Tamil

இலங்கையின் முன்னணி மூலிகை பராமரிப்பு வழங்குனரான சுவதேசி அறிமுகப்படுத்தும் உலகத் தரமான “கொஹம்ப பேபி அவகாடோ சவர்க்காரம்”

சவர்க்கார தயாரிப்பில் புதிய அறிமுகமான அவகாடோ விட்டமின் A , D மற்றும் E உடன்  குழந்தையின் மென்மையான சருமத்திற்கு போசனையையும் மிருதுவையும் தருகிறது

இலங்கையின் முன்னணி மூலிகை பராமரிப்பு வர்த்தகநாமமான சுவதேசி, உலகில் உள்ள ஒரு உன்னதமான பழத்தின் பசுமையான கூறுகளின் அடிப்படையில் குழந்தைகளுக்கான தனது புதிய மூலிகை சவர்க்காரமான கொஹம்ப பேபி அவகாடோவினை  சந்தைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. சுதேசியின் “அவகாடோ” பேபி சவர்க்கரமானது அவகாடோ மற்றும் பிற மூலிகைக் கூறுகளின் கலவையினால் தயாரிக்கப்படுகிறது. இது குழந்தையின் மென்மையான தோலுக்கு இனிமையான மணம் மற்றும் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களை வழங்குகின்றது.

“சுவதேசி 80 ஆண்டுகளுக்கும் மேலாக மூலிகை பொருட்கள் தயாரிப்பின் செழுமையான வரலாற்றைக் கொண்டுள்ளதுடன், இலங்கை வர்த்தகநாமம் என்ற வகையில், 80 ஆண்டு கால நம்பிக்கையுடன் மூலிகை நன்மைகளுக்கான உத்தரவாதம் மற்றும் பாதுகாப்பு வழங்கும் சிறந்த தயாரிப்புகளை வழங்க நாங்கள் உண்மையிலேயே கடமைப்பட்டுள்ளோம். பிரதானமாக “கொஹம்ப” அடிப்படையிலான தயாரிப்புகளுடன் அவகாடோ சவர்க்காரத்தை சேர்ப்பதன் மூலம், எமது தயாரிப்பு வரிசையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்துடன் எமது வழங்கல்களில் புதிய நிலைக்கு முன்னேறுகின்றோம். எங்கள் தயாரிப்புகள் அனைத்தும் 100% தாவர உள்ளீடுகளைப் பயன்படுத்தி முழுமையான ஆராய்ச்சியுடன் தயாரிக்கப்படுகின்றன என்றும், உற்பத்தி செயல்முறை முழுவதும் மிக உயர்ந்த தரமான இணக்கப்பாட்டை உறுதிசெய்கிறோம் என்றும் நாங்கள் உறுதிப்பட தெரிவிக்கின்றோம்,” என்று Swadeshi Industrial Works இன் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

புதிய கொஹம்ப பேபி அவகாடோ சவர்காரத்தில் வேம்பு, அவகாடோ சாரு மற்றும் ஒலிவ் எண்ணெய் ஆகியவை அடங்கியுள்ளதுடன், அவை நன்கு அறியப்பட்ட தூய்மையாக்கல், ஈரலிப்பை வழங்கல் மற்றும் ஊட்டமளிக்கும் பண்புகள் காரணமாக இயற்கையான தோல் பராமரிப்பில் தலைமுறைகளாக பயன்படுத்தப்படுகின்றன. அவகாடோ சாரு சிறந்த தோல் நீரேற்றம் மற்றும் ஈரலிப்பு வழங்கும் உள்ளீடுகளில் ஒன்றாகும். இதில் இயற்கையான விட்டமின்கள் A , D மற்றும் E மற்றும் குழந்தையின் சருமத்துக்கு ஊட்டமளித்து, ஈரளிப்பை வழங்கும் பல ஊட்டச்சத்துக்கள் உள்ளன. அவகாடோ சாரு  இந்த விட்டமின்களுக்கு மேலதிகமாக Omega – 3 ஐ கொண்டுள்ளது. அவகாடோ அதன் வளமான ஊட்டச்சத்துக்காகவும் அறியப்படுவதுடன், இது சருமத்தை அரிப்பு மற்றும் வறண்ட சருமத்திலிருந்து பாதுகாக்கும். சுவதேசி கொஹம்ப பேபியில் பயன்படுத்தப்படும் அனைத்து வாசனைத் திரவியங்களும் International Fragrance Association (IFRA) இனால் சான்றளிக்கப்பட்டுள்ளதுடன், ISO 9001 – 2015 தரத்தின் கீழ் தயாரிக்கப்படுகின்றன. வேம்பு / மார்கோசா என்றும் அழைக்கப்படும் “கொஹம்ப” என்பது அனைத்து கொஹம்ப பேபி தயாரிப்புகளிலும் ஒரு முக்கிய மூலப்பொருள் ஆகும். இது குழந்தையின் தோலை அதன் மென்மையான சுத்தப்படுத்தும் சக்தியினால் பாதுகாக்கிறது.

சுவதேசி கொஹம்ப பேபி எப்போதும் இயற்கையின் வண்ணங்களுடன் தொடர்புடையதென்பதுடன், கொஹம்ப பேபி அவகாடோ சவர்க்காரமும் வெளிர் பச்சை நிற சவர்க்கார கட்டி மற்றும் புதிய பெக்கேஜிங் மூலம் இதனையே பின்பற்றுகின்றது. கொஹம்ப பேபி அவகாடோ சவர்க்காரமும் ஐந்து கட்டிகளை உள்ளடக்கிய சிக்கன பொதியில் கிடைக்கும் அதேவேளை, பொலிதீன் அற்ற, மீள்சுழற்சி செய்யக்கூடிய பொதியிடலுடன் கூடிய பசுமை எண்ணக்கரு தொடர்பில் அர்ப்பணிப்புடன் உள்ளது.

சவர்க்காரம் முதல் கொலோன் வரை, கிரீம், பவுடர், எண்ணெய், ஷாம்பு மற்றும் பரிசுப் பொதிகள் வரை பல தரப்பட்ட தயாரிப்புகளைக் கொண்ட ஒரேயொரு மூலிகை வர்த்தகநாமம் சுவதேசி கொஹம்ப பேபி அவகாடோ ஆகும். புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட கொஹம்ப பேபி அவகாடோ சவர்க்காரத்துடன், கொஹம்ப பேபி அவகாடோ சவர்க்கார வர்த்தகநாமமானது கொஹம்ப பேபி மூலிகை சவர்க்காரம், கொஹம்ப பேபி புளோரல் சவர்க்காரம் மற்றும் கொஹம்ப பேபி வெனிவெல் ஆகிய நான்கு வகையான சவர்க்காரங்களைக் கொண்டது.

இலங்கையில் மூலிகை சவக்கார  தயாரிப்பின் முன்னோடியான, Swadeshi Industrial Works PLC, ISO 9001:2015 சான்றளிக்கப்பட்ட நிறுவனமென்பதுடன், 1941 இல் ஒருங்கிணைக்கப்பட்டது. Swadeshi இன் முதற்தர வர்த்தகநாமங்களில் Khomba Herbal, Rani Sandalwood, Khomba Baby, Little Princess, Perlwite, Lak Bar, Safeplus, Lady, Black Eagle Perfume மற்றும் Swadeshi Shower Gel வரிசை ஆகியன அடங்குகின்றன. இந்நிறுவனம் உயர் மூலிகை வர்த்தகநாமமானது, கொஹம்ப மூலிகை மற்றும் பாரம்பரிய அழகு பராமரிப்பு சவர்க்கார வர்த்தகநாமமான ராணி சந்தனம் ஆகியவற்றைத் தயாரிக்கின்றது.

அனைத்து கொஹம்ப பேபி தயாரிப்புகளும் இலங்கை சுகாதார அமைச்சுடன் இணைந்த தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் (NMRA) கீழ் பதிவு செய்யப்பட்டதென்பதுடன், சான்றளிக்கப்பட்டது. சுதேசி தயாரிப்புகளில் பயன்படுத்தப்படும் அனைத்து வாசனை திரவியங்களும் உலகளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட International Fragrance Association (IFRA)  இனால் சகல தயாரிப்புக்களுக்கும்  சான்றிதழ் அளிக்கப்பட்டவை என்பதுடன் ISO 9001 – 2015 தரத்தின் கீழ் தயாரிக்கப்படுகின்றன. கொஹம்ப (வேம்பு / மார்கோசா) அனைத்து கொஹம்ப பேபி தயாரிப்புகளிலும் ஒரு முக்கிய மூலப்பொருள் ஆகும். இது குழந்தையின் தோலை இயற்கையாகவே கிருமிகள் மற்றும் எரிச்சல்களிலிருந்து அதன் லேசான மற்றும் மென்மையான தூய்மையாக்கும் சக்தியினால் பாதுகாக்கிறது. சந்தைக்கான புதிய மூலிகை பராமரிப்பு தயாரிப்புகளில் புதுமையை ஏற்படுத்த  நவீன இயந்திரங்கள் மற்றும் ஆராய்ச்சி உபகரணங்களை சுதேசி ஒருங்கிணைக்கிறது. உயர் தர தயாரிப்புகளுக்கான நிறுவனத்தின் கவனமானது ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தியில் அது மேற்கொள்ளும் முதலீட்டின் மூலம் தெளிவாவதுடன், ISO 9001 – 2015 தரச்சான்றிதழ் பெற்ற முழு அளவிலான பல ஆய்வகங்களையும் கொண்டுள்ளது.

Share

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *