Tamil

‘Just Like Mom’ சமையல் சம்பியனுக்கு மகுடம் சூட்டிய சிங்கர்

சிங்கரினால் இவ்வருடம் அன்னையர் தினத்திற்காக ஆரம்பிக்கப்பட்ட ‘Just Like Mom’ (அம்மாவைப் போலவே) ஊக்குவிப்பு பிரசார நிகழ்வின் இரண்டாம் கட்ட சமையல் போட்டியின் இறுதிப் போட்டி சமீபத்தில் நிறைவடைந்திருந்தது. சமையல் போட்டியின் பங்கேற்பாளர்களில், Labu Kola Pirawuma (பூசணி இலை கூட்டு) எனும் உணவைத் தயாரித்த சச்சினி நுவரபக்ஷ சம்பியனாக தெரிவு செய்யப்பட்டு, பெறுமதியான தங்க நாணயத்தைப் பரிசாகப் பெற்றார். ‘Just Like Mom’ பிரசாரமானது, தாய்மார்கள் சமைக்கும் உணவுகளில் தங்களுக்குப் பிடித்த உணவுகளை தனியாக தயாரித்து, தங்கள் தாய்மார்களுக்கு அன்புடன் பரிமாறும் மறக்க முடியாத அனுபவத்தை வழங்குவதற்காக, நாடு முழுவதும் உள்ள இளைஞர், யுவதிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

சிங்கர் நிறுவனத்தின் சந்தைப்படுத்தல் பணிப்பாளர் ஷனில் பெரேரா இது தொடர்பில் தெரிவிக்கையில், “நுகர்வோர் கொள்வனவு பொருட்கள் மற்றும் உபகரணங்களின் சந்தையில் முன்னணியில் உள்ள நாம், எமது தயாரிப்புகளை சந்தைப்படுத்துதல் மற்றும் விற்பனை செய்தல் என்பவற்றிற்கு அப்பால், எமது நுகர்வோருடன் தொடர்பைப் பேண வேண்டியதன் அவசியத்தை உணர்ந்துள்ளோம். அந்த வகையில் இவ்வருடம் நாம் நடாத்திய அன்னையர் தின நிகழ்வின் ஒரு அங்கமாக, நாம் இளைஞர், யுவதிகளை அணுகி, தனித்துவம் வாய்ந்த சமையல் அனுபவத்தை உருவாக்கவும், அவர்களின் தாய்மாருக்காக சமைக்க அவர்களுக்கு வாய்ப்பளிக்கவுமான சந்தர்ப்பத்தை வழங்கினோம். சமையல் என வரும்போது குடும்பங்களில் அன்பைப் பரிமாறும் தருணங்களை ஊக்குவிப்பதும் அதன் மூலம் பிணைப்பை ஏற்படுத்துவதுமே எமது இலக்காக இருந்தது.

இந்த சமையல் போட்டி சவாலில் பங்கேற்கும் போட்டியாளர்கள், மூன்று புகைப்படங்களைப் பகிர வேண்டும்; ஒன்று அவர்களது சமையலுக்கான மூலப்பொருட்களின் புகைப்படம், இரண்டாவது அதனை தயாரிக்கும் போதான புகைப்படம், மூன்றாவது இறுதி உணவின் புகைப்படம். இப்புடைகப்படங்களை அவர்கள் தங்கள் Facebook அல்லது Instagram கணக்குகளில் வெளியிட வேண்டும் என்பதுடன், #justlikemom எனும் ஹேஷ்டேக்குடன் SINGER Sri Lanka சமூக வலைத்தள பக்கங்களின் பெயர்களையும் அதில் tag செய்ய வேண்டும். இறுதியாக, அவர்களின் post இன் ஸ்கிரீன்ஷாட்டை எடுத்து, அவர்கள் தயாரித்த உணவின் பெயர், அதன் விபரத்துடன், அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய விபரங்களுடன் சிங்கர் பேஸ்புக் அல்லது இன்ஸ்டாகிராம் பக்கத்திற்கு அவற்றை இன்பாக்ஸ் செய்ய வேண்டும்

‘Just Like Mom’ போட்டிக்காக வெவ்வேறு வயதுகளுடைய, 200 இற்கும் மேற்பட்ட ஆண், பெண் இருபாலரினதும் விண்ணப்பங்கள் கிடைத்திருந்தன. இதில் ஐந்து இறுதிப் போட்டியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டதோடு, அவர்கள் நேரடியான சமையலில் பங்கேற்று, இறுதி வெற்றியாளர் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர் சம்பியனாக தெரிவு செய்யப்பட்டார். மாபெரும் பரிசு தவிர்ந்த, இறுதிப் போட்டி வரை பங்குபற்றிய ஏனைய நான்கு போட்டியாளருக்கும் தலா ரூ. 20,000 பெறுமதியான SINGER வவுச்சர்களும் வழங்கப்பட்டன.

இலங்கையின் மூன்று சிறந்த சமையல் நிபுணர்களான, அனோமாஸ் கிச்சனின் ஸ்தாபகரான அனோமா விஜேதுங்க, இலங்கையின் பிரபல சமையல் நிபுணரான துஷாந்தி மதநாயக்க, உணவு தொடர்பான விமர்சனங்களை (review) வழங்குபவரும், ‘Peckish Me’ எனும் உணவு தொடர்பான இணையத்தளத்தின் ஆசிரியருமான ஜயனி சேனாநாயக்க ஆகியோர் நடுவர்களாக இருந்தனர். நடுவர்கள் இப்போட்டியின் போதான சவாலை கணிப்பீடு செய்தது மட்டுமல்லாமல், பங்கேற்பாளர்களுடன் தாங்கள் பெற்ற அனுபவத்தின் மூலமான விடயங்களையும் பகிர்ந்து கொண்டனர். இப்பிரசார நடவடிக்கைகள் யாவும் சமூக ஊடக பிரபலங்களான தனு, லோச்சி, மாஷி சிறிவர்தன ஆகியோரால் ஊக்குவிக்கப்பட்டன.

அத்துடன் இது, சமையலறை மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் தொடர்பில் “Happiness is Home Made” எனும் எண்ணக்கருவை கொண்டுள்ள சிங்கர் நிறுவனத்தால் ஆரம்பிக்கப்பட்ட ஒரு வெற்றிகரமான பிரசார நடவடிக்கையாகும்.

Share

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *