Tamil

Pelwatte Non Fat Milk: இலங்கை நுகர்வோருக்கு மிகவும் ஆரோக்கியமானதும் நிறைவான பால் வகைகளை வழங்குகின்றது

பல்வேறு வகையான பால் பொருட்களை உற்பத்தி செய்து நாட்டிற்கு பெறுமதியான அந்நியச் செலாவணியை சேமிக்க உதவும் இலங்கையின் முன்னணி உள்ளூர் பால் வர்த்தக நாமங்களில் ஒன்றான Pelwatte Dairy, இலங்கையின் பால் உற்பத்தியாளர்களின் இதயங்களை வென்றுள்ளது. இதற்காக அதன் பாலுற்பத்திகளை கொள்வனவு செய்யும் வாடிக்கையாளர்களுக்கே நன்றி கூற வேண்டும். பெல்வத்தையின் சிறப்பு யாதெனில், வழக்கமான முழு ஆடைப் பால்மாவுடன் மட்டுப்படுத்தப்படாமல், உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் மற்றுமொரு பால் மாவையும் அது வழங்குகிறது. இது பால் மா புரதத்தின் முழுமையான குணங்களைக் உள்ளடக்கியுள்ளது.

Pelwatte Nonfat Milk Powder (PNFMP) ஆனது ஒரு பால் தயாரிப்பாகும். இது வழக்கமான முழு ஆடைப் பால் மாவுடன் (FCMP) ஒப்பிடும்போது அதிக ஆரோக்கியம் நிறைந்த நன்மைகளை வழங்குகிறது. FCMP & NFMP இடையே உள்ள கலோரி ரீதியான பெறுமதியின் வேறுபாடு அதன் கலோரிகளில் தங்கியுள்ளது. இது பெரியளவில் வேறுபாடு கொண்டதாக இல்லாவிடினும், குறைந்த கலோரி மதிப்புகள் நன்மை பயக்கின்றன. ‘கொழுப்பு அற்ற பால் மா’ (fat free milk powder) ஆனது, வழக்கமான முழு ஆடைப்பால்மா (FCMP) உடன் ஒப்பிடுகையில் குறைந்த கொழுப்பைக் கொண்டிருப்பதால் இது உடல் எடையைக் குறைக்க உதவுகிறது. முக்கியமாக, உங்கள் உணவில் உள்ள எந்தவொரு நிறைவுற்ற கொழுப்பும் (saturated fat) உங்கள் குருதியில் உள்ள கெட்ட கொழுப்பின் அளவை அதிகரிப்பதால், உங்கள் இதய ஆரோக்கியத்தை பாதிப்படையச் செய்யும் ‘நிறைவுற்ற கொழுப்பு’ உட்கொள்ளலை அது கட்டுப்படுத்த உதவுகிறது. எனவே, இதற்கு நேர்மாறாக, பெல்வத்தை போன்ற கொழுப்பு அற்ற பால்மா (ஒரு பால் கோப்பையில்) மிகக் குறைவாக 0.2 கிராம் கொழுப்பு மற்றும் 0.1 கிராம் நிறைவுற்ற கொழுப்பு ஆகியவற்றை உள்ளடக்கியுள்ளது.

பெல்வத்தையின் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி முகாமையாளர் சுனேத் குணதிலக இது தொடர்பில் விளக்கமளிக்கையில், “எமது பால் பொருட்கள் முழுவமையாக உள்நாட்டிலேயே தயாரிக்கப்படுவதோடு, அதன் புத்தம் புதிய செழுமையை சந்தையில் உள்ள இறக்குமதி செய்யப்படும் எந்தவொரு பால் பொருட்களுடளும் ஒப்பிடமுடியாது. இது எமது இலங்கை நுகர்வோருக்கு நாம் வழங்கும் தனித்துவமான பெறுமதியான முன்மொழிவாகும். எமது கொழுப்பு அற்ற பால்மாவானது, இறக்குமதி செய்யப்பட்ட பால்மாக்களுக்கு இணையாக ‘போசாக்கு நிறைந்ததாக’ காணப்படுகின்றது. எனவே, பெல்வத்தையின் கொழுப்பு அற்ற பால் மாவுடன் (Pelwatte Nonfat Milk Powder – PNFPM) இந்த தரமான சலுகைகளை ஒரு படி மேலே கொண்டு செல்கிறோம். இது இலங்கையிலுள்ள சுகாதாரத்தில் கரிசனை கொண்டுள்ள நுகர்வோருக்கான பால் உற்பத்தியாகும்.” என்றார்.

Pelwatte Nonfat Milk Powder (PNFMP) ஒரு உண்மையான பால் சுவை மற்றும் அதன் நுகர்வோரின் உடல் எடையை பராமரிக்க உதவுகின்ற இலேசான கிரீம் நிறத்தைக் கொண்டுள்ளது. குறைந்த அளவு நிறைவுற்ற கொழுப்பு அமிலங்களைக் கொண்டுள்ள PNFMP ஆனது, என்புத் தொகுதிக்கு புரதம், கல்சியம், விற்றமின் D, விற்றமின் A போன்ற ஊட்டச்சத்துகளை வழங்குவதைப் பேணுகின்ற, போசாக்குடனான நன்மைகளை சேர்க்கின்றது. முழு ஆடைப் பால்மாவுடன் ஒப்பிடுகையில் இதில் குறைவான கலோரிகள் மற்றும் அதிகளவு விற்றமின்கள் காணப்படுகின்றன. PNFMP குருதியிலுள்ள வெல்லம், கொலஸ்ட்ரோல் அளவுகளை குறைப்பதோடு, இருதய பிரச்சினைகளையும் குறைக்கிறது. அத்துடன் எடையை பேணுவதில் விலைமதிப்பற்ற நன்மையை வழங்குகின்றது. பெல்வத்தை, கொழுப்பு அற்ற பால் மா ஆனது, மெலிந்த தசைகளை பேண ஒரு சிறந்த உதவியாளன் என்பதுடன், அதிக என்பு கனியுப்புச் செறிவுக்கு உதவுகிறது. ஒவ்வொரு 100 கிராமுக்கும் 27 கிராம் கொழுப்பைக் கொண்ட முழு பால்மாவுடன் ஒப்பிடுகையில், பெல்வத்தை கொழுப்பு அற்ற பால் மாவில் குறைவாக (1.5 கிராம் மட்டுமே) கொழுப்பு உள்ளது. பால் உற்பத்தியாளர்கள் பொதுவாக பல்வேறு ஊட்டச்சத்துகள் மூலம் பாலை மேலும் வலுவூட்டுகின்றனர். பாலானது முக்கியமாக whey மற்றும் கேசீன் புரதம் ஆகிய இரண்டையும் கொண்டிருக்கின்றன. அத்துடன் பெல்வத்தை கொழுப்பு அற்ற பால்மா தொடர்பில் அவதானிக்கும்போது, ​​இது பொதுவாக 34 கிராம் புரதத்தைக் கொண்டுள்ளது. இந்த புரதமானது பல்வேறு அமினோ அமிலங்களுடன், ஆரோக்கியமான நோயெதிர்ப்பு தொகுதியை உருவாக்குவதுடன், வலுவான சுற்றோட்டத் தொகுதியையும் உருவாக்குகிறது. Pelwatte non-fat பால் மா (PNFMP) ஆனது, ஏனைய ஊட்டச்சத்துகளான 39g லக்டோஸ், 4.7g கனியுப்புகள், 587.3µg விற்றமின் A, 400µg விற்றமின் D3, 46µg போலிக் அமிலம், 0.9g பொஸ்பரஸ், 32.5 mg/kg நாகம் போன்றவற்றை கொண்டுள்ளது. PNFMP இன் விற்றமின் B சேகரிப்பானது, ரைபோபிளேவின், விற்றமின் B12 மற்றும் குறைந்த அளவு தயமின், நையசின், போலேட் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. Pelwatte NFMP ஆனது ஒவ்வொரு 100 கிராமிற்கும் 500kcal சக்தியை வழங்குகின்றது. அத்துடன் Pelwatte கொழுப்பு அற்ற பால்மா ஆனது, 394 கிலோ கலோரியைக் கொண்டுள்ளது. இது கொழுப்பு அற்ற பால்மா, ஊட்டச்சத்து உள்ளடக்கங்களை கொண்டுள்ளது என்பதற்கான சாட்சியமாக அமைகிறது.

End

Share

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *