வணிகம், வடிவமைப்பு, கேமிங் தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் முன்னணி உற்பத்தியாளரான Micro-Star International (MSI), இலங்கையில் 3 புதிய மடிகணனிகளை அண்மையில் அறிமுகப்படுத்தியுள்ளது. கேமிங் தொடரான AMD Processor மூலம் இயங்கும் Bravo 15 தொடக்கம் Delta 15 கேமிங் மடிகணனி மற்றும் உள்ளடக்க உருவாக்கம், கிரபிக் வடிவமைப்பிற்கு ஏற்ற Creator Z16 மடிகணனி ஆகியனவே இவ்வாறு வெளியிடப்பட்டுள்ளன.
ஆரம்ப நிலை gamer இற்காக வடிவமைக்கப்பட்ட Bravo 15 கேமிங் மடிகணனி, மேம்பட்ட AMD Ryzen™ 5000 H-Series Mobile Processors மற்றும் AMD Radeon™ RX கிரபிக்ஸ் மூலம் இயக்கப்படுகிறது. இது Radeon Image Sharpening மற்றும் Radeon Anti-Lag அம்சங்களைக் கொண்டுள்ளது. இது உயர் மட்ட அம்சங்களுடன் மேம்படுத்தப்பட்ட மற்றும் சிறப்பான காட்சியை வெளிப்படுத்துவதுடன், உள்ளீட்டு பின்னடைவை குறைக்குகிறது. இதன் மூலம் தடையற்ற ஒட்டுமொத்த கேமிங் அனுபவத்திற்கு வழிவகுக்கிறது. மிகக் கடினமான கேமருக்காக வடிவமைக்கப்பட்ட Delta 15 கேமிங் மடிகணனி, AMD Ryzen™ 5900 HX Series Mobile Processors இலிருந்து சமீபத்திய AMD Radeon™ RX 6700M Series Mobile graphics வரை இணைக்கப்பட்டுள்ளது. இவை இரண்டும் தடையற்ற கேமிங் அனுபவத்திற்கும் மேம்பட்ட காட்சி அம்சங்களுக்கும் வழிவகுக்கிறது. Radeon RX 6000 Series GPU+Ryzen 5000 H Series CPU ஆகியவற்றின் கலவையானது AMD Advantage என அழைக்கப்படுகிறது. இது இதனை ஒத்த கணனிகளை விட மிகவும் மெல்லியதாகவும் இலகு ரகமானதாகவும் உள்ளது. இது 1.9 கிலோ கிராம் எடை, 19 மி.மீ. தடிப்பையும் கொண்டுள்ளதன் மூலம், பார்வையை ஈர்க்கும் வடிவமைப்பிற்கு வழிவகுப்பதுடன், எடுத்துச் செல்வதற்கும் இலகுவானதாகும். அத்துடன், 12 மணிநேர மின்கல ஆயுளையும் கொண்டுள்ளது. இவ்வாறான முன்னெப்போதும் இல்லாத அம்சங்களை இம்மடிகணனி கொண்டுள்ளது.
Delta 15 மற்றும் Bravo 15 ஆகியன பற்றிய சிறந்த விடயம் யாதெனில், அனைத்து அம்சங்களும் ஒரு சிறிய மற்றும் இலகு வடிவமைப்பில் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளதுடன், இதன் மூலம் முன்னர் காணாத அளவில் உயர்-மட்ட கேமிங் மற்றும் இலகுவாக்கம் ஆகியன அனுமதிக்கப்படுகிறது. ஆயினும் இந்த மடிகணனிகள் யாவும் கேமிங்கிற்கு மட்டும் மட்டுப்படுத்தப்படவில்லை என்பதுடன், மேற்கூறிய அனைத்து அம்சங்களும் இந்த மடிகணனிகளை ஏனைய விடயங்களுக்கும் பயன்படுத்துவதற்கான அதிக திறன் கொண்டதாக ஆக்குகின்றன.
Creator Z16 மடிகணனி ஆனது, சமீபத்திய Intel ® 11th Generation H Series processors மற்றும் NVIDIA ® GeForce RTX™ 3060 மடிகணனிக்கான GPU மூலம் இயக்கப்படுகிறது. Creator Z16 ஆனது 16:10 எனும் சிறந்த விகிதத்தில், சிறந்த பார்வைக் கோணங்கள் மற்றும் அதிகரித்த உற்பத்தித்திறனுக்காக மெல்லிய சட்டகங்களுக்குள் அமைந்த திரையைக் கொண்டுள்ளது. சாம்பல் நிறத்தில் (Lunar Grey) ஒரு மெலிதான CNC-சிறிய அலுமினியம் சட்டத்தில் அமைந்த பாணியை இது கொண்டுள்ளது. அதே சமயம் 100% DCI-P3 வர்ண எல்லைகளுடன் கூடிய True Pixel திரையை QHD+ தெளிவுத்திறன் வரையான அம்சங்களுடன், வடிவமைப்பாளர்கள் மற்றும் படைப்பாளர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்கிறது. இது தனியே ஒரு மடிகணனியாக சிறப்பாக செயல்படுவது மட்டுமல்லாமல், அழகியல் அம்சங்களிலும் திகழ்கிறது. இதன் காரணமாக பயனர்களுக்கு உண்மையிலேயே மறக்கமுடியாத அனுபவத்திற்கு வழிவகுக்கும். இந்த மடிகணனியானது, உள்ளடக்க உருவாக்கத்தின் வெளிப்படுத்தல், rendering மற்றும் ஒரே நேரத்திலான பல்பணி அம்சங்களை வேகப்படுத்துகிறது. வீடியோ மற்றும் புகைப்பட உருவாக்கம் மற்றும் எடிட்டிங் ஆகியவற்றிற்கான வண்ணத் துல்லியம் இதில் அதிகளவில் உள்ளது. இதற்கு MSI True Pixel தொழில்நுட்பமே காரணமாகும்.
இந்த புதிய சாதனங்களின் அறிமுகம் தொடர்பில் கருத்து வெளியிட்ட MSI பிராந்திய சந்தைப்படுத்தல் முகாமையாளர் Green Lin, “MSI அதன் பயனர்களுக்கு சிறந்த அனுபவத்தை வழங்க தொடர்ந்து பாடுபடுகிறது. இதனாலேயே இந்த புதிய மற்றும் மேம்படுத்தப்பட்ட சாதனங்களை நாம் கொண்டு வந்துள்ளோம். இலங்கையில் எமது விசுவாசமான இரசிகர் பட்டாளம் உள்ளனர். கேமிங் மற்றும் உள்ளடக்க உருவாக்கம் ஆகிய இரண்டிற்கும் புதிய மற்றும் மேம்படுத்தப்பட்ட சாதனங்களிலிருந்து அவர்கள் பெரிதும் பயனடைவார்கள் என நாம் நம்புகிறோம்.” என்றார்.
Creator Z16: https://msi.gm/3mhAZBe
Delta 15: https://msi.gm/30klp02
Bravo 15: https://msi.gm/30klp02
MSI பற்றி
உலகின் முன்னணி மடிகணனி வர்த்தகநாமம் எனும் வகையில், கேமிங், eSports மற்றும் பொதுப் பயன்பாட்டு மடிகணனிகளில் MSI மிகவும் நம்பகமான பெயராக திகழ்கிறது. MSI ஆனது, வடிவமைப்பு, சிறந்து விளங்குதல் மற்றும் தொழில்நுட்ப புத்தாக்க கண்டுபிடிப்புகள் ஆகியவற்றில் அதன் ஒப்பிடமுடியாத கொள்கைகளை பேணி வருகிறது. விளையாட்டாளர்களை ஒருங்கிணைத்தல்; மிகவும் விரும்பப்படும் அதீத செயல்திறன், யதார்த்தமான காட்சி, உண்மையான ஒலி, துல்லியமான கட்டுப்பாடு, மிருதுவான ஸ்ட்ரீமிங் செயல்பாடுகள் அதன் கேமிங் அம்சங்களில், MSI ஆனது விளையாட்டாளர்கள் மற்றும் படைப்பாளர்களை கடினமான சோதனைகள் மற்றும் பிழைகள் ஏற்படுவதிலிருந்து விடுவிப்பதுடன் கேமிங் செயல்திறன் எல்லைகளுக்கு அப்பால் செல்கிறது. கடந்தகால சாதனைகளை முறியடிக்கும் உறுதி காரணமாக, தொழில்துறை முழுவதும் கேமிங் உணர்வைக் கொண்ட ஒரு ‘True Gaming’ தரக்குறியீடாக MSI மாறியுள்ளது! தயாரிப்புகள் தொடர்பான மேலதிக தகவலுக்கு: https://www.msi.com
ENDS
Image Captions:
Image 1- The Creator Z16 Laptop
Image 2- The Delta 15 Gaming Laptop
Image 3- The Bravo 15 Gaming Laptop