்கர் Sound Bar கள்  சக்திவாய்ந்த, audiophiles கள், அதிவேக மற்றும் அறையை நிரப்பும் ஒலியுடன் சிறந்த Bass மூலம் இசைக்கின்றன. புதிதாக வெளியிடப்படவுள்ள சாதனமானது, நுகர்வோருக்கு உயர் தரமான மற்றும் நேரடி இசை அனுபவத்தில் மகிழ்ச்சியை வழங்கும் என்பதுடன், வீட்டு பொழுதுபோக்கு சாதனங்களில் புரட்சியையும் ஏற்படுத்தவுள்ளது. புதிய Portable Bluetooth ஸ்பீக்கர்கள், சுற்றுலாக்கள் மற்றும் சிறிய டி.ஜேக்களுக்கு உள்ளக நிகழ்வுகளிலும் வெளிப்புற நிகழ்வுகளிலும் பயன்படுத்தக்கூடிய வகையில், இளைஞர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யக் கூடியன. இலகு ரக எடை, சிறிய மற்றும் கொண்டு செல்ல இலகுவான மற்றும் நவநாகரீக வடிவமைப்பு போன்ற அம்சங்கள் இந்த Bluetooth Speaker களின்  முக்கிய சிறப்பம்சங்களாகும்.

சிங்கர் ஶ்ரீ லங்கா பி.எல்.சி ஆனது, இலங்கையின் நீடித்த நுகர்வோர் பாவனைப் பொருட்கள் சந்தையில் முன்னணியில் உள்ளதுடன், நாடளாவிய ரீதியில் நாளாந்தம் வளர்ந்து வரும் அதன் வாடிக்கையாளர்களுக்காக, பரந்த அளவிலான உயர்தர உள்ளூர் மற்றும் பிரபல்யமான சர்வதேச வர்த்தக நாமங்களைக் கொண்ட பொருட்களை வழங்குவதில் புகழ் பெற்று விளங்குகின்றது. சிங்கர் மெகா, சிங்கர் பிளஸ் காட்சியறைகள், இலத்திரனியல் வணிகத் தளம் (www.singer.lk) உள்ளிட்ட 432 சில்லறை விற்பனை நிலையங்கள் ஆகியவற்றின் மூலம் சிங்கர் நிறுவனம் தொடர்ச்சியாக அதன் வாடிக்கையாளர்களை சென்றடைகின்றது. சிங்கர் நிறுவனம், 600 இற்கும் மேற்பட்ட இலத்திரனியல் பொருட்கள், 1,200 வீட்டு உபகரணங்கள் மற்றும் 50 இற்கும் மேற்பட்ட சர்வதேச புகழ் வாய்ந்த வர்த்தக நாமங்களுடனான பொருட்களையும் தன்னகத்தே கொண்டுள்ளது. கொள்வனவின்போது நுகர்வோருக்கு அதிக நெகிழ்வுத் தன்மையை வழங்கும்  பொருட்டு, சிங்கர் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு வட்டி இல்லாத கொள்வனவுத் திட்டங்கள், விசேட தள்ளுபடிகள், மாற்றீடு தள்ளுபடிகள், இலவச வழங்கல்கள், கடனட்டை சலுகைகளையும் வழங்கி வருகின்றது.

Share

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *