இலங்கையின் முன்னணி பல்வகை கூட்டு நிறுவனமான DIMO, அதன் General Engineering Solutions (பொது பொறியியல் தீர்வுகள்) பிரிவான DIMO TECH மூலம், தொழில்துறையாளர்களுக்கு இலவச தொழில்நுட்ப ஆய்வுகளை மேற்கொண்டு உதவுவதன் மூலம் நாட்டின் கொவிட்-19 பொருளாதார மீட்சிக்கான தனது உறுதிப்பாட்டை மேலும் விரிவுபடுத்துகிறது.
DIMO TECH ஆனது, பொது பொறியியல் தீர்வுகளை வழங்கும் அனைத்து வணிகத் துறைகளுக்கும் இவ்வாய்ப்பை வழங்குகிறது. இதன் மூலம், நன்கு அனுபவம் வாய்ந்த தொழில் வல்லுநர்கள் குழுவின் மூலமான தொழில்நுட்ப இலவச ஆய்வுகளை தொழில்துறையாளர்களுக்கு பெற முடியும். இந்த ஆய்வுகள் தொழில்துறை உபகரணங்களின் சரியான பராமரிப்பு குறித்த அவசியமான வழிகாட்டல்களை வழங்கும். DIMO TECH தனது பொது பொறியியல் சேவைகளை மருத்துவமனைகள் மற்றும் ஹோட்டல்களுக்கு ஏற்கனவே விரிவுபடுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
MTU, Detroit Diesel, John Deere போன்ற உலகப் புகழ்பெற்ற பொறியியல் வர்த்தக நாமங்களைக் கையாள்வதில், 8 தசாப்தங்களுக்கு மேல் நிபுணத்துவம் பெற்ற DIMO, தொழில்துறையாளர்களுக்கு அவர்களின் திறனை அடைவதற்கும் அவர்களின் ஒட்டுமொத்த செயற்பாடு தொடர்பான செயன்முறைகளை வலுப்படுத்துவதற்கும் எப்போதும் உதவ தயாராக உள்ளது.
DIMO வின் பணிப்பாளர், விஜித பண்டார தெரிவிக்கையில், “பொது பொறியியல் (General Engineering) ஆனது, நாட்டின் தொழில் துறைகளை மேம்படுத்துவதிலும், அதன் மூலம் அனைத்து துறைகளின் உற்பத்தித்திறனை மேம்படுத்துவதிலும் ஒரு ஒருங்கிணைந்த பங்கை வகிக்கின்றது. எந்தவொரு வணிகமும் சீராக இயங்குவதை உறுதி செய்வதற்கு அதன் இயந்திரங்கள் மற்றும் உபகரணங்களின் சரியான பராமரிப்பு மற்றும் வழக்கமான பழுதுபார்ப்பு சேவைகள் ஆகியன முக்கிய அம்சங்களாகும். கொவிட் தொற்று காரணமாக சரிவுற்றுள்ள தற்போதைய வணிகச் சூழலை தொழில்துறையாளர்கள் வெற்றிகரமாக வழி நடாத்தும் வகையில், எமது தன்னிகரற்ற சேவைகளை மேலும் வலுப்படுத்துவதற்காக நாம் உறுதி கொண்டுள்ளோம்.” என்றார்
பயணக் கட்டுப்பாடுகளினால் செயற்பாடுகள் நிறுத்தப்பட்டமை காரணமாக, பெரும்பாலான வணிக நிறுவனங்களின் இயந்திரங்கள் மற்றும் உபகரணங்கள் நீண்ட காலத்திற்கு செயற்படாமல் இருந்தன. இயந்திரங்களின் மிருதுவான செயற்பாடு, அதிக உற்பத்தித் திறனுக்கு வழிவகுக்கும் என்பதுடன், அது பொருளாதார வளர்ச்சியை துரிதப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கின்றது. எனவே, இந்த இயந்திரங்களை செயற்படுத்த ஆரம்பிக்கும் முன், அவற்றிற்கு உரிய ஆய்வுகள் அவசியமென DIMO TECH உறுதியாக நம்புகிறது. இந்நடவடிக்கை மூலம் சாத்தியமான தொழில்நுட்ப பிழைகளை கண்டறிய உதவுவதுடன், தொற்றுநோய் காலப் பகுதியில் தொடர்ச்சியாக இயங்கிய வணிகங்களுக்கும், எந்த நேரத்திலும் இயந்திரம் திடீரென பழுதடைய வழிவகுக்காமல் இருப்பது தொடர்பான இயந்திரத்தின் தொழில்நுட்ப பிழைகளை அடையாளம் காணவும் முடியும்.
DIMO TECH ஆனது, இயந்திர உபகரணங்கள் மற்றும் கட்டடங்கள், கொதிகலன்கள் மற்றும் சூடாக்கும் தொகுதி (Boiler and Heating System) பராமரிப்பு, பம்பிகள், காற்றோட்ட அமைப்புகள் (Ventilation systems), நீராவி விசையாழி (Steam Turbine) அத்துடன் தேயிலை மற்றும் இறப்பர் உற்பத்தி இயந்திரங்களின் பராமரிப்பு மற்றும் பழுதுபார்த்தல் சேவைகளை வழங்குகிறது. இச்சேவைகளில் கப்பல் பழுது பார்த்தல், என்ஜின்கள் மற்றும் டீசல் மூலமான மின்பிறப்பாக்கிகள் பழுதுபார்த்தல் மற்றும் தொழிற்சாலை இயந்திர உபகரணங்களின் பழுதுபார்த்தல் மற்றும் பராமரிப்பு ஆகியனவும் அடங்குகின்றன. கப்பல் பழுதுபார்த்தலில், எந்தவொரு என்ஜின் வகையையும் மாற்றியமைக்கும் திறன்களையும், தேவையான உதிரிப் பாகங்களை சரியான நேரத்தில் வழங்கும் வசதியையும் நிறுவனம் கொண்டுள்ளது. குழுமத்தின் பொறியியல் வணிகப் பிரிவின் கீழ் பராமரிக்கப்படும் மற்றொரு முக்கியமான பிரிவே விமானப் பிரிவு ஆகும்.
– முற்றும் –
Caption:
தொழில்துறையாளர்களுக்கு அவர்களின் ஒட்டுமொத்த செயற்பாட்டு நடவடிக்கைகளையும் வலுப்படுத்தும் நடவடிக்கைகளுக்கு உதவும் DIMO