இவ்வருடத்தின் வழிகாட்டல் வழங்குநராக Study Group தெரிவாகியுள்ளதால் பாராட்டு மழை பொழிகிறது

Author
By Author
3 Min Read

முன்னணி கல்வி வழங்குநரான Study Group, மீண்டும் ஆண்டின் சிறந்த வழிகாட்டல் வழங்குநர் (Pathway Provider) என, உலகளாவிய கல்வி முதலீட்டாளர் விருது விழாவில் பெயரிடப்பட்டுள்ளது.

Study Group ஆனது, ஒரு முன்னணி உலகளாவிய கல்வி வழங்குனர் என்பதுடன், அதன் ஒன்லைன் கல்வி நிபுணத்துவ தளமான Insendi ஆகிய இரண்டும் Education Investor’s Pathway நிறுவனம் மற்றும் Education Software Provider விருதுகளுக்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. இவ்விருதுகள், வணிக ரீதியான கல்வி வழங்குநர்களிடையே சிறந்த சாதனையாளர்களை அங்கீகரிக்கும் வகையில் வழங்கப்படுகின்றன.

பல்கலைக்கழகப் பங்காளிகள் மற்றும் மாணவர்களின் தேவைகள் தொடர்பிலான StudyGroup யின் சிறந்த வினைத்திறனானது, ஆண்டின் மதிப்புமிக்க வழிகாட்டல் நிறுவனப் பிரிவில் முதலிடத்தைப் பெறுவதற்கு உதவியுள்ளது.

இவ்விருது தொடர்பில் தனது கருத்தை பதிவிட்ட பிரதான நிறைவேற்று அதிகாரி Emma Lancaster, “உலகளாவிய ரீதியில் சர்வதேச கல்விக்கு மிகவும் சவாலான நேரத்தில், Study Group யின் சாதனையை Education Investor அங்கீகரித்துள்ளமை தொடர்பில் நாம் மகிழ்ச்சியடைகிறோம். கொவிட் தொற்று மற்றும் அதனுடன் தொடர்புடைய பயணக் கட்டுப்பாடுகளின் தாக்கம், உலகளவில் கல்வி தொடர்பில் நாம் எவ்வாறு சிந்திக்கிறோம் மற்றும் அதனை எவ்வாறு வழங்குகிறோம் என்பதில் நாம் எவ்வாறு விரைவான வளர்ச்சியைக் காண்பிக்கிறோம் என்பதில் தங்கியிருக்கிறது, ஆயினும் எனது சகாக்கள் இந்த சவாலை மிகவும் ஈர்க்கக்கூடிய வகையில் மேற்கொண்டுள்ளமை தொடர்பில் நான் மிகவும் பெருமைப்படுகிறேன்." என்றார்.

“மாணவர்கள் மற்றும் எமது பல்கலைக்கழக பங்காளிகளின் தேவைகளை முன்னிறுத்தி, உயர்தர, தனிப்பயனாக்கப்பட்ட மற்றும் கலப்பு கற்றலை வழங்குவதற்கான எமது மூலோபாயத்தை நாம் தொடர்கிறோம். கொவிட்-19 இற்கு அப்பால் சர்வதேசக் கல்வியின் ஒருங்கிணைந்த அம்சமாக காணப்படும், கற்றல், கற்பித்தல், மதிப்பீடு மற்றும் கல்வி ஒத்துழைப்பு ஆகியவற்றின் புதிய மாதிரிகளையும் நாம் உள்நாட்டில் உருவாக்கியுள்ளோம். அந்த வகையில் கற்றல் மற்றும் புத்தாக்கத்தை ஊக்குவிக்கும் வாய்ப்பாக இந்த சோதனையிடும் காலத்தை நாம் பயன்படுத்தியுள்ளோம்.”

கல்வி முதலீட்டாளர் விருதினால் அங்கீகரிக்கப்பட்ட கல்வியியல் தொடர்பான பல்வேறு கண்டுபிடிப்புகள் உள்ளடங்குகின்றன:

  • வணிகம், பொறியியல் மற்றும் மருத்துவம் போன்ற முக்கிய துறைகளில் உயர்கல்வி முன்னாயத்தம், கற்றல் திறன் மற்றும் கல்விசார் ஆங்கில மொழி போன்றவற்றின் புதிய மேம்படுத்தப்பட்ட, கலப்பு மற்றும் டிஜிட்டல் திட்டங்கள்.
  • எமது Insendi EdTech நிபுணர்கள் மூலம், ஒக்ஸ்பேர்ட் பல்கலைக்கழகம், ஜோன் ஹொப்கின்ஸ் பல்கலைக்கழகம், ETH சூரிச் மற்றும் இம்பீரியல் கல்லூரி போன்ற உயர்தர மற்றும் நிர்வாகக் கல்விக்கான பெஸ்போக் டிஜிட்டல் திட்டங்களை இணைந்து உருவாக்குதல்.
  • ஒருங்கிணைந்த கற்றல் அனுபவத்தை மேம்படுத்த, WeWork மற்றும் Airbnb போன்ற பல்வேறு ஊடகங்களைப் பயன்படுத்தி, சீனா போன்ற முக்கிய நாடுகளில் சர்வதேச மாணவர்களின் ஆட்சேர்ப்பு மூலத்திற்கான சந்தைகளில் தொலைதூர வழியிலான விநியோகம்.
  • பல்கலைக்கழகங்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வது தொடர்பில் விரைவான செயலாக்கத்துடன் புதிய கூட்டாண்மைகளை உருவாக்குதல்.
  • அதிகரித்த, போட்டி நிறைந்த தொழில் சந்தையில் தனித்து நிற்பதற்கு தொழில்சார் திறன்கள் மற்றும் அனுபவத்துடன் கற்பவர்களுக்கு வாய்பை ஏற்படுத்துவதற்கான புதிய வேலைவாய்ப்பு கட்டமைப்பை முன்னோடியாக மேற்கொள்ளல்.

Study Group யின் ஒன்லைன் நிபுணத்துவரான insendi ஆனது, தொற்றுநோய்களின் போது உயர்ந்த மற்றும் மாற்றத்திற்கு உட்படுத்தத் தக்க கற்றல் அனுபவங்களை வழங்குவதற்காகவும், பல்கலைக்கழகங்களின் டிஜிட்டல் அபிலாஷைகளை ஆதரிப்பதற்காகவும், ஒவ்வொரு கூட்டாளருக்கும் பொருத்தமான, ஆதரவான அணுகுமுறையை வழங்குவதற்காகவும் கல்வி மென்பொருள் வழங்குநர் பிரிவில் இறுதிப் போட்டியாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

Study Group பற்றி

Study Group ஆனது, உலகளாவிய மாணவர்களின் முன்னணி கல்வி வழங்குனர் என்பதுடன், இதன் நோக்கம் சர்வதேச கல்வியின் முன்னணி வழங்குநராக மாறுவது மற்றும் அதன் மாணவர்கள் மற்றும் பங்காளிகளுக்கு வெற்றியை அடைய உதவுவதாகும். கல்வியின் மூலம் ஒரு சிறந்த உலகத்தை உருவாக்குவதற்கான பரஸ்பர நோக்கத்தால் அது ஈர்க்கப்படுகிறது. கொவிட் தொற்றுநோய்க்கு மத்தியில், Study Group ஆனது, 34 பல்கலைக்கழக கூட்டாளர்களுடன் உரிய முறையில் செயற்பட்டு, மாணவர்கள் இளங்கலை மற்றும் முதுகலை பட்டத்தில் முன்னேற உதவியது. அவர்களின் முதன்மையான உள்ளக டிஜிட்டல் கற்றல் வல்லுநரான Insendi, சிறந்த நிர்வாக மற்றும் மருத்துவக் கல்வியை வழங்குவதற்காக உலகெங்கிலும் உள்ள பல முன்னணி பல்கலைக்கழகங்களுடன் இணைந்து பணியாற்றுவதால், அது அவர்களின் திட்டத்தின் ஒருங்கிணைந்த பகுதியாகும். Insendi யின் EdTech நிபுணத்துவம், சிறந்த, மிகவும் சக்திவாய்ந்த டிஜிட்டல் கருவிகளைக் கொண்டு மாணவர்களுக்கு மாற்றத்திற்கு உட்படுத்தத் தக்க அனுபவமிக்க, உள்ளுணர்வு மற்றும் அணுகக்கூடிய ஒன்லைன் கற்றல் அனுபவங்களை வழங்க Study Group யினை செயற்படுத்துகின்றது.

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *