Tamil

DIMO வை அதன் சிறந்த உலகளாவிய விநியோகஸ்தராக அங்கீகரித்துள்ள உலகப் புகழ் பெற்ற TK Elevator

இலங்கையின் முன்னணியில் உள்ள பல்வகைப்பட்ட கூட்டு நிறுவனங்களில் ஒன்றான DIMO, ஜேர்மன் தொழில்நுட்ப புத்தாக்க கண்டுபிடிப்பாளரும் மின் தூக்கி (Mobility) தீர்வுகளை வழங்குவதில் உலகளாவிய முன்னணி நிறுவனமுமான (முன்னர் thyssenkrupp Elevator என அறியப்படும்)  TK Elevator நிறுவனத்தினால், 2021ஆம் ஆண்டிற்கான சிறந்த உலகளாவிய விநியோகஸ்தராக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

விற்பனை மற்றும் 24 மணிநேர சேவைகளுக்கான உலகத் தரம் வாய்ந்த குழுவை நிறுவியுள்ளமைக்காகவும், குறுகிய காலத்திற்குள் சந்தைப் பங்கை இரு இலக்கங்களாக உயர்த்தியமைக்காகவும், குறிப்பாக பிராந்தியத்திலுள்ள இரண்டு சர்வதேச விமான நிலையத் திட்டங்களைப் பெற்றுள்ளமைக்காகவும் DIMO நிறுவனத்திற்கு இந்த மதிப்புமிக்க கௌரவம் வழங்கப்பட்டுள்ளது.

DIMO வின் சமீபத்திய வெளிநாட்டு திட்டமான மாலைதீவில் உள்ள Velana சர்வதேச விமான நிலையம் இதில் ஒன்றாகும். இதில் 41 TKE மின் தூக்கிகள், எஸ்கலேட்டர்கள், நகரும் நடைபாதைகளின் விநியோகம், நிறுவல், பராமரித்தல் ஆகியன அடங்குகின்றன. இலங்கையில் உள்ள பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் (Terminal 1) பயணிகள் முனையக் கட்டடத்தில் உள்ள இடமாற்றப்பட்ட குடிவரவுப் பகுதி திட்டமானது, TKE இனால் அங்கீகரிக்கப்பட்ட மற்றைய திட்டமாகும். TKE மின் தூக்கிகளை விநியோகித்தல், நிறுவுதல், சோதனை செய்தல், இயக்குதல் ஆகியன இதில் உள்ளடங்குகின்றன.

DIMO வின் தலைவரும் முகாமைத்துவப் பணிப்பாளருமான ரஞ்சித் பண்டிதகே இது தொடர்பில் தெரிவிக்கையில், “மதிப்புமிக்க ‘உலகளாவிய விநியோகஸ்தர் விருது 2021’ என்பது எமக்கு வழங்கப்படும் மற்றுமொரு கௌரவமாகும். DIMO ஆகிய நாம், எமது பங்குதாரர்களின் கனவுகள் மற்றும் அபிலாஷைகளை ஊக்குவிப்பதற்காக தொடர்ந்தும் அர்ப்பணித்துள்ளோம் என்பதை இது மீண்டும் நிரூபித்துள்ளது. DIMO வினால் வழங்கப்படும் தயாரிப்புகள் மற்றும் சேவைகளின் தரத்திற்கு இது ஒரு சான்றாகும் என்பதுடன், இந்த விருதைப் பெற்றுக் கொண்டமை தொடர்பில் நான் எமது குழுவினருக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். அத்துடன் இந்த பட்டத்தை எமக்கு வழங்கியமைக்காக TKE இற்கும் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்.” என்றார்.

குழுமத்தின் மின் தூக்கிகள் மற்றும் எஸ்கலேட்டர்கள் வணிகத்தை மேற்பார்வையிடும், DIMO வின் நிறைவேற்றுப் பணிப்பாளர் விஜித் புஷ்பவெல தனது கருத்தை வெளியிடுகையில், “DIMO ஆனது, ஜேர்மனிய TKE தொழில்நுட்பத்தை இலங்கை மற்றும் மாலைதீவு ஆகிய இரு சந்தைகளுக்கும் 2018 இல் வழங்க ஆரம்பித்தது. அதனைத் தொடர்ந்து, 2020 ஆம் ஆண்டின் இறுதிக்குள் TKE இன் சந்தைப் பங்கை  குறிப்பிடத்தக்க வகையில் அதிகரிக்க DIMO வினால் முடிந்தது. DIMO வின் பொறியியல் துறையில் முன்னணியில் உள்ள அனுபவம் வாய்ந்த மற்றும் உயர் தகுதி வாய்ந்த பொறியியல் குழு மற்றும் அதனுடன் இணைந்தவாறான எமது வாடிக்கையாளர்களுக்கான விற்பனைக்குப் பின்னரான இணையற்ற சேவைகளினால் இந்த சாதனை மேலும் வலுவூட்டப்பட்டுள்ளது.

Softlogic Mall – குருணாகல், Cargills Square – கொழும்பு 09, Cargills – பண்டாரவளை, Cargills Square – கட்டுபெத்த, Cargills Ceylon (PLC) – கண்டி, கொழும்பு பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடம் மற்றும் கணனி விஞ்ஞான பீடம், பேராதனை பல்கலைக்கழகத்தின் கலைப் பீடம், சப்ரகமுவ மற்றும் வயம்ப பல்கலைக்கழகங்களில் தொழில்நுட்ப பீடங்கள், இலங்கை வங்கி – கோட்டை, Radisson Collection – தல்பே, Barberyn Beach Ayurveda Resort – வெலிகம, Mount Clifford Residencies – ஹோமாகம உள்ளிட்ட இலங்கையின் பல முக்கிய திட்டங்களை DIMO பெற்றுள்ளது. அது மாத்திரமன்றி, Weligama Bay Marriott Resort & Spa, Amari காலி, OZO Hotel – கண்டி, ஹெவ்லாக் சிட்டி அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ளிட்ட பல இடங்களில், பராமரிப்புக்கான ஒப்பந்தங்களையும் DIMO பெற்றுள்ளது.

நிறுவலின் போதான நிலைப்படுத்தலில் நிபுணத்துவத்தைப் பகிர்ந்துகொள்ளல், இறுதிப் பயனரின் தேவைகளைப் புரிந்துகொள்ளல், தொழில்நுட்ப வடிவமைப்புகளைத் தயாரித்தல் போன்ற நோக்கங்களுடன் DIMO வின் தொழில்நுட்பக் குழுவுடன் இணைந்து, TKE நன்கு அனுபவம் வாய்ந்த தொழில்நுட்பக் குழுவை இதற்காக ஈடுபடுத்தியுள்ளது. அத்துடன் TKE இன் தொழில்நுட்ப வல்லுனர்கள் வேலைத்தளத்திலிருந்து நிறுவுதல், சோதனை செய்தல், இயங்கச் செய்வதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மிக உயர்ந்த தரங்களுக்கு இணங்கி மேற்கொள்ளப்படுகின்றதாக என்பதை உறுதி செய்வர். குறிப்பாக விமான நிலையத் திட்டங்கள் போன்ற பாரிய திட்டங்களில் இத்தகைய நடவடிக்கைகள் அவசியமாகின்றன. அத்துடன் திட்டத்தின் எந்தவொரு கட்டத்திலும் தொலைதூரத்திலுள்ள அதன் உலகளாவிய தொழில்நுட்பக் குழுவின் உதவியையும் TKE வழங்குவதை உறுதிப்படுத்துவதோடு, சேவை மற்றும் பராமரிப்புக் காலங்களின் போது அவசியமாகின்ற உதிரிப் பாகங்களைத் தொடர்ச்சியாக வழங்குவதையும் TKE உறுதி செய்கிறது.

END

Share

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *