தாய்லாந்து மற்றும் ஆசிய பசிபிக்கில் பொருளாதாரத்தை இயக்குவதில் டிஜிட்டல் புத்தாக்கங்களின் பங்கை ஆராய Bangkok Post மற்றும் ASEAN Foundation உடன் இணைந்துள்ள HUAWEI

Author
By Author
3 Min Read

Huawei Technologies (Thailand) Co., Ltd., Bangkok Post Public Company, ASEAN Foundation மற்றும் தாய்லாந்து முழுவதிலுமிருந்து 50 இற்கும் மேற்பட்ட ICT தொழில்துறை பங்குதாரர்கள் இணைந்து, நவம்பர் 17-19, 2021 வரை பாங்காக்கில் இடம்பெறும் “POWERING DIGITAL THAILAND 2022: HUAWEI CLOUD & CONNECT and ASIA PACIFIC INNOVATION DAY” நிகழ்விற்காக ஒன்றிணைந்துள்ளன.

டிஜிட்டல் தொழில்நுட்பங்கள் எவ்வாறு புதிய ஆற்றல்கள், சந்தைகள், வணிக மாதிரிகளுக்கு வழியேற்படுத்த முடியும் என்பதையும், தாய்லாந்து மற்றும் ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் கொவிட் தொற்றுக்குப் பின்னரான பொருளாதார மீட்சிக்கு ஆதரவளிப்பதையும் இந்நிகழ்வு நோக்கமாகக் கொண்டுள்ளதுடன் நாட்டில் Huawei இன் நம்பிக்கையையும் உறுதிப்படுத்துகிறது. முதலீடு மற்றும் அதன் உள்ளூர் கூட்டாளர்களின் தொகுதி மூலம் டிஜிட்டல் யுகத்திற்கு ASEAN ஐ வழிநடாத்துவதற்கான அதன் தயார்நிலையை விளக்குவது தொடர்பில், மூன்று நாள் நிகழ்வொன்றையும் Huawei ஏற்படுத்தியுள்ளது. அத்துடன், டிஜிட்டல் மாற்றம் மூலம் அனைத்து தொழில்துறைகளிலும், குறிப்பாக தாய்லாந்தின் விவசாயம், உற்பத்தி மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறைகளில் Cloud, 5G, AI, Digital Power  போன்ற தொழில்நுட்பங்களின் நடைமுறைப் பயன்பாட்டை இந்நிகழ்வு முழுமையாக ஆராய்கிறது.

Huawei Rotating Chairman, Guo Ping, இந்நிகழ்வின் தொடக்க உரையை நிகழ்த்தினார், இதன்போது அவர் கொவிட்-19 தொற்றானது, ஆசியா பசிபிக்கில் டிஜிட்டல் மாற்றத்தை எவ்வாறு துரிதப்படுத்தியுள்ளது என்பதையும், தொற்றுநோய்க்குப் பிந்தைய பொருளாதார மீட்சி மற்றும் பிராந்தியத்தில் டிஜிட்டல் பொருளாதார வளர்ச்சி தொடர்பில் தனது வலுவான நம்பிக்கையை வெளிப்படுத்தினார். “டிஜிட்டல் தொழில்நுட்பம், குறிப்பாக 5G, cloud, AI ஆகியன நிச்சயமாக பல நாடுகளிலும் பொருளாதார மீட்சி மற்றும் மீளெழுச்சிக்காக தூணாக மாறும்” என்று அவர் வலியுறுத்தினார்.

POWERING DIGITAL THAILAND 2022 நிகழ்வானது, விவசாயம், உற்பத்தி, ஸ்மார்ட் சக்தி போன்ற தொழில்துறைகளுக்கு அவசியமான முக்கிய தொழில்நுட்பங்கள் மற்றும் புத்தாக்கங்களை காண்பிக்கிறது. இவற்றை தாய்லாந்து வணிக நிறுவனங்கள் எளிதாகப் பயன்படுத்தலாம். Cloud Tractor Training பயிற்சியை கண்காட்சியொன்று காண்பிக்கிறது. இங்கு பார்வையாளர்கள் குறைந்த நேரத் தாமதம் (low latency) அடிப்படையிலான 5G தொழில்நுட்பம் மற்றும் cloud rendering server மூலம் இயக்கப்படும் ட்ராக்டர் பயிற்சி வகுப்பை அனுபவிக்க முடியும். இந்த புத்தாக்க கண்டுபிடிப்பை தாய்லாந்து விவசாயிகள் தங்கள் விவசாய உற்பத்திகளை மேம்படுத்தவும் விவசாயத்தை முன்னேற்றம் பயன்படுத்தலாம்.

பசுமை, குறைந்த கார்பன், திறந்த சுற்றுச்சூழலை எவ்வாறு உருவாக்குவது என்பதில் மூன்று பகுதிகளைக் கொண்ட, ஊக்கமளிக்கும் வணிக நிகழ்வுகள் மற்றும் டிஜிட்டல் மாற்றம் தொடர்பான தீர்வுகளையும் இந்நிகழ்வு சிறப்பித்துக் காட்டுகிறது. இவற்றில் முதன்மையானது, ‘Redefine Infrastructure’ (உட்கட்டமைப்பை மீள் மறுவரையறை செய்தல்)  ஆகும். இது 5G, cloud, AI தொழில்நுட்பங்கள் எவ்வாறு புதிய பெறுமதியை ஏற்படுத்துவதற்காக அனைத்து தொழில்துறைகளையும் ஒன்றிணைக்க முடியும் என்பதைக் காட்டுகிறது. இரண்டாவது பகுதியானது, ஸ்மார்ட் போக்குவரத்து, ஸ்மார்ட் கெம்பஸ் மற்றும் ஸ்மார்ட் ஃபைனான்ஸ் உள்ளிட்ட ‘Industry Digital Transformation’ (தொழில்துறை டிஜிட்டல் மாற்றம்) தொடர்பில் கவனம் செலுத்துகிறது. இறுதியாக, மூன்றாவது பகுதியானது, புத்திசாலித்தனமான சகாப்தத்திற்கான வளமான சுற்றுச்சூழல் தொகுதியை உருவாக்க Huawei உடன் இணைந்து செயல்படும் முக்கிய உலகளாவிய பங்காளிகள் மற்றும் வணிகங்கள் தொடர்பில் வெளிப்படுத்துகிறது.

‘POWERING DIGITAL THAILAND 2022: HUAWEI CLOUD & CONNECT and ASIA PACIFIC INNOVATION DAY’ பற்றிய மேலதிக தகவலுக்கு :

https://activity.huaweicloud.com/intl/en-us/HCCThailand2022.html

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *