
லங்கா ப்ரீமியர் லீக் (LPLT20) ரி20 போட்டியின் 2021/22 தொடருக்கான உத்தியோகபூர்வ (Hygiene Parnter) தூய்மைப் பங்காளியாக Dettol இனை இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவு செய்துள்ளது. 2018இல் ஆரம்பிக்கப்பட்ட இந்த வருடாந்த கிரிக்கெட் லீக் தொடரின் ஆரம்ப பதிப்பு 2020இல் விளையாடப்பட்டது. இதில் ஜப்னா ஸ்டாலியன்ஸ் அணி வெற்றி பெற்றது. கிருமி கொல்லிகள் மற்றும் தொற்றுநீக்கி வகைகளில் உலகளாவிய ரீதியில் முன்னணியில் உள்ள Dettol, உலகளாவிய ரீதியில் புகழ்பெற்ற நுகர்வோர் கொள்வனவு பொருட்கள் குழுமமான Reckitt தரக்குறயீட்டைச் சேர்ந்ததாகும். Dettol ஆனது, சவர்க்காரம், கை கழுவும் திரவம், சுத்திகரிப்பான்கள், மேற்பரப்பு சுத்தம் செய்யும் திரவங்கள் உள்ளிட்ட பல்வேறு தனிநபர் மற்றும் வீட்டுப் பராமரிப்புப் பொருட்கள் உள்ளிட்ட தயாரிப்புகளின் விரிவான தயாரிப்பு வகைகளைக் கொண்டுள்ளது.
இந்த கூட்டாண்மையானது, நாடு முழுவதும் உள்ள அனைத்து விளையாட்டு இரசிகர்களையும் பாதுகாப்பான மற்றும் சுகாதாரமான சூழலில் ஒன்றிணைக்க உதவும். இலங்கை மக்கள் மத்தியில் நன்கு அறியப்பட்ட மற்றும் அனைத்து வகையான பராமரிப்பு மற்றும் பாதுகாப்பை வழங்கும் வர்த்தக நாமமாக Dettol அறியப்படுகிறது. LPL இன் தற்போது இடம்பெற்று வரும் இரண்டாவது பதிப்பின் போது அதன் வெற்றிகரமான பயணத்தை உறுதி செய்வதற்காக, சுகாதார வழிகாட்டல்களை கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டியதன் அவசியத்தை இந்த கூட்டாண்மை வலியுறுத்துகிறது.
Reckitt Benckiser Lanka Limited நிறுவனத்தின் சந்தைப்படுத்தல் பிரிவின் தலைவர் ஷமிந்த பெரேரா இது குறித்து தனது கருத்தை பகிர்ந்து கொள்கையில், “LPLT20 தொடருக்கான உத்தியோகபூர்வ தூய்மைப் பங்காளியாக தெரிவு செய்யப்பட்டமையானது, எமக்கு உண்மையிலேயே ஒரு முக்கியமான வாய்ப்பாகும். நம்பர் 01 கிருமிநீக்கும் தரக்குறியீடு எனும் வகையில், எதிர்கால விளையாட்டு நிகழ்வுகளுக்கும் எமது முழு ஆதரவை வழங்க நாம் எதிர்பார்க்கிறோம்.” என்றார்.
LPL இன் வெற்றியை தீர்மானிக்கும் முக்கிய காரணிகளில் ஒன்று, பார்வையாளர்கள் மற்றும் வீரர்களின் மகிழ்ச்சியாகும். இந்த கூட்டாண்மை மூலம் அனைத்து இரசிகர்களும் வீரர்களும் ஒரே மாதிரியான பாதுகாப்பான மற்றும் தூய்மையான முறையில் செயலாற்ற முடியும் என்பது உறுதி செய்யப்படுகின்றது.
கிரிக்கெட் விளையாட்டு நீண்ட காலமாக இலங்கையர்களின் விருப்பமான பொழுதுபோக்குகளில் ஒன்றாக இருந்து வருகிறது. தற்போதைய கொவிட் தொற்றுநோய் நிலைமைகளின் அடிப்படையில், வீரர்கள், அதிகாரிகள், பார்வையாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்வது மிக முக்கியமானது. இந்தக் காரணத்திற்காக, போட்டி மற்றும் அது தொடர்பான அனைத்து மைதான நடவடிக்கைகளும் கடுமையான சுகாதார மற்றும் பாதுகாப்பு வழிகாட்டல்கள் மற்றும் நெறிமுறைகளின் கீழ் மேற்கொள்ளப்படும்.
LPL இன் அமைப்பாளர்கள், சம்பந்தப்பட்ட அனைவரின் பாதுகாப்பையும் உறுதிப்படுத்தும் வகையில், அதனை மேற்பார்வையிட ஒரு சிறந்த மருத்துவக் குழுவை ஒன்றிணைத்துள்ளனர். இந்தப் பணியை வெற்றிகரமாகச் செய்வதற்கு, மருத்துவக் குழுவிற்கு மிகச் சிறந்த ஆதரவு தேவைப்படுகின்றது. மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் விடயத்தில் மிகவும் நம்பகமான தரக்குறியீடு எனும் வகையில் Dettol இப்பணியில் இணைந்துள்ளது.
Reckitt Benckiser Lanka Limited இன் தூய்மைப் பிரிவின் தயாரிப்பு குழு முகாமையாளர் சத்துரிகா பொன்சேகா, இது குறித்து தெரிவிக்கையில், “தற்போது இடம்பெற்று வரும் LPLT20 போட்டிக்கான உத்தியோகபூர்வ தூய்மைப் பங்காளியாக எம்மை தெரிவு செய்தமைக்காக SLC மற்றும் LPLT20 அதிகாரிகளுக்கு நாம் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம். பார்வையாளர்கள் நுழைகின்ற அனைத்து நுழைவாயில்களிலும் பார்வையாளர்களுக்காக, 20 இற்கும் மேற்பட்ட கைகழுவல் தொகுதிகளை நாம் வைத்துள்ளதோடு, வீரர்களின் ஓய்வறை, பார்வையிடல் அரங்கு, வர்ணனைக் கூடம், தெரிவு செய்யப்பட்ட பொதுமக்கள் பார்வையிடும் பகுதிகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் கிருமிநீக்கும் தொகுதிகளை நிறுவியுள்ளோம். அனைத்து நடுவர்களுக்கும் தனிப்பட்ட துடைப்பான்கள் மற்றும் தனிப்பட்ட கிருமிநீக்கிகளை போட்டித் தொடர் முழுவதும் Dettol விநியோகிக்கின்றது.
LPLT20 போட்டிக்கான உத்தியோகபூர்வ தூய்மைப் பங்காளியாக Dettol தேர்ந்தெடுக்கப்பட்டமை மூலம், அதன் தயாரிப்பு வகைகள் மிகவும் நன்கு அறியப்பட்டதாலும், உள்நாட்டிலும் உலக அளவிலும் தூய்மைப்படுத்தல் பிரிவில் முன்னணியில் இருப்பதாலும் குறிப்பிடும்படியான உறுதியை அது வழங்குவது வெளிகாட்டப்படுகிறது.