Tamil

நெதர்லாந்தின் FMO யிடமிருந்து நீண்ட கால நிதி வசதிகளுக்காக 10 மில். டொலரை பெற்றுள்ள Alliance Finance

இலங்கையின் மிகப் பழமையான நிதி நிறுவனமான அலையன்ஸ் பினான்ஸ் கம்பனி பிஎல்சி (Alliance Finance Company PLC – AFC), MSME வணிகத்தின் வளர்ந்து வரும் பிரிவுகளை விரிவுபடுத்துவதற்காக நீண்ட கால அடிப்படையிலான 10 மில்லியன் டொலர் நிதியளிப்பு வசதியின் ஒரு பகுதியாக, டச்சு தொழில் முனைவோர் மேம்பாட்டு வங்கியான FMO யிடருந்து 5 மில்லியன் டொலரை இரண்டாவது கட்ட தொகையாக பெற்றுள்ளது.

2020 இன் பிற்பகுதியில்/ 2021 இன் முற்பகுதியில் டச்சு தொழில்முனைவோர் மேம்பாட்டு வங்கியான FMO யிடருந்து 10 மில்லியன் அமெரிக்க டொலர் வசதியைப் பெற்ற AFC, இல் முதல் தவணையாக 5 மில்லியன் அமெரிக்க டொலர்களைப் பெற்றது. 6.3 பில்லியன் யூரோ பெறுமதியான பல்வேறு முதலீட்டு பிரிவுகளுடன், FMO ஆனது 85 நாடுகளில் முதலீடுகளைக் கொண்ட மிகப்பெரிய ஐரோப்பிய இருதரப்பு தனியார் துறை அபிவிருத்தி வங்கிகளில் ஒன்றாகும். பொருளாதாரத்தின் முதுகெலும்பாகக் கருதப்படும் நாட்டின் MSME துறைக்கும் இந்த நிதியுதவிகள் ஒரு குறிப்பிடத்தக்க வளர்ச்சிக்கு காரணமாக அமைகின்றன.

AFC இன் பிரதித் தலைவரும் முகாமைத்துவப் பணிப்பாளருமான ரோமானி டி சில்வா இது குறித்து தெரிவிக்கையில், “AFC இன் MSME மையப்படுத்தப்பட்ட வணிக மூலோபாயத்திற்கு இது ஒரு முக்கியமான மைல்கல் என்பதுடன், எமது MSME திட்டங்களில் FMO இன் கூட்டாண்மை காரணமாக நாம் ஊக்கமும் உற்சாகமும் அடைந்துள்ளோம். நாட்டில் MSME துறையை மேம்படுத்துவது தொடர்பில் AFC-FMO கூட்டாண்மையானது, AFC இன் வளர்ந்து வரும் சர்வதேச நம்பகத்தன்மையை உறுதிப்படுத்துகிறது. கடந்த ஆண்டு AFC ஆனது, ஜேர்மனியின் சர்வதேச நிலைபேறுத் தன்மை தரநிலைகள் மதிப்பு சார்ந்த நிதி நிறுவனங்கள் (International Council of Sustainability Standards for Value-Driven Financial Institutions -ICSSVDFI) அமைப்பின் கீழ் நிர்வகிக்கப்படும், வங்கி மற்றும் நிதித் துறையில் முழுமையான நிலைபேறான தன்மைக்காக, தெற்காசியாவில் முதலாவது சான்றளிக்கப்பட்ட நிதி நிறுவனமாக தெரிவானது. 2018 ஆம் ஆண்டில் இதேபோன்ற வசதியுடன் AFC இற்கு FMO உதவியுள்ளதால், FMO இற்கு இது புதிய விடயமல்ல. இந்த வசதியானது, 5 ஆண்டுகளுக்கான நிலையான வட்டி வீதத்தை கொண்டுள்ளது. இதன் மூலம் AFC அதன் இருப்புநிலைக் குறிப்பில் (balance sheet), சொத்து மற்றும் பொறுப்பை உரிய வகையில் சமனிலையில் காண்பிக்கும் வகையில் நிர்வகிக்க உதவுகிறது. அத்தகைய உலகளாவிய உயர்ந்த நிதி வசதிகளை AFC உடனடியாகப் பெறுவது, நிலைபேறான நிதியுதவியில் எம்மால் நிரூபிக்கப்பட்டு அவதானம் செலுத்தப்பட்டமை தொடர்பிலான சர்வதேச அங்கீகாரத்தின் சான்றாகும். இது மக்கள், பூமி, இலாபம் ஆகிய மூன்று அடிப்படை விடயங்களில் எமது பாரிய அர்ப்பணிப்பின் ஒரு பகுதியாகும்.

2017 ஆம் ஆண்டில், AFC ஆனது இலங்கையின் NBFI துறையில், ஐநாவின் நிலைபேறான அபிவிருத்தி இலக்குகள் (SDG) மற்றும் காலநிலை மாற்றம் தொடர்பான பரிஸ் உடன்படிக்கைக்கு தனது உறுதிப்பாட்டை வெளிப்படுத்திய முதல் நிதி நிறுவனமாக, ‘Karlsruhe resolution’ இல் கைச்சாத்திட்டது. கடந்த ஆண்டுகளில் நிலவிய, மிகவும் சவாலான வெளிச் சூழலையும் மீறி, AFC ஆனது, வருடாந்தம் அதன் இலாபத்தில் 3% – 4% யினை, சமூக மற்றும் சூழல் நிலைபேறான தன்மை முயற்சிகளில் முதலீடு செய்து வருகிறது. சூழலுக்கும் சமூகத்திற்கும் நன்மை பயக்கும் முயற்சிகளில், 2020/21 நிதியாண்டில் AFC இன் நிலைபேறுத் தன்மை முயற்சிகள் மீதான முதலீடு ரூ. 12 மில்லியனுக்கும் அதிகமாக அமைந்தமை குறிப்பிடத்தக்கது.

கொவிட்-19 தொற்றுநோய் காரணமான சவாலான சூழல் காணப்பட்டபோதிலும், முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் வரிக்கு பிந்தைய இலாபாமானது (PAT), பாராட்டும் வகையிலான 169% வளர்ச்சியுடன், 2020/21 நிதியாண்டில் AFC சிறப்பாகச் செயற்பட்டுள்ளது. CSE யினால் வெளியிடப்பட்ட அதன் சமீபத்திய காலாண்டு நிதிநிலை அறிக்கைகளில் தெரிவிக்கப்பட்ட அனைத்து முக்கிய குறிகாட்டிகளிலும், வெளிப்புற பாதிப்புகளால் ஏற்பட்ட தாக்கத்திலிருந்து அதன் மீளெழுச்சியை மீண்டும் ஒருமுறை நிறுவனம் நிரூபித்துள்ளதுடன், அது நிலையான செயல்திறனை வெளிப்படுத்தியுள்ளது. 2021/22 நிதியாண்டின் முதல் பாதியில் நிறுவனம் அதன் இலாபத்தை இரட்டிப்பாக்கியது. இதன் மூலம் வரிக்கு பின்னரான இலாபத்தை ரூ. 351 மில்லியனாக அது பதிவு செய்ததுடன், கடன் புத்தகத்தில் (loan book) ரூ. 38 பில்லியனைத் தாண்டிய 13.7% வலுவான வளர்ச்சியைப் பதிவுசெய்துள்ளது. அறிக்கையிடப்பட்ட NPL 7.14% ஆனது, வெளியிடப்பட்ட தொழில்துறை சராசரியை விட மிகக் குறைவாக உள்ள அதே நேரத்தில், மொத்த மூலதன விகிதம் 14.95% ஒழுங்குமுறைப்படுத்தலின் குறைந்தபட்சமான 11% ஐ விட அதிகமாக உள்ளது. மேலே குறிப்பிடப்பட்டுள்ள நம்பிக்கைக்குரிய நிதிச் செயல்திறன் ஆனது, நன்கு வெளிப்படுத்தப்பட்ட வணிக உத்தி, தலைமைத்துவம், தொழில்துறையில் ஏற்றுக்கொள்ளப்பட்ட சிறந்த நடைமுறைகளின் விளைவாகும்.

FMO பற்றி

FMO (Netherlands Development Finance Company) நெதர்லாந்து அபிவிருத்தி பினான்ஸ் நிறுவனம் என்பது டச்சு அபிவிருத்தி வங்கியாகும். இலட்சியத் தொழில்முனைவோர்கள் மீது முதலீடு செய்வதன் மூலம், வளரும் மற்றும் வளர்ந்து வரும் சந்தைகளில் நிலையான தனியார் துறை வளர்ச்சியை FMO ஆதரிக்கிறது. ஒரு வலுவான தனியார் துறையானது பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சிக்கு வழிவகுக்கும் என்று FMO நம்புவதுடன், மக்கள் தங்கள் திறன்களைப் பயன்படுத்தவும் அவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தவும் அது உதவுகிறது. நிதி நிறுவனங்கள், சக்தி, விவசாய வர்த்தகம், உணவு மற்றும் நீர் ஆகிய மூன்று துறைகளில் FMO கவனம் செலுத்துகிறது. 6.3 பில்லியன் யூரோ முதலீட்டு பிரிவுகளுடன், FMO ஆனது, மிகப்பெரிய ஐரோப்பிய இருதரப்பு தனியார் துறை மேம்பாட்டு வங்கிகளில் ஒன்றாகும்.

Alliance Finance Company PLC பற்றி:

1956 இல் கூட்டிணைக்கப்பட்ட, அலையன்ஸ் பினான்ஸ் கம்பனி (AFC) இலங்கையின் மிகப் பழமையான வங்கியல்லாத நிதி நிறுவனமாகும் (NBFI), அல்லது, நாட்டின் மிகப் பழமையான ‘நிதி நிறுவனம்’ ஆகும். இது 60 வருடங்களாக நான்கு தலைமுறை இலங்கையர்களுக்கு சேவை செய்துள்ளதுடன், இலங்கையின் முன்னோடியான நிதி நிறுவனமாக, நித்திய நட்புக் கொள்கையின் அடிப்படையில் செயற்பட்டுவருகிறது. தனது வாடிக்கையாளர்களுடன் நம்பிக்கை, நேர்மை, பரஸ்பர நோக்கம் ஆகியவற்றின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்ட ஒரு நிறுவனமான அலையன்ஸ் பினான்ஸ், நிலைபேறான நிதியுதவியின் மூலம் உலகை சிறந்த இடமாக மாற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளதுடன், பல மதிப்புமிக்க விருதுகள் மற்றும் நிலைபேறான தன்மை தொடர்பில், வங்கி மற்றும் நிதித்துறையில் சூழல் மற்றும் சமூக நிலைபேறுத் தன்மைக்காக தெற்காசியா level 4 இல் சான்றளிக்கப்பட்டுள்ளது. 2012 இல் ISO 22301 சான்றளிக்கப்பட்ட NBFI ஆனது, அலையன்ஸ் பினான்ஸ் முதலீடு (சேமிப்பு மற்றும் நிலையான வைப்புத்தொகை) மற்றும் நிதி (லீசிங், உபகரணங்கள், குத்தகை, Speed Cash, அபிவிருத்தி நிதி, தங்கக் கடன்கள், தனிநபர் கடன்கள்) உள்ளிட்ட பல்வேறு வகைகளிலான சேவைகளை வழங்கி வருகிறது.

ENDS

Share

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *