கையகப்படுத்தல் நிதி வசதியை 3 வருட காலத்திற்கு பேணுவதன் மூலம், 10 சர்வதேச வங்கிகளிடமிருந்து 3.5 பில்லியன் அமெரிக்க டொலர்களை மீள்முதலிடும் Adani Cement

Author
By Author
2 Min Read

உலகளாவிய நிதி நிறுவனங்களிடையே அசைக்க முடியாத நம்பிக்கையுடன் வலுவான அடிப்படை வணிகத்தின் பிரதிபலிப்பு

சர்வதேச வங்கிகளிடமிருந்து திரட்டப்பட்ட 3,500 மில்லியன் டொலர் நிதி மூலம், Endeavour Trade and Investment Ltd ஊடாக, Ambuja மற்றும் ACC இற்காக கையகப்படுத்தப்பட்ட கடனுக்கான அதன் மீள் நிதியளிப்பு திட்டத்தை வெற்றிகரமாக நிறைவு செய்வதை அறிவிப்பதில் Adani Cement மகிழ்ச்சி அடைகிறது. இது உலகளாவிய நிதிச் சந்தைக்கான அதானியின் வலுவான அணுகல் மற்றும் வலுவான பணப்புழக்க நிலையைக் காட்டுகிறது. சாதனை நிதி நிலைத்தன்மை மற்றும் வளர்ச்சிக்கான அதன் உறுதிப்பாட்டை இது பிரதிபலிக்கிறது. இந்த வசதியளிப்பின் மூலம் Adani Cement நிறுவனத்தின் ஒட்டுமொத்த செலவில் சுமார் 300 மில்லியன் அமெரிக்க டொலர்கள் மீதப்படுத்தப்படும்.

Adani Cement இந்தியாவின் இரண்டாவது மிகப் பெரும் சீமெந்து உற்பத்தி நிறுவனமாகும். Ambuja மற்றும் ACC (இந்தியாவின் இரண்டு முக்கிய வர்த்தகநாமங்கள்) ஆகிய சீமெந்து நிறுவனங்களின் 6.6 பில்லியன் டொலர் மூலமான கையகப்படுத்தலை Adani Cement அண்மையில் நிறைவு செய்திருந்தது. உட்கட்டமைப்பு மற்றும் மூலப்பொருள் துறையில் மிகப்பெரிய கையகப்படுத்தலான இது, கடந்த செப்டெம்பர் 22 இல் நிறைவு செய்யப்பட்டது. இந்த 3.5 பில்லியன் அமெரிக்க டொலர் வசதியானது, செப்டெம்பர் 2022 இல் திட்டமிடப்பட்ட மூலதன முகாமைத்துவத் திட்டத்தைத் தொடர்ச்சியாக செயற்படுத்தப்படுவதைக் காண்பிக்கிறது.

ACC மற்றும் Ambuja ஆகியன, இந்தியாவில் உள்ள நிர்மாணம் மற்றும் விநியோகச் சங்கிலி உட்கட்டமைப்பில் ஆழமான, வலுவான வர்த்தகநாமங்களாகும். இவை, குறிப்பாக மூலப்பொருள், புதுப்பிக்கத்தக்க வலுசக்தி, போக்குவரத்து போன்ற அதானியின் துறைசார்ந்த நிறுவனங்களில் காணப்படும் பரந்த அனுபவம் மற்றும் ஆழ்ந்த நிபுணத்துவம் மூலம், ஒருங்கிணைந்த அதானியின் உட்கட்டமைப்பு தளத்தின் ஒருங்கிணைப்பு நன்மைகளை பெறும்.

இந்தியாவின் அஹமதாபாத்தை தலைமையகமாகக் கொண்டுள்ள அதானி குழுமம், போக்குவரத்துத் துறை (கப்பல் துறைமுகம், விமான நிலையம், கப்பல் மற்றும் புகையிரத விநியோகம்), வளங்கள், மின்னுற்பத்தி மற்றும் விநியோகம், புதுப்பிக்கத்தக்க வலுசக்தி, எரிவாயு மற்றும் உட்கட்டமைப்பு, விவசாயம் (பண்டங்கள், சமையல் எண்ணெய், உணவுப் பொருட்கள், குளிர்பதனிடும் சேமிப்பகங்கள், தானியக் களஞ்சியங்கள்), ரியல் எஸ்டேட், பொதுப் போக்குவரத்து உட்கட்டமைப்பு, நுகர்வோர் நிதி மற்றும் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஆர்வத்தைக் கொண்டுள்ள, இந்தியாவில் உள்ள பல்வேறு வணிகங்களின் மிகப்பெரிய மற்றும் பல்துறைகளிலும் வேகமான வளர்ச்சி கொண்ட நிறுவனமாகும். அதானி தனது வெற்றிக்கும் அதன் தலைமைப் பதவிக்கும் அதன் அடிப்படைத் தத்துவமான ‘தேசத்தைக் கட்டியெழுப்புதல்’ மற்றும் ‘நன்மையுடன் கூடிய வளர்ச்சி’ ஆகியவற்றின் மூலம் நிலைபேறான வளர்ச்சிக்கு வழிகாட்டும் கொள்கையைக் கடைப்பிடித்து வருகிறது. நிலைபேறான தன்மை, பன்முகத்தன்மை, பகிரப்பட்ட மதிப்புகள் ஆகியவற்றின் அடிப்படையில், தனது பெருநிறுவன சமூகப் பொறுப்பு திட்டங்கள் (CSR) மூலம் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்கும் சமூகங்களை மேம்படுத்துவதற்கும் குழுமம் உறுதிபூண்டுள்ளது. இவை தொடர்பான மேலதி தகவல்களுக்கு www.adani.com

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *