Tamil

கொவிட்டை எதிர்த்துப் போராடும் இலங்கையின் லயன்ஸ் & லியோஸ் ‘ஆயிரம் அபிலாஷைகள்’

கொவிட் பரவலை எதிர்த்து போராடும் இலங்கையின் சுகாதார பிரிவினருக்கு ஒத்துழைப்பு வழங்கும் முயற்சியாக, நாட்டின் சுகாதார சேவையை வலுப்படுத்தும் வகையில், Lions & Leos of Multiple District 306 இனால் கொவிட் நிவாரண நிதி சேகரிப்பு பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. “Thousand Hopes” (“ஆயிரம் அபிலாஷைகள்”) எனும் எண்ணக்கருவின் அடிப்படையில், அத்தியாவசிய மருத்துவ மற்றும் ஆய்வுகூட உபகரணங்களை கொள்வனவு செய்வதற்கும், அது தொடர்பான உதவிகளை அளிப்பதற்கும், தொற்றுநோயைக் கட்டுப்படுத்தும் முயற்சிகளுக்கு உதவுவதற்கும் ரூ. 150 மில்லியனை திரட்டுவதே இப்பிரசார நடவடிக்கையின் முக்கிய நோக்கமாகும்.

இந்நன்கொடை மூலம், தற்போது தினசரி மேற்கொள்ளப்படும் பி.சி.ஆர் சோதனையின் திறன் 30% ஆக அதிகரிக்கும் என்பதுடன் இலங்கை முழுவதும் பி.சி.ஆர் ஆய்வக வலையமைப்பின் விரிவாக்கத்திற்கு உதவியளித்தல் மற்றும் நாட்டில் புதிய கொவிட் திரிபுகளின் சோதனைகளின் திறனை மேம்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆயிரம் அபிலாஷைகள் பிரசாரம் குறித்து லயன்ஸ் கிளப்ஸ் இன்டர்நெஷனலின் கடந்த கால சர்வதேச தலைவர் லயன் மகேந்திர அமரசூரியா தெரிவிக்கையில், “இந்த சவாலான காலகட்டத்தில் சுகாதாரப் பிரிவினருக்கு உதவுவதில் நாம் மகிழ்ச்சியடைகிறோம். இந்த நிதி திரட்டும் பிரசாரம், சுகாதார பராமரிப்பு நடவடிக்கைகளுக்கு உதவியளிக்கும் வகையில் ரூ. 150 மில்லியனை திரட்டும் நோக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்டது. இந்நடவடிக்கை மூலம் இத்தொற்றுநோயை நமது நாடு சிறந்த முறையில் எதிர்கொள்ளுமென நாம் எதிர்பார்க்கிறோம். எனவே ஒரு தேசமாக, கொவிட் அச்சுறுத்தலை சமாளிக்க வேண்டுமெனும் முக்கியமான காரணத்திற்காக பங்களிக்குமாறு, அனைவரையும் நாம் அழைக்கிறோம். “

அனைத்து இலங்கையர்களுக்கும் மற்றும் அவர்களின் குழந்தைகளுக்கும் ஒரு பிரகாசமான எதிர்காலத்தை அடைய, ஆயிரக்கணக்கான நம்பிக்கைகளால் ஈர்க்கப்பட்ட இந்த ஆயிரம் அபிலாஷைகள் பிரசாரம், இலங்கையின் லயன்ஸ் அமைப்பின் நம்பிக்கையை பிரதிபலிக்கிறது. இது நாட்டை கொவிட் தொற்றிலிருந்து விடுபட உதவுவதற்கும், எமது மக்களின் உயிரைக் காப்பாற்றுவதையும் நோக்கமாக கொண்டுள்ளது. பொதுமக்களை இந்த முக்கியமான திட்டத்தின் ஒரு பங்காளராக ஆகும் வகையில், ரூ. 1,000 நன்கொடையை வழங்குமாறு, இலங்கையின் லயன்ஸ் & லியோஸ் அழைப்பு விடுக்கின்றது. இந்நிதி சுகாதார பராமரிப்பு நடவடிக்கையை சீராக்க அவசியமான மருத்துவ மற்றும் ஆய்வுகூட உபகரண கொள்வனவிற்கு பயன்படும்.

இந்நன்கொடையை உரிய வங்கிக் கணக்கிற்கு அல்லது https://www.lionsmd306.org/donation/ வழியாக ஒன்லைன் மூலமும் பரிமாற்ற முடியும்.

லயன்ஸ் கிளப்ஸ் இன்டர்நெஷனல் ஆனது, உலகின் மிகப்பெரிய சேவை வழங்கும் கழக அமைப்பாகும். இது உலகெங்கிலும் 200 இற்கும் மேற்பட்ட நாடுகளில் சுமார் 46,000 கழகங்களைக் கொண்டுள்ளதுடன், 1.4 மில்லியனுக்கும் அதிகமான உறுப்பினர்களையும் கொண்டுள்ளது. Lions Clubs International Multiple District 306 (Sri Lanka) ஆனது, இந்த உலகளாவிய அமைப்பின் ஒரு பகுதியாகும், என்பதுடன் சுமார் 15,000 உறுப்பினர்களைக் கொண்ட 550 இற்கும் மேற்பட்ட கழங்களைக் கொண்டுள்ளது. லியோஸ் கிளப்ஸ் இன்டர்நெஷனல் என்பது இலங்கையில் 9,000 இற்கும் மேற்பட்ட லியோஸுடனான லயன்ஸின் இளைஞர் பிரிவாகும். Lions & Leos of Multiple District 306 ஆனது பல தசாப்தங்களாக நாட்டின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் சமூக ஆதரவு முயற்சிகளில் முன்னணியில் உள்ளது. லயன்ஸ் & லியோஸ் ஆனது, கொவிட் தொற்றுநோய் பரவல் காலப் பகுதி முழுவதும் தனது சொந்த குழுவினர் மூலம் தன்னார்வ நடவடிக்கைகள் மற்றும் பல்வேறு நன்கொடைகளை மேற்கொண்டு வந்துள்ளது.

Share

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *