தரவு சேமிப்பக சக்தி விளக்க அறிக்கையை வெளியிட்ட Huawei – உயர்தர வளர்ச்சியின் டிஜிட்டல் அடித்தளம்
அண்மையில் இடம்பெற்ற Huawei Connect 2022 இல், உயர்தர வளர்ச்சியின் டிஜிட்டல் அடித்தளமான, தரவு சேமிப்பக சக்தி விளக்க அறிக்கையை (white paper, Data Storage Power) Huawei உத்தியோகபூர்வமாக வெளியிட்டிருந்தது. சேமிப்பகத் தொழில்துறையின் வளர்ச்சியை ஆராய்ந்து, தரவு சேமிப்பக திறன்களை அளவிடுவதற்கான அளவு ரீதியான குறிகாட்டிகளை white paper வரையறுப்பதோடு, உலகெங்கிலும் உள்ள பல்வேறு பிராந்தியங்களில் தற்போதைய தரவு சேமிப்பக துறையையும் பகுப்பாய்வு செய்துள்ளது. தரவு சேமிப்பக திறன்களை சிறப்பாக மதிப்பிடவும், வடிவமைக்கவும், உருவாக்கவும் அரசாங்கங்கள் மற்றும் நிறுவனங்களுக்கு உதவுவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
Huawei IT தயாரிப்பு வரிசை துணைத் தலைவரரான Gu Xuejun இது தொடர்பில் தெரிவிக்கையில், “தரவு சேமிப்பக திறன் தற்போது கொள்ளளவினால் அளவிடப்படுகிறது. இருப்பினும், தொழில்துறையின் விரைவான வளர்ச்சி மற்றும் AI மற்றும் பெரும் தரவு, திறன் போன்ற புதிய, பன்முகப்படுத்தப்பட்ட தரவுச் சேவைகளின் தோற்றத்தை தொடர்ந்து, எதிர்கால மேம்பாடு மற்றும் சேமிப்பக தொகுதிகளின் நிர்மாணத்தை அளவிடுவதற்கு, கொள்ளளவு மாத்திரம் போதாது என்பது புலனாகிறது. தரவு சேமிப்பக திறன்களை திறம்பட அளவிடுவதற்கு, எமக்கு மேலும் விஞ்ஞான ரீதியான வரையறை மற்றும் மதிப்பீட்டுத் தொகுதி அவசியமாகும்.” என்றார்.
அறிவார்ந்த உலகமானது, தொழில்துறைகள் முழுவதும் புரட்சிகரமான தரவு வளர்ச்சியை இயக்குவதோடு, இந்தத் தொழில்துறைகளின் டிஜிட்டல் மாற்றத்திற்கு சக்திவாய்ந்த தரவுச் சேமிப்பு திறன்கள் அல்லது தரவு சேமிப்பக சக்தி தேவைப்படுகிறது. இந்த white paper ஆனது, தரவு சேமிப்பு சக்தியின் எண்ணகருவை விளக்குவதோடு, அதனை வழங்குகிறது:
தரவு சேமிப்பக சக்தியின் ஒரு எண்ணக்கரு மற்றும் பொருள்: தரவு சேமிப்பக சக்தி என்பது ஒரு விரிவான எண்ணகருவாகும். இதில் சேமிப்புத் திறன் (முக்கிய), செயற்றிறன், நம்பகத்தன்மை, பசுமை நிலை ஆகியன உள்ளடடங்குகின்றன.
தரவு சேமிப்பக பெறுமதியின் அளவு ரீதியான ஆய்வு: 1 டொலரின் தரவு சேமிப்பக முதலீடு 5 டொலரின் பெறுமதியை வழங்குவதோடு, 8 டொலரின் மறைமுக பெறுமதி மற்றும் 30-40 டொலர் தூண்டப்பட்ட பெறுமதி ஆகியவற்றின் மீது பங்களிக்கிறது என்பதை Huawei இன் கணிப்பீடுகள் காண்பிக்கின்றன.
ஒரு பகுதியின் அல்லது தரவு மையத்தின் தரவு சேமிப்பக சக்தியை மதிப்பிடும் ஒரு காட்டித் தொகுதி: இந்த தொகுதியானது, நாடுகள் மற்றும் நிறுவனங்களின் குணாதிசயங்களின் அடிப்படையில் அளவு, செயல்திறன், அடித்தளம், முன்னேற்றம் ஆகிய நான்கு திசைகளிலான, 35 மூன்று-நிலை குறிகாட்டிகளைக் கொண்டுள்ளது.
20 நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் உள்ள சேமிப்பக சக்தியின் மதிப்பீடு: சில நாடுகள் தரவு சேமிப்பக சக்தி தரவரிசையில் ஏன் முன்னணி வகிக்கின்றன என்பதையும் தரவரிசையில் குறைந்த நிலையில் உள்ளவர்கள் எவ்வாறு அவர்களை எட்டிப் பிடிக்க முடியும் என்பதை இந்த விளக்க அறிக்கை (white paper) பகுப்பாய்வு செய்கிறது. தரவு சேமிப்பக சக்தியை மேம்படுத்துவதற்கான கொள்கை ரீதியான பரிந்துரைகளையும் இது வழங்குகிறது.
Gu Xuejun மேலும் தெரிவிக்கையில், “இந்த விளக்க அறிக்கைளை ஒரு அர்த்தமுள்ள ஆய்வாக நான் கருதுகிறேன். இது தரவு சேமிப்புத் தொழிற்துறையின் வளர்ச்சியை மேம்படுத்துவதில் அதிக ஆர்வத்தை உருவாக்கும். தரவு நன்றாகச் சேமிக்கப்பட்டு, விரைவாகக் கணக்கிடப்பட்டு, வலையமைப்புகள் மூலம் நிலையாக அனுப்பப்படும் போது மட்டுமே, டிஜிட்டல் உட்கட்டமைப்பு தரவின் மதிப்பு வெளிப்படுத்தப்படுகிறது. இது உயர்தர பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சியை சிறப்பாக மேம்படுத்தும்.” என்றார்.