Tamil

ஒப்பிடமுடியாத ஸ்மார்ட் அம்சங்களுடனான Huawei யின் புதிய ஸ்மார்ட்வாட்சுக்கு மாறுவதற்கான தருணம்

ஸ்மார்ட் அணிகலன் தொழில்நுட்பத்தின் விரிவாக்கத்துடன் ஸ்மார்ட் கைக்கடிகாரங்கள் மிகவும் பொதுவானதாகிவிட்டன. உயர் இசைவாக்கத் தன்மை, பயன்பாட்டு அம்சங்கள், வடிவில் சிறியது உள்ளிட்ட இயல்புகளுடன் ஸ்மார்ட் வாட்ச்களில் தூக்கம், இதயத் துடிப்பு, இரத்த அழுத்த கண்காணிப்பு போன்ற பல ஸ்மார்ட் அம்சங்கள் காணப்படுகின்றமையானது, ஆரோக்கியம் தொடர்பில் அக்கறை கொண்டுள்ள பல்லாயிரக்கணக்கானோரை ஈர்த்துள்ளது. ஆரோக்கியம் மற்றும் சுகவாழ்வின் அடிப்படையிலான ஒரு புதிய கட்டுப்பாட்டு நிலையை அது அவர்களுக்கு அளிக்கிறது. ஸ்மார்ட்வாட்ச் உற்பத்தியாளர்கள் உயர்தர அம்சங்களில் கவனம் செலுத்துவது மட்டுமல்லாமல், பாரம்பரிய கைக்கடிகாரங்களுக்கு இணையாக ஸ்டைலான வாட்ச்களை அறிமுகப்படுத்துவதை உறுதி செய்து வருகிறார்கள்.

அத்தகைய ஸ்மார்ட்வாட்ச்களில் ஒன்றே Huawei Watch GT2 Pro ஆகும், இது முன்னணி தொழில்நுட்ப தீர்வுகள் வழங்குநரிடமிருந்தான தொழில்வாண்மை தோற்றமுடைய தலைசிறந்த படைப்பாகும். Huawei Watch GT2 Pro என்பது அணியக்கூடிய தொழில்நுட்பத்தில் புரட்சியை ஏற்படுத்தியுள்ள Huawei அறிமுகப்படுத்தியுள்ள ஒரு நேர்த்தியான மற்றும் தொழில்வாண்மை ரீதியான ஸ்மார்ட்வாட்ச் ஆகும். ஒரு உயர்ந்த இடத்திலுள்ள ஸ்மார்ட்வாட்ச் என்ற வகையில், ஸ்டைலான வடிவமைப்பு, AMOLED தொடு திரை, 100 இற்கும் அதிகமான தனிப்பயனாக்கப்பட்ட உடற்பயிற்சிகள், கோல்ஃப் டிரைவிங் மோட், இரு வாரங்களுக்கான மின்கல ஆயுள் உள்ளிட்ட பல்வேறு குறிப்பிடத்தக்க அம்சங்களை Watch GT2 Pro, கொண்டுள்ளது.

ஒரு கைக்கடிகாரத்தை வாங்கும்போது, ​​கவனிக்க வேண்டிய அம்சங்களில் ஒன்று அதன் வடிவமைப்பாகும். தைத்தேனியம் சட்டம், நீல மாணிக்க முகப்பு மற்றும் பளபளப்பான செரமிக் பின்புறம் ஆகிய அம்சங்களைக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ள Huawei Watch GT2 Pro அந்த அம்சத்தை இலகுவாக அடைந்துள்ளது. காலத்தை வென்ற அழகு மற்றும் அதி-தொழில்முறை தோற்றத்தை இது வழங்குகிறது. இதில் பயன்படுத்தப்பட்டுள்ள உயர்தர பொருட்கள், ஸ்மார்ட்வாட்ச் இனை கீறல்கள் விழாமலும் நீர் எதிர்ப்பிற்கு ஏற்ற வகையிலும் அதன் உறுதிப்பாட்டை காண்பிக்கிறது. இந்த இலகுரக ஸ்மார்ட்வாட்ச் 1.39 அங்குல AMOLED தொடுதிரையுடன் வருவதுடன், பயனருக்கு விரிவான புள்ளிவிபரங்கள் மற்றும் தரவுகளைப் பார்வையிட உதவுகிறது. இதன் பார்வையிடும் முகப்பு பகுதியானது, 200 இற்கும் மேற்பட்ட டிசைன்களை வழங்குவதன் மூலம், பயனர்களின் மாறுபடும் மனநிலைக்கு ஏற்ப மாற வழிவகுக்கிறது.

செயல்திறனின் அடிப்படையில், Huawei Watch GT2 Pro மலையேறுதல், வெளிச் சூழலில் ஓடுதல், படகோட்டம், நீர்ச்சறுக்கல், டென்னிஸ் போன்ற 100 இற்கும் அதிகமான உடற்பயிற்சிகள் உள்ளிட்ட பல பயனுள்ள அம்சங்களுடன் வருகிறது. நீங்கள் மேற்கொள்ளும் ஒவ்வொரு உடல் அசைவிற்கும் உதவும் வகையிலான, குரல் வழி வழிகாட்டலுடன் ஓட்டங்கள் தொடர்பான 10 பயிற்சிகளை இது கொண்டுள்ளது. Huawei Watch GT2 Pro அதன் பிரத்தியேக கோல்ஃப்-பந்து செலுத்தும் (Golf driving) பயன்முறையுடன் புதிய கோல்ஃப் உதவியாளராக மாறி, பயனருக்கு தொழில்முறை வழிகாட்டல் பயிற்சிகளையும் அளிக்க உதவுகிறது. கோல்ஃப்-ட்ரைவிங் பயன்முறையானது, பந்தின் வேகமான சுழற்சி தோரணையை (Swing) பகுப்பாய்வு செய்யும் திறன் கொண்டது. அதன் மூலம் பயனருக்கு ஸ்விங் வேகம் மற்றும் அதிர்வெண்ணை மேம்படுத்துவது தொடர்பான தரவுக் குறிப்புகளை வழங்குகிறது.

ஆரோக்கியம் தொடர்பில் அதிக உணர்வுள்ள பயனர்களுக்கு, குருதியிலுள்ள ஒட்சிசன் செறிவு (SpO2) அல்லது இதய துடிப்பு தொடர்பான 24 மணிநேர அளவீடுகளின் அடிப்படையிலான துல்லியமான விபரங்களை வழங்கும் வகையில், Huawei Watch GT2 Pro ஆனது AI algorithms வழிமுறைகளைக் கொண்டுள்ளது. இதிலுள்ள Huawei TruSleep தொழில்நுட்பத்தின் மூலம், Huawei Watch GT2 Pro ஆனது பொதுவான தூக்க சிக்கல்களை விஞ்ஞானபூர்வமாக கண்காணித்து, ஒரு சிறந்த தூக்கத்திற்கான பரிந்துரைகளை வழங்குகின்றது. அதன் மன அழுத்த கண்காணிப்பு அம்சமான Huawei TruRelax தொழில்நுட்பமானது, அதிக பணிச்சுமை கொண்ட பயனருக்கு அவரது மன அழுத்தத்தை நிர்வகிக்க ஏற்றதாக அமைகின்றது. மன அழுத்த நிலைகளை முகாமைத்துவம் செய்வதற்காக, மூச்சுப் பயிற்சி போன்ற பரிந்துரைகளை இது வழங்குகிறது. இதன் TruSeen 4.0+ தொழில்நுட்பமானது,  இதயத் துடிப்பை துல்லியமாக கண்காணிப்பதுடன், இதய துடிப்பு சாதாரண நிலைகளுக்கு மேல் அல்லது குறைவாக இருந்தால் புத்திசாலித்தனமாக செயற்பட்டு நினைவூட்டல்களை வழங்குகிறது.

Watch GT2 Pro ஆனது, பயண வழியைப் பதிவுசெய்தல் மற்றும் துல்லியமான நிலை குறிப்பிற்காக GPS அம்சத்தை பயன்படுத்துகின்றது. இதிலுள்ள Route Back அம்சம் மூலம் offline பயன்பாட்டிற்காக அவரது பாதையை பதிவு செய்து, பயனருக்கு தொலைத்தொடர்பு சமிக்ஞை வீழ்ச்சியின் போது மீண்டும் வந்த வழியிலேயே திரும்புவதற்கான வழியைக் காண்பிக்க உதவுகிறது.  Watch GT2 Pro அணிந்துள்ள நிலையில், ​​பயனர்கள் அதன் உள்ளமைக்கப்பட்ட உயர வேறுபாட்டு காற்றழுத்தமானி மூலம் வானிலையில் ஏற்படும் திடீர் மாற்றங்கள் தொடர்பிலான நிகழ் நேர காற்றழுத்த மாற்றத்தைக் கண்டறிய முடியும். இந்த அம்சமானது, பயணங்கள் மற்றும் வெளிப்புற சாகசங்களுக்குத் தயாராகும் போது உதவுகிறது. Watch GT2 Proவில் பயனர்கள் சுமார் 500 பாடல்களை சேமித்து வைக்கலாம் என்பதுடன் உடற்பயிற்சிகளின்போது ஸ்மார்ட்போன் இல்லாமலேயே தங்களுக்கு பிடித்தமான இசையை தொடர்ச்சியாக கேட்கலாம். மிக முக்கியமாக, ஸ்மார்ட்வாட்ச் ஆனது, Bluetooth மூலம் ஸ்மார்ட் போனுடன் இணைக்கப்பட்டிருக்கும்போது பயனர்கள் தங்களுக்கு வரும் அழைப்புகளைப் பெறுதல், நிராகரித்தல், அமைதியாக்கல், உள்ளிட்டவற்றை இதன் மூலம் செய்யலாம் என்பதுடன், குறுந்தகவல் அறிவிப்புகள், நினைவூட்டல்கள், அலாரங்களைப் பெறலாம். அத்துன், நேரடியாக இசையைக் கேட்க ஸ்மார்ட்வாட்சுடன் earbud இனைக் கூட இணைக்க முடியும். அத்துடன் Watch GT2 Proவின் ரிமோட் ஷட்டர் அம்சம் மூலம் பயனர்கள் ஸ்மார்ட்போனை பொருத்தமான இடமொன்றில் வைத்து விட்டு தூரத்திலிருந்தவாறு அதன் கெமராவை இயக்கி புகைப்படங்களை எடுக்கவும் முடியும்.

Huawei Watch GT2 Pro ஆனது, வயர்லெஸ் மற்றும் வேகமான சார்ஜிங் திறன்களுடன் கூடிய செயற்றிறனான வாழ்க்கையை அதன் இரண்டு வார கால மின்கல ஆயுள் உறுதி செய்கிறது. 5 நிமிட வயர்லெஸ் விரைவான சார்ஜ் மூலம் பயனர்க்ள் ஸ்மார்ட்வாட்சை 10 மணி நேரம் ப் பயன்படுத்த முடிகின்றது. அத்துடன் இது ஸ்மார்ட் போனிலுள்ள சார்ஜினை பெறும் தலைகீழ் சார்ஜிங் வசதியையுயும் கொண்டிக்கிறது, இதனால் பயனர்கள் பயணத்தின் போது ஸ்மார்ட்வாட்சை இலகுவாக சார்ஜ் செய்வதற்◌ான சார்ஜிங்கினை மேற்கொள்ள முடியும்.

Huawei Watch GT2 Pro ஆனது, அனைத்து ஸ்மார்ட் சாதனங்களுடனும் இணக்கமாக செயற்படுவதோடு, அது Huawei நிறுவனத்தின் முன்னணி சுகாதார கண்காணிப்பு செயலியான Huawei Health உடன் இணைப்பதன் மூலம் உடல்நலம் மற்றும் உடற்பயிற்சி தொடர்பான மேலும் பல அம்சங்களின் வசதியை அடையலாம். Huawei AppGallery வழியாக Huawei Health செயலியை பதிவிறக்கம் செய்யலாம். இது ஸ்மார்ட் அணிகலன் பயனர்களுக்கு கட்டாயம் தேவையான ஒரு செயலியாகும். இந்த செயலி, மேம்பட்ட பாதை அடையாளம் மற்றும் ஏனைய கண்காணிப்பு திறன் உள்ளிட்ட Huawei Watch GT2 Pro வில் சிறந்த அம்சங்களை வெளிப்படுத்துகிறது. இந்த Health செயலியானது உடற்பயிற்சிகள் உள்ளிட்ட ஏனைய பயிற்சி செயற்பாடுகளை கண்காணிப்பதுடன், ஸ்மார்ட் அணிகலன் சாதனங்களையும் நிர்வகிப்பதுடன், பயன்படுத்த எளிதானதும், இடைமுகத்தில் விரிவான மற்றும் வரைபுகளுடனான விளக்கங்களையும் வழங்குகிறது. Huawei Watch GT2 Pro வினை Huawei Health செயலியுடன் இணைக்க, பயனர்கள் செயலியின் சமீபத்திய பதிப்பிற்கு அதனை மேம்படுத்த வேண்டும். இதனைத் தொடர்ந்து செயலியைத் திறந்து அதிலுள்ள “Devices” என்பதற்கு சென்று, உரிய சாதனைத்தை தெரிவு செய்து, Health செயலியுடன் அதனை இணைக்க முடியும். இது ஸ்மார்ட்போனின் சில கிளிக்குகளின் மூலம் மேம்பட்ட கண்காணிப்பு விபரங்களை பார்வையிடவும், கண்காணிக்க அனுமதிக்கும் வகையிலான, இலகுவானதும் வசதியானதுமான பயனர் இடைமுகத்தை கொண்டுள்ளது.

Huawei Watch GT2 Pro ஆனது, ரூ. 57,999 எனும் விலைக்கு, நாடு முழுவதும் உள்ள Huawei அனுபவ மையங்கள், சிங்கர் காட்சியறைகள், அங்கீகரிக்கப்பட்ட Huawei விற்பனையாளர்கள், Daraz.lk மற்றும் Singer.lk வழியாக ஒன்லைனில் முற்பதிவு செய்து பெற்றுக் கொள்ளலாம்.

Share

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *