Hayleys உடனான மூலோபாய கூட்டாண்மை மூலம், இலங்கையில் கால் பதிக்கத் தயாராகும் NURA

By
3 Min Read

பல்வேறு முக்கிய வாழ்வியல் நோய்கள் மற்றும் பொதுவான புற்றுநோய்களை முன்கூட்டியே கண்டறிவதில் கவனம் செலுத்தும் ஜப்பானிய பாணியை பின்பற்றிய நோய்ப் பரிசோதனைக்கான அனுபவம்

FUJIFILM DKH LLC நிறுவனத்தால் முன்னெடுக்கப்படும் AI இனால் இயக்கப்படும் நோய்த் தடுப்பு சுகாதாரப் பரிசோதனை மையங்களின் சர்வதேச வலையமைப்பான NURA, Hayleys குழுமத்தின் துணை நிறுவனமான Innovative Health Solutions (Pvt) Ltd. நிறுவனத்துடனான மூலோபாய கூட்டணியின் மூலம் 2027 ஜனவரியில் இலங்கைக்கு அதன் விரிவாக்கத்தை முன்னெடுக்கவுள்ளது.

NURA சுகாதார மையத்தில் முன்னெடுக்கப்படும் சுகாதாரப் பரிசோதனையானது, வழக்கமான உணவு உட்கொள்ளாதிருக்கும் நடைமுறைத் தேவையின்றியதும், மருத்துவரின் பரிந்துரை இன்றியதுமான, சுமார் 120 நிமிடங்களிலேயே முன்னெடுக்கப்படுகின்ற ஒன்றாக விளங்குகின்றது. வருகை தருவோருக்கு ஆறுதலாகவும் பாதுகாப்பு மிக்கதாகவும் அமையும் வகையில் வடிவமைக்கப்பட்ட, மேம்பட்ட பரிசோதனை முறைகளைப் பயன்படுத்தி, முக்கியமான வாழ்வியல் நோய்கள் மற்றும் பொதுவான புற்றுநோய்களை கண்டறிவதை உள்ளடக்கிய, வரிசைப்படுத்தப்பட்ட தொடர் ஸ்கேன்கள் மற்றும் சோதனைகள் மூலம் அவர்கள் கவனிக்கப்படுகிறார்கள்.

நேருக்குநேர் கலந்துரையாடும் மருத்துவரின் ஆலோசனையும் இந்த பரிசோதனை அனுபவத்தில் உள்ளடங்குவதோடு, சுகாதார அறிக்கை அவ்விடத்திலேயே வழங்கப்படுகிறது. இதன் மூலம் முழுச் செயன்முறையையும் ஒரே வருகையில் நிறைவு செய்ய முடியும். நெறிப்படுத்தப்பட்ட இந்தச் செயன்முறைகள், விருந்தினர்களின் வசதியைக் கருத்தில் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. இது விரிவான சுகாதாரப் பரிசோதனையை எளிதாகவும் வேலைப்பளுமிக்க வழக்கமான நடைமுறையுடன் இணைக்கும் வகையிலும் எளிதானதாகும்.

NURA வின் பரிசோதனையானது, வழக்கமான CT ஸ்கேன்களை விட 97% குறைவான கதிர்வீச்சைப் பயன்படுத்துகின்ற அதி-குறைந்த கதிர்வீச்சு கொண்ட CT இயந்திரத் தொகுதிகள் உள்ளிட்ட, உலகளாவிய ரீதியில் நம்பிக்கை வென்ற Armament ஜப்பானிய Fujifilm புகைப்படவியல் தொழில்நுட்பத்தை கொண்டுள்ளது. Fujifilm இன் பல தசாப்த கால புகைப்படவியல் ஆராய்ச்சியை அடிப்படையாகக் கொண்டு, AI ஆதரவு தொழில்நுட்பங்கள் புகைப்படத்தின் தரத்தை மேம்படுத்துவதுடன், சாத்தியமான கவலைக்குரிய விடயங்களை மருத்துவர்கள் அடையாளம் காணவும், மருத்துவ மதிப்பீடு மற்றும் முடிவுகளை எடுப்பதற்கும் உதவுகின்றன.

இலங்கையில் NURA வின் விரிவாக்கம் குறித்து கருத்து தெரிவித்த, NURA வின் நிறுவுனரும் அதன் பணிப்பாளருமான Masaharu Morita தெரிவிக்கையில்: “சுகாதாரப் பரிசோதனையை வழக்கத்தில் கொண்டிருப்பதானது, ஜப்பானில் அன்றாட வாழ்க்கையின் ஒரு அங்கமாகும். கவலைக்கு உள்ளாவதற்கு எவ்வித காரணமும் அற்ற நீண்ட காலத்திற்கு முன்னரே மக்கள் அதை ஒரு முற்கூட்டிய பழக்கமாக கொண்டிருக்கிறார்கள். அந்த கலாசாரத்தை உலகிற்கு NURA அறிமுகப்படுத்துகிறது. ஏற்கனவே இந்தியா, மங்கோலியா, வியட்நாம், தாய்லாந்து, துபாய் ஆகிய இடங்களில் எமது மையங்கள் உள்ளன. அந்த வகையில் அடுத்து இலங்கைக்கு வருவதில் நாம் பெருமிதம் கொள்கிறோம். மருத்துவர்களுக்கு AI ஆதரவுடனான மற்றும் அதி-குறைந்த கதிர்வீச்சுடைய CT மூலமான வருடாந்த பரிசோதனையை நடைமுறைப்படுத்தும் ஒரு பிரத்தியேக சுகாதாரப் பரிசோதனை மையமே NURA ஆகும். இலங்கையில் உள்ள அனைவரும், நம்பிக்கையுடனும் எளிதாகவும் அணுகக்கூடிய நோய்த் தடுப்பு பராமரிப்பை உருவாக்குவதே எமது இலக்காகும்.” என்றார்.

NURA பற்றி மேலும் அறிய விரும்புவோர் மற்றும் அது திறக்கப்படுவதற்கு முன்பே அது தொடர்பான புதுப்பிப்புகளைப் பெற விரும்புவோர் www.nurahealth.lk/waitlist எனும் இணையதளத்தில் காத்திருப்போர் பட்டியலில் இணைந்து கொள்ளலாம்.

NURA பற்றி

NURA என்பது FUJIFILM Corporation மற்றும் Dr. Kutty’s Healthcare (DKH) ஆகிய அமைப்புகளுக்கு இடையேயான ஒத்துழைப்பின் மூலம் நிறுவப்பட்ட ஒரு நோய்த் தடுப்பு சுகாதாரப் பரிசோதனை வர்த்தகநாமம் ஆகும். இது அவர்களின் கூட்டு முயற்சியான FUJIFILM DKH LLC மூலம் இயக்கப்படுகிறது. 2021 இல் பெங்களூரில் அதன் முதலாவது மையம் திறக்கப்பட்டதிலிருந்து, பல்வேறு இடங்களுக்கு NURA அதன் விரிவாக்கத்தை அடைந்துள்ளது. மேம்பட்ட புகைப்படவியல் தொழில்நுட்பம் மற்றும் AI ஆதரவுடனான பகுப்பாய்வை, முக்கிய வாழ்வியல் நோய்கள் மற்றும் பொதுவான புற்றுநோய்களை முன்கூட்டியே அடையாளம் காண்பதற்கான நோயாளிகளை மையமாகக் கொண்ட அணுகுமுறையுடன் இணைக்கிறது. இதன் விரிவான பரிசோதனை அனுபவமானது, பொதுவாக சுமார் 120 நிமிடங்களில் நிறைவு செய்யப்படுவதுடன், நேரடியாக மருத்துவருடன் கலந்துரையாடும் மருத்துவ ஆலோசனையையும் உள்ளடக்கியதாகும்.

Innovative Health Solutions (Pvt) Ltd. பற்றி

Hayleys குழுமத்தின் துணை நிறுவனமான Innovative Health Solutions (Pvt) Ltd., மேம்பட்ட மருத்துவ தொழில்நுட்பங்கள் மற்றும் நோய்த் தடுப்பு சுகாதாரப் பரிசோதனைத் தீர்வுகளை அறிமுகப்படுத்துவதன் மூலம் இலங்கையின் சுகாதாரத் துறையை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தி வருகிறது. உலகளாவிய சுகாதார நிபுணத்துவம் மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றங்களை உள்நாட்டு தேவைகளுடன் இணைப்பதன் மூலம், மேம்பட்ட பரிசோதனைத் திறன்களை உள்ளூர் சந்தைக்குக் கொண்டு வருவதையும், முன்கூட்டியே நோய் கண்டறிதல் மற்றும் நோய்த் தடுப்பு பராமரிப்பு மீதான கவனத்தை வலுப்படுத்துவதையும் இந்நிறுவனம் நோக்கமாகக் கொண்டுள்ளது.

Share This Article