சுதேசி கொஹோம்ப ஆலோக பூஜா திட்டத்தின் கீழ் எசல பண்டிகையின் போது 5 முக்கிய வரலாற்று வழிபாட்டுத் தலங்களை ஒளியூட்டியது

Author
By Author
5 Min Read

‘கண்டி ஸ்ரீ விஷ்ணு மகா தேவாலயம், சப்ரகமுவ மஹா சமன் தேவாலயம், தெரணியகல சமன் தேவாலயம், லங்காதிலக ரஜ மஹா விகாரை, ரிதிகம ரிதி விகாரை

Swadeshi Industrial Works PLC நிறுவனம், மூலிகைகளிலான தனிநபர் பராமரிப்பு பொருட்கள் உற்பத்தியில் முன்னணியில் திகழும் நிறுவனமாகும். அது மீண்டும் எசல பண்டிகையின் போது, கண்டி ஸ்ரீ விஷ்ணு மஹா தேவாலயம், சப்ரகமுவ மஹா சமன் தேவாலயம், தெரணியகல சமன் தேவாலயம், லங்காதிலக ரஜ மஹா விகாரை மற்றும் ரிதிகம ரிதி விகாரை ஆகிய ஐந்து முக்கிய வரலாற்று வழிபாட்டுத் தலங்களை மின்னொளியூட்டி ஒளிரச் செய்துள்ளது. வருடாந்த ஏசலா திருவிழாவின் போது, ​​சுதேசி கொஹோம்ப ஆலோக பூஜா சத்காரய என்ற கருப்பொருளின் கீழ் ‘ஆலோக பூஜா’ (ஒளியூட்டும் பூஜை) மேற்கொள்ளப்பட்டது.

சுதேசி நிறுவனத்தின் தலைவி, திருமதி அமாரி விஜேவர்தன தெரிவிக்கையில், “முற்றிலும் இலங்கை நிறுவனம் எனும் வகையில், இவ்வாறான வருடாந்த ஒளியூட்டல் பூஜைகளை மேற்கோள்வன் மூலம், இலங்கையின் கலாசாரம் மற்றும் பாரம்பரியத்தை பாதுகாப்பதை நாம் கடமையாக கருதுகிறோம்.” என்றார்.

சுதேசியினால் நாட்டில் உள்ள வழிபாட்டுத் தலங்கள் வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றமையானது, அனைத்து வழிபாட்டாளர்களின் நலனுக்காக மாத்திரமன்றி நாட்டின் பாரம்பரியத்தை பாதுகாப்பதன் முக்கியத்துவத்தைப் பற்றி இளைய தலைமுறையினருக்கு விழிப்புணர்வூட்டுவதற்குமாகும் என அவர் சுட்டிக் காட்டினார். இந்த ஒளியூட்டும் நிகழ்வைத் தொடர்ந்து, கொவிட்-19 பாதுகாப்பு வழிகாட்டல்களைக் கடைப்பிடித்து, கண்கவர் கலாசார நிகழ்வும் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. இது இலங்கையின் மரபுகள் மற்றும் வரலாற்றை எடுத்துக்காட்டுவதாக அமைந்திருந்தது.

ஸ்ரீ மஹா விஷ்ணு தேவாலயம் கண்டியில் உள்ள நான்கு முக்கிய தேவாலயங்களில் ஒன்றாகும். இது அரச அரண்மனை (மஹா வாசல) மற்றும் புனித தந்த விகாரை (ஸ்ரீ தலதா மாளிகை) ஆகியவற்றுடன் நீண்ட தொடர்பைக் கொண்டுள்ளது. சபரகமுவ மஹா சமன் தேவாலயமானது, இலங்கை வரலாற்றில் 11 வருடங்களாக (கி.பி. 1581 முதல் கிபி 1592 வரை) புனித தந்தம் பாதுகாக்கப்பட்டு வந்த இடமாக திகழ்ந்தது. இது 13ஆம் நூற்றாண்டில் இரண்டாம் பராக்கிரமபாகு மன்னரின் ஆட்சியில் கட்டப்பட்டதாகும். தெரணியகல சமன் தேவாலயமானது புராதன வழிபாட்டுத் தலங்களில் ஒன்று என்பதுடன், அது இப்பிரதேசத்தின் ஒரு புதையலாக கருதப்படுகின்றது. இந்த தேவாலயத்தின் வரலாறு இரண்டாம் இராஜசிங்கனின் காலத்திற்குரியது.

லங்காதிலக ரஜா மஹா விகாரையின் வரலாறு, கம்பளை இராசதானிக்குரியதாகும். கி.பி. 1344 இல் 4ஆம் புவனேகபாகு மன்னரால் இவ்விகாரை கட்டப்பட்டது. இவ்விகாரை, ஆரம்பத்தில் நான்கு மாடிகளாக இருந்தது. தற்போது அதன் அடித்தளமும் முதல் தளத்தின் ஒரு பகுதியுமே காணப்படுகின்றது. சுதேசி கொஹோம்பவினால் ஒளிரூட்டப்பட்ட ரிதிகம ரிதி விகாரையின் வரலாறு மகாவம்சத்தின்படி, அநுராதபுர காலம் வரை நீண்டு செல்கின்றது. வரலாற்றிற்கு அமைய, அரசர் துட்டகைமுனுவின் காலத்தில் ருவன்வலி மஹா சாயவை உருவாக்க வெள்ளி எடுக்கப்பட்ட இடத்தின் நினைவாக ரிதி விஹாரை கட்டப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

புனித தந்த நினைவுச்சின்னம் வைக்கப்பட்டிருந்த வரலாற்று புகழ்பெற்ற தம்பதெனிய ரஜா மஹா விகாரையின் பழங்கால சுவரோவியங்கள் 2013ஆம் ஆண்டில், சுதேசியின் தலைவி திருமதி அமாரி விஜேவர்தனவால் புனர்நிர்மாணம் செய்யப்பட்டது.

1927இல் களனி ரஜ மஹா விகாரையின் புனரமைப்புப் பணியை ஆரம்பித்து வைத்த, ஹெலனா விஜேவர்தனவின் பேத்தியே திருமதி அமாரி விஜேவர்தன ஆவார்.

கதிர்காம கிரி வெஹெர, ருஹுணு மஹா கதிர்காம தேவாலயம், செல்லக் கதிர்காம தேவாலயம், தெவுந்தர உத்பலாவர்ண ஸ்ரீ விஷ்ணு மஹா தேவாலயம், அலுத்நுவர ஸ்ரீ தெடிமுண்ட மஹா தேவாலயம், அம்மாதுவ குடா கதரகம தேவாலயம், தம்பதெனிய ரஜ மஹா விகாரை, கொடகவெல சங்கபாலி ரஜ மகா விகாரை, கேரகல ரஜ மகா விகாரை ஆகியவற்றின் வருடாந்த ஆலோக பூஜைகளுக்கும், சுதேசி பங்களிப்பு செய்து வருகின்றது.

100% உள்ளூர் நிறுவனமான சுதேசி, இலங்கையிலுள்ள சமூகங்களுக்கான தேசத்தைக் கட்டியெழுப்புதல் மற்றும் சமூக பொறுப்புணர்வு திட்டங்களைத் தொடர்ந்தும் மேற்கொண்டு வருகிறது. சுதேசி கொஹோம்ப ஆனது, இயற்கை அன்னையை பராமரித்தல், கலாசார விழுமியங்களை மேம்படுத்துதல் போன்றவற்றில் கவனம் செலுத்தி, நிலைபேறான திட்டங்களை நிறைவேற்றுதற்காக தன்னை அர்ப்பணித்துள்ளது. மத தலங்கள் மற்றும் புகையிரத நிலையங்களுக்கு கை கழுவுவதற்கான தொகுதிகளை வழங்குதல் உள்ளிட்ட விடயங்கள், கொவிட்-19 தொற்று சூழ்நிலையில் சிறுவர்களை இலக்காகக் கொண்ட வீடியோ மூலமான கை கழுவுதல் படிமுறைகள், சுதேசி கொஹோம்ப பூமி பராமரிப்பு திட்டத்தின் கீழான வேம்பு மர நடுகை பிரசாரங்கள், இலங்கையில் வரட்சியான பகுதிகளில் உள்ள மக்களுக்கு நீர் தொட்டிகளை நன்கொடையாக வழங்குதல், கொஹோம்ப பேபி பராமரிப்பு பொருட்களை கர்ப்பிணித் தாய்மார்களுக்கு வழங்குதல், சிறந்த நற்குணங்களை எடுத்துரைக்கும் “ஹொந்த புருது” (சிறந்த பழக்க வழக்கங்கள்) எனும் புத்தகத்தின் மூலம் பாடசாலை மாணவர்களுக்கு விழிப்புணர்வூட்டும் நடவடிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை சுதேசி நிறுவனத்தின் சமூக மேம்பாட்டு முயற்சிகளாக குறிப்பிடலாம்.

இலங்கையிலுள்ள மூலிகையுடனான தனிநபர் பராமரிப்பு பிரிவில் முன்னோடியும், சந்தையின் முன்னணி நிறுவனமுமான Swadeshi Industrial Works PLC நிறுவனம் 1941 இல் கூட்டிணைக்கப்பட்டது. சுதேசி கொஹோம்ப, ராணி சந்தனம், சுதேசி கொஹோம்ப பேபி, லிட்டில் பிரின்சஸ், பேர்ல்வைட், லக் பார், சேஃப் ப்ளஸ், லேடி, பிளக் ஈகிள் பேர்ஃப்யூம் மற்றும் சுதேசி பொடி வொஷ் & ஷவர் ஜெல் ஆகியன சுதேசியின் முன்னணி தரக்குறியீடுகளில் உள்ளடங்குகின்றன. சுதேசியின் அனைத்து தயாரிப்புகளும் 100% தாவர ரீதியானது என்பதுடன் விலங்குகள் மீதான கொடுமைகளிலிருந்து அவை விடுபட்டதாக அமைந்துள்ளன. இது நிறுவனத்தின் முன்னோக்கு-சிந்தனை நடைமுறைகளுக்கும், நுகர்வோருக்கு நெறிமுறை ரீதியானதும் சூழல் நட்புரீதியானதுமான தெரிவுகளை மேற்கொள்ள உதவும் என நாம் எதிர்பார்க்கிறோம். நிறுவனம் எப்போதும் தனது தயாரிப்புகளின் ஆரோக்கியம் மற்றும் சூழல் தாக்கத்தை கருத்தில் கொண்டு, தொடர்ந்து முன்னுரிமையளிக்கிறது. அனைத்து சுதேசி தயாரிப்புகளும் இலங்கை சுகாதார அமைச்சின் தேசிய ஔடதங்கள் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபையின் (NMRA) கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளன. சுதேசி தயாரிப்புகளில் பயன்படுத்தப்படும் அனைத்து வாசனைத் திரவியங்களும் உலகளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட சர்வதேச வாசனை சங்கத்தினால் (IFRA) சான்றளிக்கப்பட்டுள்ளதுடன், அவை ISO 9001 – 2015 தரச் சான்றிதழின் அடிப்படையில் தயாரிக்கப்படுகின்றன.

இலங்கையின் முதற்தர மூலிகை சவர்க்கார தரக்குறியீடான கொஹோம்ப ஹேர்பல் மற்றும் பாரம்பரிய அழகு சவர்க்கார தரக்குறியீடான ராணி சந்தனத்தையும் சுதேசி தயாரித்து விற்பனை செய்கிறது.

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *