ஒவ்வொரு புதிய மஹிந்திரா யுவோ டிரக்டர் கொள்வனவின் போதும் ரொட்டவேட்டர் ஒன்றை இலவசமாக வழங்கியது
DIMO விவசாய இயந்திர பிரிவானது பெரும் போகத்திற்கு தயாராகும் பொருட்டு தனது வருடாந்த டிரக்டர் சேவை பிரசாரத்தை ஆரம்பித்திருந்ததுடன், இதன்போது விசேட சலுகையாக ஒவ்வொரு புதிய மஹிந்திரா டிரக்டர் கொள்வனவின் போதும் ரொட்டவேட்டர் ஒன்றை இலவசமாக வழங்கியது.
பருவகாலம் முழுவதும் அதிகபட்ச செயல்திறனுடன் இயங்குவதற்கும், நீடித்துழைக்கும் பொருட்டும் எந்தவொரு டிரக்டரும் பருவகாலத்துக்கு முன்னதாக சீராக்கம் செய்யப்பட வேண்டும் என்பது அனைவரும் அறிந்த உண்மையாகும். இதனைக் கருத்தில் கொண்டு இந்த சேவை பிரசாரத்தின் ஊடாக மஹிந்திரா டிரக்டர் உரிமையாளர்கள் தங்கள் டிரக்டர்களை பெரும் போகத்திற்கு தயார்படுத்தும் பொருட்டு விரிவான டிரக்டர் பரிசோதனை அறிக்கையை பெற்றுக்கொண்டதுடன், சிறிய பழுதுபார்ப்பு மற்றும் சீராக்கல் சேவையை எந்தவொரு உழைப்புக் கட்டணமும் இன்றி மேற்கொள்ள வாய்ப்பு வழங்கப்பட்டது. அதேவேளை, உதிரிப் பாகங்களுக்கு விசேட கழிவுகளும் வழங்கப்பட்டன. மேலும், பெரும் போகத்தின் பொருட்டு விவசாயிகளுக்கு ஒவ்வொரு புதிய மஹிந்திரா யுவோ டிரக்டர் கொள்வனவுடனும் இலவச ரொட்டவேட்டரை வழங்கவும் நிறுவனம் ஏற்பாடுகளை மேற்கொண்டிருந்தது.
பெரும் போக மஹிந்திரா சேவை பிரசாரம், 2020 ஓகஸ்ட் 11 ஆம் திகதி ஆரம்பமாகி 2020 செப்டம்பர் 5 ஆம் திகதி வரை அம்பாறை, மொனராகலை, பதுளை, பொலன்னறுவை, அனுராதபுரம், திருகோணமலை, குருநாகல், புத்தளம், மட்டக்களப்பு, வவுனியா, முல்லைத்தீவு, கிளிநொச்சி மற்றும் மன்னார் மாவட்டங்களில் நடைபெற்றதன் மூலம் நாட்டின் பிரதான விவசாய பிரதேசங்கள் அனைத்தையும் உள்ளடக்கியிருந்தது.
இந்த சேவை பிரசாரங்களில் பங்கேற்கும் விவசாயிகள் தமது மஹிந்திரா டிரக்டர்களுக்கு சேவையைப் பெற்றுக்கொள்ளும் அதேவேளை, தமது உடல்நலம் மற்றும் உடற்தகுதி நிலையை பரிசோதித்து, தகுதி வாய்ந்த மருத்துவ நிபுணர்களிடமிருந்து மருத்துவ ஆலோசனையைப் பெறக்கூடிய ஒரு இலவச மருத்துவ முகாமையும் DIMO ஏற்பாடு செய்திருந்தது. மேலும் WD-40 மற்றும் DIMO LUMIN போன்ற பிற DIMO தயாரிப்புகளை பரிசோதித்து பார்த்து கொள்வனவு செய்யவும் அவர்களுக்கு வாய்ப்பு கிடைத்ததுடன், DIMO டயர்களுக்கான தள்ளுபடி வவுச்சர்களும் வழங்கப்பட்டன.
இந்த சேவை பிரசாரத்தின் போது பங்கேற்பாளர்களை மகிழ்விக்க கவர்ச்சிகரமான பரிசுகளுடன் கூடிய விளையாட்டுகளும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. மேலும், குறைந்தபட்ச ஆரம்ப கொடுப்பனவுடன் கவர்ச்சிகரமான கட்டணத்தில் நிதி உதவியை வழங்கும் பொருட்டு சனச அபிவிருத்தி வங்கி உள்ளிட்ட பல்வேறு நிதி நிறுவனங்களுடன் DIMO கைகோர்த்திருந்தது.
இது தொடர்பில் DIMOவின் Retail Cluster இற்கான பிரதான செயற்பாட்டு அதிகாரி, விரங்க விக்ரமரத்ன கருத்து தெரிவிக்கையில், “உள்நாட்டு விவசாய துறையை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் அதேவேளை, இலங்கைக்கு விவசாய இயந்திரமயமாக்கலை அறிமுகப்படுத்துவதில் DIMO முன்னணியில் உள்ளது. ஒரு பொறுப்பான நிறுவனமாக, இவ் வகையான சேவை பிரசாரங்கள், இலவச சலுகைகள் மற்றும் நிதி நிறுவனங்களுடனான கூட்டாண்மை ஆகியன விவசாயத்தில் ஈடுபட அதிகமான இலங்கை மக்களுக்கு ஊக்கமாக அமையுமென நாங்கள் நம்புகிறோம்,”என்றார்.
DIMO Agri Machinery Division இன் தலைமை அதிகாரி அமில டி சில்வா கருத்து தெரிவிக்கையில், “இந்த சேவை பிரசாரங்கள் விவசாயிகளுடன் தொழில்நுட்ப அறிவைப் பகிர்ந்து கொள்ள எங்களுக்கு உதவுகின்றது. ரொட்டவேட்டர்கள் போன்ற விவசாய உட்பொருத்தல் சாதனங்களை இலவசமாக வழங்குவதன் மூலம் நவீன விவசாய முறைகளுக்கு ஏற்றவாறு செயல்பட உதவுவதுடன், அவர்களின் உற்பத்தித்திறனை அதிகரிக்கின்றது. நாம் பெரும் போகத்திற்கு மாத்திரம் தயாராகவில்லை. அதனோடு, விவசாயிகளின் உடல்நலம் மற்றும் உடல் தகுதி நிலைகள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். எனவே, இந்த சேவை பிரசாரங்களின் போது விவசாயிகளுக்கு இலவச மருத்துவ பரிசோதனையை ஏற்பாடு செய்திருந்தோம்”, என்றார்.
நிறுவனத்தினுடைய பேண்தகு வியாபார அணுகுமுறை மற்றும் சேவையின் நேர்மையால் உந்தப்பட்ட DIMO, மஹிந்திரா டிரக்டர்கள் மற்றும் ஏனைய விவசாய இயந்திர தயாரிப்புகளுடனும் இலங்கை விவசாய சமூகத்துடன் வலுவான உறவினை கட்டமைத்துள்ளது.
பட விளக்கம்
DIMOவின் மஹிந்திரா டிரக்டர் சேவை பிரசாரம்