????????????????????????????????????

இலங்கையில் தொழில்நுட்ப திறன்மிக்க சமூகத்தை வலுவூட்டும் பயணத்துக்கு தலைமை தாங்கும் STEMUp

Author
By Author
5 Min Read

2016 ஆம் ஆண்டு இலாப நோக்கமற்ற நிறுவனமாக ஸ்தாபிக்கப்பட்ட STEMUp கல்வியியல் அறக்கட்டளையானது தகவல் தொழில்நுட்பம், விஞ்ஞானம், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம் (STEM) பாடவிடயங்களில் உயர் கல்வி மற்றும் தொழில்சார் வாழ்க்கையைத் தொடர, மாணவர்களை வலுவூட்டுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. STEMUp இதுவரை ஆயிரக்கணக்கான மாணவர்களுக்கு அதன் தனித்துவமான மற்றும் புதுமையான கற்கைநெறிகள் மற்றும் நாடு முழுவதுமான பயிற்சி அமர்வுகள் மூலம் வலுவூட்டியுள்ளது. இளைஞர்கள் டிஜிட்டல் வெளியின் ஊடாக பயணிக்க உதவியை வழங்குவதனை இலட்சியமாகக் கொண்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட தன்னார்வலர்களை நாடு முழுவதும் STEMUp  கொண்டுள்ளது. ஐ.டி மற்றும் (STEM) பாடங்களுக்கு மேலதிகமாக, இவ் அறக்கட்டளையானது Artificial Intelligence, Machine Learning மற்றும் மேலும் பல மாற்றங்களுக்கு வழிவகுக்கும் தொழில்நுட்பங்களில் கற்றல் மூலங்களை வழங்குகிறது.

ஐ.டி கல்வி மூலம் இளைஞர்களை வலுவூட்டும் தனது உறுதிப்பாட்டிற்காக SLT Zero One Awards 2020  இல் அங்கீகாரத்தைப் பெற்றுக் கொண்டது. இதன் பிரபல நிகழ்ச்சித் திட்டங்களில் ஒன்றான CoderDojo Sri Lanka’, ‘வருடத்தின் சிறந்த சமூக வலுவூட்டல் நிகழ்ச்சித்திட்டம்’ என்ற விருதினையும், தகவல் துறையில் ‘சிறந்த சமூக வலுவூட்டல் நிகழ்ச்சித்திட்டம்’ என்ற விருதினையையும் தனதாக்கியது. இதன் coding ஆதரவு நிகழ்ச்சித் திட்டமான ‘Micro:bit Sri Lanka’, அரசாங்க மற்றும் இலாப நோக்கற்ற ஸ்தாபனங்களுக்கான ‘சிறந்த சமூக வலுவூட்டல் நிகழ்ச்சித் திட்டம்’ என்ற பிரிவில் இரண்டாம் இடத்தையும் பெற்றுக்கொண்டது.

Micro:bit Sri Lanka  என்பது இலங்கை இளைஞர்களிடையே coding ஐ மேம்படுத்துவதற்காக இங்கிலாந்தில் உள்ள Micro:bit அறக்கட்டளையின் ஆதரவுடன் STEMUp ஆல் வலுவூட்டப்படும் ஒரு முக்கிய முயற்சியாகும். Micro:bit Sri Lanka ஏற்கனவே தொழில்சார் நிறுவனங்கள், பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த 1000 க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் குழாத்தின் ஊடாக நாடு முழுவதும் 500 க்கும் மேற்பட்ட அமர்வுகளை நடாத்தியுள்ளதுடன், நூலகத்திலிருந்து மாணவர்கள் Micro:bit சாதனத்தை, பாவனையாளர் வழிகாட்டியுடன் இரவலாக பெற்றுக்கொள்ள முடியும். Micro:bit என்பது ஒரு பொக்கெட் அளவிலான சாதனமாகும், இது ஐரோப்பிய நாடுகளின் கல்வி கட்டமைப்பில் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. இது Computer Programming ஐ தனித்துவமான முறையில் கற்கும் வாய்ப்பை வழங்குகிறது.

எமது தன்னார்வலர்களின் அர்ப்பணிப்பை இங்கு குறிப்பிட வேண்டியது மிக அவசியமாகும். தாம் கற்றுக்கொண்டவற்றை இளஞ் சமுதாயத்தினருக்கும் வழங்க வேண்டியதன் அவசியத்தை நன்கு உணர்ந்த, நன்கு ஸ்தாபிக்கப்பட்ட தன்னார்வலர்களின் குழாமே எமது பெரிய பக்கபலமாகவுள்ளது. சில வருடங்களுக்கு முன்பாக கிராமப்புறங்களைப் பொறுத்தவரை Computer Programming, IOT மற்றும் Machine Learning கல்வி போன்ற வசதிகள் கிடைப்பதென்பது ஓர் அரிய விடயமாகவே இருந்ததுடன், மாற்றங்களுக்கு வழிவகுக்கும் இத்தகைய தொழில்நுட்ப வசதிகளைப் பின்தங்கிய பிரதேசங்களுக்கும் கொண்டு சேர்த்ததில் STEM up முன்னோடியாக விளங்குகின்றது. தகவல் தொழில்நுட்பக் கல்விக்கான வளங்களின்றித் தவிக்கும் அடிமட்ட பகுதிகளுக்கும் தோள் கொடுக்கும் எமது தீர்மானத்தில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் கரங்கோர்த்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும். அதி நவீன தொழில்நுட்பங்களை இலங்கைக்குக் கொண்டு வரவும், STEM திறன்களுக்கான இடைவெளியை நிரப்பி, ஒரு தலைமுறை புதுமையாளர்களையும், சிறந்த சிக்கல் தீர்வாளர்களையும், பகுத்தறிவுச் சிந்தனையாளர்களையும் கட்டியெழுப்ப தாம் ஆர்வம் கொண்டுள்ளது,” என STEMup கற்கை கல்வி அறக்கட்டளையின் ஸ்தாபகர் பிரபாத் மனப்பெரும தெரிவிக்கின்றார்.

CoderDojo Srilanka என்பது கற்றலுக்கான ஒரு தளத்தை வழங்கும் coding கழகமென்பதுடன், ஒரே மனப்பாங்குடைய மக்களுக்கிடையேயான சந்திப்புக்கு வழிவகுக்கின்றது. அத்துடன் இது, சமூகக்கற்கைகளுக்கான சர்வதேச திறந்த வளமாக விளங்கும் CoderDojo அமைப்பின், இலங்கைக்கான வலையமைப்பாகும். தொழில்சார் வல்லுநர்கள், பல்கலைக்கழகங்கள், சமூக நிலையங்களில் இருந்தான தேர்ச்சிபெற்றவர்கள் இணைந்து CoderDojo கழகங்களை நடாத்துகின்றனர். STEMUp தன்னார்வலர்கள் IoT, Ardunio, Machine Learning, Scratch மற்றும் பலதரப்பட்டவற்றைப் பற்றி சிறந்த அறிவை வழங்கும் தொடர் virtual dojo அமர்வுகளை முன்னெடுத்து வருகின்றனர். இன்றைய கொவிட்-19 நெருக்கடி நிலைமையிலும், சிறார்களுக்கு தமது கற்கைப்பயணத்தைத் தடையின்றித் தொடர்வதற்கு உதவும் முகமாக, ஒன்லைன் Dojoக்கள் முன்னெடுக்கப்பட்டன.

STEMUp , MilleniumIT ESP உடன் இணைந்து ‘‘சிறுவர்களுக்கான Machine Learning’’ அல்லது ‘‘பொட்டண்ட Machine Learning’’ எனப்படும் Machine Learning  திட்டத்தையும் நடாத்தியது. பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பாடசாலை சிறார்களுக்கு Artificial Intelligence இன் நடைமுறை உலக பயன்பாடு குறித்த அறிவை வழங்குவதை நோக்கமாகக் கொண்ட அறிவு பகிரும் திட்டமாகும். Machine Learning  மற்றும் AI போன்ற நவீன மாற்றத்தை ஏற்படுத்தும் தொழில்நுட்பங்கள் தொடர்பான விழிப்புணர்வு பின் தங்கிய பிரதேசங்களில் இல்லாததை அடையாளம் கண்ட பின்னர் இந்த திட்டம் தொடங்கப்பட்டது.

“உற்பத்தி, சில்லறை விற்பனை, சுகாதாரம், நிதிச் சேவைகள், அறிவியல், சுற்றுலாத் துறை மற்றும் பொதுப் பயன்பாடுகள் உள்ளிட்ட பெரும்பாலான தொழில்துறைகளில் Machine Learning  பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. எதிர்காலத்தில் மேலும் மேலும் பயன்படுத்தப்படுமென எதிர்பார்க்கப்படும் Machine Learning  இன் தாக்கங்களை மாணவர்கள் புரிந்துகொள்வது கட்டாயமாகும். அவர்கள் எதிர்கால தலைவர்கள், அவர்கள் புதிய தொழில்நுட்பங்கள் தொடர்பில் நன்கு அறிந்திருக்க வேண்டும், இதனால் அவர்கள் தொழில்நுட்பத்தின் அடிப்படையில் எதிர்கால கோரிக்கைகளை பூர்த்தி செய்ய முடியும். மேலும் உலகின் பிற பாகங்களுக்கு இணையாக இருக்கும் வகையில் புத்துருவாக்கங்களைக் கொண்டு வர முடியும்,” என STEMUp கல்வியியல் அறக்கட்டளையின் பணிப்பாளர் இந்திக தளுகம தெரிவித்தார்.

STEMUp கல்வியை மேம்படுத்துவதற்கான அதன் தொடர்ச்சியான முயற்சிகளில், அனைத்து பாடப் பரப்புகளையும் உள்ளடக்கிய virtulal A / L வகுப்புகளை Sri Lanka Telecom PLC உடன் இணைந்து நடாத்துகிறது. இந்த முயற்சி இரண்டு மாதங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டதிலிருந்து மிகுந்த பாராட்டைப் பெற்றுள்ளதுடன், கொவிட் 19 நோய்த்தொற்று காரணமாக கற்றலில் சிக்கல்களுக்கு முகங்கொடுத்துள்ள மாணவர்களுக்கு உதவி செய்யும் நோக்குடன் இந்தத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.

இந்த முக்கிய திட்டங்களுக்கு மேலதிகமாக,  அதன் உள்நாட்டு மற்றும் சர்வதேச பங்காளிகளான Sri Lanka Telecom, Commercial Bank, Colombo AI academy, MilleniumIT ESP, Raspberry PI Foundation, Micro:bit Educational Foundation  மற்றும் CoderDojo Foundation  ஆகியவற்றுடன் இணைந்து நாடு முழுவதும் பல திட்டங்களை நடாத்தி வருகிறது.

STEMUp.lk இணையத்தளமானது IoT, Machine Learning, Computer Programming ஆகியவற்றுக்கான மதிப்புமிக்க கற்றல் வளங்களை வழங்குவதுடன், இது வரவிருக்கும் திட்டங்கள் மற்றும் ஒன்லைன் பயிற்சி அமர்வுகள் பற்றிய விபரங்களுடன் தொடர்ந்து புதுப்பிக்கப்படுகிறது.

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *