30 ஆண்டுகால கல்வி சிறப்பைக் கொண்டாடும் முகமாக இலங்கையின் அதி சிறந்த உயர் தர மாணவர்களுக்கு வெகுமதியளிக்க ‘சாதனையாளர் புலமைப்பரிசில் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ள IIT

Author
By Author
4 Min Read

இலங்கையில் பிரிட்டிஷ் உயர் கல்வியின் முன்னோடியும், நாட்டின் முதன்மையான தகவல் தொழில்நுட்ப மற்றும் வணிக வளாகமுமான Informatics Institute of Technology (IIT), அதன் 30 ஆண்டுகால கல்வி சிறப்பைக் கொண்டாடும் முகமாக “IIT சாதனையாளர் புலமைப்பரிசில் திட்டத்தை” அறிமுகப்படுத்தியுள்ளது.

IIT 30 ஆண்டுகளாக உலகளவில் அங்கீகரிக்கப்பட்ட பட்டப்படிப்புகள்  மூலம் இலங்கையிலும் உலகெங்கிலும் பெறுமதி மிக்க கல்வித் தகுதிகளையும் தரத்தையும் தொடர்ந்து வழங்கி வருகின்றது. உயர்கல்வித் துறையில் ஒரு முன்னோடியாக IIT, உலகெங்கிலும் முத்திரை பதித்துள்ள தொழில்முனைவோராகவும், வணிகத் தலைவர்களாவும் பட்டதாரிகளை மாற்றுவதற்கு அவர்களை வலுவூட்டி இந்தத் துறையை மாற்றியமைத்து புரட்சியை ஏற்படுத்தியுள்ளது. IIT சாதனையாளர் புலமைப்பரிசில் திட்டமானது உள்நாட்டு மாணவர்களுக்கான கல்வி வழங்கல்களின் நீண்ட பட்டியலில் புதிதாக இணைந்து கொண்டதாகும்.  இது ஒரு தனித்துவமான திட்டமாகும், இது க.பொ.த. உயர்தரப் பரீட்சையில் குறைந்தபட்சம் 3 A சித்திகளை பெற்ற சிறந்த மாணவர்களுக்கு வழங்கப்படுகின்றது. நாட்டின் பிரகாசமான இளம் தலைமுறையினருக்கு புலமைப்பரிசில் வழங்கும் இந்த அணுகுமுறையானது நாட்டின் மிக உயர்ந்த ஒன்றாக மற்றும் பரவலாக அறியப்பட்ட அனைத்து திட்டங்களுக்குமான ஐ.ஐ.டி.யின் பொதுவான அளவுகோல்களுடன் இணைகின்றது..

இந்த புலமைப்பரிசில் திட்டம் தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கு உலகளவில் அங்கீகரிக்கப்பட்ட இங்கிலாந்து பட்டங்களைப் பெறுவதன் மூலம் தகவல் தொழில்நுட்பம் மற்றும் வணிகத் துறையில் நுழைவதை விரைவாக்க உதவுகின்றது. அவர்களின் பெறுபேறுகள் ஒரு முன்னணி உள்நாட்டு பல்கலைக்கழகத்தில் அவர்களுக்கு இடமொன்றுக்கு உத்தரவாதம் அளிக்கும் அதேவேளையில், IIT இன் ஐந்து பட்டப்படிப்புகளில் ஒன்றைப் பின்பற்றுவதன் மூலம், தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கு எந்தவொரு உள்நாட்டு பல்கலைக்கழகத்தையும் விட உலகளாவிய தரவரிசையில் முன்னணியில் திகழும் இங்கிலாந்து பல்கலைக்கழகத்தில் பட்டம் பெறும் வாய்ப்பைப் பெறுவர். மேலும், அவர்கள் உடனடியாக பட்டத்தைத் தொடங்கி 4 ஆண்டுகளில் முடிக்க முடியும். இதன் மூலம் அவர்களுக்கு மதிப்புமிக்க நேரத்தை மீதப்படுத்துவதோடு, அவர்களின் தொழில்துறை வாழ்க்கையில் ஒரு தொடக்கத்தையும் அளிக்கின்றது.

இந்த புதிய புலமைப்பரிசில் திட்டத்தின் கீழ், குறைந்தபட்சம் 3 A சித்திகளை பெற்ற லண்டன் உயர்தர மாணவர்களுக்கு குறிப்பிடத்தக்க பணத்தை மீதப்படுத்த முடியும் அதேவேளை, 3 A*s சித்திகளை பெறுபவர்கள் அதிகபட்சமாக 50% புலமைப்பரிசிலைப் பெற்றுக்கொள்வார்கள். உள்நாட்டு உயர்தர பரீட்சைகளில், தொழில்நுட்பம், விஞ்ஞானம், கணிதம், கலை மற்றும் வணிகத்தில் குறைந்தபட்சம் 3A சித்திகளை பெற்ற அனைத்து மாணவர்களும் விண்ணப்பிக்க முடியுமென்பதுடன், நாடளாவிய ரீதியில் முதல் 50 அல்லது 100 இடங்களுக்குள் இடம்பிடிப்பவர்கள் அதிகபட்ச புலமைப்பரிசிலை பெற்றுக்கொள்ள முடியும்.

மேலும், தலைமை பதவிகளில் தங்களை நிரூபித்துள்ள அல்லது மாணவத் தலைவர், துணை மாணவத் தலைவர், தேசிய அல்லது பாடசாலை கலர்ஸ் மற்றும் விளையாட்டு தலைவர்கள் போன்றவற்றில் சிறந்து விளங்கிய மாணவர்களும் இந்த புலமைப்பரிசிலுக்கு தகுதியுடையவர்களாவர். நாட்டில் தொற்றுநோயால் கல்வி நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ள மாணவர்களுக்கு ஆதரவளிப்பதற்காக, செப்டெம்பர் 2020 மற்றும் ஜனவரி 2021 இல் பரீட்சை முடிவுகள் வெளியிடாத பட்சத்தில் IITஇல் இணைந்த மாணவர்களுக்கும் இந்த புலமைப்பரிசில் செல்லுபடியாகும் என்பதை  IIT உறுதி செய்துள்ளது. இந்த புலமைப்பரிசில் தற்போது IITஇல் வழங்கப்படும் 5 பட்டப்படிப்புகளின் Year 1 (L4) இற்கு செல்லுபடியாகும். 2ஆம் வருடம் மற்றும் புலமைப்பரிசிலின் இறுதி ஆண்டு என்பன 1 ஆம் வருடத்தில் அவர்களின் கல்வி செயல்திறனின் அடிப்படையில் தீர்மானிக்கப்படும்.

IIT, ஐந்து, முழு நேர 4 பட்டப்படிப்புகளை மாணவர்களுக்கு வழங்குகின்றது. University of Westminster UK இனால் வழங்கப்படும்  BSc (Hons) Computer Science, BEng (Hons) Software Engineering மற்றும் Robert Gordon University, UK இனால் வழங்கப்படும் BSc (Hons) Artificial Intelligence and Data Science ஆகியவற்றை வழங்குகின்றது. மேலும் University of Westminster UK இனால் வழங்கப்படும் BSc (Hons) Business Information Systems மற்றும் BA (Hons) Business Management ஆகியவற்றை வழங்குகின்றது. இந்த 5 பட்டப்படிப்புகளும் இலங்கை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்டவையாகும்.

IIT இன் பிரதான நிறைவேற்று அதிகாரி மொஹான் பெர்ணான்டோ இது தொடர்பில் கருத்து தெரிவிக்கையில், “IIT சாதனையாளர் புலமைப்பரிசில் திட்டம் எங்கள் அண்மைய புத்தாக்கமாகும், அங்கு உள்நாட்டு மற்றும் லண்டன் உயர்தர பரீட்சையில் சிறந்த சாதனை படைத்த மாணவர்களில் மிகச் சிறந்த மாணவர்களை அங்கீகரித்து இங்கிலாந்தின் உலகத்தரமிக்க 5 உலகத் தரமான பட்டப்படிப்புகளில் ஒன்றை இங்கு IITஇல் கற்பதற்கு புலமைப்பரிசிலை வழங்க எதிர்பார்த்துள்ளோம். IIT எப்போதும் சிறந்த மற்றும் பிரகாசமான இளம் திறமையாளர்களை மட்டுமே பல்கலைக்கழகத்துக்கு ஈர்க்கும் பெருமைமிக்க வரலாற்றைக் கொண்டுள்ளது. மேலும் இந்த திட்டம் அந்த அணுகுமுறையின் தொடர்ச்சியாகும். இந்த திட்டத்தின் மூலம், இந்த சிறந்த மாணவர்களுக்கு ICT அல்லது வணிகத்தில் சர்வதேச அளவில் அங்கீகாரம் பெற்ற பட்டத்தைப் பெறுவதற்கான அவர்களின் கனவை நனவாக்க ஒரு தளத்தை வழங்க முடியும். இதனால் அவர்கள் தங்கள் வாழ்க்கையில் ஒரு தொடக்கத்தைப் பெறுவதுடன், இதன் மூலம் வாழ்க்கையில் வெற்றிபெற முடியும்,” என்றார்.

சாதனையாளர் புலமைப்பரிசில் திட்டம் தொடர்பில் மேலதிக தகவல்களைப் பெற்றுக்கொள்ள:  விஜயம் செய்யுங்கள் www.iit.ac.lk அல்லது  அழையுங்கள் 0766 760 760.

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *