5G Core தீர்வுகளில் Huawei முன்னணியில் உள்ளது; GlobalData அறிக்கை

Author
By Author
4 Min Read

5G Mobile Core தொடர்பில்  Competitive Landscape Assessment (போட்டி வெளியில் மதிப்பீடு) எனும் தலைப்பில் GlobalData ஆய்வு நிறுவுனம் சமீபத்தில் ஒரு அறிக்கையை வெளியிட்டிருந்தது. உலகெங்கிலும் உள்ள அனைத்து 5G Core தீர்வுகள் மற்றும் பயன்பாடு தொடர்பான விடயங்களில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு மதிப்பீட்டில் Huawei 5G Core தயாரிப்புகள் மிகவும் வலிமையானது என மதிப்பீடு முடிவு செய்யப்பட்டுள்ளது. Huawei மற்றும் இரண்டாம் இடத்திலுள்ள போட்டியாளருக்குமான புள்ளிகளின் வித்தியாசம் 2021 இலும் பார்க்க 2.3 மடங்கு அதிகமாகும். அத்துடன் 2019 ஆம் ஆண்டு முதல் Huawei 5G Core உலகளாவிய ரீதியில் முன்னணியில் திகழ்வது இது தொடர்ச்சியாக நான்காவது முறையாகும்.

GlobalData ஆனது, ICT துறையில் உலகப் புகழ்பெற்ற தரவு பகுப்பாய்வு மற்றும் ஆலோசனை நிறுவனமாகும். இது விற்பனையாளர் பகுப்பாய்வுக்கு மேலதிகமாக சந்தை ஆராய்ச்சி மற்றும் கணிப்புகளில் நிபுணத்துவத்தை வழங்குகிறது. அது வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, வலையமைப்பு ஸ்திரத்தன்மையின் மீது அதிகளவான தேவைகள் முன்வைக்கப்படுகின்றன. இதன் காரணமாக உலகளாவிய பிரதான வலையமைப்புகள் கிளவுட் மற்றும் 5G இற்கு மாற்றமடைவதை வலையமைப்பு நம்பகத்தன்மை வடிவமைப்பு ஆகியன இயக்குகின்றன. இந்தப் போக்கை எதிர்கொள்ளும் போது, ​​இயங்கிக் கொண்டிருக்கும் வலையமைப்புகளில் 5G Core வலையமைப்பு தீர்வு எவ்வாறு செயற்படுகிறது என்பதை, அது வணிகப் பயன்பாட்டிற்குத் தயாரா என்பதை மதிப்பிடும் போது அது அதன் மதிப்பை காட்டுகின்றது.

2G, 3G, 4G, 5G Non-Standalone (NSA) மற்றும் 5G Standalone  (SA) வலையமைப்புகள் நீண்ட காலத்திற்கு நிலைத்திருப்பதால், உபகரண விற்பனையாளர்கள் 5G Core வலையமைப்பு தீர்வை வழங்க வேண்டும். இது 5G SA யினை நோக்கிய மிருதுவான வலையமைப்பு பரிணாமத்தை எளிதாக்குவதோடு சிக்கலான O&M போன்ற பல RATகளின் ஒன்று சேர்ந்து செயற்படுவதன் சவால்களை எதிர்கொள்ள ஒரு குவிக்கப்பட்ட Core வலையமைப்புக் கட்டமைப்பைப் பயன்படுத்துகிறது. அது மாத்திரமன்றி, உபகரண விற்பனையாளர்களின் தொழில்நுட்ப புத்தாக்க கண்டுபிடிப்பு,  தன்னியக்கமான வலையமைப்பு, குரல் சேவைகளில் வணிகப் பயன்பாட்டு முன்னேற்றம் ஆகியன இந்த அறிக்கையில் உள்ள முக்கிய மதிப்பீட்டுக்கான காட்டிகளாகும்.

Architecture Resilience: Huawei 5G Core ஆனது, telco cloud மற்றும் microservice-centric கட்டமைப்பின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது. Rock-solid Reliability Advanced Solution மூலம், எப்போதும் ஒன்லைனில் சேவைகளை செய்யும் வகையில், வன்பொருள் தவறை சீராக்கிக் கொள்ளல், மென்பொருள் மிகை பயன்பாட்டு பாதுகாப்பு, அவசர காலங்களில் வழக்கம் போல் இயங்கும் சேவை, தேவைக்கேற்ப சேவை மேம்படுத்தல் மூலம் Huawei 5G Core வலையமைப்புகளுக்கு மிகவும் நம்பகமான, உயர் தர வலையமைப்புகளை உருவாக்க உதவுகிறது.

Solution Maturity: Huawei 5G Core ஆனது, பயனர்களையும் புத்தாக்கமான சேவைகளையும் விரைவாக மேம்படுத்துவதற்கும் வலையமைப்புகளுக்கு உதவுதற்காக நிலையான மற்றும் நம்பகமான நேரடி வலையமைப்பு செயல்திறனை வழங்கி, உலகளாவிய ரீதியில் பாரிய அளவிலான வணிகப் பயன்பாட்டின் அடிப்படையில் முன்னணியில் திகழ்கிறது. குறிப்பாக, Huawei 5G Core வலையமைப்புகளுக்கு 5GtoB புத்தாக்க கண்டுபிடிப்பு திட்டங்களை பாரிய அளவில் வெளிப்படுத்த உதவுகிறது. உதாரணமாக, Mobile VPN தீர்வானது, வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டு, உலகளாவிய ரீதியில் உள்ள 500 இற்கும் மேற்பட்ட நிறுவனங்களில் வணிக பயன்பாட்டிற்கு உட்படுத்தப்பட்டுள்ளது. இது பல்கலைக்கழக வளாகத்திற்கான தனிப்பட்ட வலையமைப்புகள், பொதுச் சேவைகள், சுகாதாரம், தொலைதூர அலுவலகங்கள் போன்ற பரந்த அளவிலான சூழ்நிலைகளுக்கு தீர்வு வழங்குகின்றது.

Network Evolution: நுண்ணி சேவை அடிப்படையிலான, முழுமையாக ஒன்றிணைந்த தரவு மற்றும் குரல் வலையமைப்பை உருவாக்க, Single Packet Core (SPC) மற்றும் Single Voice Core (SVC) தீர்வுகளுக்கு Huawei இசைவாக்கமடைந்துள்ளது. இது தொழில்துறையில் தனித்துவமானது என்பதுடன், ஒரே வலையமைப்பில் உள்ள 2G, 3G, 4G, 5G NSA, 5G SA பயனர்களுக்கான சேவைகளை ஒரே நேரத்தில் இதன் மூலம் வழங்க முடியும். இது நெட்வொர்க்கிங் மற்றும் O&M ஆகியவற்றை எளிதாக்குவதுடன் மிருதுவான் பரிணாம மாற்றத்தை காண்பிக்கிறது.

Network Automation: Huawei 5G Core ஆனது, வலையமைப்பு தன்னியக்கப்படுத்தலில் சிறப்பாக செயல்பட்டது. telco cloud இனை நம்பியிருக்கும் தன்னியக்கமான வலையமைப்பு (ADN) தீர்வை நிறுவனம் முன்வைத்துள்ளது. இந்த தீர்வு உயர் வலையமைப்பு நிலைத்தன்மை, திறனான வலையமைப்பு மாற்றம், உகந்த வலையமைப்பு அனுபவம் ஆகியவற்றை செயற்படுத்துவதோடு, ADN அளவை L4 இற்கு உயர்த்த உதவுகிறது.

அனைத்துத் துறைகளுக்குமான தொடர்ச்சியான புத்தாக்க  கண்டுபிடிப்புகள், ஆய்வுகள், வணிக நடைமுறைகளுடன், 5G தொழில்துறை வளர்ச்சியானது விரைவான பாதையில் பயணிப்பதுடன், ஒரு வலுவான core வலையமைப்பானது இந்த செயன்முறைக்கு ஆதரவளிக்கும். Huawei தனது 5G Core தீர்வை மேலும் மேம்படுத்தி வணிகமயமாக்குவதைத் தொடரும் என்பதுடன், இது உலகளாவிய வலையமைப்புகள் தங்கள் 5GtoC மற்றும் 5GtoB சேவைகளை மேம்படுத்தி அவர்களது வணிக வெற்றியை அடைய உதவும்.

Image caption:

Huawei 5G Core ஆனது தொடர்ச்சியாக நான்கு வருடங்களாக உலகளாவிய ரீதியில் முன்னணியில் திகழ்கிறது

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *