Tamil

Big Bad Wolf Books சிறந்த கொள்வனவு அனுபவத்தை வழங்க Shopify உடன் கைகோர்ப்பு

நாடு முழுவதும் உள்ள புத்தக ஆர்வலர்களை ஆச்சரியப்படுத்தும் வகையில், Big Bad Wolf ((பிக் பேட் வுல்ஃப்) ஒன்லைன் புத்தக விற்பனை மீண்டும் இலங்கைக்கு திரும்பியுள்ளது. இம்முறை, இணைய வர்த்தக (e-commerce) நிறுவனமான Shopify உடன் இணைந்து, Wolf Pack மிக இலகுவானதும் மறக்கமுடியாத வகையிலுமான கொள்வனவு அனுபவத்தைக் Wolf கொண்டுவருகிறது! இது Big Bad Wolf இன் இலங்கைக்கான ஆறாவது வருகை என்பதுடன், ஒன்லைன் வழியாக நுழையும் மூன்றாவது தடவையுமாகும்.

இதற்கான உத்தியோகபூர்வ அறிவிப்பு கடந்த ஒக்டோபர் 28 ஆம் திகதி ஒன்லைன் மூலமான ஊடகவியலாளர் சந்திப்பில் அறிவிக்கப்பட்டது. Big Bad Wolf Books Sri Lanka வினது பங்காளரான Pro Read Lanka (Pvt) Ltd நிறுவனத்தின் பணிப்பாளர் நிஷான் வாசலதந்திரி, Big Bad Wolf Books இணை நிறுவுனர்கள் Wolf Books, Jacqueline Ng மற்றும் Andrew Yap மற்றும் Big Bad Wolf Books Sri Lanka வின் பங்களாரான Dipak Madhavan ஆகியோர் ஒன்லைன் மூலம் பங்குபற்றியிருந்தனர்.

இதன் போது கருத்து வெளியிட்ட Pro Read Lanka (Pvt) Ltd நிறுவனத்தின் பணிப்பாளரும் பங்காளருமான நிஷான் வாசலதந்திரி, “Big Bad Wolf ஒன்லைன் புத்தக விற்பனையை மீண்டும் இலங்கையில் நடத்துவதில் நாம் மகிழ்ச்சியடைவதோடு, இம்முறை இணைய வர்த்தக ஜாம்பவான் ஆன, Shopify இன் உதவியுடன், முழு ஷொப்பிங் அனுபவமும் திறனாகவும், சிரமமுமின்றியும், மகிழ்ச்சிகரமானதாகவும் இருக்குமென நாம் நம்புகிறோம். இந்த ஒன்லைன் விற்பனையின் அனைத்து பரிவர்த்தனைகளும் Shopify மூலம் நெறிப்படுத்தப்பட்டு தொழில்வாண்மை ரீதியாக கையாளப்படுவதன் மூலம், இலங்கையில் நாடளாவிய ரீதியில் Wolf பொதி சுமூகமாகவும் சுவாரஸ்யமாகவும் சென்றடையும் அனுபவத்திற்கு வழிவகுக்கும்.” என்றார்.

இது தவிர, அனைத்து பிரிவுகள் மற்றும் வகைகளிலான புதிய புத்தகங்கள் அம்சங்களை Wolf இரசிகர்கள் இம்முறையும் எதிர்பார்க்கலாம். கிறிஸ்மஸ் பண்டிகை அண்மித்துள்ளதால் Big Bad Wolf இனது வெளிப்பாடும் மிகப்பொரிதாகி வருகிறது!

Big Bad Wolf Books இனது, இணை நிறுவுனர் Andrew Yap கருத்துத் தெரிவிக்கையில், “அனைவரும் அவர்களின் அறிவை மேம்படுத்துவதற்கு மட்டுமல்லாமல், அவர்களின் மகிழ்ச்சிக்காகவும் தரமான ஆங்கில புத்தகங்களை பெற வாய்ப்பு வழங்குவதே Big Bad Wolf Books ஆகிய எமது நோக்கமாகும். இதனால்தான், அனைத்துத் வகை மக்களுக்கும் மகிழ்ச்சியையும் அறிவையும் பரப்புவதற்காக, மீண்டும் இலங்கைக்குத் திரும்ப முடிவு செய்தோம்!

Big Bad Wolf Books ஒன்லைன் விற்பனையின் போதான கொள்வனவுக்காக கோரப்படும் அனைத்து புத்தகங்களும் கிறிஸ்மஸ் வருவதற்கு முன்பு இரசிகர்களிடம் கொண்டு சேர்க்கப்படுமென Big Bad Wolf Books உறுதியளிக்கிறது. Wolf பொதியானது இவ்வருடம் மகிழ்ச்சி மிக்கதாகவும், அறிவை வழங்குவதாகவும், பிரத்தியேக புத்தக தலைப்புகள் நிறைந்த மகிழ்ச்சியான கிறிஸ்மஸை நோக்கியதாகவும் எதிர்பார்க்கலாம், இது தவிர, Big Bad Wolf இனால் வழங்கப்படும் தள்ளுபடிகள் மற்றும் சலுகைகளும் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளன!

Big Bad Wolf Books இன் இணை நிறுவுனர் Jacqueline Ng தெரிவிக்கையில், “Wolf பொதி மூலம் மறக்கமுடியாத அனுபவத்தை வழங்க Shopify உடன் கூட்டிணை முடிவு செய்தோம். Wolf பொதியானது, வாடிக்கையாளர்கள் ஏற்கனவே பழகிய பாரிய தள்ளுபடிகள் மற்றும் சலுகைகளைக் கொண்டுள்ளதோடு, இம்முறை அவர்கள் ஒரு புத்தம் புதிய தளத்தில் Big Bad Wolf அனுபவத்தை பெறப் போகின்றார்கள் என்பதையும் தெரிவிக்க விரும்புகிறேன்.

மலேசியாவில் புத்தகங்கள் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ள கிடங்கு, கிருமிநீக்கம் செய்யப்பட்டு, கடுமையான சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றி மிக சிறப்பாக பேணப்பட்டு வருகிறது. அங்கிருந்து அனுப்பும் செயன்முறையின் அனைத்து கட்டங்களும், தூய்மையின் மிக உயர்ந்த தரத்தை கடைப்பிடித்தவாறு, சுகாதார நெறிமுறைகள் பின்பற்றப்படுவதை உறுதிசெய்வதை மிக கவனமாக பரிசீலிக்கப்பட்டு முன்னெடுக்கப்படும். அதே நேரத்தில் அனைத்து புத்தகங்களும் இரசிகர்களுக்கு பண்டிகைக் காலத்தில் கிடைக்கப்பெறுவதை உறுதிசெய்யும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

எனவே, உங்கள் கிறிஸ்மஸ் தாத்தா தொப்பிகள் மற்றும் உடைகளை அணிந்து கொண்டு, உங்கள் சோபா அல்லது கட்டிலில் அல்லது நீங்கள் விரும்பும் வசதியான எந்தவொரு இடத்தில் இருந்தவாறு, உங்கள் சொந்த வீட்டில் இருந்தபடியே புரட்சிகரமான இணைய வர்த்தக அனுபவத்தைப் பெறுங்கள். Wolf ஊளையிடும், அது வெளிப்படுத்தும், அது உங்கள் பொருட்களை உங்களிடம் கொண்டு சேர்க்கும்! Wolf இன் புதிய இணையத்தளமான lk.bbwbooks.com இனை பார்த்து மகிழுங்கள். நவம்பர் 03ஆம் திகதி முதல் அதில் நுழைந்து, உங்களுக்குப் பிடித்த புத்தகங்களை உங்கள் கொள்வனவு பட்டியலில் சேர்க்க ஆரம்பியுங்கள்! வாடிக்கையாளர்கள் கட்டணங்களை செலுத்துவதை எளிதாக்கும் வகையில் Visa மற்றும் Mastercard கடனட்டைகள்; வரவட்டைகள்; Sampath Vishwa வழியாக இணைய வங்கி மூலமும்; E-Wallet செயலிகளான ComBank Q, eZ Cash, FriMi, Genie-Wallet, iPay, MCash ஆகிய கட்டண செலுத்தும் முறைகள் மூலம் பணத்தை செலுத்தலாம்.

இணைய வர்த்தக நிறுவனமான Shopify உடன் கூட்டிணைந்ததோடு மாத்திரமல்லாமல், TNL Radio Network ஆனது Wolf இன் உத்தியோகபூர்வ ஊடக பங்காளராகவும், Grasshoppers ஆனது அதன் இணைய வர்த்தக டெலிவரி சேவை வழங்குனராகவும் கூட்டு சேர்ந்துள்ளது.

** சலுகைகள், போட்டி நடைமுறைகள் மற்றும் விதிமுறைகள் தொடர்பான விடயங்களும் இந்த ஊடக வெளியீட்டின் பின்னிணைப்பு I மற்றும் பின்னிணைப்பு II இல் இணைக்கப்பட்டுள்ளன.

BIG BAD WOLF BOOKS பற்றி

BIG BAD WOLF Books ஆனது 2009 ஆம் ஆண்டு மலேசியாவின் கோலாலம்பூரில் BookXcess நிறுவுனர்களான Andrew Yap மற்றும் Jacqueline Ng ஆகியோரின் சிந்தனையில் ஆரம்பிக்கப்பட்டது. நிறுவுனர்களின் வாக்குறுதிக்கமைய, அவர்களின் முதன்மை நோக்கம் வாசிப்பு பழக்கத்தை வளர்த்தல், உலகளாவிய ரீதியில் ஆங்கில கல்வியறிவை அதிகரித்தல், அத்துடன் புத்தகங்களை மிகவும் கட்டுப்படியான விலையிலும், அனைவரும் அதனை அணுகக்கூடியதாக மாற்றுவதன் மூலமும் புதிய தலைமுறை வாசகர்களை உருவாக்குவதாகும்.

உலகின் மிகப் பெரிய புத்தக விற்பனை என அறியப்படும் இந்த விற்பனையானது, அனைத்து வயதினரும் வாசிப்பின் மகிழ்ச்சியை பெறவும், அவர்களின் கனவுகளைத் தொடர, அவர்களை ஊக்குவிக்கவும், முக்கியமாக, அவை நனவாகும் வகையில் அதற்கான அறிவை அவர்களுக்கு வலுவூட்டுவதையும் நோக்கமாகக் கொண்ட ஒரு உலகளாவிய வாசிப்பு ஊக்குவிப்பு முயற்சியாகும். ஒரு நபர் எவ்வளவு அறிவைப் பெறுகிறாரோ, அவ்வளவு சிறப்பாக இன்றைய போட்டி உலகின் சரியான தேவைகளைப் அவரால் பூர்த்தி செய்ய முடியும் என்று நாம் நம்புகிறோம்.

BIG BAD WOLF புத்தக விற்பனையானது, கம்போடியா, ஹொங்கொங், இந்தோனேசியா, மியன்மார், பாகிஸ்தான், பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், இலங்கை, தென் கொரியா, தாய்லாந்து, தாய்வான், ஐக்கிய அரபு இராச்சியம், மலேசியா ஆகிய 13 நாடுகளில் 34 நகரங்களுக்கு பயணம் செய்து, அதன் ஆரம்பம் முதல் உலக அளவில் பிரம்மாண்டமாக வளர்ச்சியடைந்துள்ளது.

பின்னிணைப்பு I

ஒன்லைன் விற்பனை ஊக்குவிப்பு சலுகைகள்

விதிமுறைகளும் நிபந்தனைகளும்

 1. குறைந்தபட்சம் ரூ. 9,000 செலவிடுதலுக்கு இலவச ஷிப்பிங்
 2. குறைந்தபட்ச ரூ. 9,000 செலவிடும் உங்கள் கொள்வனவுகளுக்கு, புத்தகங்களை அனுப்பி வைப்பதற்கான (shipping) கட்டணம் இல்லை.
 3. இந்த சலுகையானது, இலங்கைக்குள் மேற்கொள்ளும் கொள்வனவு மற்றும் கொண்டு அனுப்பி வைத்தலுக்கு பொருந்தும்.
 4. இதற்கு சலுகை குறியீடு (Promo Code) அவசியமில்லை. ஒரு வாடிக்கையாளர் ரூ. 9,000 அல்லது அதற்கு மேல் செலவிட்டு, அதற்கான கட்டணத்தை செலுத்தும் இடத்தை (checkout) அடையும்போது இலவச ஷிப்பிங் சலுகை தானாகவே நடைமுறைப்படுத்தப்படும்.
 5. இச்சலுகையானது, ஏனைய சலுகைகள் மற்றும் ஏனைய சலுகை குறியீடுகளுடன் செல்லுபடியாகும்.
 6. எமது களஞ்சியத்தில் இருந்து பொதி அனுப்பப்பட்டதும், அது வந்தடைய 15 – 24 அலுவலக நாட்கள் வரை எடுக்கும்.
 7. BBW Sri Lanka ஒன்லைன் புத்தக விற்பனையின் போது, ‘முதலில் வருபவருக்கு முன்னுரிமை’ என்ற அடிப்படையில், இச்சலுகைகள்  2021 நவம்பர் 03 – 10 வரையான குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே செல்லுபடியாகும்.
 8. Pro Read Lanka (Private) Limited நிறுவனமானது, எந்நேரத்திலும் முன்னறிவிப்பின்றி விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை மாற்றுவதற்கான உரிமையைக் கொண்டுள்ளது.
 1. GWP: குறைந்தபட்ச மொத்தச் செலவான ரூ. 12,500 உடன் மூன்று (3) இதழ்களின் தொகுப்பைப் பெறுங்கள்
 2. குறைந்தபட்சம் ரூ. 12,500 செலவிட்டு, மூன்று (3) பிரத்தியேக இதழ்களின் தொகுப்பை இலவசமாகப் பெற முடியும்.
 3. ஒரே கொள்வனவில் ரூ.12,500 அல்லது அதற்கு மேல் கொள்வனவு செய்யும் முதல் 500 வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே இச்சலுகை செல்லுபடியாகும்.
 4. இச்சலுகையானது ஏனைய சலுகைகள் மற்றும் சலுகை குறியீடுகளுடனும் செல்லுபடியாகும்.
 5. BBW Sri Lanka ஒன்லைன் புத்தக விற்பனையின் போது, ‘முதலில் வருபவருக்கு முன்னுரிமை’ என்ற அடிப்படையில், இச்சலுகைகள்  2021 நவம்பர் 03 – 10 வரையான குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே செல்லுபடியாகும்.
 6. Pro Read Lanka (Private) Limited ஆனது எந்த நேரத்திலும் முன்னறிவிப்பின்றி விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை மாற்றுவதற்கான உரிமையைக் கொண்டுள்ளது.

பின்னிணைப்பு II

சமூக வலைத்தள போட்டி

விதிமுறைகளும் நிபந்தனைகளும்

போட்டி – SHARE & WIN (பகிர்ந்து, வெல்லுங்கள்)

போட்டிக் காலம் 1

ஒக்டோபர் 07 – நவம்பர் 01, 2021

வெற்றியாளர் அறிவிப்பு திகதி

நவம்பர் 02, 2021

போட்டியின் நடைமுறைகள்

எமது போட்டி தொடர்பான பதிவை உங்கள் கணக்கில் பகிரும் போது இதற்கான பரிசை வெல்வதற்கான வாய்ப்பை பெற முடியும்.

படி 1: Big Bad Wolf Books Sri Lanka பேஸ்புக் பக்கத்திலுள்ள ‘Share & Win’ இடுகையை Like செய்யவும்.

படி 2: இடுகையை (https://www.facebook.com/bbwbookssrilanka/posts/6244263045646342) உங்கள் பேஸ்புக் கணக்கில் பகிரவும்.

படி 3: இந்த ஹேஷ்டேக்களை அதில் சேர்க்கவும்: #BigBadWolfBooks #WolfieisBack.

படி 4: இடுகை அனைவரும் பார்க்கும் வண்ணம் (Public) வைக்கப்பட வேண்டும் என்பதுடன், போட்டிக்கான காலம் முழுவதும் அதை அவ்வாறே பேண வேண்டும்.

பரிசு

100 வெற்றியாளர்களுக்கு ரூ. 1,000 பெறுமதியான Big Bad Wolf Books வவுச்சர்கள்

போட்டி விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்:

 • பங்கேற்பாளர்கள் போட்டிக் காலத்தில் எத்தனை முறை வேண்டுமானாலும் போட்டிக்கான இடுகையைப் பகிரலாம்.
 • ‘Share & Win’ போட்டிக்கான உள்ளீடுகளின் எண்ணிக்கைக்கு வரையறை இல்லை.
 • நவம்பர் 02, 2021 அன்று Big Bad Wolf Books Sri Lanka Facebook பக்கத்தில் “Winners’ Announcement” (வெற்றியாளர்களின் அறிவிப்பு) இடுகை மூலம் வெற்றியாளர்களின் பட்டியல் அறிவிக்கப்படும்.
 • வவுச்சர் வெற்றியாளர்கள் Big Bad Wolf Books Sri Lanka Facebook பக்கத்தில் நேரடி செய்தி தொடர்பாடல் (DM) மூலம் 2021 நவம்பர் 02 முதல் 07 வரையில் தொடர்பு கொள்ள வேண்டும்; தவறும் பட்சத்தில், பரிசு வழங்கப்படாது.

வவுச்சர்கள் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்:

 • 2021 நவம்பர் 03 முதல் 10 வரை நடைபெறும் Big Bad Wolf Sri Lanka ஒன்லைன் புத்தக விற்பனையின் போது மட்டுமே இந்த வவுச்சர்கள் செல்லுபடியாகும்.
 • கட்டணம் செலுத்தும் பகுதியில் (checkout) சலுகை குறியீடு (Promo Code) பயன்படுத்தப்படும் போது மட்டுமே வவுச்சர் பொருந்தும் என்பதுடன் ஒருமுறை மாத்திரமே அதனை பயன்படுத்த முடியும்.
 • இந்த வவுச்சரானது மீளப் பெற முடியாதது அல்லது பணம் அல்லது அதற்கு சமமான மதிப்புக்கு மாற்ற முடியாதது.
 • இந்த வவுச்சர், ஏனைய சலுகைகளுடன் செல்லுபடியாகும் ஆயினும் ஏனைய சலுகை குறியீடுகள் மற்றும் வவுச்சர்(கள்) உடன் செல்லுபடியாகாது.
 • இந்த போட்டி நடைமுறையின் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை எந்த நேரத்திலும் முன்னறிவிப்பின்றி திருத்தங்களை மேற்கொள்வதற்கான உரிமையை Pro Read Lanka (Private) Limited கொண்டுள்ளது.

போட்டி – SPEND & WIN (செலவிட்டு வெல்லுங்கள்)

போட்டிக் காலம் 2

2021 நவம்பர் 03 – 10

வெற்றியாளர் அறிவிப்பு திகதி

2021 நவம்பர் 11

போட்டி நடைமுறைகள்

குறைந்தபட்ச தொகையான ரூ. 5,000 செலவிட்டு பரிசுகளை வெல்லும் வாய்ப்பைப் பெறுங்கள்

படி 1: Big Bad Wolf Books Sri Lanka Facebook பக்கத்தின் ‘Spend & Win’ இடுகையை லைக் செய்யவும்.

படி 2: அந்த இடுகையை உங்கள் பேஸ்புக் கணக்கில் பகிரவும்.

படி 3: இந்த ஹேஷ்டேக்களைச் சேர்க்கவும்: #BigBadWolfBooks #WolfieisBack.

படி 4: இடுகை அனைவரும் பார்க்கும் வண்ணம் (Public) வைக்கப்பட வேண்டும் என்பதுடன், போட்டிக்கான காலம் முழுவதும் அதை அவ்வாறே பேண வேண்டும்.

பரிசுகள்: (11 வெற்றியாளர்கள்)

மாபெரும் பரிசு: Apple iPhone 13 Pro Max 128GB (Graphite Black) x 1 வெற்றியாளர்

முதல் பரிசு: Apple AirPods 2 x 1 வெற்றியாளர்

2ஆவது பரிசு: Hill Cottage நுவரெலியாவில் காலை உணவு உட்பட 2 பேருக்கான (இரட்டை அறை பகிர்வு அடிப்படையில்) 1 இரவு தங்குதல் x 1 வெற்றியாளர்

3ஆவது பரிசு: JBL Go3 Bluetooth Speaker x 3 வெற்றியாளர்கள்

ஆறுதல் பரிசுகள்: ரூ. 2,500 பெறுமதியான Softlogic வவுச்சர்கள் x 5 வெற்றியாளர்கள்

போட்டி விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்:

 • Big Bad Wolf Sri Lanka ஒன்லைன் புத்தக விற்பனையின் போதான ஒரே கொள்வனவில் மேற்கொள்ளும் ஒவ்வொரு ரூ. 5,000 செலவிடும் நீங்கள் “Spend & Win” போட்டிக்கான ஒரு (1) தகுதியை பெறுவீர்கள்.
 • இந்த போட்டிக்கான உள்ளீடுகளின் எண்ணிக்கைக்கு வரையறை இல்லை.
 • நவம்பர் 11, 2021 அன்று Big Bad Wolf Books Sri Lanka Facebook பக்கத்தில் “Winners’ Announcement” (வெற்றியாளர்களின் அறிவிப்பு) இடுகை மூலம் வெற்றியாளர்களின் பட்டியல் அறிவிக்கப்படும்.
 •  
 • பரிசுகளை பெறும் வெற்றியாளர்கள் Big Bad Wolf Books Sri Lanka Facebook பக்கத்தில் நேரடி செய்தி தொடர்பாடல் (DM) மூலம் 2021 நவம்பர் 16 இற்குள் தொடர்பு கொள்ள வேண்டும்; தவறும் பட்சத்தில், பரிசு வழங்கப்படாது.
 •  
 • பரிசுகளுக்கான வெற்றியாளர்கள் கொழும்பில் உள்ள ஒரு இடமொன்றில் பரிசுகளைப் பெறுவதற்கான ஏற்பாடுகளுக்கு தயாராக இருக்க வேண்டும். இடம் மற்றும் நேரம் என்பன வெற்றியாளர்களுக்கு Facebook Direct Message (DM) மூலம் தெரிவிக்கப்படும்.
 • பரிசுகளுக்கான வெற்றியாளர்கள், எமது உத்தியோகபூர்வ Facebook பக்கம் மூலம் வெற்றியாளர் அறிவிக்கப்பட்ட பின்னர், 2021 டிசம்பர் 11 இற்கு முன்னரான ஒரு திகதியில் பரிசை பெறும் போது சரிபார்த்தல் நோக்கங்களுக்காக உரிய அடையாள ஆவணத்தை சமர்ப்பிக்க வேண்டும்.
 • பரிசுகளை பணமாகவோ, ஏனைய பொருட்கள் அல்லது வவுச்சர்களாகவோ மாற்றவோ, கழித்துக் கொள்ளவோ மீட்கவோ முடியாது.
 • பரிசின் பெறுமதி கொண்ட மாற்றீடான பரிசுகளை முன்னறிவிப்பின்றி, தனது விருப்பத்திற்கமைய எந்த நேரத்திலும் மாற்றும் உரிமையை Pro Read Lanka (Private) Limited கொண்டுள்ளதுடன், பரிசுகள் மற்றொரு நபருக்கு மாற்றப்படாது. பரிசின் நிறங்கள் மற்றும் அம்சங்கள் அவற்றை பெற்றுக் கொள்ள முடியுமான தன்மைக்கு உட்பட்டது.
 • போட்டி தொடர்பான அனைத்து விடயங்களிலும் Pro Read Lanka (Private) Limited நிறுவனத்தின் முடிவே இறுதியானது என்பதுடன் எடுக்கப்படும் முடிவை மறுப்பதற்கான கடிதங்கள் அல்லது முயற்சிகள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.
 • Pro Read Lanka (Private) Limited ஆனது, இச்சலுகை தொடர்பான விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை எந்நேரத்திலும் முன்னறிவிப்பின்றி திருத்துவதற்கான உரிமையை கொண்டுள்ளது.
 • முற்றும்
Share

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *