vivo வின் முன்னணி கெமரா தொழில்நுட்பமானது மொபைல் புகைப்படவியல் மற்றும் வீடியோகிரபியை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்கின்றது

Author
By Author
3 Min Read

வாழ்க்கையில் மாற்றம் மட்டுமே நிலையானது, மேலும் ஸ்மார்ட்போன் துறையும் இதற்கு விதிவிலக்கல்ல. கடந்து செல்லும் ஒவ்வொரு நாளிலும், ஸ்மார்ட்போன்களில் பல புதுமையான புத்தாக்கங்களை நாம் கண்டு வருகின்றோம். முன்னணி உலகளாவிய ஸ்மார்ட்போன் வர்த்தகநாமமான vivo, நீண்ட காலமாக மொபைல் தொழில்நுட்பத்தில் புரட்சியை ஏற்படுத்துவதில் முன்னோடியாகக் கருதப்படுகிறது. இந்தத் துறையில் vivoவின் முன்னோடியான தொழில்நுட்பங்களின் காரணமாக பாவனையாளர்கள் ஸ்டூடியோ தரமான படங்களை தமது ஸ்மார்ட்போன்களில் பெறமுடியும்.

ஸ்மார்ட்போன்களில் vivo கொண்டு வந்த சில குறிப்பிடத்தக்க மேம்படுத்தல்கள் இதோ:

1. Gimbal தொழில்நுட்பம் மற்றும் ZEISS உடனான இணைப்பு 

ஒளியியல் மற்றும் optoelectronics இல் உலகளாவிய முன்னணி நிறுவனமான ZEISS உடன் இணைந்து வடிவமைக்கப்பட்ட கிம்பல் கெமரா தொழில்நுட்பமானது மொபைல் புகைப்பட அனுபவத்தை மேம்படுத்தும் வகையில் அதிகபட்ச நிலைப்படுத்தலுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. இது ஒட்டுமொத்த ஒளி உணர்திறனில் சிறந்த செயல்திறனை வழங்குகிறது, குறைந்த வெளிச்சத்தில் படப்பிடிப்பு விளைவை மேம்படுத்துவதுடன், மேம்படுத்தப்பட்ட மற்றும் கூர்மையான ultra-HD புகைப்படங்களை உருவாக்க பெரிய சென்சர்கள் மூலம் வேகமாகவும் துல்லியமாகவும் கவனம் செலுத்துகிறது.

2. ZEISS T* Coating

vivo இன் premium range flagship ஆனது ZEISS T* anti-reflective Coatingகளைக் கொண்டுள்ளமையானது புலப்படும் ஒளி பரிமாற்றத்தை மேம்படுத்துகிறது. மேலும், பிரதிபலிப்புகளை குறைக்கிறது, படத்தின் தரத்தை அதிகரிக்கிறது. இதனோடு பொருள் வண்ணங்களை துல்லியமாக காட்டுகின்றது. இது தேவையற்ற ஒளி, வித்தியாசமான பிரதிபலிப்புகள் மற்றும் பிற பாதகமான விளைவுகளை குறைப்பதுடன், படத்தின் தரம் மற்றும் ஒளி பரிமாற்றத்தை கணிசமாக அதிகரிக்கிறது.

3.             Eye Autofocus

vivo அறிமுகப்படுத்திய தொழில்துறையின் முன்னணி அம்சமானது, நிலையற்ற நிலையில் கெமரா இயக்கத்தால் ஏற்படும் மங்கலான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களின் சிக்கல்களை தீர்க்கிறது. Eye Autofocus புத்திசாலித்தனமாக மிகவும் உள்ளார்ந்த பிரேம் விவரங்களைப் படம்பிடிப்பதுடன், இயக்கத்தில் கூட, தருணங்களைத் தடையின்றி படம்பிடிக்க இனை பேணுகின்றது. Autofocus (AF) உடன் கூடிய முன்பக்க கெமராவானது, புகைப்படவியலின் உச்சமாகும்.

4.             Optical Image Stabilization (OIS)

vivo இன் OIS முன்பக்க கெமரா தொழில்நுட்பம் எதிர்கால ஸ்மார்ட்போன் முன்பக்க கெமராக்களுக்கான தரநிலையை அமைப்பதில் ஒரு தீவிரமான படியைக் குறிக்கிறது. OIS ஒரு சிறந்த மென்பொருள்-வன்பொருள் இணைப்பை உருவாக்குவதுடன், இது handheld மற்றும் motion படங்களுக்கு தீவிர-நிலைப்படுத்துதல் திறன்களை வழங்குகிறது. OIS என்பது ஒரு சிறந்த தொழில்நுட்பமாகும், இது போனின் இயக்கத்தைக் கண்டறிந்து கெமராவை தானாகவே சரிசெய்து புகைப்படத் தரத்தை மேம்படுத்தி, சிறந்த ஒட்டுமொத்த புகைப்பட அனுபவத்தை வழங்குகிறது.

5. Pop-up மற்றும்Dual pop-up கெமரா

vivo தான் முதலில் pop-up கெமராவை சந்தைக்கு கொண்டு வந்ததுடன், ஏனைய வர்த்தகநாமங்கள் இதைப் பின்பற்றத் தொடங்கின. vivo பொறியியல் குழு, pop-up கெமராவின் பல்வேறு நிலைகள் மற்றும் வழிமுறைகளை ஆய்வு செய்து, உண்மையிலேயே வசதியான, செயல்பாட்டு ரீதியான பொருத்தமான மற்றும் நீடித்துழைக்கும் கெமராவை உருவாக்கியது.

6.             Selfie Spotlight

முன் பெனலின் கீழ் உள்ள இரட்டை LED spotlight உடனடியாக ஒளி மூலத்தை சிரமமின்றி அதிகரிக்கிறது. ஒளி நிலைமைகளைப் பற்றி கவலைப்படாமல் சிறப்பான எடுக்க இது அமைக்கப்பட்டுள்ளது. vivo தனது கைபேசிகளின் முன் பெனலின் கீழ் இரண்டு OLED ஸ்பாட்லைட்களை புதுமையாகச் சேர்த்துள்ளது, இரவில் கூட ultra-clear செல்பிகளை இதன் மூலம் எடுக்க முடியும்.

7.             Dual-View Video

இந்த அம்சத்தில் முன் கெமரா, பின் கெமரா இரண்டும் நிகழ்நேரத்தில் ஒன்றாக இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. பாவனையாளர்கள் பின்னணியையும் உங்களையும் ஒரே நேரத்தில் பதிவு செய்யலாம். படைப்பாற்றல் கொண்டோர், vloggers மற்றும் live streamers இற்கு இது ஒரு வரப்பிரசாதமாகும்.

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *