Tamil

ஒரு கிளிக்கில் DhanaMaga – நிதிக் கல்வி!

  • இலங்கையில் இலவச, மும்மொழி, குறுநீள காணொளி அடிப்படையிலான நிதிக் கல்வியறிவு முன்முயற்சியுடனான நிதி உள்ளடக்கத்தை வழங்குவதில் Asia Securities வெற்றி கண்டுள்ளது.
  • இலங்கையில் நிதிக் கல்வியறிவை மேம்படுத்துவதற்கான முதலாவது பரந்துபட்ட தனியார் துறை முயற்சி

இலங்கையின் முன்னணி முதலீட்டு நிறுவனமான Asia Securities, இலங்கையர்கள் தங்களின் நிதி சார்ந்த எதிர்காலத்தைக் கட்டுக்கோப்புடன் வைத்திருப்பதற்கு உதவும் நோக்கில், மும்மொழி நிதிக் கல்வியறிவுத் திட்டமான DhanaMaga (ධනමග / தன மார்க்கம்) திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

DhanaMaga, அதன் முதலாவது ஒன்லைன் தளம் மற்றும் கையடக்கத் தொலைபேசி செயலியை 2022, பெப்ரவரி 21ஆம் திகதி உத்தியோகபூர்வமாக அறிமுகப்படுத்தி வைத்துள்ளது. Asia Securities யினால் முன்னெடுக்கப்பட்டுள்ள இந்த முயற்சியின் நோக்கம், அனைத்து இலங்கையர்களுக்கும் அவர்களின் நிதி/பணம் தொடர்பில் எழும் சந்தேகங்களுக்கு பதிலளிப்பதாகும். சிறு வணிகங்களுக்கு நிதியளித்தல் மற்றும் தனிப்பட்ட நிதித் திட்டங்களை உருவாக்குதல், நிறுவனத்தின் நிதி அறிக்கைகளைப் புரிந்துகொள்வது, பொருத்தமான முதலீட்டு விருப்பங்களைத் தேர்ந்தெடுப்பது முதல் அதனை எவ்வாறு மேற்கொள்வது என்பதைப் புரிந்துகொள்ள அது உதவுகின்றது.

நிதி ஸ்திரத்தன்மையை வளர்ப்பதில் நிதிக் கல்வியின் முக்கியத்துவம் குறித்து கருத்து தெரிவித்த Asia Securities நிறுவனத்தின் தலைவர் துமித் பெனாண்டோ, “Asia Securities ஆகிய நாம், தினமும் வர்த்தக நிறுவனங்களின் உரிமையாளர்கள் மற்றும் தனிப்பட்ட முதலீட்டாளர்களுடன் கலந்துரையாடுகிறோம். எனவே, மக்கள் பொருளாதாரத்தில் ஆர்வத்துடன் பங்கேற்கவும், அவர்களின் தனிப்பட்ட நிதி சார்ந்த எதிர்காலத்தைப் பாதுகாக்கவும் நிதித் திறன்கள் எவ்வளவு முக்கியமானவை என்பதை நாம் நேரடியாகப் புரிந்துகொள்கிறோம். அனைத்து வாழ்க்கைத் தரத்திலான மக்களுக்கும், ஒரு சிறு வணிகத்திற்கான நிதியை மேற்கொள்ள சரியான மூல வளங்களுடன், அவர்கள் அதிக ஆபத்தில் வீழ்ந்து விடாமல் அல்லது அவர்களின் குடும்பத்தின் எதிர்காலத் தேவைகளுக்காக முன்கூட்டியே திட்டமிட்டு முதலீடு செய்வதன் மூலம் அவர்கள் தங்கள் பணத்தை புத்திசாலித்தனமாக நிர்வகிக்க, எமது நிதிக் கல்வியறிவு முயற்சியான DhanaMaga உதவுகிறது. நாம் நேச்சிக்கின்ற இத்தேசத்திலுள்ள அனைத்து குடிமக்களினதும் வளர்ச்சிக்கான இலக்கை ஆதரிக்கும் ஒரு வலுவான அடித்தளத்தை உருவாக்குவதற்காக இத்திட்டத்தை முன்னெடுப்பதில் நாம் மகிழ்ச்சியடைகிறோம்.” என்றார்.

DhanaMaga, பின்பற்றுவற்கு எளிதான, 100 இற்கும் அதிகமான, ஈடுபடுத்தலை ஏற்படுத்தக்டிய சிங்களம், தமிழ், ஆங்கில மொழிகளிலான வீடியோக்களை கொண்டுள்ளது. அவை அனைத்து வயதினருக்கும், அனைத்து மட்டத்திலான திறமை நிலைக்கும், வாழ்க்கையின் எந்தவொரு நிலைக்கும் ஏற்றதாகும். www.dhanamaga.lk தளம் வழியாகவோ அல்லது கையடக்கத் தொலைபேசி செயலி ஊடாக பதிவிறக்குவதன் மூலமாகவோ வீடியோக்களை முற்றிலும் இலவசமாகப் பார்வையிட முடியும்.

சுயமாக இயக்கப்படக் கூடிய இந்த வீடியோக்களை, பார்வையாளர்கள்  தங்களுக்கேற்ற வேளையில், தங்களுக்கு அவசியமான, எந்தவொரு நேரத்திலும், எந்தவொரு இடத்திலும் வைத்து, கற்றலை மேற்கொள்ள வாய்ப்பை ஏற்படுத்துகின்றன. வீடியோ உள்ளடக்கமானது, பொருந்துகின்ற தன்மை மற்றும் துல்லியத் தன்மை ஆகியவற்றின் அடிப்படையில், DhanaMaga பாடத்திட்டக் குழுவால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றது. நிதி ஒழுங்குபடுத்தல் மற்றும் கல்வித் துறையில் 70 இற்கும் அதிக வருட கூட்டு அனுபவம் கொண்ட முக்கிய உள்நாட்டு நிபுணர்கள் இக்குழுவில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

நிகழ்வின் பிரதம அதிதியான, பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழுவின் தலைவர் விராஜ் தயாரத்ன இந்த அறிமுகம் குறித்து தெரிவிக்கையில், “வர்த்தகம் அல்லது தனிப்பட்ட நிர்வகித்தல் போன்ற விடயங்களுக்காக, மும்மொழியிலான திட்டத்தை அறிமுகப்படுத்தி, அனைத்து இலங்கையர்களுக்கும் சமமான தளத்தை வழங்குவதனை நோக்கமாகக் கொண்டுள்ள,  Asia Securities நிறுவனத்தின் தொலைநோக்கு மற்றும்  புரிதலானது மிகவும் பாராட்டுக்குரியதாகும்.” என்றார்.

இலங்கையின் கல்வியறிவு விகிதம் 92% என்பதுடன் நாட்டின் நிதிக் கல்வியறிவு விகிதம் 35% ஆகக் காணப்படுகின்றது. அபிவிருத்தியடைந்த நாடுகளில் இது சராசரியாக 65% ஆக காணப்படுகின்றது (S&P Global FinLit Survey). மறுபுறம், 74% இலங்கையர்கள் முறையான நிதி நிறுவனத்தில் கணக்கைத் திறந்துள்ளனர். நிதிக் கல்வி அறிவின் போதாமை மற்றும் நிதி அணுகல் இல்லாமை ஆகிய விடயங்கள், குறைந்த நிதிக் கல்வியறிவு நிலைகளுக்கு முதன்மைக் காரணமாகக் கருதப்படுகின்றன.

நிகழ்வின் கெளரவ விருந்தினரான, முன்னாள் இலங்கை கிரிக்கெட் தலைவர் மஹேல ஜயவர்தனவும் இதன்போது தனது கருத்துக்களை பகிர்ந்து கொண்டார், “வாழ்க்கையின் அனைத்து மட்டத்திலுள்ள இலங்கையர்களுக்கும், குறிப்பாக இளைஞர்களுக்கும் பயனளிக்கும் வகையிலான ஒரு சுவாரஸ்யமான முயற்சியான DhanaMaga தளத்தை அறிமுகப்படுத்தும் நிகழ்வில் கௌரவ விருந்தினராக என்னை அழைத்தமைக்காக Asia Securities நிறுவனத்திற்கு எனது நன்றியைத் தெரிவிக்க விரும்புகிறேன். இலங்கையில் நிதிக் கல்வியறிவை மேம்படுத்துவதற்கான அவர்களின் நோக்கத்தை செயல்படுத்தும் இம்முயற்சி தொடர்பில் இக்குழுவிற்கு நான் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.” என்றார்.

கல்வியின் அடிப்படையில் கல்வியறிவு மற்றும் பாலின சமத்துவம் ஆகியவற்றில் கவனம் செலுத்துவதன் மூலம் குறைந்த வருமானம் கொண்ட சமூகங்களில் உள்ள சிறுவர்களின் வாழ்க்கையை மாற்ற முற்படும், உலகளாவிய இலாப நோக்கமற்ற நிறுவனமான Room to Read உடன் முதன்முறையாக கூட்டாண்மையுடனான நிகழ்வில்  Dhanamaga இணைந்தமையானது இந்நிகழ்வின் சிறப்பம்சமாகும். DhanaMaga உடனான கூட்டாண்மையானது, Room to Read யின் பெண் கல்வித் திட்டத்தில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான பங்கேற்பாளர்களுக்கு நிதிக் கல்வியறிவு தொடர்பில் ஒரு முக்கியமான பாடத்திட்டத்தை வழங்க வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இப்புரிந்துணர்வு உடன்படிக்கையில் கையெழுத்திட்டமை தொடர்பில், Room to Read Sri Lanka வின் இலங்கைக்கான பணிப்பாளர் ஷெவந்தி ஜயசூரிய கருத்துத் தெரிவிக்கையில், “Asia Securities நிறுவனத்துடன் கூட்டுச் சேர்ந்துள்ளமை தொடர்பில் நாம் பெருமையடைகிறோம். இதன் மூலம் நாங்கள் ஒன்றாக இணைந்து DhanaMaga தளத்தை அமைக்க வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளதோடு, அது மாத்திரமன்றி இளைஞர்களுக்கும் குறிப்பாக நாட்டுக்கும் பயனளிக்கும் பல திட்டங்களுக்கான அடித்தளத்தையும் ஏற்படுத்த வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் நாம் அவர்களுடன் இணைந்து பணியாற்ற எதிர்பார்ப்பதுடன், இவ்வாறான மேலும் பல திட்டங்களில் தொடர்ந்தும் அவர்களுடன் இணைந்து எதிர்காலத்தில் பணியாற்றவும் ஆவலாக இருக்கின்றோம்.” என்றார்.

இலங்கையர்கள் பலர் பொருளாதார ரீதியாக சுறுசுறுப்பாக இயங்கும் அதே வேளையில், சில சமயங்களில் அவர்களுக்கு நிதியின் முக்கிய கோட்பாடுகள் தொடர்பான அடிப்படை அறிவு இருப்பதில்லை. இது அவர்களின் பொருளாதார நடவடிக்கைகளின் பலனைப் பெறுவதைத் தடுப்பதோடு மட்டுமல்லாமல், மோசமான நிதி சார்ந்த முடிவுகளை எடுப்பதன் அபாயத்தில் தள்ளி, அவர்களைக் கடனிலும் வறுமைக்குள்ளும் தள்ளுகின்றது. இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காணும் பொறுப்பு, அரசாங்கத் துறைக்கு இருக்கும் அதே வேளையில், தேசிய நலன் கருதி நிதி சார்ந்த கல்வியறிவை மேம்படுத்துவதில் தனியார் துறையும் தனது பங்கை ஆற்றுவது அவசியமென Asia Securities நிறுவனம் உறுதியாக நம்புகிறது.

DhanaMaga என்பது, Asia Securities (Pvt) Ltd இனால் மேற்கொள்ளப்படும் நிதியியல் கல்வியறிவு முயற்சியாகும். இது தொடர்பான 100 இற்கும் மேற்பட்ட எளிய, கல்வி சார்ந்த வீடியோக்களைப் பார்வையிட, www.dhanamaga.lk தளத்திற்கு அல்லது  Dhanamaga செயலியை தரவிறக்கவும்.

Asia Securities பற்றி

ஏசியா செக்யூரிட்டீஸ் ஆனது, இலங்கையில் உள்ள முன்னணி முதலீட்டு நிறுவனம் என்பதுடன், அது முதலீட்டு வங்கியியல், ஆராய்ச்சி, பங்குகள் மற்றும் சொத்து முகாமைத்துவ சேவைகள் உள்ளிட்ட சேவைகளை உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிறுவனங்கள், அமைப்புகள், தனிப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு வழங்குகின்றது. Asia Securities யினது நிதி சார்ந்த கல்வியறிவு முயற்சியான DhanaMaga, அனைத்து இலங்கையர்களுக்கும் சுதந்திரமான மற்றும் நன்கு அறியப்பட்ட நிதி சார்ந்த தீர்மானங்களை எடுப்பதற்கான அதிகாரமளிப்பதை நோக்காகக் கொண்டுள்ளது.

Share

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *