மேம்படுத்தப்பட்ட கலவைகளுடனான புதிய WD-40 Specialist® வகைகளை அறிமுகப்படுத்தும் DIMO

Author
By Author
3 Min Read

இலங்கையில் WD-40 இற்கான ஒரே விநியோகஸ்தர் எனும் வகையில், இலங்கையின் முன்னணி பன்முகப்படுத்தப்பட்ட கூட்டு நிறுவனங்களில் ஒன்றான DIMO, அண்மையில் புதிய மற்றும் மேம்படுத்தப்பட்ட WD-40 Specialist® வகைகளை உள்ளூர் சந்தைக்கு அறிமுகப்படுத்தியது. WD-40 Specialist® வகைகளை இப்போது கிறீஸ், உராய்வு நீக்கிகள், தூய்மையாக்கிகள் (grease, lubricants, cleaners) ஆகியவற்றுடன் புதிய புத்துணர்ச்சியூட்டும் தோற்றத்துடன் வருகிறது.

புதிய WD-40 Specialist® வகைகளில், பொதுவான மற்றும் வாகனங்களுக்கான வகை ஆகிய இரு வகைகள் அடங்குகின்றன. பொது வகைகளில், 360ml White Lithium Grease அடங்குகின்றது, இது அதிக பாகுத்தன்மை திரவமாகும். இது சொட்டாத அல்லது வடியாத வகையில் நீண்ட கால உராய்வு நீக்கத்தை வழங்குகிறது. அத்துடன் 360ml Silicon Spray ஆனது, கறை ஏற்படுத்தாத, நீடித்து நிலைக்கக்கூடிய கலவையாகும், இது அழுக்கை உள்ளெடுக்காத வகையிலானதும், சிறந்த உராய்வு நீக்கத்தை வழங்குவதுமானது என்பதுடன், ஈரப்பதத்திற்கு எதிரான பாதுகாப்பையும் வழங்குகிறது. 360ml மற்றும் 200ml Contact Cleaner ஆனது, மிக அவதானமாக கையாள வேண்டிய இலத்திரனியல் மற்றும் மின்னியல் சாதனங்களிலுள்ள எண்ணெய், அழுக்குகள், இறுக்கமான பொருட்கள், எச்சங்கள், மாற்றமடைந்த அம்சங்கள் போன்றயவற்றை தூய்மையாக்கும் வகையில், அதில் எளிதில் அடைய முடியாத பகுதிகளுக்குள் விரைவாக ஊடுருவி, அவற்றை அகற்றுவதுடன், செலுத்தப்பட்ட திரவம் விரைவாக காய்ந்துவிடும் வகையிலானது. 360ml Dry Lube ஆனது, PTFE (Poly Tetra Fluoro Ethylene) இனை கொண்டுள்ளது. இது மேம்பட்ட உராய்வு நீக்கியாகவும், பாதுகாப்பானாகவும் செயற்படுகின்றது. உலர்ந்த ஒளி ஊடுபுகவிடும் பொருட்களில் அழுக்கு, தூசி, எண்ணெய் ஆகியன ஒட்டுவதை தவிர்க்கிறது. ஆழ்ந்து ஊடுருவும் கலவையிலான 450ml Degreaser ஆனது,  இறுக்கமான கிறீஸ், எண்ணெய், தார், அழுக்குகள், பசைகள் மற்றும் அது போன்ற பொருட்களை நீக்குகிறது.

வாகனங்களுக்கான வகைகளில் 450ml Brakes and Parts Cleaner காணப்படுகின்றது. இது கறை ஏற்படுத்துவதை தடுப்பதுடன், எந்தவொரு எச்சமும் இல்லாமல் அகற்றுவதுடன் அரிப்படைவதையும் தடுக்கிறது. அத்துடன், இது டிஸ்க் பிரேக் சத்தத்தை நிறுத்த உதவுவதுடன், கிளட்ச் நழுவலை நீக்குகிறது. 360ml Chain Lube ஆனது உயர் செயல்திறன் கொண்ட, கலப்பற்ற செயற்கையானதும் மிகவும் கச்சிதமானதுமான செயின் உராய்வு நீக்கியாகும். இது பாதைகள் மற்றும் தெருக்களில் பயன்படுத்தப்படும் மோட்டார் சைக்கிள்கள், சிறு வகை வாகனங்கள் மற்றும் சமதளமற்ற தரைகளில் பயன்படுத்தும் வாகனங்களுக்கு (karts, ATV) ஏற்றது.

DIMO வின் பணிப்பாளர் விஜித பண்டார இது தொடர்பில் தெரிவிக்கையில், “DIMO ஆகிய நாம், உலகளாவிய ரீதியிலான வர்த்தக நாமங்களைக் கொண்ட சிறந்த மற்றும் புதுமையான தயாரிப்பு வகைகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்க எப்போதும் முயற்சி செய்கிறோம். மேம்படுத்தப்பட்ட WD-40 Specialist® வகைகள், குறிப்பிட்ட கடின வேலைகளை மேற்கொள்வதற்கான சிறந்த உராய்வு நீக்கி தீர்வுகளாகும். தனது நுகர்வோரின் உணர்வை புரிந்துகொள்ளும் ஒரு தரக்குறியீடான DIMO, நுகர்வோரின் மாறிக்கொண்டே இருக்கும் தேவைகளைப் பூர்த்தி செய்து, சிறந்த மற்றும் மேம்பட்ட தயாரிப்புகளை வழங்க நாம் எம்மை தொடர்ந்தும் சவாலுக்கு உட்படுத்தி வருகிறோம்.” என்றார்.

அத்துடன், WD-40 Multi-Use Product ஆனது, குறிப்பாக எந்தவொரு பகுதியையும் துரு மற்றும் அரிப்படைவதிலிருந்து பாதுகாப்பதுடன், அதில் சிக்கியுள்ள பகுதிகளை ஊடுருவி அகற்றுவதுடன், ஈரப்பதனை அகற்றி உராய்வு நீக்கத்தை ஏற்படுத்துகிறது. இது பெரும்பாலும் அனைத்து பரப்புகளில் இருந்தும் கிறீஸ், அழுக்கு உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை நீக்குகிறது. இது கைக்கடக்கமான 100ml வகையிலும், 191ml, 333ml, 412ml ஆகிய அளவுகளிலான கேன்களிலும், 4L அளவிலான பாரிய கேன்களிலும் வருகிறது. WD-40 aerosol spray ஆனது, பல மில்லியன் இலங்கையர்களுக்கு ஒரு தசாப்தத்திற்கும் மேலாக உதவி வருகின்ற ஒன்றாகும். அது அவர்களது கையை விட்டு வெளியேறுவதற்கு முன்பே அதன் தனித்துவமான திறன் மூலம் அதிலுள்ள சிறிய பிரச்சினைகளை சரி செய்யக் கூடியது.

WD-40 ஆனது, உலகின் மிகப் பிரபலமான தரக்குறியீடுகளில் ஒன்றாகும் என்பதுடன், உலகெங்கிலும் உள்ள உலோக பட்டறைகள், தொழிற்சாலைகள் மற்றும் வீடுகளில் உள்ள சிக்கல்களைத் தீர்த்து வைப்பதன் மூலம் அதனை பயன்படுத்துபவர்களுக்கு அது தொடர்பான சிறந்த நீடித்த நினைவுகளை உருவாக்குகின்றது. DIMO வின் 8 தசாப்த கால நம்பிக்கையுடன், நாடளாவிய ரீதியில் பொதுவான வர்த்தக நிலையங்கள், வாகனம் சார்ந்த வர்த்தக நிலையங்கள், ஹார்ட்வயார்கள், இணைய வர்த்தக தளங்கள் உள்ளிட்ட நவீன வர்த்தக ஊடகங்களில் WD-40 உற்பத்தி வகைகள் தற்போது கிடைக்கின்றன.

முற்றும்

Photo Caption:

WD-40 தயாரிப்பு வகைகள்

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *