2021 இல் ஸ்மார்ட்போன் துறையில் புரட்சியை ஏற்படுத்திய 5 vivo ஸ்மார்ட்போன்கள்

Author
By Author
3 Min Read

உலகளாவிய தூரநோக்கைக் கொண்ட தொழில்நுட்ப தரக்குறியீடான vivo, எப்போதும் தனது பயனர்களுக்கு முன்னுரிமை வழங்கி, புதுமையான அம்சங்கள் மற்றும் அனுபவங்களைக் கொண்ட உயர் மட்டத்திலான தயாரிப்புகளை அவர்களுக்கு வழங்க முயற்சித்து வருகிறது. பயனர்களின் தேவைகள் காலப் போக்குடன் தொடர்ந்தும் அதிகரித்த வருவதால், vivo இந்த மாற்றங்களை அங்கீகரித்து அவர்களின் தேவைகளுக்கு ஏற்ற தயாரிப்புகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

ஸ்மார்ட்போன் ஆர்வலர்களுக்கு ஸ்டைல், தொழில்நுட்பம், கட்டுப்படியாகும் விலை ஆகியவற்றின் அடிப்படையில், அதன் தயாரிப்புகளில் தனது கண்டுபிடிப்புகளை நிறுவனம் முன்வைத்து வருகின்றது. இளம் பயனர்களுக்கு கட்டுப்படியாகும் விலையில் வேடிக்கை வினோதத்துடன், நவநாகரீகம், ஸ்டைல் ஆகிய அம்சங்களைக் கொண்ட Y தொடர் போன்ற ஸ்மார்ட்போன்களையும், இரவு நேர புகைப்படம் எடுப்பதில் புரட்சியை ஏற்படுத்திய V21 போன்ற அனைவரின் தேவைகளையும் பூர்த்தி செய்யும் V தொடர் ஸ்மார்ட்போன்களையும் vivo அறிமுகப்படுத்தியுள்ளது.

vivo தரக்குறியீட்டை தனித்துவமாக்கும் புரட்சி மிக்க தயாரிப்புகள் தொடர்பில் பார்க்கலாம்…

  1. V21 5G

vivo வின் V21 5G ஸ்மார்ட்போன், மிகவும் சக்திவாய்ந்த 44MP OIS Night Selfie System உடன் வருகிறது. அத்துடன் இது 7.29mm தடிப்பைக் கொண்ட Ultra Slim AG Design வடிவமைப்புடன் 2021 ஆம் ஆண்டின் நேர்த்தியானதும் மிகவும் ஸ்டைலானதுமான ஸ்மார்ட்போன்களில் ஒன்றாகும். முன் மற்றும் பின்புற கெமராக்கள் ஒரே நேரத்தில் ஒன்றாக இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள, Dual-View Video அம்சத்தையும் இது கொண்டுள்ளது. நுகர்வோர் ரூ. 99,990 எனும் சிறந்த விலையில் இதனை கொள்வனவு செய்ய முடியும்

  1. V21e

44MP Eye Autofocus போன்ற அற்புதமான அம்சத்துடன், vivo V21e ஆனது, எப்போதும் மிகத் தெளிவான செல்பிக்களை உருவாக்குவதால், அது வாடிக்கையாளரின் விருப்பத் தெரிவாக மாறியுள்ளது. 7.38mm Ultra-Slim AG glass design வடிவமைப்பின் காரணமாக, அதன் வடிவமைப்பு மிகவும் கவர்ச்சிகரமானதாக இருக்கின்றது. 6.44 அங்குல AMOLED டிஸ்ப்ளே FHD+2400×1080 ultra-high resolution எனும் உயர் தெளிவுத்திறனை இது கொண்டுள்ளது. அத்துடன் உங்கள் கண்களின் பாதுகாப்பை பேணுவதோடு, அழகான, உண்மையான இயற்கை வண்ணங்களை காட்டும் திரையைக் கொண்டுள்ளது. பயனர்கள் ரூ. 74,990 எனும் விலையில் இதனை கொள்வனவு செய்யலாம்.

  1. Y53s

சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட vivo Y53s ஆனது, ஒரு அனைத்து துறை ஸ்மார்ட்போன் என்பதுடன், Y தொடரில் உயர்நிலை அம்சங்களை வழங்கும் முதலாவது ஸ்மார்ட்போனும் இதுவாகும். இது 64MP பின்பக்க கெமரா, 16MP முன்பக்க கெமராவுடன், 33W flash charge வசதியைக் கொண்ட 5,000Mah மின்கலத்துடன் வருவதால், இது நீங்கள் வைத்திருக்க வேண்டிய சிறந்த அம்சங்கள் கொண்ட ஸ்மார்ட்போன்களில் ஒன்றாகும். அதன் மேம்பட்ட 8GB + 4GB அதிகரிக்கப்பட்ட RAM மற்றும் 128GB உள்ளக நினைவகம், 1TB வரை விரிவாக்கம் செய்யும் Memory Card வசதி ஆகியவற்றையும் இது கொண்டுள்ளது. இது நிச்சயமாக அனுபவிக்கத் தகுந்த ஸ்மார்ட்போன் என்பதுடன், ரூ. 62,990 எனும் விலையில் அதனை பெற்றுக் கொள்ளலாம்.

  1. Y12s

Y12s ஆனது AI Dual Camera உடன் வருவதுடன், இது Face Beauty உள்ளிட்ட Filter களுடன், நாளாந்த புகைப்படத் தேவைகளுக்காக வடிவமைக்கப்பட்ட, பலதரப்பட்ட அம்சங்களைக் கொண்டுள்ளது. ஒவ்வொரு விபரத்தையும் துல்லியமாக எடுக்கும் 13MP பின்புற பிரதான கெமராவுடன் வரும் இது, நீலம் (Glacier Blue) மற்றும் கறுப்பு (Phantom Black) ஆகிய 2 பிரதான வண்ணங்களில் கிடைக்கின்றன. இது multi-Turbo 3.0 அம்சத்தையும் கொண்டுள்ளதால், விளையாட்டுகளின் போது ஏற்படும் தடங்கல்கள் மற்றும் பின்னடைவைக் குறைப்பது தொடர்பான முக்கிய காட்சிகளை மேம்படுத்துவதில் கவனம் செலுத்துகிறது. இது ரூ. 32,990 எனும் விலையில் கிடைக்கிறது.

  1. Y1s

Y1s ஆனது 6.22 அங்குல Halo FullView™ திரையைக் கொண்டுள்ளதுடன், சுவாரஸ்யமான வீடியோ மற்றும் கேமிங் அனுபவத்தை வழங்கும் வகையிலான, நீடித்து நிற்கும் 4,030  mAh மின்கலத்தையும் கொண்டுள்ளது. நேர்த்தியான 3D வளைவுகளுடன், Y1s ஆனது உங்கள் உள்ளங்கையில் வசதியாகப் பிடிப்பதற்கு ஏற்றவாறு வடிவமைக்கப்பட்டுள்ளது. நுகர்வோர் Y1s 2GB+32GB பதிப்பை ரூ. 24,990 எனும் விலையிலும், 3GB +32GB பதிப்பை ரூ. 27,990 எனும் விலையிலும் கொள்வனவு செய்ய முடியும்.

தெரிவு செய்ய பல்வேறு சாதனங்கள் கிடைப்பதால், உங்களுக்குப் பிடித்த vivo ஸ்மார்ட்போனை இப்போதே பெற்றுக் கொள்ளுங்கள்!

அனைத்து சில்லறை விற்பனை நிலையங்களிலும் மற்றும் இணைய-வர்த்தக தளங்களான BuyAbans மற்றும் Daraz ஊடாகவும் கொள்வனவு செய்யலாம்

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *