கொஹோம்ப சவர்க்காரம் உற்பத்தி செய்து விநியோகித்தமைக்கு எதிராக ReeBonn Lanka மற்றும் Lanka Sathosa நிறுவனங்களுக்கு எதிராக 2ஆவது தடவையாக தடையுத்தரவு

Author
By Author
3 Min Read

எட்டு தசாப்தங்களாக சுதேசி கொஹோம்ப உற்பத்தியாளராக விளங்கும் சுதேசி Swadeshi Industrial Works PLC ஆனது, ‘சதொச கொஹோம்ப’ சவர்க்காரம் தொடர்பாக பல்வேறு நீதிமன்ற தடையுத்தரவுகளைப் பெற்றுள்ளது. சுதேசி கொஹோம்பவின் புலமைச் சொத்து உரிமை களை இரண்டாவது தடவையாக மீறியதற்காக, அதனை தயாரித்த ரீபோன் லங்கா பிரைவேட் லிமிடெட், (Reebonn Lanka Pvt Ltd) அதனை விநியோகித்த லங்கா சதொச லிமிடெட் ஆகிய நிறுவனங்களுக்கு எதிராக, கடந்த 2021 டிசம்பர் 15ஆம் திகதி கொழும்பு வர்த்தக மேல் நீதிமன்ற நீதிபதி எம்.ஏ.ஆர். மரிக்காரினால் இத்தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சுதேசிக்கு உரித்துடைய, பதிவு செய்யப்பட்ட வர்த்தகநாமம் தொடர்பான விதிமுறைகளை மீறி, ‘சதொச கொஹோம்ப’ தயாரிப்பை, சந்தைப்படுத்தல் மற்றும் விற்பனை செய்ததன் அடிப்படையிலும், நியாயமற்ற போட்டிச் சட்டத்தின் அடிப்படையிலும், லங்கா சதொச மற்றும் ரீபோன் லங்கா ஆகிய நிறுவனங்களுக்கு எதிராக சுதேசி நடவடிக்கை எடுத்துள்ளது.

சுதேசி சார்பில் மன்றில் முன்னிலையான, ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வாவின் சமர்ப்பணங்கள் தொடர்பில் திருப்தியடைந்த கொழும்பு வர்த்தக மேல் நீதிமன்ற நீதிபதி எம்.ஏ. மரிக்கார், ரீபோன் லங்கா மற்றும் லங்கா சதொச ஆகியன “சுதேசி கொஹோம்ப” உடன் ஒத்த அல்லது அது போன்ற அதன் தனிநபர் பராமரிப்பு தயாரிப்பை, எந்த வகையிலும் அல்லது முறையிலும் உற்பத்தி, விநியோகம், விற்பனை ஆகியவற்றை மேற்கொள்வதை தடுப்பது உள்ளிட்ட பல உத்தரவுகளை பிறப்பித்தார்.

சுதேசி கொஹோம்ப ஆனது ஒரு பதிவு செய்யப்பட்ட வர்த்தக நாமம் என்பதுடன், இது 80 ஆண்டுகளுக்கும் மேலாக பொதுமக்கள் மத்தியில் மிகப்பெரிய நற்பெயரையும் நன்மதிப்பையும் பெற்றுள்ளது. சுதேசி கொஹோம்பவில் பல தலைமுறைகளாக ஆயுர்வேத மூலிகை சிகிச்சைக்காக பயன்படுத்தப்பட்டு வரும், இயற்கையான வேம்பு எண்ணெய் உள்ளது. சுதேசி கொஹோம்ப, சருமத்தின் இயற்கை அழகை மேம்படுத்துவதுடன், சருமத்திற்கு மிருதுவானதாக இருந்த போதிலும், ஆழமாக சுத்தம் செய்வதுடன், கிருமிகளிலிருந்து இயற்கையான பாதுகாப்பை அளிக்கிறது. சுதேசியினால் தயாரிக்கப்படும் அனைத்துப் பொருட்களும் 100% தாவர ரீதியானது என்பதுடன் விலங்குகள் மீதான கொடுமைகளிலிருந்து அவை விடுபட்டதாக அமைந்துள்ளன. அண்மையில் சுதேசி கொஹோம்ப இங்கிலாந்தின் Vegetarian Society, UK யினது அங்கீகாரத்தையும் பெற்றுள்ளது. சுதேசி கொஹோம்ப தயாரிப்புகளில், herbal beauty bar, herbal transparent bar, herbal baby care range, herbal shampoo herbal body wash, herbal handwash, herbal hand sanitizer herbal talc ஆகியன உள்ளடங்குகின்றன. அத்துடன், சுதேசி கொஹோம்ப ஆனது, தேசிய ஒளடதங்கள் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபையில் (NMRA)  பதிவு செய்யப்பட்ட தயாரிப்பாகும்.

100% இலங்கை நிறுவனமான சுதேசி, அண்மையில் கொவிட்-19 பாதுகாப்பு முகாமைத்துவம் தொடர்பான சான்றிதழ் உட்பட தொழில்துறை ரீதியிலான பல்வேறு முதன் முறையான விடயங்களை உரிமை கொண்டுள்ளது. இலங்கையில் உள்ள மூலிகை சவர்க்காரம் மற்றும் தனிநபர் மூலிகை பராமரிப்பு பிரிவில் முன்னோடியானதும் சந்தையில் முன்னிலையில் உள்ளதுமான Swadeshi Industrial Works PLC ஆனது, ISO 9001: 2015 சான்றளிக்கப்பட்ட நிறுவனம் என்பதுடன் 1941 ஆம் ஆண்டில் அது கூட்டிணைக்கப்பட்டுள்ளது. சுதேசியின், சுதேஷி கொஹோம்ப, ராணி சந்தனம், சுதேசி கொஹோம்ப பேபி சவர்க்காரங்கள் ஆகிய மூலிகை தனிநபர் பராமரிப்பு தயாரிப்புகள், பல ஆண்டுகளாக இலங்கையர்களின் வரவேற்பைப் பெற்று, நம்பிக்கையையும் வென்றவையாகும். இந்நிறுவனம் 80 ஆண்டுகளைக் கொண்ட உயர்ந்த வரலாற்றைக் கொண்டுள்ளதுடன், தற்போது அதன் நம்பகமான விசேட அம்சங்களின் மூலம் அது உலகளாவிய சந்தைகளில் தற்போது இடம்பிடித்துள்ளது.

இவ்வழக்கில் Swadeshi Industrial Works PLC சார்பாக ஜனாதிபதி சட்டத்தரணிகளான ரொமேஷ் டி சில்வா, ஷானக குரே, வசந்தகுமார் நைல்ஸ் ஆகியோர் முன்னிலையாகியிருந்ததோடு, D.L & F De Saram – சட்டத்தரணிகள் மற்றும் நொத்தாரிசுகளால் அறிவுறுத்தப்பட்டது.

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *