DIMO Initium உடன் தனது வணிக நடவடிக்கைகளை மேலும் விரிவுபடுத்தும் DIMO

Author
By Author
2 Min Read

இலங்கையின் முன்னணி பாரிய நிறுவனங்களில் ஒன்றான DIMO, தொழில்துறை, ஊட்டச்சத்து மற்றும் கட்டுமான இரசாயனப் பிரிவுகளின் கீழ் சந்தைக்கு தீர்வுகளை வழங்குவதன் மூலம் தனது வணிக நடவடிக்கைகளின் விரிவாக்கத்தை தொடர்கின்றது. ‘DIMO Initium’ என்ற புதிய வர்த்தகநாம அடையாளத்தின் கீழ் அதன் புதிய வணிக நடவடிக்கை ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.

மேற்கூறியவற்றிற்கு இணங்க, தொழில்துறை மற்றும் ஊட்டச்சத்து மற்றும் கட்டுமான இரசாயன வணிகங்களின் பிரிவுகளில் முறையே உலகளாவிய முன்னணி நிறுவனங்களான BASF மற்றும் Master Builders Solutions (MBS) உடன் DIMO கைகோர்த்துள்ளது. இலங்கையில் உள்ள பல தொழில்துறைகள் மற்றும் வணிகங்களுக்கு அத்தியாவசியமான செயல்திறன் சார்ந்த தீர்வுகளை வழங்க DIMO Initium தயாராக உள்ளது. அதன் தொழில்துறை தீர்வுகள் பிரிவு இறப்பர் மற்றும் பிளாஸ்டிக், தளபாடங்கள் மற்றும் நீடித்துழைக்கும் பொருட்கள், ஆடை மற்றும் ஒட்டோமோட்டிவ் போன்ற தொழில்களுக்கு தீர்வுகளை வழங்குவதில் முக்கிய பங்கு வகிக்கவுள்ளதுடன், ஊட்டச்சத்து தீர்வுகள் விலங்கு, மருந்து மற்றும் மனித ஊட்டச்சத்து பிரிவுகளில் பரவலாக கவனம் செலுத்தும். மேலும், கட்டுமான இரசாயனப் பிரிவானது கலவைகள், நீர்காப்பு மற்றும் சீலண்டுகள், பழுதுபார்ப்பு மற்றும் பாதுகாப்பு உள்ளடங்கலான நிலத்தடி கட்டுமானம் மற்றும் பெர்போமன்ஸ் புளோரிங் போன்ற தீர்வுகளை வழங்குகிறது.

DIMO தலைவரும், முகாமைத்துவ பணிப்பாளருமான ரஞ்சித் பண்டிதகே கருத்து தெரிவிக்கையில், “DIMO Initium இனை உருவாக்குவது என்பது பாரிய பன்முகத்தன்மையை ஏற்படுத்துவதற்கான எமது தொடர்ச்சியான தேடலின் ஒரு பகுதியாகும். இந்த புதிய முயற்சிகள் வளர்ச்சிக்கான புதிய வழிகளை வழங்குவதுடன், புதிய வணிக களங்களுக்கான வாயில்களைத் திறக்கிறது. எங்கள் பெறுமதியான வாடிக்கையாளர்களுக்கும், ஏனைய பங்குதாரர்களுக்கும் சந்தேகத்திற்கு இடமின்றி அதிக நன்மைகளை வழங்கும் இந்த நீண்ட கால பல்வகைப்படுத்தல் உத்தியை நாங்கள் தொடர விரும்புகிறோம்,”என்றார்.

மேலும், புதிய வணிகத் துறையின் கீழ், வாடிக்கையாளர்களுக்கு பரந்த மற்றும் மேம்பட்ட தீர்வுகளை வழங்க வளங்களில் முதலீடு செய்ய DIMO உறுதிபூண்டுள்ளது. மேலும், உள்நாட்டு உற்பத்தி மற்றும் பெறுமதி சேர்வைகளை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்ட அரசாங்கத்தின் பொருளாதாரக் கொள்கைகளுக்கு இணங்க, கட்டுமானம் மற்றும் மருந்துகள் போன்ற பிரிவுகள் தொடர்பாக, இந்த இலக்கை நோக்கி பங்களிக்கும் திறனைப் பற்றி DIMO நம்பிக்கையுடன் உள்ளது.

சப்புகஸ்கந்த லிண்டெல் எஸ்டேட்டில் DIMO Initium இன் கீழ், கட்டுமான இரசாயன வணிகத்தின் செயல்பாடுகளை DIMO அண்மையில் அதிகாரபூர்வமாக தொடங்கியது.

எதிர்காலத்தில், DIMO அதன் தொடக்கத்தில் இருந்து நன்கறியப்பட்ட வழக்கமான உயர் மட்ட சேவையை வழங்கும் அதேவேளை, DIMO Initium இன்றைய வாடிக்கையாளர்களின் வளர்ந்து வரும் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக புதிய, புத்தாக்க தீர்வுகள் மற்றும் அதிக பெறுமதி சேர்வைகளை அறிமுகப்படுத்துவதன் மூலம் தொழில்துறையை விரிவுபடுத்தும்.

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *