Tamil

ESG Summit 2024 இல் தங்க விருது பெற்ற Neptune Recyclers

மீள்சுழற்சி செய்யக்கூடிய கழிவு முகாமைத்துவத்தில் நாட்டின் முன்னணி நிறுவனமான Neptune Recyclers நிறுவனம், கொழும்பு பல்கலைக்கழக MBA பழைய மாணவர் சங்கத்தினால் கடந்த 2024 ஓகஸ்ட் 06ஆம் திகதி கொழும்பு சினமன் கிராண்ட் ஹோட்டலில் ஏற்பாடு செய்திருந்த சுற்றுச்சூழல், சமூக, ஆளுகை (ESG) உச்சிமாநாடு 2024 (ESG Summit 2024) இல் தங்க விருதைப் பெற்றதன் மூலம், ஒரு முக்கிய மைல்கல்லை எட்டியுள்ளது. இந்த மதிப்புமிக்க விருதானது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

இவ்விருது வழங்கும் விழாவில், Neptune Recyclers சிரேஷ்ட நிர்வாகக் குழு உறுப்பினர்களான பிரதம நிறைவேற்று அதிகாரி பஸ்லீன் மஜீத், வணிக மேம்பாட்டு முகாமையாளர் ஆதில் அஸீஸ், மோஷின் முஸ்தாக், வகீல் ஸக்கரியா ஆகியோர் கலந்து கொண்டனர். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடமிருந்து இந்த விருதைப் பெற்றுக் கொள்ளும் கௌரவம் பஸ்லீன் மஜீத் மற்றும் ஆதில் அஸீஸ் ஆகியோருக்கு கிடைத்தது. நிலைபேறான வளர்ச்சியை நடைமுறைப்படுத்துவதில் நிறுவனத்தின் ஈடு இணையற்ற அர்ப்பணிப்பை அங்கீகரிக்கும் வகையில் இந்த விருது நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.

இந்த முக்கிய சாதனையானது, நிறுவனத்தின் மரபணுவின் மையத்தில் உள்ள நிலைபேறான வளர்ச்சியை ஒருங்கிணைப்பதிலான நிறுவனத்தின் அர்ப்பணிப்பை கோடிட்டுக் காட்டுகிறது. பல்வேறு துறைகளில் புத்தாக்கம் மற்றும் ஒத்துழைப்பை வளர்க்கும் அதே வேளையில், இலங்கையில் வட்டப் பொருளாதார நடைமுறைகளை மேம்படுத்தும் நிறுவனத்தின் தொலைநோக்கு பார்வையுடன் இது ஒன்றிணைகின்றது. மக்களுக்கும் பூமிக்கும் பயனளிக்கும் நிலைபேறான தீர்வுகளைப் பின்பற்ற சமூகங்கள் மற்றும் வணிகங்களை ஊக்குவிப்பதில் Neptune Recyclers கவனம் செலுத்துகின்றது.

எதிர்கால சந்ததியினருக்காக இயற்கை வளங்களை பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை Neptune Recyclers இன் தொலைநோக்குப் பார்வை வலுவாக வலியுறுத்தும் அதேவேளை, வட்டப் பொருளாதார நடைமுறைகளில் இலங்கையை வழிநடத்துவதாக அமைகின்றது. நிலைபேறன வளர்ச்சி என்பது ஒரு முக்கிய பொறுப்பு எனவும், அதை நிலைநிறுத்துவது பெருமைப்பட வேண்டிய ஒன்று என்றும் நிறுவனம் நம்புகிறது.

இந்த அங்கீகாரத்தை பெறுவதற்கான விலைமதிப்பற்ற ஆதரவு மற்றும் பங்களிப்பை வழங்கிய அனைத்து பங்குதாரர்களுக்கும் நிறுவனம் தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது. Neptune Recyclers நிறுவனத்தின் வெற்றிக்கு அதன் குழுவினர் மற்றும் கூட்டாளர்களின் கூட்டு முயற்சிகளே காரணமாகும். அனைவரின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் ஒரு செழிப்பான வட்டப் பொருளாதாரத்தை உருவாக்குவதன் மூலம் நீண்ட கால சாதகமான தாக்கத்தை ஏற்படுத்துவதில் நிறுவனம் உறுதியுடன் உள்ளது.

Neptune Recyclers பற்றி:

தொழிற்துறையில் 30 வருடங்களுக்கும் மேலான முன்னோடியான அனுபவத்தைக் கொண்டுள்ள Neptune Recyclers இலங்கையின் மீள்சுழற்சி மற்றும் கழிவு முகாமைத்துவத் துறையில் புத்தாக்கம் மற்றும் நிலைபேறான தன்மையின் கலங்கரை விளக்கமாக திகழ்கின்றது. Ex-Pack Corrugated Cartons PLC இன் துணை நிறுவனமும், பிரபல Aberdeen Group இன் பெருமைக்குரிய உறுப்பு நிறுவனமும் எனும் வகையில், சிறந்து விளங்குவதற்கும் சூழலைப் பாதுகாப்பதற்கும் எமது அர்ப்பணிப்பு அசைக்க முடியாததாகும். துணி மற்றும் காகித மீள்சுழற்சியில் நிபுணத்துவம் பெற்ற நாம், நிலைபேறான மற்றும் பொறுப்பான கழிவு முகாமைத்துவ அனுபவத்தை உறுதி செய்யும் வகையில் கழிவுகளை பெறுமதிமிக்க பொருட்களாக மாற்றுவதன் மூலம் வட்டப் பொருளாதாரத்திற்கு பங்களிக்கிறோம். அந்த வகையில், இலங்கைக்கு பசுமையான எதிர்காலத்தை கட்டியெழுப்ப எம்முடன் இணைந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்கிறோம்.

Share

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *